லிபர் ஆஃபிஸ் 4. ரைட்டர்-தொடர்-15 -பக்கங்களை வடிவமைத்தல்

லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் ஆவணத்தின் பக்க இடஅமைவை கட்டுபடுத்துவதற்கு பக்கபாணிகள், நெடுவரிசைகள், சட்டகங்கள், அட்டவணைகள்,பகுதிகள் போன்ற ஏராளமான வழிகளை நமக்கு இந்த லிபர் ஆபிஸ் ரைட்டர் வழங்குகின்றது இந்த பகுதியானது அவ்வாறான வழிமுறைகளையும் அவற்றோடு ஒத்தியங்கும் தலைப்பு பகுதி, அடிப்பகுதி , பக்கங்களின் எண்கள், பக்கவிளிம்புபோன்றவற்றை மாறுதல்செய்தல் ஆகிய செயலிகளையும் விவரிக்கின்றது
ஆலோசனை லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே உள்ள கட்டளை பட்டியில் Tools => Options => LibreOffice => Appearance=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக உரை, பொருள், அட்டவணை, பகுதிஎல்லைகள் ஆகியவற்றை காண்பிப்பதற்கான வாய்ப்புகள் எனும் கட்டளையை தெரிவுசெய்வதற்கு இந்த பக்க இடவமைவு என்பது சுலபமானதாக உள்ளது
ஒரு இடவமைவு வழிமுறையை தேர்வுசெய்தல்
ஆவணத்தின் சிறந்த இடஅமைவானது அந்த ஆவணத்தில் என்னென்ன தகவல்கள் இடம் பெற்றுள்ளன அந்த ஆவணத்தின் இறுதி தோற்றம் எவ்வாறு உள்ளது என்பன போன்றவற்றை சார்ந்ததாகும் இங்கு ஒருசில எடுத்துகாட்டுகள் உள்ளன அவையனைத்தும் நமக்கு தேவைப்படுமா என கவலைபடவேண்டாம் ஆயினும் இந்த பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளவை அவைபற்றிய ஒருசில தொழில்நுட்பவிவரங்கள் மட்டுமேயாகும்
15.1
படம்-15-1
பொதுவாக எந்தவொரு புத்தகத்திலும் ஒற்றை நெடுவரிசை உரையாக தேவைபடும் போது மட்டும் ஒருசில படங்கள் உரையுடனும் ஒருசில படங்கள் உரையில்லாமலும் பக்கபாணியில் அடிப்படையான இடவமைவை பயன்படுத்தி படங்களை விவரிக்கும் உரையிருந்த போதிலும் அட்டவணைகளை பயன்படுத்துவது போன்றவாறு உள்ளன.
அதற்கடுத்ததாக இரட்டை நெடுவரிசைகளைகொண்ட பக்கபாணியில் வரிசையாக அல்லது மற்ற ஆவணங்கள் இரட்டை நெடுவரிசைகளின் உரையுடன் இந்த இரட்டை நெடுவரிசையானது உரையில் இடதுபுற நெடுவரிசையிலிருந்து வலதுபுறநெடுவரிசைக்கும் பின்னர் அடுத்த பக்கத்திற்கும் பாம்புஒன்று வளைந்து நெளிவதை போன்று மேலும் கீழுமாக வளைந்து வளைந்து இந்த உரையோட்டங்கள் செல்கின்றன. ஆயினும் இந்த ஆவணத்தின் முதல் பக்கத்தினுடைய தலைப்புமட்டும் முழுபக்கஅளவிற்கு ஒரு ஒற்றையான நெடுவரிசை பகுதியாக அமைந்திருக்கும்
15.2
படம்-15-2
இது போன்ற உரையானது செய்திதாட்களில் மிகசிக்கலான இடவமைவுடனும் ஒன்றிற்கு மேற்பட்ட இரண்டு அல்லது மூன்று நெடுவரிசைகளின் உரையுடனும் ஒரு பக்கத்திலிருந்து அடுத்தடுத்த பலபக்கங்களில் தொடர்ச்சியாகவும் அடிப்படையான இடஅமைவிற்காக பக்கபாணியை பயன்படுத்தி கொள்கின்றன. மேலும் தேவையெனில் கட்டுரைகளுடன் தொடர்புடைய சட்டகத்திற்குள் ஊக்கு வரைகலைகளும் பக்கங்களில் நிலையை நிலையாக வைக்கின்றன
15.3
படம்-15-3
ஆவணத்தில் ஒருமொழியிலிருந்து வேறுொரு மொழிக்கு மொழிபெயர்த்து இரண்டு மொழிகளின் சொற்களையும் அருகருகே அமையுமாறு படிப்பவர்களுக்கு எளிதாக புரிந்துகொள்ளுமாறும் குறிப்பிட்ட மொழிசொற்களுக்கு இணையான மொழிபெயர்த்த சொற்கள் எவையெவையென எளிதாக காண்பதற்கு வசதியாகவும் இரட்டை நெடுவரிசை கொண்ட அட்டவணையை பயன்படுத்தி கொள்ள படுகின்றது
15.4
படம்-15-4
பாணியை பயன்படுத்தி அடிப்படையான பக்கஇடவமைவை அமைக்கலாம்
லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் பக்கபாணியானது அனைத்து பக்கங்களின் அடிப்படை இடவமைவுகளையும் பக்கஅளவையும் ,ஓரத்தையும், அடிப்பகுதி, தலைப்பகுதி எவ்வாறு இருக்கவேண்டும் என்றும் சுற்றெல்லைகளும் பின்புலங்களும் எவ்வாறு இருக்க வேண்டுமெனவும் எத்தனை நெடுவரிசைகள் இருக்கலாம் எனவும் என வரையறுக்கின்றது
லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் நம்மால் கட்டமைக்கபட்ட அல்லது மாறுதல் செய்யப்பட்ட பல்வேறு பக்கபாணிகளுடனும் புதியதாக நாம்விரும்பியவாறு வறையறுக்கபட்ட பக்கபாணியுடனும் உள்ளன ஒற்றையான ஆவணத்தில்ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கபாணிகளை நம்மால் வைத்து பராமரிக்கமுடியும்
குறிப்பு லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தில் அனைத்து பக்கங்களும் ஏதாவதொரு பாணியின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கும் .ஆயினும் . எந்த பக்கத்தின் பாணியாவது நாம் குறிப்பிடவில்லை யெனில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது இயல்புநிலை பக்க பாணியை எடுத்துகொள்ளும் என்பதை மனதில் கொள்க
பின்வரும் பகுதியில் குறிப்பிட பட்டுள்ளவாறு பகுதிகள் ,சட்டகங்கள் ,அட்டவணைகள் ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அல்லது ஒரு பக்கபாணியை வரையறுப்பதன் மூலம் ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்தின் இடவமைவையும் மாறுதல் செய்திடலாம்
ஆலோசனை இயல்புநிலை பக்கபாணியையும் சேர்த்து பக்கபாணியில் மாறுதல் செய்வதற்கு நாம் பணிபுரியும் ஆவணத்தில் மட்டும் செயல்படுத்துக. ஆவணத்தின் அனைத்து பக்கங்களின் இயல்புநிலை பாணிநிலையை மாறுதல் செய்திட இந்த மாறுதல்களை ஒரு மாதிரி பலகத்தில் கொண்டுவந்து அந்த மாதிரிபலகத்தை இயல்புநிலை பலகமாக அமைத்து அதனை பயன்படுத்திகொள்க
பாணியை மாற்றிடமால் பக்கமுறிவை உள்ளிணைத்தல்
பல ஆவணங்களில் (உதாரணமாக, பல பக்கங்களை கொண்ட அறிக்கை), உரையானது அடுத்தடுத்த பக்கங்களுக்கு தொடர்ந்தார்போன்று உரையோட்டமாக இருக்குமாறு செய்திட விரும்பும் நிலையில் தேவையான தகவல்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்ய வேண்டும். பொதுவாக மேலே கூறிய நுட்பங்களை பயன்படுத்தி நாம் தடுக்காதவரை தானாகவே இந்த உரையோட்டத்தை ஒரு ஆவணத்தில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது செய்கிறது,.
ஆயினும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு பக்கம் முறிப்பு வேண்டும் என நாம் விரும்பினால் , எடுத்துக்காட்டாக, ஒரு புதியபக்கத்தில் தலைப்பு பகுதியை வைக்க விரும்பினால் மட்டும் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக:
1) பக்கமுறிவு செய்திடவிரும்பும் அடுத்த பக்க தொடக்க பகுதிக்கு இடம் சுட்டியை கொண்டுசென்று வைத்து கொண்டு லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே உள்ள கட்டளை பட்டியில் Insert => Manual Break=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
2) உடன் விரியும் Insert Break எனும் உரையாடல் பெட்டியின் Type எனும் பிரிவில், பக்க இடைவெளி(Page break) எனும் வாய்ப்பு ஏற்கனவே தெரிவு செய்யபட்டிருக்கும் பாணி(Style) எனும் பகுதியின் உரைப்பெட்டியானது [None] என அமைக்கப்பட்டிருக்கும்.
3) அடுத்த பக்கதொடக்கத்தில் முதல்பத்தியின் நிலையை சரிபடுத்தி கொண்டு இந்தInsert Break எனும் உரையாடல் பெட்டியில் OK எனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.
15.5
படம்-15-5
ஆலோசனை தொடர்ச்சியான உரையுள்ளஆவணத்தில் பின்வருமாறு ஒரு பக்கம் முறிவை (Page Break)நுழைக்க முடியும்;
1) அடுத்த பக்கதொடக்கத்தில் முதல் பத்திக்கு முன்புறம் இடம் சுடடியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Paragraph எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
2) பின்னர் விரியும் Paragraph எனும் (படம்-15-6 )உரையாடல் பெட்டியின் Text Flow எனும் பக்கத்தில், Breaksஎனும் பிரிவில் Insertஎனும் வாய்ப்பினை , தெரிவுசெய்திடுக. அதிலுள்ள With Page Style. எனும் வாய்ப்பினை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
3) அடுத்த பக்கதொடக்கத்தில் முதல்பத்தியின் நிலையை சரிபடுத்தி கொண்டு இந்தParagraph எனும் உரையாடல் பெட்டியில் OK எனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.
15.6
படம்-15-6
ஒரு வித்தியாசமான முதல் பக்கத்தை ஒரு ஆவணத்தில் வரையறுத்தல்
கடிதங்கள் அறிக்கைகள் போன்ற பலdbsJg ஆவணங்களில், முதல் பக்கமானது மற்ற பக்கங்களைவிட மாறுபட்டிருக்கும். உதாரணமாக, ஒரு கடிதத்தின் முதல் பக்கமானது பொதுவாக படம் 15-7 இல் காண்பித்துள்ளவாறு ஒரு வித்தியாசமான முகப்பு பக்கமாக இருக்கும், அல்லது ஒரு அறிக்கையின் முதல் பக்கமானது எந்த தலைப்புபகுதியும் அல்லது அடிப்பகுதியும் இல்லாமல் இருக்கும். அதே சமயம் மற்ற பக்கங்களும் அவ்வாறே இருக்கும் இதுவே லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் எளிய நிலையாகும்
இயல்புநிலை அல்லது வேறுநிலையில் நம்முடைய ஆவணத்தின் பக்க பாணியை பயன்படுத்தி, Page Style எனும் உரையாடல் பெட்டியில் header/footer எனும் பக்கங்களில் Same content on first page எனும் வாய்ப்பினை தெரிவுசெய்யாதுவிட்டுவிடுவதால் முதல் பக்கத்தில் ஒரு தலைப்புபகுதி அல்லது கீழ்பகுதி ஆகியவற்றை நாம் விரும்பியவாறு சேர்க்க முடியும். பின்னர்ஆவணத்தின் மற்ற பக்கங்களிலும் வித்தியாசமானதொரு தலைப்புபகுதி அல்லது அடிப்பகுதியை நம்மால் சேர்க்க முடியும்
15.7
படம்-15-7
ஒரு ஆவணத்திற்குள் பக்கநோக்குநிலை மாற்றியமைத்திட
ஒரு ஆவணமானது ஒன்றிற்கு மேற்பட்ட நோக்குநிலைகொண்ட(orientation) பக்கங்களை கொண்டிருக்க முடியும். பொதுவானதொரு பக்ககாட்சியானது ஒருஆவணத்தின் மையபகுதி படுக்கைவச(Landscape) உரையாகவும் அதேசமயம்மற்ற பக்கங்களில், நெடுக்கைவசம்(Portrait) நோக்கியும் இருக்கின்றன
பின்வரும் பகுதியில் அதை அடைவதற்கான படிகள் கொடுக்கபட்டுள்ளன.
ஒரு படுக்கைவச பக்கபாணியை அமைத்தல்
1 ஆவணத்தின் ஒரு பக்கத்தில் வைத்துள்ளவாறே விளிம்பை மற்ற பக்கங்களில் வைக்க விரும்பினால் நடப்புபக்கத்தின் விளிம்பு எவ்வாறு உள்ளது என சரிபார்த்து அமைத்துகொள்க. (படம் 15-9 காண்பித்துள்ளவாறு Page Style எனும் உரையாடல் பெட்டியின் Page எனும் தாவியின் பக்கத்தில் இவ்வாறான பக்கவிளிம்பு அமைப்பை பற்றிய விவரங்களை காணலாம்)
2) Styles and Formatting எனும் சாளரத்தில், பக்கபாணி (page styles) எனும் பட்டியலில் உள்ள Landscape என்பதன் மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் மேல்மீட்பு பட்டியில் Modify என்பதை தேர்வு செய்க.
3) Page Style எனும்உரையாடல் பெட்டியில் (படம் 15-8) அமைப்பாளர் (Organizer ) எனும் பக்கத்தில், அடுத்தபாணியின் பண்பியல்பானது Landscape என்று இருப்பதை ஒன்றிற்கு மேற்பட்ட தொடர்ச்சியான Landscape பக்கத்தை அனுமதிப்பதாற்காக உறுதி செய்து கொள்க
15.8
படம்-15-8
4) Page Style எனும் உரையாடல்பெட்டியின் (படம் 15-6) Page எனும் பக்கத்தில், பக்கநேக்கானது (Orientation) படுக்கைவசம்(Landscape) என்பது அமைக்கபட்டுள்ளதாவென உறுதிசெய்துகொள்க. நெடுக்கைவச பக்கத்திற்கு ஏற்றாற் போன்று பக்கவிளிம்புகளை மாற்றியமைத்து கொள்க அதாவது நெடுக்கைவச பக்கத்திற்கான மேல்பகுதி பக்கவிளிம்பானது படுக்கைவச பக்கத்திற்கு இடதுபுறவிளிம்பாகவும் நெடுக்கைவச பக்கத்திற்கான கீழ்பகுதி பக்கவிளிம்பானது படுக்கைவச பக்கத்திற்கு இடதுபுற வலதுபுற விளிம்பாகவும் மாற்றபடுகின்றது
15.9
படம்-15-9
5பின்னர் இறுதியாக இந்த மாற்றங்களை சேமிக்க OK எனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.
ஒரு படுக்கைவச பக்கத்திற்குள் ஒரு நெடுக்கைவச பக்கத்தை உள்ளிணைத்தல்
இப்போது Landscape எனும் பக்க பாணியை வரையறுத்து அதனை எவ்வாறு செயல்படுத்துவது என காண்போம்.
1) Landscape எனும் பக்க பாணியடைய பக்கத்தின் தொடக்கபகுதியில் பத்தி அல்லது அட்டவணையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் மேல்மீட்பு பட்டியில் Paragraph அல்லது Table ஆகியவற்றில் தேவையானதை மட்டும் தேர்வுசெய்க
2) பின்னர் Paragraph எனும் உரையாடல் உரையாடல் பெட்டியின் எனும் Text Flow பக்கத்தில் (படம் 15-10) Insert(பத்தியெனில் )அல்லது Break (அட்டவணையெனில்) தெரிவுசெய்து கொண்டு பக்கபாணியின் பண்பியல்பை Landscape எனஅமைத்துகொண்டு.புதிய பக்கபாணியை செயல்படுத்துவதற்காக OK எனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.
15.10
படம்-15-10
3) மாறுதலாக போகின்ற நெடுக்கைவசபாணியின் பத்தி அல்லது அட்டவணையில் இடம்சுட்டியை வைத்து மேலே கூறியவாறு Landscape பக்க பாணியாக முன்பு பயன்படுத்தப்பட்டதற்கு இணையாக பொருத்தமாக தற்போது portrait பக்கபாணியாக மாற்றியமையபோவதில் பத்தியின் பண்பியல்பு அல்லது அட்டவணையின் பண்பியல்பை மாற்றியமைத்து கொள்க
படம்-15-11
4) OK எனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து முந்தைய portrait பக்கபாணிக்கு திரும்பிடுக
ஆலோசனைLandscape பக்கங்களில் portrait பக்கங்களுக்கான தலைப்புபகுதி அல்லது அடிப்பகுதி அமைக்கவேண்டும்என விரும்பினால் தேவை என்றால்நோக்குநிலை, “Portrait headers on landscape எனும் பகுதிக்கு செல்க
பக்கங்களில் தலைப்பை சேர்த்திட
லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது ஒரு ஆவணம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலைப்பு பக்கங்களாக சேர்ப்பதற்காக வேகமான வசதியான வழியை வழங்குகிறது மேலும் நாம் விரும்பினால் ஆவணத்தில் பக்க எண்ணை 1 என மீண்டும் தொடங்க செய்யலாம்.
அவ்வாறு தொடங்குவதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையில் உள்ள Format => Title Page => என்றவறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Title Page எனும்(படம் 15-12) உரையாடல் பெட்டியில் ஏராளமான வகையில் வாய்ப்புகளை உருவாக்கமுடியும்
1நடப்பு பக்கத்தை தலைப்பு பக்கமாக உருமாற்றமுடியும் அல்லது புதிய தலைப்புபக்கத்தை உள்ளிணைக்கமுடியும்
2எத்தனை பக்கங்களை உருமாற்றபோகின்றோம் அல்லது உள்ளிணைக்க போகின்றோம்
எங்கெங்கே அந்த பக்கங்களை அமைக்கபோகின்றோம்
3பக்கஎண்கள் தொடங்குவதாயின் எந்த பக்கத்திலிருந்து தொடங்கவேண்டும் எந்த எண்ணிலிருந்து தொடங்கவேண்டும்
4 தலைப்பு பக்கத்திற்கு என்ன வகையான பக்கபாணியை பயன்படுத்த போகின்றோம்
ஆகிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நம்முடைய ஆவணத்தின் வெவ்வேறு இடங்களில் பல்வேறு தலைப்பு பக்கங்களை உள்நுழைக்க முடியும் ஒரு புத்தகத்தின் தொடக்க பக்கங்களில் காப்புரிமை பகுதி தொடக்கபகுதிகளின் அட்டவணை போன்றவை மற்ற பக்கங்களைவிட மாறு பட்டுஇருக்குமாறு செய்யமுடியும்

படம் 15-12

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: