லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-21

 ஆவணத்தில் பக்கஎண்களை புதியதாக தொடங்குதல்

ஒரு ஆவணத்தில் பக்கஎண்களை அவ்வப்போது 1 இலிருந்து தொடங்கிடுமாறு செய்திட விரும்பும் நிலையில் உதாரணமாக ஆவணத்தின் தலைப்பு பக்கம் அல்லது உள்ளடக்கங்களின் அட்டவணைகள் ஆகியவற்றை தொடர்ந்து புதிய பக்க எண்களை 1இலிருந்து தொடங்கிடுமாறு செய்திடுதல் கூடுதலாக பல ஆவணங்கள் , உள்ளடக்கங்களின் அட்டவணைகள் என்பன போன்ற முன்பகுதியின் தகவல்கள் ரோமன் எண்களுடனும் முக்கிய பகுதியானது 1 இலிருந்து அராபிக் எண்களுடன் தொடங்கி இருக்கும்

அதனால் ஆவணங்களில் புதிய பகுதிகளை புதிய எண்களுடன் தொடங்கவேண்டியுள்ளது இதற்காக இரண்டுவழிமுறைகள் உள்ளன

வழிமுறை1

1 முதலில் புதிய பக்கத்தின் முதல் பத்தியில் இடம்சுட்டியை வைத்திடுக

2 பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்துFormat=>Paragraph=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

3உடன் விரியும் Paragraph எனும் உரையாடல் பெட்டியின் Text Flowஎனும் தாவியின் திரையில் Breaksஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க

4 அதன்பின்னர் இதே உரையாடல் பெட்டியில் Insert என்ற வாய்ப்பினையும் பின்னர் With Page Style என்ற வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொண்டு நாம் தெரிவுசெய்திட விரும்புவது எந்தவகையான பக்கபாணி என்பதை அதற்கான கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தெரிவுசெய்து கொள்க அவ்வாறே பக்கஎண்கள் எந்த எண்ணிலிருந்து தொடங்கவேண்டும் எனவும் குறிப்பிடுக

5 இறுதியாக okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

ஆலோசனை வழிமுறை1 பக்கஎண்கள் 1 ஐவிட பெரியதாக இருக்கும் நிலையில் ஆவணத்தின் முதல்பக்கத்தில் தொடங்கிடுமாறு செய்தல் பயனுள்ளதாக இருக்கும் உதாரணமாக புத்தகம் ஒன்றில் பல அத்தியாயங்களுடன் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி கோப்பாக இருக்கும் நிலையில் முதல் அத்தியாயம் பக்கம்1 இலிருந்தும் இரண்டாவது அத்தியாயம் பக்கஎண் 10 இலிருந்தும் மூன்றாவது அத்தியாயம் பக்கஎண்20இலிருந்தும் தொடங்குமாறு செய்வது

வழிமுறை2

1முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்து Insert => Manual break=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக

2உடன் விரியும்Insert break எனும் உரையாடல் பெட்டியில் type என்பதன்கீழ் Page break என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருப்பதை உறுதி செய்துகொள்க

3 பின்னர் style என்பதன் கீழ் விரியும் கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான பாணியை தெரிவுசெய்து கொள்க

4 அதன்பின்னர் Change page number என்ற வாய்ப்பையும் தெரிவுசெய்துகொள்க

5 பின்னர் அதனுடைய கீழிறங்கு பட்டியிலிருந்து தேவையான தொடங்கிடும் பக்க எண்ணை குறிப்பிடுக

6 இறுதியாக okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

21.1

21.1

 பக்கஎண் மறுதுவக்கம் செய்தலின் எடுத்துக்காட்டு : புத்தக முன்னுரை
எந்தவொரு புத்தகத்திலும் ஒரு செந்தர நிலையான முன்னுரையானது பின்வரும் பண்புகளை கொண்டிருக்கும்:
1 முன்னுரையின் பக்கஎண்கள் (I, II, III, IV, …) என்றவாறு ரோமன் எண்களால் காட்டப்படும் .
2முன்னுரைக்கு பின் ஆவணமானது இயல்புநிலை பக்க எண்களுடன் தொடங்கும்

3அதாவது பக்கஎண் ஆனது1 என மறுஅமைவுசெய்யப்பட்டு அரபு எண்களின் வடிவமாக (1, 2, 3, 4, …) என்றவாறு மாறியமையும்.

4 இவ்வாறான பக்கஎண்களை மறுதொடக்கம் செய்திட பக்கஇடைவெளி தேவைப்படும்.
இவ்வாறான முன்னுரை பாணியில் பூர்வாங்க பணியை செய்வதற்காக:
1) முதலில் ஒரு புதிய பக்கபாணியை உருவாக்கிடுக பின்னர் அதற்கான பெயராக முன்னுரை(Preface) என அமைத்திடுக.

2) பொதுவாக முன்னுரையானது பல பக்கங்களில் பரவியிருக்கும் அதனால் முன்னுரைக்கு(Preface) அடுத்துள்ள பாணி (Next Style)யைஅமைக்கவும்.

3) இந்த முன்னுரையில்(Preface) முன்னுரைக்கான தலைப்பை(Header) சேர்த்திடுக பின்னர் அதில் பக்கஎண் புலத்தை(Page Number field) உள்நுழைத்திடுக அதன்பின்னர் (I, II, III, IV, …) என்றவாறு பக்க எண்களை ரோமன் எண்களாக உருவாக்கிடுக.இந்நிலையில்

3.அ) பக்கபாணி சாளரத்தை இந்த முன்னுரைக்காக திறக்கவும் (ஏற்கனவே இது திறக்கவில்லை என்றால்) பின்னர் தலைப்பு (Header) எனும் தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் தலைப்பு (Header) எனும் தாவியின் திரையில் தலைப்பிற்கு (Header) கீழ் உள்ள தலைப்பு (Header) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3.ஆ) அதன்பின்னர்பக்கம்(page) எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பக்கம்(page) எனும் தாவியின் திரையில் பக்கஅமைப்பு அமைவுகளின் கீழ், வடிவமைப்பு(format) எனும் கீழிறங்கு பட்டியலில் I,II, III, …. என அமைத்திட்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

21.2

21.2

இவ்வாறு முன்னுரையானது உருவாக்கப்பட்ட பிறகு, தற்போது நாம் முக்கிய உரைகளடங்கிய பகுதியில் அரபு எண்களில் பக்கஎண்களை மறுதொடக்கம் செய்ய தயாராக இருக்கிறோம் .இதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

1) முதலில் முன்னுரையில் இறுதிபகுதியில் ஒரு காலியான வெற்று பத்தியை உருவாக்கிடுக .
2) பின்னர் காலியான வரியின் மீது இடம்சுட்டியை வைத்திடுக.

3) அதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்து Insert => Manual Break=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக .
4) உடன் விரியும் Insert Break எனும் திரையில் Page break என்பதை தெரிவுசெய்துகொண்டு இயல்புநிலை பாணியை (Default style)தெரிவு செய்திடுக.

5) பின்னர் Change page number எனும் வாய்ப்பை தெரிவு செய்துகொண்டு புதிய மதிப்பை 1 என அமைத்துOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

21.3

21.3

குறிப்பு..வலதுபுற பக்கங்களுக்கு இரட்டைபடை எண்களை ஒதுக்கீடு செய்திட வேண்டாம் அவ்வாறே இடதுபுற பக்கங்களுக்கு ஒற்றைபடை எண்களையும் ஒதுக்கீடு செய்திடவேண்டாம் .ஏனெனில் லிபர் ஆஃபிஸானது வலதுபுற பக்கங்களுக்கு இரட்டை படை எண்களுடனும் இடதுபுற பக்கங்களுக்கு ஒற்றைபடை எண்களுடன் ஆவணமானது அமைந்திடுமாறான வழக்கத்தை மிககடுமையாக பின்பற்றுகின்றது

மேலும் அவ்வப்போது நிகழும் இந்த மாற்றமானது நிலை பட்டியில் சரியாக பிரதிபலிக்கின்றது. இந்த ஆவணத்தின் நிலை பட்டியில் உள்ள பக்கப்பிரிவில் இப்போது இந்த பக்கஎண், வரிசை எண் , மொத்த பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை வரிசை கிரமமாக காட்டுகிறது (வரைகலையானது   பக்கம் 1இல் ஆறுபக்கங்களில் மூன்றாம் பக்கத்தில் தற்போது இடம்சுட்டி இருக்கின்றது என காண்பிக்கின்றது) .

21.4

21.4
பக்கஎண்களை மீண்டும் தொடங்குவதில்ஏற்படும் சிக்கல்கள்

பக்கஎண்களை மீண்டும் தொடங்குவதில் இருவகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
1லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்து (File => Properties => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர் விரியும் ஆவணத்தின் Properties எனும் திரையின் புள்ளிவிவர பக்கமானது எப்போதும் அந்த ஆவணத்தின் மொத்த பக்கஎண்களை காட்டுகிறது இது நாம் பக்கங்களை கணக்கிட்டு காணும் புலத்தில் (Page Count field) உள்ளதைபோன்று இருக்காது

2பக்கஎண்கள் மறுதொடக்கம் ஆகும்போது , எப்போதும் லிபர் ஆஃபிஸானது பக்க எண்களை வலதுபுற பக்கங்களுக்கு இரட்டை படை எண்களுடனும் இடதுபுற பக்கங்களுக்கு ஒற்றைபடை எண்களுடன் ஆவணமானது அமைந்திடுமாறான வழக்கத்தை பின்பற்றுகின்றது . இந்த செயலை ஒரு வெற்று பக்கத்தை சேர்ப்பதன் மூலம் செய்கிறது., மேலும் தேவைப்பட்டால். சில நேரங்களில் இந்த வெற்று பக்கம் வரவேண்டாம் என நாம் விரும்பும்போது , குறிப்பாக கையடக்க ஆவணங்களை உருவாக்கிடும்போது, அல்லது ஒற்றை பக்க அச்சிடும் போது. இந்த செயலை அனுமதித்திடுக

பக்கஎண்ணிக்கை சிக்கல்களைத் தீர்வுசெய்தல்

பக்கஎண்ணிக்கையில் எத்தனை பக்கங்களை சேர்க்காமல் விடுபட்டுள்ளது எனமிகச்சரியாக தெரிந்து கொள்ளவிரும்பினால் . (பின்வரும் எடுத்துகாட்டில் பக்கஎண்ணிக்கையின்போது ஒரு பக்கம் மட்டும் விடுபடுமாறு அமைக்கபட்டுள்ளது)

பக்கஎண்களை கணக்கீடு செய்திடும் புலத்தினை உள்நுழைப்பதற்கு பதிலாக நாம் பின்வரும் செய்முறைகளின் மூலம் அதேமுடிவை அடைய முடியும்:

1) முதலில் பக்கஎண்களின் கணக்கீடு தோன்றவேண்டிய இடத்தில் இடம்சுட்டியை வைத்திடுக.
2) பின்னர் F2 எனும் செயலிவிசையை அழுத்தி வாய்ப்பாட்டு பட்டையை (formula bar) லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் முதன்மை சாளரத்தில் கிடைமட்ட வரைகோலிற்கு சிறிது மேல்பகுதியில் தோன்றசெய்க

21.5

21.5

3) அதன்பின்னர் வாய்ப்பாட்டு பட்டையிலுள்ள சமக்குறிக்குபிறகு, page–1 என தட்டச்சுசெய்திடுக ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்க எண்களை தவிர்க்க விரும்பினால் வாய்ப்பாடு பட்டையில் தவிர்க்க விரும்பும் பக்கங்களின் எண்களை இதில் உள்ளீடு செய்திடுக.

4) பின்னர் உள்ளீட்டு விசையை அழுத்தி இந்த வாய்ப்பாட்டு பட்டையை மூடிடுக அதன்பின்னர் ஆவணத்திற்குள் இந்த விளைவு புலத்தை உள்நுழைத்திடுக

நமக்கு முன்கூட்டியே பக்கங்களின் எண்ணிக்கை தெரிய வேண்டாம் என விரும்பினால், கடைசியான பக்கத்தில் புத்தக அடையாளகுறியீடு(bookmark)செய்த பின்னர் அதை ஒரு குறுக்கு மேற்பார்வை(cross reference) பகுதியில் உள்நுழைத்திடும் அணுகுமுறையை பின்பற்றிடுக.
கடைசி பக்கத்தில் ஒரு புத்தகஅடையாளகுறியீட்டினை(bookmark) உருவாக்கிடுவதற்காக:

1) முதலில் விசைப்பலகையிலுள்ள Ctrl + End ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன் வாயிலாக ஆவணத்தின் கடைசி பக்கத்திற்கு செல்க.

2) பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்து Insert => Bookmark=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

3) உடன் விரியும் Insert Bookmark எனும் உரையாடல் பெட்டியில் Bookmark என்பதன்கீழ் LastPage என பெயரை உள்ளீடு செய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

21.6

21.6

ஒரு ஆவணத்தின் கடைசி பக்கத்தில் உள்ள தலைப்பு அல்லது அடிப்பகுதியில்ஒரு குறுக்கு வழிமேற்கோளை உள்நுழைவுசெய்திடும் பகுதியில் பக்கங்களின் எண்ணிக்கையை குறிக்க விரும்பினால்:

1) விரும்பிய இடத்தில் இடம்சுட்டியை நிலைநிறுத்துக உதாரணமாக தலைப்பு அல்லது முடிவுபகுதியில் of எனும் சொல்லிற்கு பிறகு காலியான இடைவெளிவிட்டு page xx of yy.என்றவாறு விட்டிடுக

2) பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்து Insert => Cross-reference=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
3) உடன் விரியும் Fields எனும் உரையாடல்பெட்டியின் Cross-referencesஎனும் தாவியின் பக்கத்தில் Type என்ற நெடுவரிசை பகுதியில் Bookmarks என்பதை தெரிவுசெய்திடுக தொடர்ந்து Selectionஎன்ற நெடுவரிசை பகுதியில் LastPage என்பதை தெரிவுசெய்திடுக. இப்போது LastPage என்பது Nameஎனும் பெயர்பெட்டியில் தோன்றிடும்

4) பின்னர் Insert Reference எனும் பெட்டியில் As page style என்பதை தெரிவுசெய்து கொண்டு Insert எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

21.7

21.7

குறிப்பு.ஆவணத்தின் இறுதிபகுதியில் புத்தககுறியீட்டை நீக்கம்செய்ய வேண்டாம். அவ்வாறு இறுதிபகுதியில் புத்தககுறியீட்டை நீக்கம்செய்தால் crossreference எனும் வாய்ப்பு வேலை செய்யாது. crossreference போன்றதொரு புலமானது தானாகவே புதுப்பிக்காதிருந்தால், அத்தகைய புலத்தை F9எனும் செயலி விசையை அழுத்தி புதுப்பிக்குமாறு செய்து கொள்க .
எல்லைகளையும் பின்புலத்தையும் வரையறுத்தல்

லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் பல்வேறு உறுப்புகளுக்கும் எல்லைகளையும் பின்புலத்தையும் செயற்படுத்திட முடியும். பத்திகள், பக்கங்கள், சட்டகங்கள்,பிரிவுகள், பக்கபாணிகள், பத்தி பாணிகள், சட்டக வடிவங்கள் ஆகிவற்றில் எல்லைகளையும் பின்புலத்தையும் உள்ளிணைக்க முடியும் ; எழுத்துரு பாணிகள், உள்ளடக்க அட்டவணைகள், சுட்டுவரிசைகள் ஆகியவற்றை பின்புலத்தில் மட்டும் உள்ளிணைக்க முடியும்.

எல்லைகளும் பின்புலமும் (boundaries and background) எனும் உரையாடல் பெட்டியின் பக்கங்கள் ஒவ்வொன்றும் வழக்கம் போன்றே இருக்கும். அவற்றின் பயன்பாட்டினை விளக்குவதற்காக, ஒரு உரை சட்டகத்தை எல்லையிலும் பின்பலத்திலும் வரையறுக்கலாம்.

குறிப்பு.   விளிம்புபகுதிக்குள் மட்டும்   பக்கபின்புலத்தை தலைப்பு அல்லது முடிவு (ஏதாவது இருந்தால்) சேர்த்து நிரப்பலாம். பின்புல வண்ணத்தை அல்லது வரைகலையை விளிம்பிற்குள் விரிவாக்கம் செய்வதற்கு, நாம் சரியான அளவையும் நிலையையும் உடைய சட்டகத்தை வரையறுக்க வேண்டும் ஒரு பக்கத்திற்குள் அல்லது பத்திக்குள் அதை தொகுத்திடவேண்டும் பின்னர் பின்புலமாக சேர்த்து அனுப்ப வேண்டும்.

ஒரு எல்லையை சேர்த்தல்

, எல்லையை உருவாக்கிட துவங்குவதற்காக முதலில் சட்டகத்தை தெரிவுசெய்து கொண்டு.சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியலிலிருந்து எல்லைகள்(Borders) எனும் தாவல் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் இந்த எல்லைகளானது எங்கே செல்லவேண்டும்? அவை எவ்வாறு காட்சியாக தோன்றிடவேண்டும்? அதற்கு இடதுபுறமும் சுற்றியும் எவ்வளவு காலிஇடம் விடவேண்டும்? ஆகிய மூன்றுவகையான முக்கிய உறுப்புகளை கொண்டுள்ளது

1வரி ஏற்பாட்டில் எல்லைஎங்கு செல்லவேண்டும் என குறிப்பிடுதல்.லிபர் ஆஃபிஸ் ரைட்டர் ஆனது   இயல்புநிலையில் ஐந்துவகையான ஏற்பாடுகளை வழங்குகிறது ஆனால் நாம் அந்த வரியை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து எளிதாக நம்முடையவிருப்பப்படி ஒரு பயனாளர் விரும்பும் பகுதியில் மிகச்சரியாக நாம் என்ன விரும்புகின்றோமோ அவ்வாறே அமைத்திடமுடியும். மேலும் ஒவ்வொரு வரியையும் தனித்தனியாக வடிவமைக்க முடியும்.

2வரியின் எல்லைஎவ்வாறு இருக்கவேண்டும எனகுறிப்பிடுதல் இந்த உரையாடல் பெட்டியில் நாம் தெரிவுசெய்வதற்காக ஏராளமான வகையில் பல்வேறு பாணிகளும் வண்ணங்களும் தயார்நிலையில் உள்ளன. இந்த உரையாடல் பெட்டியின் இடதுபுறபகுதியின் பயனாளர் வரையறுத்த வரைபடத்தில் கருப்புவண்ண அம்புகளின் ஜோடி மூலம் உயர்த்தி காட்டபட்ட எல்லையில் வரிபாணியையும் வண்ணத்தையும் செயற்படுத்திடமுடியும்

3 உள்ளடக்கங்களுக்கு இடைவெளியானது எல்லைக்கும் உள்ளடக்க உறுப்புகளுக்கும் இடையே எவ்வளவு இடத்தை விடுவது எனகுறிப்பிடுகிறது

இந்த இடைவெளியானது வலது, இடது, மேலே, கீழே என்றிருக்குமாறு குறிப்பிட முடியும். அதனால் நான்கு பக்கங்களிலும் ஒரே அளவில் இடைவெளி அமைந்துள்ளதாவென ஒத்திசைவு செய்து சரிபார்த்து கொள்க. இந்த இடைவெளியானது ஒரு திணிப்பு போன்று உள்ளது மேலும் இந்த உரை அளவீடுகளை கணக்கிடும் போது ஒரு காரணியாகவும் உள்ளது.

21.8

21.8

நிழல் பாணி பண்பியல்பானது எப்போதும் முழு உறுப்புகளுக்கும் பொருந்தும். பொதுவாக ஒரு நிழல்பாணியானது எங்கே இருக்கவேண்டும்?, உறுப்புகளிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கவேண்டும்?என்ன நிறத்தில் இருக்கவேண்டும்? ஆகிய மூன்று கூறுகளை கொண்டுள்ளது

பின்புலத்தில் வண்ணத்தை சேர்த்தல்

இந்த சட்டகம்(Frame) எனும் உரையாடல்பெட்டியில், பின்புலம்(Background) எனும் பக்கத்தை தெரிவுசெய்துகொள்க   இதன்வாயிலாக நாம் வண்ணம் அல்லது ஒரு வரைகலையை சேர்க்க முடியும்
பின்புலத்திற்கு வண்ணத்தை சேர்க்க,வண்ண கட்டத்திலிருந்து தேவையான வண்ணத்தை தேர்ந்தெடுத்திடுக. மேலும் வண்ணத்தின் வெளிப்படையான தன்மையை சரிசெய்து எளிதாக உரையை வாசிக்குமாறு செய்ய முடியும்

பின்புலத்திற்கு வரைகலையை சேர்த்தல்

பின்புலத்திற்கு வரைகலையை சேர்க்க:

1) இதே உரையாடல் பெட்டியின் பின்புல(Background)பக்கத்தின்As என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து வரைகலை(Graphic)என்பதை தெரிவுசெய்திடுக
2) பின்னர் Browse எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் Graphicஎனும் உரையாடல்பெட்டி திரையில் தோன்றுவதை காணலாம்.

3) அதன்பின்னர் நாம் விரும்பும் கோப்பை தேடிபிடித்திடுக பின்னர் Openஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் வரைகலையை கண்டுபிடிக்க (Find Graphics) எனும் உரையாடல் பெட்டிமூடபட்டு தேர்வு செய்யபட்ட வரைகலையானது பின்புல தாவலின் பக்கத்தில் வலது புறத்தின் முன்னோட்ட பெட்டியில் தோன்றிடும் (நம்மால் வரைகலையை காட்சியாக காண முடியவில்லை என்றால், முன்னோட்டம்( Preview)எனும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.)
4) நம்முடைய ஆவணத்தில் இந்த வரைகலையை உட்பொதிவதற்கு, இணைப்பு (Link எனும் வாய்ப்பு தெரிவுசெய்திருந்தால் அந்த தேர்வை நீக்கிவிடுக. ஆவணத்துடன் வரைகலை இணைத்திருக்கவேண்டும் ஆனால் அது உட்பொதியாமல் இருக்க வேண்டும் எனும் நிலையில் மட்டும், இணைப்பு (Link) எனும் வாய்ப்பினை தேர்ந்தெடுக்கவும்.

21.9

21.9

5) இதே உரையாடல் பெட்டியின் வகை (Type) எனும் பகுதியில், பின்புல வரைகலை எவ்வாறு தோன்றவேண்டும் என விரும்புவதை தேர்வுசெய்திடுக:

அ) நிலையை(position)ஐ தேர்ந்தெடுக்க, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரைகலையை நிலைப்படுத்த (Position) எனும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக பின்னர் நிலையின்(Position) கட்டத்தில் விரும்பிய இடத்தை தெரிவுசெய்து சொடுக்குக.

ஆ) வரைகலையை நீட்டித்து பின்புல பகுதிமுழுவதும் நிரப்பிட, Area எனும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக.
இ) பின்புல பகுதிமுழுவதிலும், வரைகலை நிரப்பும் செயலை மீண்டும் மீண்டும் செய்திடTileஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக.

6) வெளிப்படைத்தன்மை (Transparency) எனும்பகுதியில், வரைகலையின் வெளிப்படை தன்மையை சரிசெய்ய முடியும். திரையில் உள்ள உரையை எளிதாக வாசிக்க இவ்வாறு சரிசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

பின்புலத்திலிருந்து வரைகலை அல்லது வண்ணத்தை நீக்குதல்

பின்புலத்திலிருந்து வரைகலை அல்லது வண்ணத்தை நீக்கம் செய்திட

1) frame எனும் உரையாடல் பெட்டியிலுள்ளAs என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து வரைகலைGraphic என்பதை தெரிவுசெய்திடுக.

2) பின்னர் வண்ண கட்டங்களில் No Fill எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக.

21.10

21.10

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: