பொதுவாக பயனாளர் ஒருவர் தன்னுடைய சாதனத்தை கம்பிதொடர்பில்லாமல் இணையத்தை தொடர்பு கொண்டு இணையஉலகில் உலாவர ஒரு கம்பியில்லா வழிசெலுத்தி(wireless router)பயன்படுகின்றது. ஆயினும் ஒரேயொரு நபர் எனில் கம்பியுடன் இணைப்பு ஏற்படுத்தி கொள்ளலாமே எதற்காக கம்பியில்லா வழிசெலுத்தியை பயன்படுத்திடவேண்டும் என்பவர்கள் பின்வரும் செய்தியை கருத்தில் கொள்க. தனியொருநபர்கூட ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களை பயன்படுத்திடும் நிலையிலும் அவர் தான் செல்லுமிடமெல்லாம் இணையத்தொடர்பு கொண்டு பயன்படுத்தி கொள்ளவிழையும் நிலையிலும் அவருக்கு கண்டிப்பாக இந்த கம்பியில்லா வழிசெலுத்தி அத்தியாவசியமாக தேவையாகும். தொடர்ந்து இணையஉலாவலில் சாதாராண தேவைமட்டுமெனில் வொய்ஃபி ஒற்றை தட வழிசெலுத்தி போதுமானதாகும். ஆயினும் ஒளிஒலி படங்கள் ,விளையாட்டுகள் போன்ற பணி்ச்சுமை அதிகமான தேவையெனில் மிகமேம்பட்ட கம்பியில்லா வழிசெலுத்தி பயன்படுத்தி கொள்வது நல்லது. ஒற்றை வழித்தடம் எனில் 2.4 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசை திறன்கொண்டதும் இரட்டை வழித்தடம் எனில் 5 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசை திறன்கொண்டதும் போதுமானவையாகும் மிக முக்கியமாக இதனை நம்முடைய வீட்டிற்கு மட்டும் பயன்படுத்தபோகின்றோமா அல்லது அலுவலகத்தில் பயன்படுத்திட போகின்றோமா என்பதை முடிவுசெய்து அதற்கேற்ற தேவையான அலைவரிசையையும் தடங்களையும் முடிவுசெய்திடுக அதற்கடுத்ததாக இந்த வழிசெலுத்தியின் செயல்வேகம் 300 எம்பிபிஎஸ் ,900எம்பிபிஎஸ்,1900எம்பிபிஎஸ் ஆகிய பல்வேறு வகையில் கிடைக்கின்றன அவற்றுள் நம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்ற செயல்வேகமுள்ள வழிசெலுத்தியை மட்டும் தெரிவுசெய்துகொள்க. ஆரம்பத்திலிருந்து கம்பியில்லா இணைப்பிற்கு 802.11n என்பது பயன்பாட்டில் இருந்து வருகின்றது ஆனால் தற்போது 802.11acஎன்ற வகையாக மேம்படுத்தபட்டுள்ளது அதனால் நம்முடைய தேவைக்கேற்றதை தெரிவுசெய்துகொள்க அதற்கடுத்ததாக பாதுகாப்பு அரண் மிகமுக்கியமான தேவையாகும் இந்த கம்பியில்லா வழிசெலுத்தியில் தற்போது WPA2என்பது மிகமேல்நிலை பாதுகாப்பை வழங்குகின்றது இதனையே நம்முடைய கம்பியில்லா வழிசெலுத்தியிலும் பயன்படுத்தி கொள்க இன்று நாமனைவரும் இந்த IPv6 எனும் காலத்தில் வாழ்ந்து வருகின்றோம் இதனை தொடர்ந்த வருங்காங்களில் இதற்கடுத்த பதிப்பு வந்ததெனில் அதனை பயன்படுத்தி கொள்க வெளிப்புற சாதனங்களுடன் இந்த கம்பியில்லா வழிசெலுத்தியை இணைப்பதற்காக SDஅட்டைசெருகுவாய்களையும் USB வாயில்களையும் கொண்ட கம்பியில்லா வழிசெலுத்தியை பயன்படுத்தி கொள்க