லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-23-அச்சிடுதல் தொடர்ச்சி

வண்ண அச்சுபொறியில் கருப்பு வெள்ளையாக அச்சிடுதல்.

 லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் அச்சிடும் பணியை கருப்பு வெள்ளை வண்ணத்தில் அதுவும் வண்ண அச்சுப்பொறியில் அச்சிடவிரும்புவோம். இவ்வாறு கருப்புவெள்ளையில் அச்சிடுவதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் ஏராளமான வாய்ப்புகள் நாம் பயன்படுத்துவதற்காக தயாராக உள்ளன.

எச்சரிக்கை  ஒருசில அச்சுபொறிகளில் நாம் எண்ணதான் வண்ணமயமாக அச்சிடுவதை  மாற்றி கருப்பு வெள்ளையாக அச்சிடுமாறு அமைவு செய்தாலும் வண்ணமயமாக மட்டுமே அச்சிடும் என்பதை மனதில் கொள்க.

அச்சுபொறியின்  அமைவை மாற்றியமைத்திட

1இதற்காக முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டையில்File => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
2உடன் விரியும் Printஎனும் உரையாடல் பெட்டியில் Properties எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Properties எனும் உரையாடல் பெட்டியை திறந்து கொள்க .இதில் ஒவ்வொரு அச்சுபொறியிலும் ஒவ்வொரு வகையான வாய்ப்புகள் மாறிமாறிஇருக்கும்  அதனால் அந்தந்த அச்சுபொறிகளை கையாளுவதற்கான அதனதன் கையேடுகளை அல்லது உதவிதுளிகளை தனித்தனியாக படித்து அறிந்துகொண்டு வண்ணமயமாக அச்சிடுவதற்கான அமைவை தேடிபிடித்திடுக

3 இந்த வண்ணமயமாக அச்சிடுவதற்கான அமைவில் கருப்புவெள்ளை அல்லது சாம்பல் வண்ணத்தில் அச்சிடுவதற்கான அமைவும் கண்டிப்பாக இருக்கும் அந்த அமைவை மட்டும் தேடிபிடித்து தெரிவுசெய்துகொள்க

4 பின்னர் OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Printஎனும் உரையாடல் பெட்டிக்கு திரும்புக.

5  அதன்பின்னர் இந்தPrintஎனும் உரையாடல் பெட்டியில் Printஎனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் நாம் விரும்பியவாறு  வண்ணமயமாக அச்சிடுவதற்கான அச்சுபொறியில் கருப்பு வெள்ளையாக அச்சிடும்..

ஆலோசனை எந்தவொரு ஆவணத்திலும் உள்ள வரைபடங்களை அச்சிடும் போது கருப்பு வெள்ளைக்கு பதிலாக சாம்பல் வண்ணமாக அச்சிடுதல் சிறந்ததாக அமையும்.

லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் வண்ணமயமான உரைகளையும் வரைபடங்களையும்   சாம்பல் வண்ணமாக அச்சிடுமாறு அதனுடைய அமைவை மாறுதல்செய்திட

1இதற்காக முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில்  உள்ள கட்டளை பட்டையில்  Tools => Options => LibreOffice => Print என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

2 பின்னர்விரியும் Print எனும் உரையாடல் பெட்டியில் Convert colors to grayscaleஎன்ற வாய்ப்பை மட்டும் தெரிவு செய்து கொண்டுOKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறிடுக.

3 அதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டையில்File =>Print=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

4உடன் விரியும் Printஎனும் உரையாடல் பெட்டியில் Printஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் நாம் விரும்பியவாறு  வண்ணமயமான உரைகளையும் வரைபடங்களையும்   சாம்பல் வண்ணமாக  அச்சுபொறியானது அச்சிடும்

 லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் அனைத்து வண்ணமயமான உரைகளை கருப்பு வெள்ளையாகவும் ,வரைபடங்களை   சாம்பல் வண்ணமாகவும் அச்சிடுமாறு அதனுடைய அமைவை மாறுதல்செய்திட

1இதற்காக முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டையில் Tools => Options => LibreOffice [Component] => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக

2உடன்  விரியும் Print எனும் உரையாடல் பெட்டியில் Contents என்பதன்கீழ் Print text in blackஎன்ற வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்துகொண்டுOKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறிடுக.

3 அதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டையில் File => Print=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

4உடன் விரியும் Printஎனும் உரையாடல் பெட்டியில் Printஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் நாம் விரும்பியவாறு வண்ணமயமான உரைகளை கருப்பு வெள்ளையாகவும் ,வரைபடங்களை   சாம்பல் வண்ணமாகவும் அச்சுபொறியானது அச்சிடும்.

அச்சிடுமுன் அச்சிடுவதை முன்காட்சியாக காணுதல்

நாம் வழக்கமாக லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் அச்சிடுமுன் முன்காட்சியாக காணவிரும்பினால்  அச்சிடும்போது எவ்வாறு இருக்கும் என திரையில் காண்பிக்கும் உடன் இந்த திரைகாட்சியை நாம் விரும்பியவாறு மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும் மேலும் அச்சிடுபணியை அதற்கான தாளில் இரண்டுபக்கமும் அச்சிடுமாறு செய்திடமுடியும் பொதுவாக முன்காட்சியில் திருத்தம்  செய்வதற்கான editable view எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அல்லது படிக்கமட்டும் (read- only view)என்பதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துதிருத்தம் செய்தல் ,படிக்கமட்டும் செய்தல் ஆகிய இருவழிகளில் அனுமதிக்கின்றது

23.1

23.1

1இதற்காக முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டையில்File => Page Preview=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  அல்லது லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள செந்தர கருவிகளின் பட்டையில் Page Preview எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

23.2

23.2

2 உடன் வடிவமைப்பிற்கான கருவிகளின் பட்டைக்கு பதிலாக Page Previewஎனும் கருவிகளின் பட்டையை திரையில் பிரதிபலிக்கசெய்திடும்

3 இந்தPage Previewஎனும் கருவிகளின் பட்டையில் இருபக்கங்கள்(Two Pages),பலபக்கங்கள் (Multiple Pages) அல்லது புத்தககாட்சி (Book Preview)ஆகிய உருவபொத்தான்களில் நாம் விரும்புவதை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக

4 பிறகு இந்த முன்காட்சியிலிருந்து ஆவணத்தை அச்சிடுவதற்காக இதே கருவிகளின் பட்டையிலுள்ள Print document எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

5 பின்னர் விரியும்  Printஎனும் உரையாடல் பெட்டியில் Printஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் நாம் விரும்பியவாறு அச்சுபொறியானது ஆவணத்தை அச்சிடும்

முகவரிகளை(Envelope) அச்சிடுதல்

முகவரிகளை அச்சிடுவதற்காக 1தானாகவே முகவரிகளை அச்சிடுமாறு அமைவுசெய்தல் , 2 ஏற்கனவே உள்ள  ஆவணத்தில் முகவரிகளை அச்சிடுமாறு அமைவு செய்தல் ஆகிய இரண்டுவழிமுறைகளை பின்பற்றிடவேண்டும்

23.3

23.3

1இதற்காக முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டையில்Insert => Envelope =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

2 உடன் விரியும் Envelope எனும் உரையாடல் பெட்டியில் Envelope எனும் தாவியின் பக்கத்தை  முதலில் தோன்ற செய்திடுக  அதில் Addressee  Senderஆகிய இரு உரை பெட்டிகளிலும் அச்சிடவிரும்பும் முகவரிகளை சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்து கொள்க .தேவையெனில் நேரடியாக முகவரிகளைஇந்த பெட்டிகளில் தட்டச்சுசெய்துகொள்க அல்லது அதன் வலதுபுறமுள்ள தரவுதள (Database)கீழிறங்குதல் பட்டியை விரியசெய்து அந்த தரவுதளத்திலிருந்து(Database) முகவரிகளை தெரிவுசெய்து கொள்க அல்லது  முகவரிகளுக்கான அட்டவணையிலிருந்து(Table) தேவையானவற்றை மட்டும் தெரிவு செய்து கொள்க மேலும் விவரங்களுக்கு மெயில் மெர்ஜ் எனும் பகுதியில் காண்க.

3அடுத்ததாகFormatஎனும் தாவியின் பக்கத்தில் Addressee  Senderஆகிய இரு உரை பெட்டிகளின் தகவல்களும் மிகச்சரியாக அமைந்துள்ளனவா என அதன் வலதுபுற கீழ்பகுதியின் முன்காட்சி பகுதியில் சரிபார்த்துகொள்க

23.4

23.4

 4 சரியாக இல்லையெனில்அதனைசரிசெய்திடவிரும்பும்போது format என்பதன் அருகிலிருக்கும்  Editஎனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதிலுள்ள கீழிறங்குதல் பட்டியலை விரியசெய்திடுக பின்னர் அதில்உள்ள   Character எனும்  வாய்ப்பிலிருந்து  Fonts (Sizes…), Fonts Effects (Underlining, Color…),Position (Rotating/scaling…), Hyperlink, Background ஆகியவற்றை தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொள்க   அவ்வாறே Paragraphஎனும் வாய்ப்பிலிருந்து Indents & Spacing, Alignment, Text Flow, Tabs, Drop Caps, Borders , Backgrounds.ஆகியவற்றை தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொள்க

5 இதே தாவிபக்கத்தின் இடதுபுறம் கீழ்பகுதியிலுள்ள Sizeஎனும் பகுதியில் Format என்பதற்கருகிலுள்ளகீழிறங்கு பட்டியலிலிருந்து Envelopeஇன் வடிவமைப்பை தெரிவுசெய்து கொண்டு தேவையானவாறு அகலத்தையும் உயரத்தையும் அமைத்துகொண்டு செய்த மாறுதல்களை வலதுபுற கீழ்பகுதியின்முன்காட்சி பகுதியில் சரிபார்த்துகொள்க தயார்நிலையில் உள்ள வடிவமைப்பை தெரிவுசெய்திருந்தால் அதன் அளவைமட்டும் சரிபார்த்துகொள்க. User defined எனும் வாய்ப்பினை தெரிவுசெய்திருந்தால் அளவுகளை தேவையானவாறு சரிசெய்து கொள்க.

6  இதன்பின் Printerஎனும் தாவியின் பக்கத்திரைக்கு செல்க அங்கு envelope orientation , shifting ஆகிய  வெவ்வேறுவகையில் உள்ள அமைவை தெரிவுசெய்து அமைத்து பொருத்தமானதை அமைத்திடுக அவ்வாறே நம்மிடம் உள்ள அச்சுபொறிக்கேற்ப அதற்கான அமைவையும் சரிசெய்து அமைத்துகொள்க

7 வடிவமைப்பு பணிமுடிவடைந்து அச்சிடதயாராக இருக்கின்றோமெனில்  New Doc , Insert

ஆகிய இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குதல்இந்த பணியை முடிவுக்கு கொண்டுவருக இந்நிலையில் New Doc என்ற வாய்ப்பை தெரிவுசெய்தால் முகவரியை மட்டும் உருவாக்கிடும் அல்லது புதிய ஆவணத்தை இந்த முகவரியை கொண்டு உருவாக்கிடும். Insertஎனும் வாய்ப்பானது ஏற்கனவே இருக்கும் ஆவணத்தில் முகவரியை மட்டும் முதல் பக்கமாக உருவாக்கிடும்  இந்த முகவரியை திருத்திடும் பணியை மேலும் தொடர விரும்ப வில்லை யெனில் Cancelஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது Escஎனும் விசையை அழுத்துக இந்தமுகவரியை மறுஅமைவு செய்திடவிரும்பினால்  Resetஎனும்  தெரிவு செய்து சொடுக்குதல் செய்திடுக உடன் நாம் செய்தமாறுதல்கள் நீக்கம் செய்யபட்டு முதலில் இருந்த நிலைக்கு சென்றுவிடும்

இந்த முகவரியை அச்சிடுவதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளைபட்டையில்  File => Print=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Printஎனும் உரையாடல் பெட்டியில் Print range  என்பதன்கீழ் Pagesஎன்பதை தெரிவுசெய்து அதில் 1 என தட்டச்சுசெய்துகொண்டுOKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க

23.5

23.5

சிறுதாள்களை அச்சிடுதல்

வெவ்வேறுமுகவரிகளை அச்சிடுவதற்கு இந்த சிறுதாள்கள்(labels) எனும் வாய்ப்பு பயன்படுகின்றது முகவரிகளின் ஒட்டும் தாள் இதற்கு எடுத்துகாட்டாக கூறலாம்

1 இவ்வாறு  செய்வதற்காக முதலில்  லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டையில் File => New => Labels=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக

2 உடன் விரியும் Labels எனும் உரையாடல் பெட்டியின் Labels எனும் தாவியின் பக்கத்திரையில் Inscriptionஎனும் உரைபெட்டியில் சிறுதாளில் அச்சிடுவதற்கான விவரங்களை தட்டச்சு செய்திடுக அல்லது அதன் வலதுபுறமுள்ள தரவுதள (Database) கீழிறங்குதல் பட்டியை விரியசெய்து இந்த தரவுதளத்திலிருந்து(Database) முகவரிகளை தெரிவு செய்து கொள்க அல்லது  முகவரிகளுக்கான அட்டவணையிலிருந்து (Table) தெரிவு செய்துகொள்க மேலும் விவரங்களுக்கு மெயில் மெர்ஜ் எனும் பகுதியில் காண்க.

23.6

23.6

3 பின்னர் இதே தாவியின் பக்கத்தின் வலதுபுறம் கீழ்பகுதியில் Brandஎன்பதன்கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையானவாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்துகொள்க உடன் தொடர்புடைய வகையானது Typeஎனும் கீழிறங்கு பட்டியலில் மாறிதோன்றிடும் தேவையெனில் இந்தType இன் கீழிறங்கு பட்டியலிலும் நாம் விரும்பும் வாய்ப்புகள்  வேறு ஏதேனும் இருந்தால் அதனை தெரிவுசெய்துகொள்க

4 அதன்பின்னர் Format எனும் தாவியின் பக்கத்தில்   pitch, sizes, margins, columns ,rows

ஆகியவற்றிலிருந்து வரையரை செய்திடுக அல்லது ஏற்கனவே தயார்நிலையில் உள்ளவைகளிலிருந்து சரிபார்த்து உறுதிசெய்து கொண்டு Saveஎனும் பொத்தானை அழுத்தி இந்த வடிவமைப்பின் மாறுதல்களை சேமித்திடுக

23.7

23.7

 5பின்னர் Optionsஎனும்  தாவியின் பக்கத்தில் சிறுதாட்களின் அனைத்து பக்கங்களையும் அல்லது ஒருசிறுதாளை மட்டும் எந்த கிடைவரிசையின் எந்த நெடுவரிசையில் உள்ளது என தெரிவுசெய்துஅச்சிடுமாறு தெரிவுசெய்திடலாம்

6 இவ்வாறு வடிவமைப்பு பணி அனைத்தும் முடிவுற்றவுடன் New Documentஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சிறுதாட்களின் தாளை உருவாக்கலாம் அல்லது இந்த சிறுதாள் அமைவு செய்திடும் பணியை மேலும் தொடர விரும்ப வில்லை யெனில் Cancelஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது Escஎனும் விசையை அழுத்துக இந்தசிறுதாளை மறுஅமைவு செய்திடவிரும்பினால்  Resetஎனும்  தெரிவு செய்து சொடுக்குதல் செய்திடுக உடன் நாம் செய்தமாறுதல்கள் நீக்கம் செய்யபட்டு முதலில் இருந்த நிலைக்கு சென்றுவிடும்இந்த சிறுதாளை அச்சிடுவதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளைபட்டையில்   File => Print=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Printஎனும் உரையாடல் பெட்டியில் Printஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க அல்லது திரையின் மேலேகருவிகளின் பட்டியலிலுள்ள Print File Directly எனும் உருவபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து நேரடியாக கூடஅச்சிடலாம்

23.8

23.8

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: