லிபர் ஆஃபிஸ்-4-ரைட்டர் தொடர்-18

சட்டங்களை நங்கூரம் இடுதல்
Frameஎனும் உரையாடல் பெட்டி அல்லது சட்டங்களை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிய பின் தோன்றிடும் சூழ்நிலை பெட்டியில் Anchor எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில் செய்தி கடிதம் போன்ற ஆவணங்களில் தற்போதைய பக்க அமைப்பு மாறாமல் அப்படியே தோன்றுவதற்கு to page எனும் வாய்ப்பையும்,பத்திகளில் அட்டவணையையும் அமைத்தபின் வேறொரு இடத்தில் அமைவதற்கும் முதன்மை ஆவணத்தில் தோன்றுவதற்கும் to paragraph எனும் வாய்ப்பையும், எழுத்துகளுக்கேற்ப சட்டங்கள் அமையும். வேறுொரு இடத்திலும் நகர்த்தி கொள்வதற்கும் (ஆனாலும் உரை வரிசைபடி அமையாது) to characterஎனும் வாய்ப்பையும் , சொற்றொரடரில் எழுத்துகளை சிறியது பெரியது என வரிசையாக அமர்வதற்கும் வரைகலையிலும் காலியான பத்தியிலும் அமைப்பதற்குas character எனும் வாய்ப்பையும் தெரிவுசெய்து கொள்க

சட்டங்களைஇணைத்தல்
வெவ்வேறு பக்கங்களில் உள்ள சட்டங்களையும் ஒன்றுக்கொன்று இணைப்பு ஏற்படுத்தலாம் செய்திகடிதங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் தொடரும்போது உரையோட்டம் தொடர்ந்து செல்வதற்கு இந்த இணைப்பு பயன்படுகின்றது ஆயினும் ஒரு சட்டத்தை அதற்கடுத்த ஒன்றுடன் மட்டுமே இணைப்பு ஏற்படுத்திடமுடியும் ஒரேசமயத்தில் ஒரு சட்டத்தினை பலசட்டங்களுடன் இணைக்கமுடியாது. இவ்வாறு தொடர் இணைப்பு எற்படுத்த விழையும் சட்டத்தை தெரிவுசெய்துகொண்டு Frameஎனும் கருவிபட்டையிலுள்ள Link Framesஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் அடுத்த காலியான சட்டத்தை தெரிவு செய்து சொடுக்குக இதன் பின்னர் இந்த சட்டங்களில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் இணைப்புடன் இரண்டு சட்டங்களும் தோன்றிடும் இந்நிலையில் Unlink Framesஎனும் கருவிபட்டையிலுள்ள Frameஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்தசட்டங்களின் உயரம் நிலையானது தேவையெனில் Frameஎனும் உரையாடல் பெட்டியின் வாயிலாக மாற்றியமைத்து கொள்ளமுடியும் ஆயினும் சட்டங்களுக்குள் உள்ள உள்ளடக்கங்களுக்கு ஏற்ப உயரத்தை நாமாக மாற்றியமைத்திட வேண்டும் Frameஎனும் உரையாடல் பெட்டியின் options எனும் தாவி பக்கத்தின் வாயிலாக தற்போதைய சட்டத்தின் பெயர் ,இணைப்புள்ள முந்தைய அல்லது அடுத்து சட்டங்களின் பெயர் என்பன போன்ற விவரங்கள் இருக்கும் தேவையனில் இதனை மாற்றியமைத்து கொள்ளலாம் இவ்வாறே இதே Frameஎனும் உரையாடல் பெட்டியின் மீயிணைப்பு (hyperlink) எனும் தாவிபக்கத்தின் வாயிலாக வேறு எந்த கோப்புடன் இணைப்பு ஏற்படுத்தபட்டுள்ளது என்ற விவரத்தை கொண்டு அந்த கோப்பினை எங்கிருந்தாலும் இந்த உரையாடல் பெட்டியின் வாயிலாக திறக்கமுடியும் அல்லது இணைப்பு ஏற்படுத்தபட்ட சட்டங்களை தெரிவுசெய்துகொண்டு ctrl எனும் விசையை அழுத்தி பிடித்துகொண்டு சுட்டியின்பொத்தானை சொடுக்குதல் செய்து கோப்பினை எங்கிருந்தாலும் திறக்கமுடியும்.
இதே உரையடல் பெட்டியின் Wrap, Borders, Background, Columns, Macroஆகிய தாவிகளின் பக்கங்களின் வாய்ப்புகளை சட்டங்களின் பாவணையை பயன்படுத்தியதை போன்று பயன்படுத்திகொள்க
அட்டவணைகளை பயன்படுத்தி பக்கஅமைப்பை உருவாக்கமுடியும் இந்த லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் உள்ள அட்டவணைகள் தகவல்களை அட்டவணையாக தேக்கிவைப்பது மட்டுமல்லாது பக்கங்களின் ஏராளமான வகையில் சிக்கலான அமைப்பை உருவாக்குவது போன்ற பல்வேறு பயன்பாட்டிற்காக உபயோகபடுத்தபடுகின்றன
தன்விவரகுறிப்பு போன்ற விவரங்களை பத்திகளின் தலைப்புடன் குறிப்பிடும்போது விவரதலைப்பை இடதுபுறமும் விவரங்களை வலதுபுறமும் பிரித்து பார்வையாளர்களை கவருமாறு இது வழங்கிடுவதற்கு பயனுள்ளதாக அமைகின்றது
18.1
18.1

இதனை சட்டங்களின் வாயிலாக அதனுடைய Marginalia frame எனும் பாவணையின் மூலமும் உருவாக்கிடமுடியும்
இவ்வாறு பத்திகளின் தலைப்புடன் அட்டவணையாக உருவாக்கிடு வதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் தேவையான இடத்தில் இடம் சுட்டியை வைத்து கொண்டு Insert => Table=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக அல்லது விசைப்பலகையில் Ctrl+F12 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் Insert Table எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் . அதில் ஒரு கிடைவரிசை(row) இரு நெடுவரிசைகள் (columns) ஆகிய வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டும் சுற்றுக்கோடும் (border) தலைப்பும் (header) இல்லை என்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்யாதுவிட்டிட்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
அதன்பின்னர் நாம் உருவாக்கிய அட்டவணையை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Table எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தோன்றிடும் Table Format எனும் உரையாடல் பெட்டியில் நெடுவரிசையின் அகலத்தை சரிசெய்து அமைத்து கொள்க. அவ்வாறே இதே உரையாடல் பெட்டியின் Tableஎனும் தாவியின் பக்கத்தின் Spacingஎனும் பகுதியில் இந்த அட்டவணைக்கு மேலேயும் கீழேயும் எவ்வளவு இடைவெளி விடவேண்டும் என அமைத்துகொண்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
18.2
18.2
பத்திகளுக்கு மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் எவ்வளவு காலி இடைவெளி விடவேண்டும் என்பதற்காக இடம்சுட்டியை தேவையான பத்தியில் நிறுத்திகொண்டு F11 எனும் செயலிவிசையை அழுத்துக உடன் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதன் கீழ்பகுதியில் தற்போது எந்தவகையான பாவணையுள்ளது என்ற பெயரும் அதனுடைய பாவணையை மேம்படுத்தியும் காண்பிக்கும் பிறகு கீழ்பகுதியில்All Styles என்பதை தெரிவுசெய்து சொடுக்கியபின் மேற்பகுதியில் விரியும் பட்டியலில் மேம்படுத்தி காண்பிக்கும் நடப்பு பாவணையை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சிறு பட்டியில் Modifyஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் paragraph style: எனும் உரையாடல் பெட்டியின் Indents & Spacing எனும் தாவியின் பக்கத்தில் Spacing எனும் பகுதியில் பத்திக்கு மேல் பத்திக்கு கீழ் எவ்வளவு காலிஇடைவெளிஎன குறிப்பிட்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
18.3
18.3
அட்டவணையை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சிறு பட்டியில் Number Formatஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Number Formatஎனும் உரையாடல் பெட்டியின் Category எனும் பகுதியில் Text என தெரிவுசெய்துகொண்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
18.4
18.4

இந்த table format என்பதை அடிக்கடி பயன்படுத்தவேண்டியிருந்தால் AutoText என்பதுபோன்று குறுக்குவழியாக தெரிவுசெய்வதற்காக ஒதுக்கீடு செய்துகொள்க
நாம் செய்து வரும் மாறுதல்கள் இணைப்பு ஏற்படுத்தபட்ட கோப்புகளிலும் அவ்வப்போது லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் நிகழ்நிலை படுத்தி கொள்வது நல்லது இந்த செயல் தானாக நடைபெறுவதற்காக Tools => Options => LibreOffice Writer => General=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் விரியும் Options LibreOffice Writer General எனும் உரையாடல் பெட்டியின் வலதுபுற பலகத்தில் Update links when loadingஎன்ற பகுதியில் அவ்வப்போது நிகழ்நிலை படுத்திட வேண்டுமெனில் Always என்ற வாய்ப்பையும் தேவைப்படும்போதுமட்டுமெனில் On request எனும் வாய்ப்பையும் நிகழ்நிலை படுத்திட தேவையேயில்லை எனில் Neverஎனும் வாய்ப்பினையும் தெரிவுசெய்துகொண்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதற்கு பதிலாக நாமே முயன்று இணைப்பு ஏற்படுத்திட Edit => Links=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Edit Linksஎனும் உரையாடல் பெட்டியில் நடப்பு கோப்புடன் இணைப்பு ஏற்படுத்தபட்ட அனைத்து கோப்புகளின் பெயரையும் பட்டியலாக காண்பிக்கும் அவற்றுள் தேவையான கோப்பின் பெயரை மட்டும் தெரிவுசெய்துகொண்டு Update எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Close.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடுதல் செய்திடுக
18.5

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: