நம்முடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஆளில்லா தொலைபேசி இயக்ககத்தை இந்த ஆஸ்ட்ரிஸ்க் எனும் திறமூல மென்பொருளை கொண்டு மிக எளிதாக அமைத்து பராமரித்திடமுடியும். இந்த மென்பொருளை ஆண்டு ஒன்றிற்கு 2 மில்லியன் நபர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர் தொலைபேசி உலகில் மிகபிரபலமாக இந்த ஆஸ்ட்ரிஸ்க் எனும் திறமூல மென்பொருள் விளங்குகின்றது . இதனை கொண்டு நம்முடைய வீடுகளில் அல்லது அலுவலகத்தில் தொலைபேசி இயக்ககத்தை அமைப்பதற்கு முதலில் செந்தரபணிமேடை கணினி அல்லது சேவையாளர் கணினி ஆனது பென்டியம்4 ,எக்ஸீயான் ஐ3, ஆகியவையுடன் 2 ஜிபி முதல் 8 ஜிபி வரையான ரேம் நினைவகம் 500ஜிபி அல்லது 1 ட்டிபி வன்தட்டு போன்ற வன்பொருட்களுடன் இருக்கவேண்டும் அடுத்த படிமுறையாக ஃபெடோரா, டெபியன்,சென்டோஸ் ,உபுண்டு ஆகிய லினக்ஸ் இய்க்கமுறைகளில் ஒன்று நம்முடைய கணினியில் இயங்குவதை உறுதிசெய்துகொள்க .அதற்கடுத்ததாக http://www.asterisk.org/downloads/ எனும் தளத்திலிருந்து இந்த ஆஸ்ட்ஸ்டிக் திறமூல மெனபொருளின் சமீபத்திய அல்லது நீண்டகாலபதிப்பை பதிவிறக்கம் செய்து இந்த மென்பொருளை நிறுவுகை செய்திடுக இந்நிறுவுகை செயலின்போது இதற்கான வழிகாட்டி கூறும் ஆலோசனைகளை பின்பற்றிடுக. பின்னர் இந்த மென்பொருளை வழக்கமான dial plan அல்லது Free PBX ஏற்றவாறு வடிவமைப்பு செய்திடுக தொலை பேசி இயக்ககத்திற்கு தேவையான ஒரேயொரு வாயில் கொண்ட FXOஅட்டையும் இதனை பொருத்துவதற்கான சேவையாளர் ஸ்லாட்கள் PCIஅல்லது PCIe ஆகியவை தேவையாகும் இவற்றை சரியாக பொருத்தி இணைப்பு செய்துகொள்க. அதற்கடுத்ததாக FXS gateway , LAN ஆகியவற்றையும் அமைத்து கொள்க இது தொலைபேசி இயக்ககத்திற்குள்வருகின்ற அனைத்து அழைப்புகளையும் அல்லது குறிப்பிட்ட அழைப்புகளைமட்டும் பதிவுசெய்து பின்னர் கேட்கும்போது இயங்கும் திறன்கொண்டது இதன் ஆஸ்ட்ரிஸ்க் ஐவிஆர் என்பது மிகவும் திறன்மிக்கது பலநிலைகளையும் தரவுதள மேலாண்மை ,தரவுகளை சேகரித்தல்,இணைய சேவையுடன் ஒருங்கிணைத்தல், பேச்சொலியை அங்கீகரித்தல் போன்ற பல்வேறு திறன்களை கொண்டது. வட்டாரம் தொழில் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலான உள்முகவர்களுடன் அல்லது ஒரே நிறுவனத்தின் பல்வேறு துறைகளுடன் தொடர்கொள்வதற்கான உள்கட்ட அழைப்புகளையும் வெளியிலிருக்கும் முகவர்களுடன் தொடர்புகொள்வதற்கான வெளியிட அழைப்புகளையும் கையாளும் திறன்கொண்ட தனிப்பட்ட அழைப்பு மையத்தை அமைப்பதற்கானVicidial என்னும் துனை பயன்பாடுகள் இந்த ஆஸ்ட்ரிஸ்க் அடிப்படையிலேயே உருவாக்கபட்டதாகும். சிஆர்எம் ,ஈஆர்பி போன்றவற்றுடனும் TelephoneyAPI உடனும் எளிதான URL உடனும் ஒருங்கிணைந்து செயல்படும் வல்லமை கொண்டதாக இது விளங்குகின்றது. மேலும் இந்த ஆஸ்ட்ரிக் ஐ பற்றி நன்கு ஐயம் திரிபற அறிந்துகொள்ள ‘Asteristc: The future of telephony’ எனும் புத்தகத்தை காண்க