வாருங்கள் எம்எஸ் ஆஃபிஸ் பயன்பாட்டிற்கு பதிலாக லிபர் ஆஃபிஸ்பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளுங்கள்

மைக்ரோ சாப்ட் நிறுவனமானது தன்னுடைய எம்எஸ் ஆஃபிஸ் எனும் பயன்பாட்டு மென்பொருளை இணைய இணைப்பின் வாயிலாக நேரடியாக மட்டும் Outlook.com எனும் இணைய பக்கத்தின் வாயிலாக இலவச சேவையை வழங்குகின்றது இதில் ஒருசில செயலிகளை கட்டணம் செலுத்துபவர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது ஆனால் லிபர் ஆஃபிஸ் எனும் கட்டணமற்ற பயன்பாட்டு மென்பொருளானது எந்தவொரு இயக்க முறைமைகளிலும் கையடக்க சாதனங்களிலும் செயல்படும் திறன் வாய்ந்ததாகவும் எப்போதும் யார்வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள தயாராக உள்ளது மேலும் அவ்வப்போது சமீபத்திய மாற்றங்களுடன் மேம்படுத்தபட்டு புதியபதிப்பாக வெளியிடபட்டுகொண்டே உள்ளது. ஆயினும் எம் எஸ் ஆஃபிஸ் பயன்பாட்டு மென்பொருளானது விண்டோதவிர லினக்ஸில் வொயின் அல்லது ப்ளேலினக்ஸ் எமுலேட்டர் என்றகருவியின் வாயிலாக மட்டுமே செயல்படுகூடியது

இந்த லிபர் ஆஃபிஸில் எம்எஸ்வேர்டுக்கு சமமாக ரைட்டரும் எக்செல்லிற்கு சமமாக கால்க்கும் பவர்பாயின்ட்டிற்கு சமமாக இம்ப்பிரஸும் அக்சஸிற்கு சமமாக பேஸும் நாம் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளன அதுமட்டுமல்லாது எம் எஸ் ஆஃபிஸ் பயன்பாடுகளை போன்ற பயன்பாடுகளுடன் கணக்குகளுக்காக மேத் என்பதும் படங்களை கையாள ட்ராவும் கூடுதலாக இந்த லிபர் ஆஃபிஸ் பயன்பாடுகளில் கிடைக்கின்றன அதுமட்டுமல்லாது எம்எஸ் ஆஃபிஸில் ஒவ்வொரு பயன்பாட்டினையும் ஒவ்வொன்றாக இயக்கி பயன்படுத்திடவேண்டும் ஆனால் லிபர் ஆஃபிஸில் எந்தவொரு பயன்பாட்டின் திரையில்இருந்தும் வேறு அலுவலக பயன்பாட்டினை செயல்படுத்திடவிரும்பினால் உடன் திரையின் மேலே File=>New=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்தியவுடன் விரியும் பட்டியலிலிருந்து தேவையானபிற அலுவலக பயன்பாடுகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும். மேலும் இந்த லிபர் ஆஃபிஸ் பயன்பாடுகளிலிருந்து நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஆவணத்தினை எந்தவொரு கருவியை கூடுதல் துனையாக கொள்ளாமல் நேரடியாக பிடிஎஃப் கோப்பாக பதிவேற்றம் செய்திடமுடியும் இவ்வாறான பல்வேறு பயன்கொண்ட திறன்மிக்க லிபர் ஆஃபிஸ் எனும் கட்டற்ற அலுவலக பயன்பாட்டு மென்பொருளை வாருங்கள் அனைவரும் நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி கொள்வோம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: