செல்லிடத்து பேசிகளில் பயன்படும் மின்கலண்களின் வாழ்நாள் கூடுவதற்கா

ஆண்ட்ராய்டு பயன்படுத்தபடும் செல்லிடத்து பேசிகளிலும் மடிக்கணினிகளிலும் கைக்கணினிகளும் பல்லூடக மையமாகவும் படபிடிப்பு கருவியாகவும் இருளான சமயத்தில் ஒளிவிளக்காகவும்  பயன்படுத்தபடுவதால் இவை செயல்படுவதற்காக ஏராளமான மின்சாரம்  தேவைபடுகின்றது அதனால் மின்சாரம் வழங்ககூடிய மின்கலண்களின் வாழ்நாள் மிகக்குறுகிவிடுகின்றது இதனை தவிர்த்து இந்த மின்கலண்களின் வாழ்நாள்  கூடுவதற்காக பின்வரும் வழிமுறையை பின்பற்றிடுக

  முதலில்அதிகமாக மின்சாரத்தை காலிசெய்யகூடிய பயன்பாடுகள் எதுவென தேடிபிடித்திடுக அதற்காக Settings => Device => Battery=> or Settings => Power => Battery Use=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் விரியும் பட்டியலில் உள்ள தேவையற்ற பயன்பாடுகளை  கண்டுபிடித்திடுக

   பின்னர்  Settings => Apps =>  All=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் விரியும் திரையில் நாம் முன்பு கண்டுபிடித்த பயன்பாடுகளை ஒவ்வொன்றாக  தெரிவுசெய்து கொண்டு Uninstall என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து  நீக்கம் செய்திடுக

  பலஆண்ட்ராய்டு பயன்பாடுகளில் social networks, weather apps , news apps என்றவாறானவைகளில் உள்ள தேவையற்ற  மின்சாரத்தை அதிகசெலவழிக்கும் பொருட்களை நீக்கம் செய்திடுக

  ஒருசில பயன்பாடுகளில் அவ்வப்போது இந்த பயன்பாட்டினை நிகழ்நிலைபடுத்தவா எனக்கோரி நமக்கு தொல்லை கொடுத்தவண்ணம் இருக்கும் இந்நிலையில் Settings =>  Apps=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக   பின்னர் விரியும் திரையில்  உள்ளபயன்பாடுகளில் அதிக முக்கியத்துவம் இல்லாத பயன்பாடுகளில் Show notifications என்ற தேர்வுசெய்வாய்ப்பு தேர்வுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் செய்திடுக

  அவ்வாறே இலவசமாக நாம் செல்லுமிடத்தை தானாகவே காண்பிப்பதற்கான பயன்பாடுகளையும் Settings =>  Location=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி அதனை நீக்கம் செய்திடுக

 நாம் நம்முடைய சாதனத்தை பயன்படுத்தினாலும் பயன்படுத்தா விட்டாலும் Wi-Fi, Bluetooth, GPS , cellular data ஆகிய இணைப்பு இருக்கின்றதாவென தேடிபிடித்து கொண்டே யிருக்கும் ஆதலால் அவைகளுள் இணைப்பு உள்ளவை தவிர மற்றவைகளை நிறுத்தம் செய்திடுக

 குறைந்த சைகை கிடைக்கும் இடங்களில் இணைப்பு ஏற்படுத்துவதற்காக மிக அதிக மின்சார செலவில் நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனமானது இணைப்பை ஏற்படுத்திகொள்ள முயலும் அந்நிலையில்  Airplane Mode ஐ செயல்படுத்தி சாதனம் நன்றாக செயல்படுமாறு செய்திடுக

 நாம்  ஓடிக்கொண்டிருக்கின்ற வண்டிகளில் இருந்து ஆண்ட்ராய்டு சாதனங்களின் வாயிலாக வேறுநபர்களுடன்  பேசிக்கொண்டிருந்தால் இந்த சாதனமானது நபர் இருவரும் பேசுவதற்காக அருகிலுள்ள தொலைத்தொடர்ப கோபுரத்தைஅனுகுவதற்கு அதிக பிரயத்தனம்செய்கின்றது அதனால் அதிக மின்சாரம் செலவாகும் அதனை தவிர்த்திட ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகளிலிருந்து முடிந்தவரை பேசுவதை தவிரக்கவும்

  Settings =>  Display =>  Wallpaper=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி தற்போது இயங்கி கொண்டிருக்கின்ற திரைக்காட்சியை தவிர்த்து  சாதாரன திரையாக தோன்றிடுமாறும் திரையின் ஒளிரும் தன்மையையும் போதுமான அளவிற்கு அமைவு செய்திடுக

  Settings => Sound=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் திரையில் Vibrate while ringing என்ற தேர்வுசெய்வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் செய்திடுக

  Settings => Saver=>  (or Power Saver=>)என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் திரையில் Power Saving Mode என்ற தேர்வுசெய்வாய்ப்பை தெரிவு செய்திடுக

 ஆண்ட்ராய்டில் உள்ள Android Lollipop 5.0 எனும் பயன்பாடு சாதானத்தில் மேலும் 90 நிமிடத்திற்கான மின்சாரத்தை சேமிக்கின்றது

 அதுமட்டுமல்லாது நம்முடைய சாதனத்திலுள்ள மின்கலன்கள் 100%ஆகமுழு மின்னேற்றம் செய்தோ அல்லது  0 %ஆக முழுவதும் காலியாகவோ செய்திடாமல்  40% முதல் 80% வரை மட்டும் எப்போதும் மின்னேற்றத்தில் இருக்குமாறு பராமரித்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: