line_profiler எனும் கருவி

10

அல்லும் பகலும் கண்துஞ்சாது கடுமையாக உழைத்து பல்லாயிரக்கணக்கான குறிமுறைவரிகளை கொண்ட ஒரு பயன்பாட்டு மென்பொருளை பைத்தான மொழியை பயன்படுத்தி நாம் உருவாக்கியிருப்போம் அதன்பின்னர் அதனை நாம் செயற்படுத்தி பார்த்திடும்போது எருமை மாடு போன்று ஆடிசைந்து இந்த மெனபொருளானது செயல்படுகின்றதா என சந்தேகம் நமக்குஎழும் அளவிற்கு மிகமெதுவாக அதனுடைய செயல்இருக்கும்

இந்நிலையில் எந்த குறிமுறை வரியானது இவ்வாறான மெதுவான இயக்கத்தை ஏற்படுத்துகின்றது என கண்டுபிடிப்பது என்பது வைக்கோற்போரில் தொலைந்துபோன ஊசியை கண்டு பிடிப்பதற்கு ஒப்பான செயலாகிவிடும்

அதனால் மென்பொருள் உருவாக்குநருக்கு விரக்தியான மனநிலை ஏற்பட்டுவிடும் அஞ்சாதீர்கள் விரக்தியுறாதீர்கள் உங்களுக்காகவே line_profiler எனும் கருவி பைத்தானில் உருவாக்கபடும் குறிமுறைவரிகளில் உள்ள தருக்க பிழைகளை சரிசெய்து மென்பொருளை விரைவாக செயல்படுமாறு புத்தாக்கம் செய்கின்றது இது பைத்தான் குறிமுறையை முழுவதுமாக ஒவ்வொரு வரியாக ஆய்வுசெய்து எந்த இடத்தில் நம்முடைய குறிமுறைவரியை மெதுவாக்கும் இவ்வாறானநெருக்கடி ஏற்படுகின்றது என சரிபர்த்து அதனை சுட்டிகாட்டி சரிசெய்திட கூறுகின்றது

அதாவது நம்முடைய குறிமுறைவரகளில் எத்தனை ஹிட்கள் ஏற்படுத்தபடுகின்றன அந்த ஹிட்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு நேரத்தை எடுத்துகொள்கின்றன. எந்தெந்த செயலிகள் முட்டுகட்டையாக உள்ளன என்பன போன்ற தகவல்களை பைதான்குறிமுறைவரிகளை வரிவரியாக ஆய்வுசெய்து பட்டியலாக திரையில் வெளியிடுகின்றது

அத்தகவல்களின் அடிப்படையில் அவைகளை சரிசெய்து பயன்பாடு விரைவாக செயல்படுமாறு புத்தாக்கம் செய்திடமுடியும் இதனை பற்றிய மேலும் விவரம் அறிந்துகொள்ளவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://pythonhosted.org/line_profiler/ என்ற இதனுடைய வலைதளத்திற்கு செல்க

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: