NoSQL(Not onlySQL)எனும் தரவுதளமானது தரவுகளை RDBMSஎனும் பழைய பாணிகளில் அட்டவணையின் நெடுவரிசைகளில் தேக்கிவைப்பதை போன்றில்லாமல் பேரளவு தரவுகளையும் நிகழ்நிலை இணைய பயன்பாடுகளையும் தேக்கிவைத்திடவும் மீட்டாக்கம் செய்திடவும் பயன்படுகின்றது கடந்த சிலவருடங்களாக இணைய தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியானது ஆயிரகணக்கான கருவிகளையும் பயன்பாட்டு இடைமுகங்களையும் பல்வேறு சேவைகளின் பயன்பாடுகளின் வாயில்களையும் கொண்டு வந்துள்ளது தற்போது நிலையான இணைய பக்கத்தை உருவாக்கிடும் ஹெச்டிஎம்எல் மொழியானது இந்த வளரச்சியினால் பழங்கதையாய் போய்விட்டது அதற்கு பதிலாக வரைகலை பயனர்இடைமுகம் வந்துவிட்டது குழுக்களுக்குள் இடைமுகம் செய்திடும் ஒரு வெப்2.0 வாயில் ஆனது பின்புலமாக வலைபூக்கள் ,இணைய. பக்கங்கள், மின்னஞ்சல்கள், குழுவிவாதங்கள் கருத்துகள் போன்றவைகளின் பேரளவு தரவுகளை தேக்கிவைத்திடவும் மீட்டாக்கம் செய்துவழங்கிடவும் வேண்டியுள்ளது MYSQL Oracle ,MYSQL,SQLite IBMDB2 போன்றவைகளை உள்ளடக்கிய RDBMSஎனும் தரவுதளமானது SQL தரவுதளத்தினை அடிப்படையாக கொண்டு தரவுகளை அட்டவணைபோன்று நெடுவரிசையாக அடுக்கி வைத்து பராமரிக்கின்றது அதன்பின்னர் உறவுதரவுதளத்தினை NEWSQL என்பது பராமரிக்கின்றது ஆயினும் தற்போது MPEG,MP4 FLV என்பன போன்ற ஒலிஒளி வடிவமைப்பிலும் GIF JPEG,TIFFஎன்பனபோன்ற வரைகலை வடிவமைப்பிலும் உரை, உருவபடங்கள் புள்ளிகள், குறியீடுகள், செய்தியோடை என்பனபோன்ற எண்ணற்ற வடிவமைப்புகள் இணையபயன்பாடுகளில் பயன்படுத்தபடுவதால் இவைகளின் வித்தியாசமான தரவுகளை கையாளுவதற்கு RDBMS, NEWSQL போன்றவை போதுமானதாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது இந்த நிலையை தவிர்த்து எந்தவொரு வடிவமைப்பு தரவுகளையும் கையாளும் திறன்கொண்டதாக இந்த NoSQL(Not onlySQL)ஐ எனும்தரவுதளம் உள்ளது இந்தNoSQL(Not onlySQL)எனும் தரவுதள்ததின் அடிப்படையில் MongoDBஎன்பது அனைத்து தளங்களிலும் இயக்கமுறைமைகளிலும் செயல்படும் தன்மையுடனுமான திறமூலமென்பொருளாக வெளியிடபட்டுள்ளது வாருங்கள் உங்களின் அனைத்து இணைய தேவைகளுக்கும் ஆன பயன்பாடுகளை உருவாக்குவதற்காக இதனை பயன்படுத்தி கொள்ளுங்கள் மேலும் விவரங்களுக்கு www.nosql-database.org/ , http://www.mongodb.org/ ஆகிய இணையதளங்களுக்கு செல்க.