அனைத்து நச்சுநிரலின் தாக்குதலிலிருந்து கணினியை பாதுகாப்பதற்கு ஒரேயொரு எதிர்நச்சுநிரல்( anti-virus) பயன்பாடே போதுமானதாகும்

நம்முடைய கணினியில் நச்சுநிரல் ஏதேனும் தொற்றிகொண்டிருந்தால் உடன் எதிர்நச்சுநிரல்( anti-virus) பயன்பாட்டினை நிறுவுகை செய்து செயல்படுத்திடவுடன் இந்த எதிர்நச்சுநிரல் பயன்பாடானது கணினியில் ஏதேனும் நச்சுநிரல் இருந்தால் அதனை அழித்து ஒழித்துவிடும்

1

1

மேலும் இந்த எதிர்நச்சுநிரல் பயன்பாடானது கணினியை இயக்க துவங்கியவுடன் தன்னுடைய செயலை துவங்கி கணினியின்இயக்கத்தை நிறுத்தம் செய்யும்வரை நாம் எந்தவொரு பயன்பாடுகளை செயல்படுத்தி கொண்டிருந்தாலும் எப்போதும் பின்புலத்தில் இயங்கிகொண்டேயிருந்து நேரடியாக கணினியின் இயக்க முறைமைக்கு ஒரு நல்ல பாதுகாப்பு அரணாக இருந்து பாதுகாக்கின்றது அதுமட்டுமின்றி எந்தவொரு கோப்பினை நம்முடைய கணினியில் நகலெடுத்தாலும் உடன் அதனை அலசிஆராய்ந்து அந்த கோப்புடன் எங்காவது நச்சுநிரல் ஒட்டிகொண்டுள்ளதாவென ஆய்வுசெய்து அறிக்கையாக அளிக்கின்றது

கூடவே தீயநிரல்(malware) இருந்தாலும் அதனையும் ஆய்வுசெய்து இயங்கவிடாமல் தடுக்கின்றது ஆனால் இந்த malware இலிருந்து கணினியை பாதுகாப்பதற்காக தனியாக பாதுகாப்பு பயனபாட்டினை செயல்பட செய்தால் மட்டும் அல்லது குறிப்பிட்ட காலஇடைவெளியில் செயல்படுமாறு கட்டளையிட்டிருந்தால் மட்டும் அதற்கேற்ப செயல்பட்டு ஆய்வுசெய்து தீயநிரலின் செயலை நீக்கம் செய்கின்றது நாம் கட்டளை இடாதவரை செயல்படாமல் இருக்கின்றது ஆயினும் Malware Bytes என்பது சிறப்பாக செயல்படுகின்றது

2

2

இரண்டு Malware களை பயன்படுத்தி கணினியை பாதுகாப்பதைவிட அனைத்து நச்சுநிரலையும் எதிர்த்து போரிடும் ஒரேயொரு எதிர்நச்சுநிரல்( anti-virus) பயன்பாடே போதுமானதாகும் என பரிந்துரைக்கபடுகின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: