ஒரேசமயத்தில் பேரளவுமின்னஞ்சல்களை உருவாக்கி அனுப்பிவைத்திடலாம்

 முதலில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திபொருட்களைபற்றியும் அதன் வசதிவாய்ப்புகளை பற்றியும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும் பயனாளர்களுக்கும் மின்னஞ்சல்மூலம் செய்திகளை அவ்வப்போது அறிவிப்பு செய்துகொண்டே இருக்கின்றன. அப்போதுதான்   வாடிக்கையாளர்களுடனும் பயனாளர்களுடனும் அந்நிறுவனத்திற்குமான தொடர்பு இருந்துகொண்டே இருக்கும் . இவ்வாறு பேரளவு மின்னஞ்சல்களை ஒரேசமயத்தில் பலருக்கும் அனுப்பும்போது சேரும்இடத்தில் மின்னஞ்சலின் எண்ணிக்கை மிகஅதிகஅளவிற்கு உயர்ந்து வரும்நிலையில் அங்கு வடிகட்டிகள் பயன்படுத்தபட்டு இவ்வாறான மின்னஞ்சல்கள் இவற்றை அனுப்பிடும் நிறுவனத்திற்கு அறிவிப்பு செய்திடாமலேயே அவைகளை குப்பை(Spam) மின்னஞ்சல்களாக பிரித்துவிடவும் தடுத்திடவும் (blacklisted) வாய்ப்புகள் உள்ளன

இதனை தவிர்த்திட பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக. பேரளவு மின்னஞ்சல்களை ஒரேசமயத்தில் அனுப்புவதற்கு முதலில் பேரளவுமின்னஞ்சல் கட்டமைவை நம்முடைய சேவையாளற் கணினியில் உருவாக்கிடவேண்டும் அதற்காக VPS அல்லது சிறந்த சேவையாளர், PHPList, MYSQL, DNSzone உடன்சேர்ந்த இணையதளமுகவரி ஆகியவை நமக்கு தேவையாகும் .

சிறந்த சேவையாளருடன்கூடிய உபுண்டு ,சென்டோஸ் என்பனபோன்ற இயக்க முறைமையை VPS ஆக பயன்படுத்திகொள்க அதற்கடுத்ததாக https://www.phplist.com/download எனும் முகவரியிலிருந்து PHPList, ஐ பதிவிறக்கம் செய்துகொள்க. மூன்றாவதாக நம்முடைய கணினியில் MYSQL என்பது நிறுவபட்டுள்ளதாவென உறுதிபடுத்திகொள்க.

பின்னர் PHPList, MYSQL உடன் இணைப்பு ஏற்படுத்துவதற்காக வடிவமைப்பு செய்திடுக. அதன்பின்னர் http://skcsbulkmail.in/ என்றவாறு நம்முடைய களப்பெயரை அமைவு செய்திடுக பின்னர் நம்முடைய கணினியிலுள்ள இணையஉலாவியை செயல்படுத்தி http://skcsbulkmail.in/admin/ எனும் நம்முடைய களப்பெயரின் முகப்பு பக்கத்தை பார்வையிடுக. அதன்பின்னர் துவக்க தரவுதள தொடர்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் திரையில் வழங்கபடும் PHPList, ஐ நிறுவுகை செய்வதற்கான ஆலோசனைகளை பின்பற்றிடுக.

அதற்காகமுதலில்Tell us about it எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் phpList Setup என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து நிறுவுகை செயலை தொடரச்செய்க. அதன்பின்னர் Verify settings எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Admin இன் உள்நுழைவு பெயரையும் கடவுச்சொற்களையும் பயன்படுத்தி சரிபார்த்துகொள்க பின்னர் conficure attributes எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து கொண்டு predeifined defaults எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து countries என்பதில் India என்றவாறும் India இல் நாம் அனுப்ப விரும்பும் மாநிலங்களை states in India என்பதிலும் தேவையானவாறு தெரிவுசெய்து கொண்டு Add எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக . அதன்பின்னர் create on Subrscribe page எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய செய்திகடிதத்திற்கான Subrscribe pageஐ உருவாக்கிடுக பின்னர் இந்த செய்திகடிதத்தினை பெறுபவர்களின் ஒருசில மின்னஞ்சல் முகவரிகளை அதற்கான பெட்டியில் உள்ளீடு செய்து import எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

இதன்பின்னர் நம்முடைய மின்னஞ்சல் செய்தியானது குப்பைமின்னஞ்சலாக மாற்றிடாமல் இருப்பதற்காக ஒருசில அமைவுகளை செய்திடவேண்டும் அதற்காக முதலில் நிலையான இணைய முகவரி கொண்ட நம்முடைய VPS அல்லது சிறந்த சேவையாளர் கணினியில் DNS அல்லது RDNS DNSzone பகுதியில் உருவாக்கிடவேண்டும் இவ்வாறான நம்பகமான RDNS ஆவணத்தை உருவாக்குவதற்காக RDNSzone ஐ உருவாக்குக பின்னர் ஐபி முகவரியாக 123.456.789.81 என்றிருப்பதை 789.456.123 என்றவாறு RDNS ஐ உள்ளீடு செய்துகொண்டு அதனோடு 789.456.123.in.-addr.arpa.என்றவாறு RDNSzone ஐ பிற்சேர்க்கை செய்துகொள்க CNAME பகுதியில் களப்பெயரை குறிப்பிடடு புதிய PTRஆவணத்தை உருவாக்கி கொள்க செய்திகடிதத்திற்கு newsletter@skcs.com என்றும் வியாபார மேம்பாட்டிற்கு promotions@skcs.com என்றவாறும் வெவ்வேறு நோக்கத்திற்காக வெவ்வேறாக நம்முடைய நிறுவனத்திற்கான ஐபிமுகவரியை Send only என்பதற்காக மட்டும் (Exist என்பதற்காக அன்று) உருவாக்கிகொள்க பின்னர் நம்முடைய மின்னஞ்சலானது பயனாளர்களிடம் சென்றடைந்தவுடன் அதற்கு பதில் அளிக்க விரும்பும் நிலையில் Reply to எனும் பொத்தானை அமைத்திடுக இந்த Reply to பகுதியில் வெவ்வேறு நோக்கத்திற்கான பதிலுக்கு ஏற்ப வெவ்வேறுமுகவரியை குறிப்பிடுக. பின்னர் Sender policy framework(SPF) எந்த சேவையாளரிலிருந்து அனுப்பபடுகின்றது என நம்முடைய   skcsbulkmail.in எனும் முகவரியை குறிப்பிடுக. அதன்பின்னர் 1624 பிட் உடைய விசையை பயன்படுத்தி Domain Key Identified Mail (DKIM) என்பதில் பதிவுசெய்துகொள்க பின்னர் abuse.net என்பதில் நம்முடைய பேரளவு மின்னஞ்சல் அனுப்பிடும் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்துகொண்டு skcs.in::abuse@sccs.in என்றவாறு மின்னஞ்சல் வாயிலாக நம்முடைய மின்னஞ்சல் குப்பை மின்னஞ்சல் அல்லது தீங்கு விளைவிப்பை அன்று என்பதற்காக abuse.net   என்பதில் அவ்வப்போது நிகழ்நிலை படுத்திகொள்க பிறகு gmail yahoomail பகுதியில் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்து கொள்க பின்னர் மின்னஞ்சலின் விவரத்தை இந்த செய்திகடித்ததில் குறிப்பிடுக இந்த பேரளவு மின்னஞ்சல்கள் பெறுபவர்கள் தேவையில்லை என எண்ணும்போது இதனை தவிர்ப்பதற்காக unsubscribeஎனும் பொத்தானை உருவாக்கிடுக. இந்த unsubscribe ஆனது எந்த முகவரிக்கு வந்துசேரவேண்டும் என குறிப்பிடுக இதன்பின்னர்நம்முடைய முதல் பேரளவு செய்திகடிதத்தை அனுப்பிவைத்திடுக மேலும் விவரங்களை பெறுவதற்காக PHPLISTஎன்பது பற்றி அறிந்துகொள்ள http://www.phplist.com என்ற இணையதள முகவரிக்கும் Mail Transfer Agent என்பது பற்றி அறிந்துகொள்ளhttp://www.sendmail.com/ என்ற இணையதள முகவரிக்கும்DKIM என்பது பற்றி அறிந்துகொள்ளhttp://opendkim.com/ என்ற இணையதள முகவரிக்கும் DNSzoneஎன்பது பற்றி அறிந்துகொள்ள http://mxtoolbox.com என்ற இணையதள முகவரிக்கும் செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: