கணினியின் தொடக்க இயக்கத்திற்காக BURGஎன்பதை பயன்படுத்தி கொள்க

7

ஒன்றிற்கு மேற்பட்ட பல இயக்கமுறைமைகளுடன் நம்முடைய கணினி இருந்தால் நம்முடைய கணினியின் தொடக்க இயக்கம் எளிதாக இருப்பதற்காக புதியகருவியான BURG(Brand-new Universal loadeR from Grub என்பதன் சுருக்கமான பெயரே ஆகும் BURG)

என்பதை பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது ஆனால் இதுவரையில் இவ்வாறு பலஇயக்க முறைமைகளுடன் உள்ள கணினியின் தொடக்க இயக்கத்தை கட்டுபடுத்திட Grand Unifid Boot Loader என்பதை சுருக்கமாக அழைக்கபடும் GRUBஎன்பது யூனிக்ஸ் இயக்கமுறைமைகள் பயன்படுத்திடும் கணினிகளில் இயல்புநிலையில் பயன்படுத்த பட்டுவந்தது. கணினியை இயக்க துவங்கியவுடன் அந்த கணினியில் நிறுவுகை செய்யபட்டுள்ள இயக்கமுறைமைகளை பட்டியலிடும் அவைகளுள் நாம் இயக்க விரும்பும் இயக்கமுறைமையை தெரிவுசெய்து இயக்கமுடியும். சரிதான்   இதுவரையில் GRUBஎன்பதை பயன்படுத்தி வந்த நிலையில் புதியBURGஎன்பது எதற்காக தேவைப்படுகின்றது என்ற கேள்வி இந்நிலையில் எழும். நிற்க. அதாவது இந்த GRUBஎன்பதை பயன்படுத்தி கணினியின் தொடக்கஇயக்கத்தை கட்டுபடுத்திடும்போது அனைத்து கட்டளைகளும் கட்டளைவரிகளை திரையில் உள்ளீடு செய்வதன் வாயிலாகவே இதுவரை செயல்படுத்தி வருகின்றோம் ஆனால் இன்றைய கணினிகளின் செயல்பாடுகள் அனைத்தும் வரைகலையின் அடிப்படையில் மாறிவிட்டதால் வரைகலையின் செயலில் இந்த GRUBஎன்பது செயல்படாது இவ்வாறான நிலையில் வரைகலையிலும் செயல்படும் திறன்வாய்ந்த புதிய BURGஎன்பதற்கு மாறும்படி பரிந்துரை செய்யபடுகின்றது. BURGஎன்பதை நிறுவுகை செய்யபட்ட கணினியை இயக்கதுவங்கியவுடன் கணினியின் தொடக்கதிரையில் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துள்ள அனைத்து இயக்கமுறைமைகளின் உருவபடங்களையும் உருவபொத்தான்களாக திரையில் காண்பிக்க செய்திடும் அவைகளுள் நாம் பயன்படுத்த விரும்பும் இயக்கமுறைமையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: