மொஸில்லா தண்டேர்பேர்டு எனும் பயன்பாட்டு மென்பொருளானது நம்முடைய வாழ்வின் அன்றாட வழக்கமான செயலை எளிதாக்குகின்றது

 தற்போது வாழும் படித்த மக்களுள் மின்னஞ்சல் கணக்கில்லாதவர்கள் எண்ணிக்கைய விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவிற்கு நாம் அனைவரும் தத்தமக்கென குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஒன்றிற்குமேற்பட்ட மின்னஞ்சல் கணக்கினை வைத்துள்ளோம். ஆயினும் ஒவ்வொருவரும் நினைவூட்டுமின்னஞ்சல் அனுப்புவது, மின்னஞ்சல்களை உருவாக்குவது ,பட்டியலிடுவது என இந்த மின்னஞ்சல்களை கையாளும் பணியை மிகச்சிரமமாக உணருகின்றனர் இந்நிலையில் இந்த மின்னஞ்சல்களை கையாளுவதை மொஸில்லா தண்டேர்பேர்டு எனும் பயன்பாட்டு மென்பொருளின் புதியதான விரிவாக்கங்கள் (extensions) மிக எளிதாக்குகின்றன

இதனுடைய QuickFolders எனும் விரிவாக்க வசதியானது   ஒரு மின்னஞ்சல் கணக்கில் ஏராளமான வகையில் கோப்பகத்தை உருவாக்கி அதனுள் மின்னஞ்சல்களை கொண்டுசென்று வைத்திருப்போம் இந்நிலையில் தேவையான கோப்பகத்திற்குள் மின்னஞ்சல்களை இழுத்து சென்று விடுவது அவைகளை பட்டியலிடுவது என்பதுமிக சிரமமான பணியாகும் அதனால் மொஸில்லா தண்டர்பேர்டின் இந்த QuickFolders எனும் விரிவாக்க வசதியானது நம்முடைய இந்த கோப்பகங்களை தனித்தனி தாவல் பொத்தான்களாக மாற்றியமைத்துகொள்கின்றது அதனால் நாம் விரும்பும் இடத்திலிருந்து கோப்புகளை இழுத்துசென்று விடுவதுமிக எளிதான செயலாகின்றது

3.1

3.1

அடுத்ததாக உள்ள Lightning எனும் வசதி காலஅட்டவணையை வழங்குகின்றது இதன்வாயிலாக நண்பர்களை சந்தித்தல், குழுகூட்டங்களை ஏற்பாடுசெய்தல் போன்ற நிகழ்வுகளை தனித்தனி வண்ணமாக பட்டியலிடபட்டுள்ளதால் எளிதாக நம்முடைய அனைத்து நிகழ்வுகளையும் மறந்துவிட்டிடாமல் செயல்படமுடிகின்றது

3.2

3.2

மூன்றாவது Thunderbird Conversations எனும் வசதியானது வழக்கமான ஜிமெயில் போன்று மின்னஞ்சல் கணக்கில் உள்நுழைவு செய்தல் நமக்கு வரும் மின்னஞ்சலிற்கு பதில் அனுப்புதல் நண்பர்களின் செல்லிடத்து பேசி ,தொலைபேசி ஆகியவற்றின் எண்களை நினைவகத்தில் பட்டியலிட்டு வைத்து கொண்டு நாம் விரும்பும்போது திரையில் தெரிவு செய்வதற்காக காண்பித்தல் ஆகியவசதிகளை வழங்குகின்றது

3.3

3.3

 அடுத்ததாக Identity Chooser எனும் வசதியானது நம்மில் பெரும்பாலாணவர்கள் ஒருசில நேரங்களில் மற்றவர்களுக்கு தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து மின்னஞ்சல்களை அனுப்பிவிடுகின்றோம் அதனால் அவை பந்துபோன்று உடன் நம்முடைய மின்னஞ்சல் உள்வருகை பெட்டிக்கு வந்தசேர்ந்துவிடுகின்றன அதனை தவிர்த்து மிககச்சரியான மின்னஞ்சல் முகவரியிட்டு அனுப்பினால்   பந்துபோன்று உடன் நம்முடைய மின்னஞ்சல் உள்வருகை பெட்டிக்கு வந்துசேராமல் மிகச்சரியாக போய்ச்சேர்ந்துவிடும் மிகச்சரியான மின்னஞ்சல் முகவரியை கொண்டு மின்னஞ்சல்கள் அனுப்புவதை இந்த வசதி உறுதிசெய்கின்றது

3.4

3.4

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: