குப்பையான விளம்பரங்களை தவிர்ப்பது எவ்வாறு

இணையத்தில் கூகுள் வாயிலாக உலாவரும்போது வியாபார விளம்பர குப்பை மென்பொருட்கள் அவ்வப்போது இடையிடையே குறிக்கிட்டு நம்முடிய பணியை அலைகழிக்க செய்திடும் அதன்பின் ஒருசில நேரங்களில் நாம் நம்முடைய பணியை தீவிரமாக ஈடுபட்டுகொன்டிருக்கும்போது திடீரென திரையில் உங்களுடைய கணினியின் வெப்பநிலை மிகஉயர்ந்துவிட்டது என்ற எச்சரிக்கை செய்தி தோன்றுவதை காணநேரிடும் ஐய்யய்யோ அப்படியா ஆகவிட்டது என அந்த எச்சரிக்கை செய்தியின்மீது இடம்சுட்டியை வைத்தவுடன் நம்மை நாம் செய்திடும் பணியிலிருந்து திசைதிருப்பி  நமக்கு தேவையற்ற குப்பையான மென்பொருட்களை நம்முடைய கணினியில் தானாகவே நிறுவுகை செய்வதும் நாம் எதிர்பார்க்காத குப்பை மென்பொருட்களின் திரையை தோன்றசெய்வதும் என நம்மை திக்குமுக்காட வைத்துவிடும் நாமும் பயந்துபோய் அடடா நம்முடைய கணினியில் பாதுகாப்பு அரண் இருந்தும் நச்சுநிரல் ஏதேனும் நம்முடைய கணினிக்குள் உள்நுழைவு செய்துவிட்டதாவென சோர்வுற்று அமர்ந்துவிடுவோம்  அஞ்சற்க இவையனைத்தும் நச்சுநிரல் அன்று தேவையற்ற விளம்பர அல்லது குப்பையான மென்பொருட்களாகும்   இந்நிலையில் திரையின் கீழ்பகுதியில் இடதுபுறமூலையில் உள்ள start=> control panel =>Programs=>Programs and Features => என்றவாறு  கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் விரியும் கணினியின் கட்டுப்பாட்டு பலகத்தில் (control panel) உள்ள நம்முடைய கணினியில் இதுவரை நிறுவுகை செய்யபட்டுள்ள பல்வேறு மென்பொருட்களின் பட்டியலை நாள்வாரியாக வரிசை படுத்தசெய்து அவற்றுள் தேவையற்றவைகளை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே  uninsatllஎன்ற கட்டளைபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து நீக்கம் செய்துவிடுக. இவ்வாறு இவைகளை நீக்கம் செய்யமுடியவில்லையெனில் https://toolslib.net/downloads/viewdownload/1-adwcleaner/ எனும் தளத்திலிருந்து adwcleaner என்பதை பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து அதனை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் வருடும் பணிமுடிவடைந்ததும்clean எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையற்ற குப்பையான மென்பொருட்களை இது நீக்கம் செய்துவிடும்

1.1

1.1

அவ்வாறே இணைய உலாவியான இண்டர்நெட் எக்ஸ்ப்ளோர்ர் திரையில் மேலே வலதுபுற மூலையிலுள்ள பற்சக்கரம் போன்ற Options என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலிருந்து  Internet options எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Internet options எனும்  உரையாடல் பெட்டியில் Advanced எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Advanced எனும் தாவியின் பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக. அதில் Browsing என்பதன் கீழுள்ள Enable third-party browser extensions என்ற தேர்வு செய்பெட்டி தெரிவு செய்திருந்தால் அதனை நீக்கம் செய்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் நம்முடைய கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மீண்டும் இயக்குக

1.2

1.2

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: