ஸ்லாக்ஸ் என்பது கையடக்க சிறிய லினக்ஸ் இயக்கமுறைமையாகும்

 4

இதனை நம்முடைய மடிக்கணினியில் நிறுவுகைசெய்துதான் இயக்கவேணடும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை அதனால் சிறியநினைவக பட்டையிலிருந்து (memory stick) கூடஇதனை செயல்படுத்திடமுடியும்

இதனைபயன்படுத்திகொள்வதற்காக http://www.slax.org/en/download.php எனும் தளத்திலிருந்து முதலில் நாம் இதனை   பயன்படுத்தவிருக்கும் மொழி எதுவென்பதையும், 32 பிட் என்பதையும் தெரிவுசெய்து அதற்கான கோப்புகளின் சுருக்கபட்ட கட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்க

நாம் நிறுவுகைசெய்திடும் கையடக்க நினைவகமானது குறைந்தபட்ச நினைவகம் 2 ஜிபி அளவு உள்ளதை உறுதிசெய்துகொள்க ஆயினும் 8 ஜிபி பரிந்துரைக்கபடுகின்றது ஏனெனில் நாம் இதனை செயல்படுத்தி பயன்பாடுகளை பயன்படுத்திடும்போது உருவாகும் கோப்பகள் இந்த வெளிப்புற நினைவகத்தில் மட்டுமே சேமிக்கபடும்

பிறகு இந்த வெளிப்புற மின்வெட்டுநினைவகத்தில் நிறுவுகை செய்து செயல்படுத்திடுவதற்காகMy Computerஇல் வெளிப்புற மின்வெட்டுநினைவகம்(flash memory) என்பதை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்தபின்விரியும் சூழ்நிலை பட்டியில் Formatஎன்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குதல்செய்து வடிவமைப்பு செய்திடுக உடன் தோன்றிடும் “Format எனும் உரையாடல் பெட்டியில்format optionsஎன்பதன்கீழுள்ள Quick format எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் நாம் பதிவிறக்கம் செய்த Slax எனும் சுருக்கபட்ட கட்டுகளின் கோப்பினை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Extract all என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து இதனுடைய கோப்புகளை நம்முடைய வெளிப்புற மின்வெட்டுநினைவகத்தில் அமர்ந்திடுமாறுசெய்தவுடன் இவை Slax எனும் கோப்பகத்தினை உருவாக்கி அதற்குள் அமர்ந்திடும் பின்னர் :\slax\boot என்ற கோப்பகத்திற்கு சுட்டியை நகர்த்தி சென்று அங்குbootinst.bat எனும் கோப்பினை தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக அதன் பின்னர் கணினியானது மறுதொடக்கம் ஆகும் இந்த மறுதொடக்க திரையின் BIOS எனும் திரையில் வெளிப்புற மின்வெட்டுநினைவகத்திலிருந்து கணினியின் இயக்கம் தொடங்குவதாக அமைத்து கணினியின் இயக்கத்தை தொடங்க செய்திடுக

உடன் வெளிப்புற மின்வெட்டுநினைவகத்திலிருந்து ஸ்லாக்ஸ் எனும் லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படுத்தபட்டு அதன் திரை தோன்றிடும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: