லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-25

 லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளைபட்டையிலிருந்து File=>Export=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுவதன் வாயிலாக XHTMLஎன்பது போன்ற ஒரு ஆவணத்தின் வகையை  பல்வேறுவகையிலும் அதற்கான பின்னொட்டுகளை பயன்படுத்தி கோப்பின் அமைப்பை மாற்றி பதிவேற்றம் செய்திடமுடியும். இவ்வாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் விரியும் உரையாடல் பெட்டியில் கோப்பின் பெயரை முதலில் குறிப்பிட்ட பின்னர் கோப்பின் வகையை  File formatஎன்பதில் தயாராக இருக்கும் கீழிறங்கு பட்டியலிருந்து தெரிவுசெய்துகொண்டு Export என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

25.1

25.1

   அதுமட்டுமல்லாது லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது பல்வேறு வகையிலும் நாம் விரைவாக மின்னஞ்சல் அனுப்பிட உதவுகின்றது முதல் வழிமுறையாக ODT,DOC,PDFஆகிய மூன்றுவகை கோப்புகளின் வடிவமைப்புகளில் எந்தவொரு ஆவணத்தையும் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பிவைத்திடமுடியும்.

  இதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளை பட்டையிலிருந்து Tools => Option => LibreOffice Writer => Mail Merge E-mail=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் வித்தகரின்(wizard) உதவியால் முதலில் தேவையானவாறு கட்டமைவு செய்துகொள்க

   அதன்பின்னர்ODTவகை வடிவமைப்புகோப்பகளை மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பிவைத்திட லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளை பட்டையிலிருந்து File=>Send => Document as E-mail=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது ஏற்கனவே கட்டமைவு செய்து தயாராக உள்ள இயல்புநிலை மின்னஞ்சல் பயன்பாட்டினை செயல்படுத்தி திரையில் தோன்ற செய்திடும் அதில் நாம் வழக்கமாக மின்னஞ்சல் அனுப்புவதை போன்றே தேவையான விவரங்களை உள்ளீடுசெய்க பின்னர் மின்னஞ்சலுடன் நம்முடைய கோப்பினையும் சேர்த்து இணைத்து அனுப்பி வைத்திடலாம்

   இதற்கு பதிலாக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளை பட்டையிலிருந்து File=>Send => E-mail as OpenDocument Text=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தினாலும் மேலேகூறியவாறு செயல்படுத்தியதைபோன்ற செயல்களே இந்தவழிமுறையிலும் இருக்கும்.

  DOCவகை வடிவமைப்பு கோப்பகளை மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பிவைத்திடலிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளைபட்டையிலிருந்து File=>Send => E-mail as Microsoft Word=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக இவ்வாறு செய்தவுடன் முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது கோப்பின் அமைப்பை எம்எஸ் ஆஃபிஸ் வகையாக மாற்றியமைத்துகொள்கின்றது அதன்பின்னர் மேலேகூறியவாறான வழிமுறைகளை பின்பற்றிடுக

  PDFவகை வடிவமைப்புகோப்பகளை மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பிவைத்திட லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளைபட்டையிலிருந்து File=>Send => E-mail as PDF=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக இவ்வாறு செய்தவுடன் முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது கோப்பின் அமைப்பை PDF வகையாக மாற்றியமைத்து கொள்கின்றது அதன்பின்னர் மேலேகூறியவாறான வழிமுறைகளை பின்பற்றிடுக.

 லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் உதவியால் ஒன்றிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரேசமயத்தில் மின்னஞ்சல் அனுப்பிவைத்திடமுடியும். இதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் இருவழிமுறைகளை பின்பற்றிடவேண்டும். 1.Mail Merge Wizard ஐ பயன்படுத்தி நேரடியாக ஆவணத்தை உருவாக்கி அனுப்பிவைப்பது 2 முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் ஒரு ஆவணத்தை உருவாக்கி கொண்டு அதன்பின்னர் இந்த Mail Merge Wizard ஐ பயன்படுத்தி பலருக்கும் மின்னஞ்சலை அனுப்பிவைப்பது  இந்த இரண்டாவது வழிமுறையில் பின்வரும் படிமுறையை பின்பற்றிடுக

 முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் மின்னஞ்சல் அனுப்பிடவிரும்பும் ஆவணத்தை உருவாக்கியபின்அதனை திறந்துகொள்க பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளைபட்டையிலிருந்து Tools =>Mail Merge Wizard.=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக  உடன் விரியும் mail merge wizard எனும் வித்தகரின் திரையில்  select starting document for mail merge என்பதன் கீழுள்ள வாய்ப்புகளில்Use the current document  என்ற வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்துகொண்டு Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

25.2

 25.2

பின்னர் விரியும் mail merge wizard எனும்வித்தகரின் இரண்டாவது திரையில்what type of document do you want to create?என்பதன் கீழுள்ள வாய்ப்புகளில் E-mail message என்ற வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்துகொண்டு Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

25.3

25.3

 அதன்பின்னர் விரியும் mail merge wizard எனும் வித்தகரின் மூன்றாவது திரையில்Select Address List என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் Select Address List என்ற சிறுஉரையாடல் பெட்டியில்  தேவையான மின்னஞ்சல் முகவரிகளை தெரிவுசெய்துகொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

25.4

25.4

  குறிப்புஇந்நிலையில் Select Address List என்ற சிறுஉரையாடல் பெட்டியில் முகவரிபட்டியல் விரியவில்லையெனில் Addஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தேவையான மின்னஞ்சல் முகவரிகளை உள்ளீடு செய்து கொள்க.

அதன்பின்னர் mail merge wizard எனும் வித்தகரின் மூன்றாவது திரைக்கு சென்றுNext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

25.5

25.5

 பின்னர் விரியும்  Create salutationஎனும் திரையில் This document should contain a salutation.என்றவாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம்செய்தபின்னர்  இடதுபுற பலகத்தில் எட்டாவது படிமுறையான 8. Save, print or sendஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது முதலில்“Creating documents”எனும் செய்தியும் அதன்பின்னர் mail merge wizard எனும் வித்தகரின்Save, print or send  the documents என்றும்  திரையில் பிரதிபலிக்கும் அதில் Send merged document as E-Mail  என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

   பின்னர் விரியும் மின்னஞ்சல் அமைவினுடைய திரையின் கீழ்பகுதியில்  வழக்கமான மின்னஞ்சல் விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு   Send documentsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் லிபர் ஆஃபிஸானது நாம் மின்னஞ்சல் முகவரியில் குறிப்பிட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளுக்கு ஒரசமயத்தில் இந்த ஆவணத்தை மின்னஞ்சலாக அனுப்பிவைத்திடும்

25.6

25.6

 லிபர் ஆஃபிஸ் ஆவணத்தில் இரும கையொப்பத்துடன்(Digital Signature)  உருவாக்கிடதனியார் திறவுகோளிற்கான(private key) சான்றிதழ் தேவையாகும்இதனை ஒருசில தனியார் நிறுவனங்களும் அரசாங்கமும் வழங்குகின்றன முதலில் இருமகையொப்பத்தின் தனியார்திறவுகோளிற்கான சான்றிதழை பெற்றுகொள்க பின்னர் ஒரு ஆவணத்தினை இவ்வாறான இரும கையொப்பத்துடன் உருவாக்கியபின் அதற்கான திறவுகோள் நம்மிடம் இருந்தால் மட்டுமேகுறிப்பிட்ட ஆவணத்தினை திறந்திடமுடியும் இந்த இரும கையொப்பத்துடன்(digital signature) ஆவணத்தினை உருவாக்கிடலிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளைபட்டையிலிருந்து File => Digital Signatures=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக

25.7

25.7

உடன் நாம் இந்த ஆவணத்தை சேமிக்காது இருந்தால் அதற்கான எச்சரிக்கை செய்திபெட்டி யொன்று திரையில் தோன்றிடும் அதில் Yesஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முதலில் சேமித்துகொள்க  அதன்பின்னர்   digital signature எனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில் Addஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும்  Select Certificateஎனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில் நாம் ஏற்கனவே பெற்றிருந்த நம்முடைய இருமகையொப்ப சான்றிதழை தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் தோன்றிடும் digital signature எனும் உரையாடல் பெட்டியின்திரையில் மேலும் தேவையான சான்றிதழை தெரிவுசெய்துகொண்டுokஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துகொண்டபின் பொது திறவுகோளை(public key) சேர்த்து சேமித்து கொள்க உடன் இவ்வாறான இருமகையொப்பத்துடன் கூடிய கோப்பினை தனியானதொரு உருவபொத்தானாக நிலைபட்டியில் காண்பிக்கும்

  பொதுவாக நாம் அனைவரும் நம்மால் உருவாக்கபடும் லிபர் ஆஃபிஸ் ஆவணத்தில் நம்முடைய தனிப்பட்ட தரவுகள் ஆவணத்தின் பதிப்பெண் ,கருத்துகள் , தகவல்கள், ஆவணத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஆகியவற்றை முழுவதையும் நீக்கம் செய்து மற்றவர்களுக்கு அனுப்பிவைத்திட விரும்புவோம்  இதற்காகலிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளைபட்டையிலிருந்து Tools =>Options=> LibreOffice=> Security => Options=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக பின்னர் தோன்றிடும் திரையில் நாம் அனுப்பவிரும்பாத தகவல்களை மட்டும் நீக்கம் செய்துகொள்க

தனிப்பட்ட தகவல்கள் எனில்  லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளைபட்டையிலிருந்து File => Properties=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் விரியும் Properties எனும் திரையின் Generalஎனும் தாவியின் பக்கத்தில்  Apply user data எனும் வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் செய்தபின்னர் Resetஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக 25.8

 ஆவணத்தின் பதிப்பெண் போன்றதகவல்களெனில் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளைபட்டையிலிருந்து File => Versions=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் விரியும் திரையில் பதிப்பெண் பட்டியலை விரியசெய்து Deleteஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து நீக்கம் செய்திடுக  அல்லது

  வேறொரு பெயராக மாற்றிடலிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலிருக்கும் கட்டளைபட்டையிலிருந்து File => Save As=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் விரியும் திரையில் வேறொரு பெயரினை இந்த கோப்பிற்கு உள்ளீடு செய்து  Save எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து வேறொரு பெயரில் இந்த கோப்பினை சேமித்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: