2013இல் வெளியிடபட்ட திறமூல மென்பொருட்கள் ஒரு மீள்பார்வை தொடர்ச்சி

3.1 SimpleInvoices இது ஒரு இணையத்தின அடிப்படையில் செயல்படும் பொருட்களின் பட்டியலை உருவாக்கிடும் பயன்பாட்டு மென்பொருளாகும் அதிகஅளவு கட்டமைப்பு எதுவும் இல்லாமலேயே விரிவாகவும் எளிமையாகவும் பொருட்களின் பட்டியலை உருவாக்கிடுவதற்காக இது பயன்படுகின்றது அதற்காக இதனுடைய SimpleInvoices எனும் மென்பொருளை நம்முடைய கணினியில் மிகச்சாதாரணமாக வழக்கமான மென்பொருளை நிறுவுகை செய்வதைபோன்று இந்த SimpleInvoices மென்பொருளை நிருவகை செய்தபின் உடனடியாக பொருட்களின் பட்டியலை தயார் செய்திடலாம்   மேலும் இந்த பொருட்களின் பட்டியலை கையடக்க கோப்பாக எளிதாக உருமாற்றம் செய்து வாடிக்கையாளருக்கும் விரைவாக அனுப்பிவைக்கலாம் மிகச்சிறிய நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கு இது பேருதவியாக இருக்கின்றது இது விண்டோ லினக்ஸ் யூனிக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படக்கூடியது இதனை http://simpleinvoices.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

3.2 Observium இது வளாக பிணையம் ,இணையம் ஆகிய இணைப்புகளில் உள்ள கணினிகளை கட்டுபடுத்தி கையாள உதவிடும் மிகச்சிறந்த சாதணமாக விளங்குகின்றது இது Cisco, Windows, Linux, HP, Dell, FreeBSD, Juniper, Brocade, Netscaler, NetApp என்பன போன்ற பல்வேறு இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்வாய்ந்தது இது வளாக பிணையம் இணையம் ஆகிய இணைப்புகளில் இணைக்கபட்டுள்ள சாதனங்களின் வரலாறு நடப்பில் உள்ள அதனுடைய திறன் ,கட்டமைவு , உள்நுழைவு கட்டுபாடு என்பன போன்ற அனைத்து தகவல்களையும் அலசிஆராய்ந்து கையாளஉதவுகின்றது இதனை http:// observium.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

3.3 MariaDB – Drop என்பது ஆரக்கிளின் MySQLஎன்ற சேவையாளருக்கு மாற்றானதாக தன்னார்வு குழுவினரால் உருவாக்கப்பட்டதாகும் இது லினக்ஸின் பல்வேறு வெளியீடுகளில் இயல்புநிலையில் செயல்படுமாறு உடன்இணைத்தே வழங்கபடுகின்றது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்பெற்றது. இது ஜிப்பிஎல் எல்ஜிப்பிஎல் ஆகிய அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதனை http://mariadb.orgஎனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

3.4 RackTables இது ஒரு தரவுகளின் மையமாக செயல்படுகின்றது இதனை செயலபடுத்த முதலில் கணினியுடன் இணைந்த server, workstations, routers, switches ஆகிய வன்பொருட்களின் விவரங்களை குறிப்பிடவேண்டும் பின்னர் கணினியுடன் இணைந்த சாதனங்களை குறிப்பிடவேண்டும் அதன்பின்னர் அவைகளை ஒத்தியங்கி செயல்படுமாறு செய்திடவேண்டும் பின்னர் இவைகளை இணைத்துள்ள வாயில்களை சரியாக செய்யபட்டுள்ளதாவென சரிபார்த்திடவேண்டும்   அதன்பின்னர் அந்த சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றிற்கான ஐப்பிமுகவரியை ஒதுக்கீடு செய்து குழுவாக இணைக்கபட்டு நன்கு நிருவகிக்குமாறு செய்யபடவேண்டும்   பின்னர் கையாளவேண்டிய கோப்புகள் இணைக்கபட்டு பயன்படுத்திடும் பயனாளர்களின் பெயர் பயன்படுத்துவதற்காக அனுமதித்தல் அல்லது நிராகரித்தல் ஆகியவற்றை அமைத்து இந்த RackTables செயல்படுமாறு செய்யபடுகின்றது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்பெற்றது. இது ஜிப்பிஎல் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதனை http://:racktables.orgஎனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
3.4

3.5 Angry IP scanner எனும் திறமூல மென்பொருளானது பிணைய, இணைய ஆகிய வலைபின்னல் இணைப்புகளின் சிறந்த பாதுகாப்பு காவலனாக உள்ளது இது பயன்படுத்திட எளிமையானதாகவும் அதேசமயத்தில் மிகவிரைவாக செயல்படும் திறன்மிக்கதாகவும் உள்ளது இதனை செயற்படுத்தியவுடன் இணைப்பில் உள்ள ஐப்பி முகவரிகளையும், இணைப்பு வாயில்களையும் பாதுகாப்பானதாக உள்ளதாவென வருடி ஆய்வுசெய்து அனுமதிக்கின்றது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்பெற்றது. இது ஜிப்பிஎல்2 அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதனை http://: angryip.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
3.5

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: