பழைய கணினியையும் லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்தி புதிய கணினிபோன்ற வேகத்தில் செயல்படுமாறு செய்து பயன்படுத்தி கொள்க

  புதிய கணினியை அல்லது மடிக்கணினியை வாங்கியவுடன் நாம் அனைவரும் நம்முடைய வீடுகளில் பழைய கணினி அல்லது மடிக்கணினிகளை  பரணில் ஒதுக்கி வைத்திடுவோம்  அவைகள் தற்போது நம்முடைய வீடுகளில் வீணாக குப்பையாக கிடக்கின்றன அதனால் பழையபொருட்கள் வாங்குபவர்களிடம்  கொடுத்துவிடலாம் என நாமனைவரும் விரும்பிடுவோம் ஏனெனில் அவைகளில் விண்டோ8 அல்லது விண்டோ7 ஆகிய இயக்கமுறைமை மிகமுக்கியமாக விண்டோ எக்ஸ்பி எனும் இயக்கமுறைமை கூட மிக மெதுவாக எருமை நகருவதை போன்று இந்த பழைய கணினிகளில் செயல்படுவதால்  நாம் அனைவரும் நாம் விரும்பும் தற்போதைய வேகத்திற்கு அவை ஈடுகொடுக்காது என முடிவு செய்து பழையகுப்பையாக இவைகளை ஒதுக்கிவைத்திடுவோம் ஆயினும் சிறந்த கட்டற்ற லினக்ஸ் இயக்கமுறைமைகளை இவ்வாறான பழைய கணினிகளில் பயன்படுத்தினால் தற்போது நாம் விரும்பும் வேகத்தில்  அவை ஈடுகொடுத்து செயல்படுவதை காணலாம்   அதிலும் பப்பி லினக்ஸ் எனும் இயக்கமுறைமை இவ்வாறான பழைய ஓரங்கட்டபட்ட கணினிகளை செயல்படசெய்வதில்  மிகச்சிறந்ததாக உள்ளது இங்கு முதலில் யூஎஸ்பியில் இயக்கமுறைமையை வைத்து செயல்படுத்தபடும் செயல்முறையும் அதன்பின்னர் வன்தட்டில் இயக்கமுறைமையை நிறுவுகை செய்து செயல்படுத்தும் முறையும் விளக்கமாக விவரிக்கபடுகின்றது இவ்வாறு யூஎஸ்பியில் லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்துவதற்காக  www.linuxliveusb.com/ எனும் தளத்திலிருந்து தேவையான கோப்புகளை நம்முடைய கணினிக்கு பதிவிறக்கும் செய்துகொண்டு LinuxLive USB Creator  என்பதை நிறுவுகை செய்து அதனை செயல்படுத்துக அல்லது   Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்விரியும்  அதற்கான பட்டியலில்  LinuxLive USB Creator என தட்டச்சு செய்து தேடிகண்டுபிடித்து செயல்படுத்திடுக பின்னர் நம்முடைய கைவசமுள்ள  காலியான போதுமான நினைவகமுள்ள யூஎஸ்பியை கணினியில் அதற்கான வாயிலில் பொருத்துக. அதன்பின்னர் Refresh எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் சாளரத்தின் வலதுபுறமுள்ள step1 Choose your key என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியசெய்திடுக அதில் Choose a USB Key என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து  XX-FAT32-7.5GB என்றாவாறு உள்ள நம்முடைய யூஎஸ்பியை தெரிவுசெய்து கொள்க

பின்னர்  step2:Choose a Source  என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் பதிவிறக்கம் செய்துவைத்துள்ள பப்பி லினக்ஸை தேடிபிடி்தது தெரிவுசெய்து கொள்க   அதன்பின்னர் step3 யை விட்டிடுக step4:Optionsஎன்பதன்கீழுள்ள மூன்று வாய்ப்புகளில்  முதல் வாய்ப்பான Hide created files என்பதின் தேர்வுசெய்பெட்டியையும் இதே படிமுறையில் உள்ள இண்டாவது வாயப்பான Format the key in FAT32 என்பதின் தேர்வுசெய்பெட்டியையும் தெரிவுசெய்துகொள்க மூன்றாவது வாய்ப்பினை தெரிவுசெய்திடவேண்டாம் இரண்டாவது வாய்ப்பினை தெரிவசெய்திடுமுன் நம்முடைய யூஎஸ்பியில் முக்கியமான கோப்புகள் எதுவுமில்லை என்பதை உறுதி படுத்தி கொள்க. பின்னர் Step 5.இல் மின்னல் போன்றுள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக இதன்பின்னர் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் நம்முடைய யூஎஸ்பியில் பப்பி லினக்ஸ் செயல்படுமாறு நிறுவுகை செய்யபட்டுவிடும்  பின்னர்  பப்பி லினக்ஸ்  நிறுவுகை செய்யபட்ட யூஎஸிபியை வெளியிலெடுத்து நம்முடைய பழைய கணினியில் பொருத்தி செயல்படசெய்திடுக

11

அதன்பின்னர் பழைய கணினியை செயல்படசெய்க அது இயங்க தொடங்கிடும்போது F2எனும்  செயலிவிசையை அழுத்தி பயாஸ்திரைக்கு செல்க அங்கு  Boot எனும் தாவியின் திரைக்கும் பின்னர் Boot Device Priority எனும் தாவியின் திரைக்கும் சென்றிடுக  அங்கு Generic Flash Disk எனும் பெயருள்ள நம்முடை யூஎஸ்பியை தெரிவுசெய்துகொண்டு Exit எனும் தாவியின் திரைக்கு வந்து இந்த அமைவை சேமித்து கொள்க இதன்பின் நம்முடைய பப்பிலினக்ஸ் நிறுவுகை செய்யபட்டுள்ள யூஎஸ்பி வாயிலாக கணினியின இயக்கத்தை தொடங்கசெய்து செயல்படுத்திடுக

2

2

பின்னர்  Install எனும் பொத்தானை தெரிவுசய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும்  சாளரத்தில்  Universal Installer எனும் முதல் வாய்ப்பினை தெரிவுசெய்து  சொடுக்குதல் செய்திடுக  அதன்பின்னர்விரியும் திரையில்  Internal (IDE or Sata) hard drive எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டுokஎனும் பொத்தானை தெரிவசெய்துசொடுக்குக பின்னர் விரியும் puppy Universal Installer  எனும் சாளரத்தின் Choose which drive to install to: என்பதன்கீழ்  தேவையான இயக்ககத்தை தெரிவுசெய்துகொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக அதன் பின்னர் விரியும் Filesystem in partition எனும் திரையில் G-partedஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

3

3

பின்னர் நிறுவுகை செய்திடவிரும்பும் இயக்ககத்தை தெரிவுசெய்துகொண்டு  Unmount the drive என்பதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக அதன்பின்னர்  ext2 அல்லது ext3  ஆக வடிவமைப்பு செய்து applyஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இறுதியாக இந்த  G-partedஎனும் திரையை மூடிவெளியேறுக பின்னர் install puppy to sda1எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய பழைய கணினியில் பப்பி லினக்ஸ் இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடும்பணியை செயல்படுத்திடுக  நிறுவுகை செய்திடும்பணி முடிந்ததும் நம்முடைய பழைய கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதொடக்கம் செய்திடுக இப்போது நம்முடைய பழைய கணினியானது  பப்பி லினக்ஸ் இயக்கமுறைமையின் உதவியால் மிகவேகமாக செயல்படுவதை காணலாம்

4

4

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: