லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-22

 லிபர் ஆஃபிஸின் ரைட்டரில் உருவாக்கபடும் ஒரு ஆவணத்தை விரைவாக அச்சிடுவதற்காக லிபர் ஆஃபிஸின் ரைட்டர் திரையின் மேலே கருவிகளின் பட்டியலில் உள்ள எனும் Print File Directlyஎன்ற பெயருடைய உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் நாம் பணிபுரியும் ஆவணம் முழுவதும் நேரடியாக அச்சுபொறிக்கு இயல்புநிலை கட்டமைவை கொண்டு அச்சிடுவதற்காக செயல்படுத்தபட்டுவிடும்
குறிப்பு.இயல்புநிலை அச்சுபொறிக்கு பதிலாக நாம் வரையறுக்கும் அச்சுபொறிக்கு அச்சிடுமாறு அமைவு செய்வதற்காக லிபர் ஆஃபிஸின் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Tools => Options => Load/Save => General=>என்றவாறு கடடளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் தோன்றிடும் Options Load/Save Generalஎனும் உரையாடல் பெட்டியின் வலதுபுறபலகத்தில் Load என்பதன்கீழ்உள்ள Load printer settings with the documentஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
திரையின் மேலே கருவிகளின் பட்டியலில்உள்ளவிரைவாக அச்சிடு எனும் உருவபொத்தான் வாயிலாக அச்சிடத்தேவையில்லை வழக்கமான கட்டளைவரிகளின் வாயிலாக அச்சிடுதலை செயல்படுத்த விழைபவர்களுக்காக லிபர் ஆஃபிஸின் ரைட்டர் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள File => Print=> என்றவாறு கடடளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Pஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் அச்சிடுதல் (Print) எனும் உரையாடல் பெட்டியொன்று திரையில் General, Libre Office Writer, Page Layout, Options ஆகிய தாவி பொத்தான்களுடன் இயல்புநிலையில் Generalஎனும் தாவியின் திரை(படம்-22.1) தோன்றிடும்

22.01

படம்-22.1
குறிப்பு Print எனும் உரையாடல் பெட்டியில் நம்மால் தெரிவுசெய்யபடும் வாய்ப்புகளானது நடப்பில் நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஆவணத்தில் மட்டுமே செயல்படுத்துபடும். இயல்புநிலை அச்சுபொறி அமைவை கட்டமைவு செய்வதற்காக லிபர் ஆஃபிஸின் ரைட்டர் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Options =>LibreOffice => Print =>அல்லது Tools => Options => LibreOffice Writer => Print=>என்றவாறு கடடளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் தோன்றிடும் Options LibreOffice Print அல்லது Options LibreOffice Writer Print எனும் உரையாடல் பெட்டியின் வலதுபுறம் உள்ள வாய்ப்புகளில் தேவையானவைகளை தெரிவுசெய்துகொண்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
Print எனும் உரையாடல் பெட்டியில்Generalஎனும் தாவியின் திரையில்உள்ள வாய்ப்புகள்
இதே திரையின்printer எனும் பகுதியின் கீழ் நம்முடைய கணினியில் இணைக்கபட்டுள்ள அச்சுப்பொறிகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொள்க
இதேதிரையின்Ranges and copies எனும் பகுதியின் கீழ் pagesஎன்றவாய்ப்பில் நடப்பு ஆவணத்தின் பக்கஎண் பிரதிபலிக்கும் அனைத்து பக்கங்களுமா( All pages )நடப்பு பக்கம் மட்டுமா (pages)எத்தனை நகல்கள் (number of copies) என்பன போன்றவாய்ப்புகளில் தேவையான வாய்ப்புகளை மட்டும் தெரிவசெய்துகொள்க
பொதுவாக ஒரு ஆவணத்தில் உள்ள ஒருசில சொற்களுக்கான விளக்கங்களை comments எனும் பகுதியில் உருவாக்கியிருப்பார்கள் அதனால் printஎனும் பகுதியில் உள்ள comments எனும் கீழிறங்கு பட்டியலின் வாய்ப்புகளில் தேவையானதை தெரிவுசெய்து கொள்க
குறிப்பு ஒரு ஆவணத்தில் உள்ள ஒரு சில சொற்களுக்கு commentsஎனும் பகுதியில் விளக்கம் உருவாக்கியிருந்தால் மட்டுமே இந்த commentsஎனும் கீழிறங்கு பட்டியலின் வாய்ப்பு திரையில் தோன்றி வேலைசெய்திடும்
இதே Print எனும் உரையாடல் பெட்டியில்Generalஎனும் தாவல்திரையின் பக்கத்தில் உள்ள Propertiesஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தோன்றிடும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியின் வாயிலாக நெடுக்கை வசமாகவா(Portrait) கிடைமட்டவசமாகவா(Landscape) என்றும் எந்தவகையான தாளின் பெட்டியென்றும்(paper tray) தாளின் அளவையும்(paper size) தெரிவுசெய்துகொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
மேலும் Print எனும் உரையாடல் பெட்டியில்optionsஎனும் தாவல்திரையின் பக்கத்தை தோன்ற செய்து பல்வேறு வாய்ப்புகளை தெரிவுசெய்து செயல்படுத்துக
அச்சிடும் ஒற்றைத்தாளில் ஒன்றுக்குமேற்பட்ட பக்கங்களை அச்சிடுதல்
நாம் இந்த லிபர் ஆஃபிஸின் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒன்றுக்குமேற்பட்ட பக்கங்களை ஒற்றைத்தாளில் அச்சிடுமாறு செய்திடலாம் இதற்காக Print எனும் உரையாடல் பெட்டியில்Page Layoutஎனும் தாவல் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துPage Layout எனும் தாவல்பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக
அதில் Layout எனும்பகுதியில்pages per sheet எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க இதில் இயல்புநிலையில் 2 பக்கங்களை அச்சிடுமாறு அமைக்கபட்டிருக்கும் இரண்டு பக்கங்களுக்கு மேல் எனில் order என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியலில் எந்த வகையென தெரிவுசெய்து கொள்க
pages sideஎனும் பகுதியில் includeஎன்பதன் கீழிறங்கு பட்டியலின் வாயிலாக நடப்பிலுள்ள இந்த ஆவணத்தின் அனைத்து பக்கங்களையுமா அல்லது சிலபக்கங்களை மட்டுமாவென தெரிவுசெய்துகொள்க
இவ்வாறு அனைத்து வாய்ப்புகளையும் தெரிவுசெய்து அமைத்தபின்னர் printஎனும் பொத்தனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து ஆவணத்தை நாம் விரும்பியவாறு அச்சிட்டுகொள்க.
ஆலோசனை ஒரே தாளில் இரண்டு பக்கத்தை அச்சிடுவதற்கு அச்சிற்குமுன் காட்சியின் வாயிலாக கூடஅச்சிடலாம்

22.02

படம்-22.2
எதனை அச்சிடுவது என தெரிவுசெய்தல்
லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் ஆவணம் முழுவதும் அச்சிடுவதற்கு பதிலாக தனித்தனி பக்கங்களை அல்லது ஒரு பக்கத்தில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் அல்லது அந்த ஆவணத்தில் நாம் தெரிவுசெய்த பகுதியை மட்டும் அச்சிடலாம்
பக்கங்களை தனித்தனியாக அச்சிடுவதற்காக
1முதலில் லிபர் ஆஃபிஸின் ரைட்டர் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள File => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Pஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் அச்சிடுதல் (Print) எனும் உரையாடல் பெட்டியொன்று Generalஎனும் தாவியின் திரையுடன்தோன்றிடும்
2பின்னர் இந்த திரையின்Ranges and copies எனும் பகுதியின் கீழ் pagesஎன்றவாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க
3அதன்பின்னர்இந்த pagesஎன்றவாய்ப்பிற்கு அருகிலுள்ள பெட்டியில் அச்சிடுவதற்கு நாம் விரும்பும் அச்சிடும் பக்கங்களின் வரிசையை தெரிவுசெய்துகொள்க
4 பின்னர்Print எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
குறிப்பிட்ட பகுதியைமட்டும் அச்சிடுவதற்காக
1முதலில் லிபர் ஆஃபிஸின் ரைட்டர் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள File => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Pஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் அச்சிடுதல் (Print) எனும் உரையாடல் பெட்டியொன்று Generalஎனும் தாவியின் திரையுடன்தோன்றிடும்
2பின்னர் இந்ததிரையின்Ranges and copies எனும் பகுதியின் கீழ் pagesஎன்றவாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க
3அதன்பின்னர் இந்த pagesஎன்றவாய்ப்பிற்கு அருகிலுள்ள பெட்டியில் அச்சிடும் பக்கங்களின் வரிசை 1–4 அல்லது 1,3,7,11என்றவாறு தெரிவுசெய்துகொள்க
4 பின்னர் Print எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
தெரிவுசெய்த பகுதியைமட்டும் அச்சிடுவதற்காக
1முதலில்ஆவணத்தில் நாம் விரும்பும் பகுதியை தெரிவுசெய்துகொள்க
2 பின்னர் 1லிபர் ஆஃபிஸின் ரைட்டர் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள File => Print=> என்றவாறு கடடளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Pஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் அச்சிடுதல் (Print) எனும் உரையாடல் பெட்டியொன்று Generalஎனும் தாவியின் திரையுடன்தோன்றிடும்
3அதன்பின்னர் இந்ததிரையின்Ranges and copies எனும் பகுதியின் கீழ் Selection என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டு பிரிதிபலிக்கும்
4 பின்னர் Print எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
துண்டுவெளியீடை(சிற்றேட்டை) அச்சிடுதல்
லிபர் ஆஃபிஸின் ரைட்டர்,இம்ப்பிரஸ்,ட்ரா ஆகிய பயன்பாடுகளில் ஒரேதாளில் ஒருஆவணத்தின் இரண்டு பக்கங்களை அச்சிட்டபின் தாளினை பாதியாக மடித்து சிற்றேடு போன்று அமைத்திடமுடியும் .
ஆலோசனை இவ்வாறு ஒரு ஆவணத்தின் இரண்டு பக்கங்களை சிற்றேடாக அச்சிடுமுன் பொருத்தமான விளிம்புகள் எழுத்துரு அளவுகள் போன்றவற்றை சரிசெய்து அமைத்துகொள்க
சிற்றேட்டை ஒற்றை பக்கத்தில் அச்சிடும் அச்சுபொறியில் அச்சிடுவதற்காக
1முதலில் லிபர் ஆஃபிஸின் ரைட்டர் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள File => Print => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Pஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் அச்சிடுதல் (Print) எனும் உரையாடல் பெட்டியொன்று Generalஎனும் தாவியின் திரையுடன்தோன்றிடும்
2அதில் Propertiesஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தோன்றிடும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியின் வாயிலாக நெடுக்கை வசமாகவா(Portait) கிடைமட்டவசமாகவா(Landscape) என்றும் எந்தவகையான தாளின் பெட்டியென்றும்(paper tray) தாளின் அளவையும்(paper size) தெரிவுசெய்துகொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
3பின்னர் Page Layoutஎனும் தாவல் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துPage Layout எனும் தாவல்பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக
4அதன்பின்னர் இந்த Page Layout எனும் தாவிபொத்தானின் திரையில் Brochure எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க
5 பின்னர்pages sideஎனும் பகுதியில் includeஎன்பதன் கீழிறங்கு பட்டியலின் வாயிலாக Back sides / left pages என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொள்க
6 அதன்பின்னர் okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
7பின்னர் அச்சுபொறியில் அச்சிட்ட தாளை எடுத்து அச்சிடாத பக்கத்தை திருப்பி வைத்திடுக
8அதன்பின்னர் இதே உரையாடல் பெட்டியின்Page Layout எனும் தாவல்பொத்தானின் திரையில்pages sideஎனும் பகுதியில் includeஎன்பதன் கீழிறங்கு பட்டியலின் வாயிலாக Front sides / right pages என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொள்க
9பின்னர் okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
ஆலோசனை நம்முடைய அச்சுபொறியானது இயல்புநிலையில்மஇரண்டு பக்கமும் தானேகவே அச்சிடும் திறனுடன் இருந்தால் pages sideஎனும் பகுதியில் includeஎன்பதன் கீழிறங்கு பட்டியலின் வாயிலாக All pages என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொள்க.பின்னர் okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: