லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-19

லிபர்ஆஃபிஸின் ரைட்டர் பக்கங்களில் தலைப்பையும் முடிவையும் (headers and footers)உருவாக்குதல்
தலைப்புபகுதி என்பது ஆவணத்தின் எந்த ஒரு பக்கத்திலும் மேல்பகுதியில் அந்த ஆவணத்தின் தலைப்பாக அல்லது அந்த பகுதியின் பெயராக காண்பிக்கின்ற ஒரு பகுதியாகும் முடிவுபகுதி என்பது அவ்வாறே எந்த பக்கத்திலும் கீழ் பகுதியில் நாம் பார்த்து கொண்டிருப்பது அந்த ஆவணத்தில் இது எத்தனையாவது பக்கம் என்பன போன்ற தகவல்களைகொண்டதொரு பகுதியாகும் லிபர் ஆஃபிஸின் தலைப்பு பகுதியானது பக்க பாணிகளை குறிப்பிடுகின்றன. அதனால் ஒரு பக்கபாணியை உள்ளிணைப்பு செய்தால் உடன் அந்த ஆவணத்தின் அனைத்து பக்கங்களும் அதே பாணியாக அதே தலைப்பு பகுதியுடன் பிரதிபலிக்கும் இந்த வாய்ப்பானது வெவ்வேறு தலைப்பு பகுதி அல்லது முடிவுபகுதியை அந்த ஆவணத்தின் முதல் பக்கத்தில் உருவாக்குவதற்காக தயாராக உள்ளது கைகளால் வடிவமைப்பு செய்யப்படும் வழிமுறையை பின்பற்றி ஒரு ஆவணத்தின் இயல்பு நிலை பக்கத்தில் ஒரு தலைப்பு பகுதியை உள்ளிணைத்திடுக. இவ்வாறு கைகளால் ஒரு ஆவணத்தின் இயல்புநிலை பக்கத்தில் ஒரு தலைப்பு பகுதியை இரு வழிகளில் உள்ளிணைக்கமுடியும். 1.மிகஎளியமுறையாக ஒரு ஆவணத்தின் மேல் பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்க உடன் படம்-19.1-இல் உள்ளவாறு தலைப்பை குறிப்பிடும் பகுதியானது திரையில் தோன்றிடும் பின்னர் அதில் உள்ள கூட்டல் குறியை தெரிவு செய்து சொடுக்குக அவ்வாறே ஒரு ஆவணத்தின் கீழ்பகுதியில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் முடிவுபகுதியை குறிப்பிடும் பகுதியானது திரையில் தோன்றிடும் அதில் உள்ள கூட்டல் குறியை தெரிவுசெய்து சொடுக்குக
19.01
படம்-19.1
அதற்கு பதிலாக இதே தலைப்பு பகுதியை லிபர் ஆஃபிஸினுடைய ஆவணத்தின் மேல்பகுதியிலுள்ள கட்டளைபட்டையில் Insert= > Header => [Page Style]=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய ஆவணத்தில் பயன்படுத்தபடும் பக்கபாணிகளின் துனைபட்டியாலானது திரையில் விரியும் அதனுடன் ஏற்கனவேயிருக்கும் பக்கபாணி என்னவாகஇருந்தாலும் நாம் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் அந்த ஆவணத்தின் அனைத்து பக்கங்களும் இதே பாணியாக மாறியமைவதற்கான All,எனும் கட்டளையும் சேர்ந்திருக்கும் இங்கு Default எனும் உருப்படியை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இயல்புநிலை பக்கபாணியை இந்த பக்கத்தில் மட்டும் அமையுமாறு செய்திடுக.இவ்வாறே ஆவணத்தின் மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டையில் Insert => Footer => [Page Style]=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அந்த ஆவணத்தின் முடிவுபகுதியையும அமைத்துகொள்க.
குறிப்பு இந்த Insertஎனும் பட்டியலை கொண்டு நடப்பிலிருக்கும் ஒரு பக்க பாணியின் தலைப்பு பகுதி அல்லது முடிவுபகுதியை நீக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.
பக்கபாணியானது முகப்பில் சரிபார்ப்பு குறியீடாக இருந்தால் அது தலைப்பு பகுதியை அல்லதுமுடிவுபகுதியை தாங்கியிருக்கும், மேலும் அதனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் உடன் குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள தலைப்பு பகுதியை அல்லது முடிவுபகுதியை நீக்கம் செய்திட விரும்புகின்றீர்களா என்ற தகவலுடன் ஒருஎச்சரிக்கை செய்திபெட்டியொன்று தோன்றிடும்.
நாம் தெரிவுசெய்திடும் வாய்ப்பிற்கேற்ப காலியான பகுதி ஆவணத்தின் மேல்பகுதியில் அல்லது கீழ்பகுதியில் தோன்றிடும் இந்த காலியான பகுதியில் நாம் குறிப்பிடும் உரை,வரைகலை ஆகியவை அந்த ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மிகமுக்கியமாக same content on first pageஎன்ற வாய்ப்பு தெரிவு செய்ய படவில்லை யென்றால் மட்டும் தோன்றிடும் ஆவணத்தின் தலைப்பு ,பகுதியின் தலைப்பு, ,பக்கஎண்கள் ஆகியவை அந்தஆவணத்தின் தலைப்பு பகுதியில் அல்லது முடிவு பகுதியில் புதியதாக சேர்க்கபட்ட புலங்களாக தோன்றிடும் .ஏதேனும் இந்த புலங்களில் மாறுதல் செய்தவுடன் அனைத்து பக்கங்களின் தலைப்பு பகுதியிலும் அல்லது முடிவு பகுதியிலும் தானாகவே இந்த மாறுதல்கள் நிகழ்நிலை படுத்தபடும் . ஆனாலும் இங்கு கூறும் எடுத்துகாட்டு நமக்கு மிகபயனுள்ளதாக இருக்கும் பொதுவாக ஒரு இயல்புநிலை பக்கபாணியில் ஒரு ஆவணத்தில் தலைப்பு பகுதியை உள்ளிணைத்திடுவதற்காக
1 லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள File => Properties => Description=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் ஆவணத்தின் Title area எனும் பகுதியில் நம்முடைய ஆவணத்திற்கான தலைப்பை உள்ளீடு செய்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.
2 பின்னர் லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert => Header=> Default =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி தலைப்பு பகுதியை சேர்த்து கொள்க
3உடன் விரியும் ஆவணத்தின் தலைப்புபகுதியில் இடம் சுட்டியைவைத்திடுக
4 பின்னர் லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert => Fields => Title=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தலைப்பானது சாம்பல் நிற பின்புலத்தில் தோன்றிடும் இதன் செயலை நிறுத்தம்செய்து வைத்திருந்தால் அச்சிடும்போது மட்டும் இதனை காணமுடியாது
5 இந்த ஆவணத்தின் தலைப்பை மாறுதல் செய்திட லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள File => Properties= > Description=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொள்க
தலைப்பு பகுதியையும் முடிவுபகுதியையும் வடிவமைப்பு செய்தல்
லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் தலைப்பு பகுதியையும் முடிவுபகுதியையும் வழக்கமான பத்திபோன்றே பயன்படுத்திடமுடியும் அதனால் ஆவணத்தின் உரைப்பகுதியுள்ள பத்தியை வடிவமைப்பு செய்திடும் அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த தலைப்பு பகுதியையும் முடிவுபகுதியையும் வடிவமைப்பு செய்திடுக
ஆலோசனை லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Format= > Page= > Header=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் தேவையானவாறு பக்க பாணியை மாறுதல்கள் செய்வதன் மூலம் தலைப்பு பகுதியையும் முடிவு பகுதியையும் வடிவமைப்புகூட செய்திடமுடியும்
நாம் இரண்டு வெவ்வேறு முறைகளை பயன்படுத்தி தலைப்புபகுதி ,முடிவுபகுதி ஆகியவற்றின் அமைப்பை வடிவமைக்க முடியும். 1முதல் வழிமுறையாக
தலைப்பு பகுதிக்குள்ளும்முடிவு பகுதிக்குள்ளும் குறிப்பான்கள் தோன்றுமாறு. தலைப்பு பகுதியைஅல்லது முடிவுபகுதியை பயன்படுத்த முடியும்
உதாரணமாக, தலைப்பு பகுதி குறிப்பானை பயன்படுத்த:
1) பக்கத்தின் மேல்பகுயில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரையில் நீல தலைப்புபகுதி குறிப்பான் தோன்றும்.
2) இந்த தலைப்புபகுதி குறிப்பானில் உள்ள கூட்டல் குறியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த கூட்டல் குறியானது ஒரு கீழ்நோக்கு அம்பு குறியாக மாறும்.
3) பின்னர் இந்த கீழ்நோக்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக
4) இதன் பின்னர் விரியும் திரையில் Format Header என்பதை தெரிவுசெய்திடுக . உடன் விரியும் பக்க பாணி உரையாடல் பெட்டியில் ஓரங்கள், இடைவெளி, உயரம் ஆகியவற்றை மாற்றியமைக்க முடியும்.
5) பின்னர் இதிலுள்ள More எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் கரை / பின்னணி (boundaries/background)எனும் உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில் பின்னணி நிறங்களையும் எல்லைகளையும் தலைப்பு பகுதிக்கு பின்னணி படங்களையும் சேர்க்க முடியும்
மேலும் லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => Page => Header =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் தேவையானவாறு பக்க பாணியை மாறுதல்கள் செய்வதன்மூலம் தலைப்புபகுதியையும் முடிவுபகுதியையும் வடிவமைப்புசெய்திடமுடியும்
எச்சரிக்கை பக்க பாணி எனும் உரையாடல் பெட்டியில் தலைப்புபகுதியை வடிவமைப்பு செய்வதற்கு பின்னணி ,எல்லைகள் ஆகியவற்றின் தாவி பொத்தான்களின். பக்கத்தை பயன்படுத்தவேண்டாம் அவ்வாறு இந்த தாவி பொத்தான் பக்கங்களின் வாயிலாக ஏதேனுமொரு பாணியை தெரிவுசெய்தால் அந்த பாணியானது தலைப்பு பகுதிக்கு பதிலாக பக்கங்களின் முழுவதும் செயல்படுத்தபடும் என்ற செய்தியை மனதில் கொள்க

படுக்கைவச பக்கங்களில் நெடுக்கைவச தலைப்புகள்
நாம் படுக்கைவச பக்கத்தில் ஒரு தலைப்பு பகுதியையும் முடிவுபகுதியையும் வரையறுக்க போது, உடன் அவைகள் அந்த பக்கத்தின் நீண்ட பக்க ஓரமாக சீரமைக்கப்பட்டுவிடும்..இரு நெடுக்கைவச பக்கங்களுக்கு இடையில் நம்முடைய படுக்கைவச பக்கங்களை சேர்த்துக்கொள்ளவிரும்பினால், தலைப்பு பகுதியையும் முடிவு பகுதியையும் படுக்கைவச பக்கங்களின் குறுகிய பக்கங்களாக இருக்குமாறு செய்திட விரும்பும் நிலையில் இறுதிவிளைவாக அச்சிடப்பட்ட பக்கமானது நெடுக்கைவசபக்கங்களின் மீது 90 கோணத்தில் சுழலும் படுக்கைவச பக்கங்களின் உள்ளடக்கங்கள் பார்வைக்கு தோன்றுமாறு செய்யபடுகின்றன
சட்டகங்கள் சம்பந்தப்பட்ட ஒரு தந்திரத்தை பயன்படுத்தி கூட தலைப்பு பகுதியையும் முடிவுபகுதியையும் நெடுக்கைவச பக்கங்களில் அமைக்க முடியும். இந்த அமைப்பு கொஞ்சம் கடினமான செயலாகும் , ஆனால் நாம் அவ்வாறு ஒருமுறை செய்துவிட்டால் , நாம் அவற்றை நகலெடுத்து மற்ற படுக்கை வச பக்கங்களில் ஒட்டலாம் . இந்த செயலானது படுக்கைவச பக்க பாணியின் பகுதியாக செய்யமுடியாது. நம்முடைய அச்சிடப்பட்ட ஆவணத்தில் ஒரு படுக்கைவச பக்கத்தை உள்நுழைக்க விரும்பும் நிலையில் நம்முடைய நெடுக்கைவச பக்கங்களிலுள்ள அதே தலைப்புபகுதியும் முடிவுபகுதியும் ஓரங்களும் அமைந்துவிடும் . இங்கே ஒரு A4 பக்க அளவை பயன்படுத்தி . படுக்கைவச பக்கங்களில் நெடுக்கைவச தலைப்புகளையும் அடிக்குறிப்புகளையும் அமைக்க:
1) நெடுக்கைவச பக்கத்திற்கான விளிம்பு அமைப்புகளானது படுக்கைவச பக்கத்தில் உள்ளவாறே தோன்றிடும் அதாவது ஒரு வலதுபுற படுக்கைவச பக்கமானது வலதுபுற நெடுக்கைவச பக்க அமைவிலிருந்து எடுத்து கொள்ள படுவதை போன்று ஆகின்றது என்ற தகவலை குறித்து கொள்க (அட்டவணையை பார்க்க )
இப்போது படுக்கைவச பக்கத்தின் வலதுபுற இடதுபுற விளிம்பை நெடுக்கைவச பக்கத்தின் மேல்விளிம்பும் கீழ்விளிம்பு ஆகியவற்றைவிட 1 செ.மீ. பெரியதாக மாற்றியமைக்க வேண்டியுள்ளது அதனால் இவைகளுக்கு இடையேயுள்ள வேறுபாடானது தலைப்பு பகுதியிலும் முடிவுபகுதியிலும்கூடுதலான காலியான இடத்தை பெறுமாறு அனுமதிக்கின்றது
உருவப்படம், தலைப்புபகுதி, முடிவுபகுதி ஆகியவற்றில் தலைப்பு அல்லது முடிவுபகுதியில் 0.5 செ.மீ உயரமும் கூடுதலாக அதே தலைப்பு அல்லது முடிவுபகுதியில் 0.5 செ.மீ. இடைவெளியும் முக்கிய உரைப்பகுதியில் அனுமதிக்கபட்டுள்ளது)

அட்டவணை-19.1

நெடுக்கைவசபக்கம் வலதுபுறபக்கம் படுக்கைவசபக்கம் வலதுபுறபக்கம்
மேல்பகுதிவிளிம்பு 1.5செ.மீ வலதுபுறவிளிம்பு 2.5செ.மீ
கீழ்பகுதிவிளிம்பு 1.5செ.மீ இடதுபுறவிளிம்பு 2.5செ.மீ
இடதுபுறஉள்விளிம்பு 2.8செ.மீ மேல்புறவிளிம்பு 2.8செ.மீ
வலதுபுறவெளிவிளிம்பு 1.8செ.மீ கீழ்புறவிளிம்பு 1.8செ.மீ
2) தொடர்ந்து முடிவுபகுதியில் சட்டகத்தை அமைக்க . தலைப்பு பகுதியில் செயல்படுத்தபடும் நடைமுறையே முடிவு பகுதிக்கும் பொருந்தும் பக்க பாணியின் இந்த விளிம்பு அமைப்புகளையே இந்த முடிவுபகுதிக்கும் செயல்படுத்துக.
3) நெடுக்கைவச பக்கத்திலிருந்து முடிவுபகுதியை நகலெடுத்து உரைப்பகுதியின் காலியான பத்தியில் ஒட்டுக. பின்னர் படுக்கைவச பக்கத்திற்குள் ஒட்டுக அல்லது நகர்த்துக. இந்த உரையானது இதன்பின்னர் வகை,தோற்றம், எழுத்துரு அளவு, தாவியின் அமைப்புகள் ஆகியவை முடிவுபகுதி பாணியுடன் பொருந்துமாறு அமையும்
19.02
படம்-19.2
4) நாம் சற்றுமுன்பு உள்ளீடு செய்த புலங்களையும் சேர்த்து உரையை தெரிவுசெய்க பின்னர் லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => Character=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி யவுடன் தோன்றிடும் எழுத்துரு எனும் உரையாடல் பெட்டியில் Position எனும் தாவியின் பக்கத்தை தெரிவுசெய்திடுக உடன் விரியும்.Position எனும் தாவியின் பக்கத்தில் , Rotation / scaling ஐ270 கோணத்திற்கு ( கடிகார சுற்றிற்கு எதிர்திசையில் ) அமைத்திடுக
குறிப்பு முன் காட்சி பலகத்தில் இந்த செயலினுடைய தாவியின் பக்கம் நீக்கம் செய்யபட்டுள்ளது
அதன்பின்னர் இந்த உரையாடல் பெட்டியில் OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
19.03
படம்-19.3
5) நாம் பயன்படுத்தும் ஆவணத்தின் உரை இன்னும் தெரிவு செய்யபட்டுள்ள நிலையில் லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert => Frame => என்றவாறு கட்டளைகளை செயற் படுத்தி யவுடன் தோன்றிடும் Frame எனும் உரையாடல் பெட்டியில், Typeஎனும் தாவியின் பக்கத்தை தேர்ந்தெடுக்கவும் அந்த Type எனும் தாவியின் பக்கத்தில் முடிவுபகுதி உள்நுழைவு செய்திடுவதற்காக அகலத்தையும், உயரத்தையும், கிடைமட்ட செங்குத்து நிலையையும் உள்ளீடு செய்திடுக . அகலத்தையும், உயரத்தையும் தெரிவுசெய்யபட்டிருந்தால் அவைகளில் தானியங்கியாக செயல்படும் வாய்ப்பினை தெரிவுசெய்வதைகைவிட்டிடுக இங்கு
• portrait page style எனும் உரையாடல் பெட்டியில் உள்ள Footer page எனும் பக்கத்திலிருந்து எடுக்கபட்ட முடிவு பகுதியின் உயரம் அகலமாக ஆக்கபட்டுள்ளது
.• சட்டக உயரமானது பின்வரும் எளிய கணக்கீட்டின் மூலம் பெறப்படுகிறது. அதாவது A4 பக்கத்தின் அகலமான 21 செமீட்டரிலிருந்து மேல்பகுதியின் விளிம்பு 2.8செமீ. கீழ்விளிம்பு 1.8செமீ ஆகியவற்றின் கூடுதலை கழித்திடஒருசட்டகத்தின் உயரம் 16.4செமீட்டராக கிடைக்கின்றது.
• கிடைமட்ட நிலையில் நெடுக்கைவச பக்க கீழ் விளிம்பு உள்ளது.
• செங்குத்து நிலையில் கிடைமட்ட பக்க மேல் விளிம்பு உள்ளது
19.04
படம்-19.4
6), இந்த கைட்டுரையில் உள்ளவாறு நம்முடைய முடிவுபகுதியில் உரையின் மேலே ஒரு வரி இருந்தது என்றால் எல்லைகளின் பக்கத்தில், ஒரு வலதுபுற எல்லையை தேர்வு செய்துகொண்டு சட்டகத்தின் உள்ளடக்கங் களுக்கு வரி அகலத்தையும் இடைவெளியையும் குறிப்பிடுக.
7) பின்னர் OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த அமைப்புகளை சேமித்திடுக. இந்த முடிவுபகுதியானது இப்போது நாம் விரும்பியவாறான நிலையிலும் திசையிலும் தோன்றும் மற்றபுலங்களை அதற்கேற்றவாறு புதுப்பித்துகொள்ளும்
8), இங்கு தாவிபொத்தான்கள் நீக்கப்பட்டது ஏனெனில் உரை முடிவில் தாவிபொத்தான்கள் இருந்த இடத்தில் சட்டகத்திற்குள் இடம்சுட்டியை நுழைக்கவும் பின்னர் ,விசைப்பலகையின் காலிஇடைவெளி பட்டையை பயன்படுத்தி தேவையானவாறு நாம் விரும்பும் அமைப்பை நெடுக்கைவச பக்கத்தில் பொருத்தமாக அமையுமாறு காலிஇடைவெளியை உள்ளீடுசெய்துகொள்க
கிடைமட்ட பக்கத்தில் ஒரு நெடுக்கைவச தலைப்பு அமைப்பதற்கு இந்த படிமுறைகளை (பொருத்தமான அமைப்புகளை பயன்படுத்தி) செயற்படுத்தி கொள்க
எச்சரிக்கை நம்மால் சுழற்றபட்ட உரையிலிருந்து 0 கோணத்தில் , அல்லது தட்டச்சு செய்யபட்ட எந்தவொரு உரையும் சுழன்றநிலையில் .மீண்டும் ஆவணத்தில் பத்திக்கு திரும்ப வருவதை உறுதிசெய்துகொள்க
19.05
படம்-19.5
பக்கங்களை எண்ணிடல்
பக்கஎண்களையும் தொடர்புடைய தகவலையும் ஒரு ஆவணத்தில் உள்நுழைப்பதற்கான நுட்பங்களை பின்வரும் பகுதி விளக்குகிறது. மேலும் இங்கு கொடுக்கப்பட்ட சில உதாரணங்கள் நாம் பின்பற்றுவதற்காக தேவைப்படலாம்.
லிபர் ஆஃபிஸானது பக்க எண்களை நிர்வகிக்க புலங்களை பயன்படுத்தி கொள்கின்றது. ஒரு பக்கஎண் புலத்தை உள்நுழைக்க, இடம்சுட்டியை அல்லது நிலைக்காட்டியை பக்கஎண்ணை உள்நுழைக்க விரும்பும் இடத்தில் வைத்திடுக பின்னர் லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert => Fields => Page Number => என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக உடன் பக்க எண்ஆனது ஒரு சாம்பல்நிற பின்னணியில் தோன்றுகிறது. இங்கு சாம்பல்வண்ண பின்னணியானது ஒரு புலத்தை குறிக்கிறது; அது கண்ணிற்கு புலப்படுமாறு திரையில் தெரிந்தாலும் அச்சிடப்படாது.
ஆலோசனை நமக்குஇந்த சாம்பல் பின்னணி திரையில் தோன்றிட வேண்டாம் என விரும்பினால் லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள View => Field Shadings => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக (அல்லதுவிசைப்பலகையில் Ctrl + F8 என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக).
ஒரு தலைப்பை வடிவமைக்கவும் நுழைக்கவும் தேவையான அடிப்படைகள்
கைகளால் வடிவமைப்பு செய்திடும் முறையை பயன்படுத்தி இயல்புநிலை பக்கபாணியின் பக்கங்களில் ஒரு தலைப்பு உள்நுழைக்கலாம்.
எளிதாக பக்க எண்களிடல்
எளிய வழக்கில் ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எண்ணானது அந்த பக்கங்களின் மேல்பகுதியில் இருப்பதை தவிர வேறொன்றுமில்லை . அவ்வாறு செய்ய நிலைக்காட்டியை தலைப்புபகுதியில் வைத்துகொண்டு லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert => Fields => Page Number => என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக
19.06
படம்-19.6
உடன் இப்போது சரியான பக்கஎண்களானது ஒவ்வொரு பக்கத்திலும் தோன்றும்.
தலைப்பு உரையையும் பக்கம் எண்ணையும் ஒன்றிணைத்தல்
நமக்கு பக்கபாணிகளைபற்றி கூடுதலான அறிவு இல்லாமலேயே ஏராளமான சுவாரஸ்யமான வேறுபாடுகளுடையவைகளை நம்மால் செயற்படுத்தமுடியும் அவைகளில் சில பரிந்துரைகள் பின்வரும்:
• தலைப்பை வலது பக்க பக்கம்(page) எனும் செல்லை தட்டச்சு செய்தால் தலைப்புபகுதியானது பக்கம் 1, பக்கம் 2 என்றவாறு பக்கங்களுக்கான எண்களை அமைத்து கொள்ளும் ஏற்கனவே இதுபற்றி விவரித்தவாறு பக்கஎண்புலத்தை பயன்படுத்தி செய்யபடுகின்றது
ஆவணத்தின் தலைப்பை படித்தறியுமாறு தலைப்பு பகுதியில் சேர்த்திடுக உதாரணாக லிபர் ஆஃபிஸ் விளக்க கையேடு என்பதை இடது புறம் அமையுமாறு சரிசெய்திடுக பக்கஎண் x ஐ வலதுபுறம் அமையுமாறு சரிசெய்திடுக இங்கு x என்பது (வலதுபுறம் சீரமைக்கப்பட்டது) தாவியை பயன்படுத்தி தலைப்பை பக்கஎண்களிலிருந்து பிரித்திட பயன்படுத்தபட்ட பக்கத்தின் புலமதிப்பாகும் .
• லிபர் ஆஃபிஸானது பக்கஎண்களின் கூடுதலை கணக்கிடும் புலத்தையும் கொண்டுள்ளது (இதற்காக லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert => Fields => Page Count => என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக ) இந்த கட்டளையை பயன்படுத்தி, நாமும் பக்கஎண்களின் கூடுதலை கொண்டுவரமுடியும் உதாரணமாக, தலைப்பு பகுதியில் பக்கம் 12 இல்2என்பது மொத்த ஆவணத்தின் பக்கம் 12 அவற்றுள் நாம் பார்த்து கொண்டிருப்பது 2 ஆவது பக்கம் என பொருள்படும்
இந்த வேறுபாடுகள் அனைத்தும் படம்-19.7.இல் விளக்கப்பட்டுள்ளது.
19.08
படம்-19.7

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: