மெய்நிகர்கணினி2007

இந்த பயன்பாட்டின் மூலம் ஒன்றிற்குமேற்பட்ட மெய்நிகர்கணினிகளை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி இயக்கமுறைமையென ஒரேயொரு ஒற்றையான கணினிக்குள் செயற்படுத்திடமுடியும் அதற்காக AMD Athlon/Duron, Intel Celeron, Intel Pentium II, Intel Pentium III, Intel Pentium 4, Intel Core Duo, Intel Core2 Duo ஆகியவற்றுள் ஏதேனுமொரு செயலியை தெரிவுசெய்துகொள்க அவ்வாறே நாம் எத்தனை மெய்நிகர்கணினியை இயக்க விரும்புகின்றோமோ அவைகளின்ஒட்டுமொத்த ரேமின் அளவு இருக்குமாறு ரேமை அமைத்துகொள்க, அதேபோன்று நாம்பயன்படுத்திடவிழையும் மெய்நிகர் கணினியின் அளவிற்கேற்ற ஒட்டுமொத்த வன்தட்டு நினைவகம் இருப்பதையும் உறுதி செய்துகொள்க

23.3.1

அதன்பின்னர் இதனை செயற்படுத்துவதற்கான கட்டணமற்ற திறமூல மென்பொருளை http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=04d26402-3199-48a3-afa2-2dc0b40a73b6&displaylang=en என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க
பின்னர் Virtual PC’s Action எனும் பட்டியலிலிருந்து New Virtual Machine Wizard என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் வழிகாட்டியின் திரையில் next ,next என்றவாறு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடும்போது விரியும் திரையில் தேவையான ரேம், வன்தட்டு நினைவக அளவு ஆகியவற்றை அமைத்துகொண்டு இறுதியாக finish எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த வழிகாட்டியின் செயலை முடிவுக்குகொண்டுவருக

அதன்பின்னர் கணினியினுடையமுதன்மைதிரைக்கு சென்று நாம் உருவாக்கிய மெய்நிகர் கணினியை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி இயக்குக பிறகு தோன்றிடும் திரையில் CD எனும் பட்டியலை தெரிவு செய்து சொடுக்குக பின்னர் நாம் நிறுவுகை செய்ய விருக்கும் இயக்க முறைமையின் .iso கோப்பு நம்முடைய கைவசம் வைத்திருந்தால் Capture ISO Image என்பதை தெரிவு செய்து சொடுக்குக அல்லது உண்மையான இயக்ககத்தை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து Action எனும் பட்டியை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு அதனை மறுஅமைவு செய்துகொள்க பின்னர் வழக்கமாக இயக்கமுறைமையை நிறுவுகை செய்வதை போன்ற வழிமுறையை பின்பற்றிடுக

23.3.2

பின்னர் நம்முடைய சுட்டி இந்த மெய்நிகர் பெட்டிக்குள் இருந்தால் வழக்கமாக நகர்த்துவதை போன்று சுட்டியை நகர்த்திட கணினியானது அனுமதிக்காது அதனால் கூடுதலாக Right-Alt என்பன போன்ற சிறப்பு விசை சேர்க்கையை ஒதுக்கீடு செய்துகொள்க இதுவும் ஒருசிலநேரங்களில் செயல்படாது சண்டித்தனம் செய்திடும் அந்நிலையில் Install or Update Virtual Machine Additions என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து செயற்படுத்திடுக அல்லது Right-Alt-I ஆகிய சிறப்பு விசை சேர்க்கையை செயற்படுத்திடுக இதன்பின்னர் நம்முடைய கணினியின் சுட்டி வழக்கமான கணினி அல்லது மெய்நிகர் கணினி ஆகிய இரண்டிற்குமிடையே நகர்த்தி செல்லமுடியும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: