உ ங்களுடைய கணினியில் உள்ள ஜாவா பயன்பாட்டினை நிகழ்நிலை படுத்திடவேண்டுமா என்றும், அடோபை நிகழ்நிலை படுத்தவேண்டுமா என்றும் ,உங்களுடைய கணினியில் ஏராளமான பிழைஏற்பட்டுள்ளதால் கணினியானது மெதுவாக இயங்கிடும் நிலை காணப்படுகின்றது அதனால் அவ்வாறான பிழைகளை எங்களுடைய தொழில்நுட்ப ஆதரவுடன்களை சரிசெய்திட எங்களுடைய பயன்பாட்டினை பதிவிறக்கம்செய்திடவேண்டுமா என்றும், உங்களுடைய கணினியில் தேவையற்றபயன்பாடுகள் ஏராளமான அளவில் குப்பைபோன்று குவிந்துள்ளன அதனால்தான் உங்களுடைய கணினியின் இயக்கம் மெதுவாகின்றது அதனால் முதலில் உங்களுடைய கணினியின் நினைவகத்தை உடன் சுத்தமாக்கிகொள்க என்றும், சிலநேரங்களில் விண்டோவின் பெயர்களிலேயே நம்மை தவறாக யூகித்திடுமாறு வழிகாட்டும் செயலையும் செய்கின்ற எண்ணற்று விளம்பரங்களை நம்முடைய வழக்கமான பணியை செய்யவிடாமல் தடுத்து நம்முடைய கவணத்தை திசைதிருப்பி தவறான இணைய பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்று நம்முடைய கணினியிலுள்ள மிகமுக்கியமான தரவுகளை அபகரித்திட செய்கின்றன
இந்த நிலையை தவிர்த்து பாதுகாப்பாக விண்டோ இயக்கமுறைமையில் நம்முடைய பணியை ஆற்றிட விண்டோவின் இணையஉலாவியான இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திரையை தோன்ற செய்திடுக அதில் மேலே வலதுபுறமூலையிலுள்ள பற்சக்கரம் போன்ற உருவபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் திரையில் Safetyஎன்பதை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக பின்னர் Smartscreen Filter என்பதை தெரிவுசெய்து செயலில் இருக்குமாறு செய்துகொள்க இதன்பின்னர் எந்தவொரு பதிவிறக்கம் செயலை செய்தாலும் இந்த கருவியானது தீயநச்சுநிரல் தானாக பதிவிறக்கம் ஆவதை இது வடிகட்டி தடுத்துவிடுகின்றது