திறமூல கருவிகளை பயன்படுத்திநம்முடைய தரவுகளை பிற்காப்பு செய்திடலாம்

இந்த கட்டுரையில் Duplicati , DirSyncPro , FreeFileSync ஆகிய மூன்று திறமூல பிற்காப்பு கருவிகளைபற்றிய விவரங்களை இப்போது காண்போம்

21 Duplicati   தரவுகளை பிற்காப்பு செய்வதற்கு உதவும் இந்த Duplicati எனும்திறமூல கருவியை https://www.code.google/com/p/duplicati/wiki/downloads?tm=2 எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க.

பின்னர் முதன்முதல் இந்த கருவியை பயன்படுத்த துவங்குவதால்   தோன்றிடும் இதனுடைய வரவேற்பு சாளரத்தில் setup a new backup வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பிறகு தோன்றிடும் திரையில் இந்த பிற்காப்பிற்கு sample backupஎன்றவாறு பெயரும் எந்த இடத்தில் என்பதற்காக இதனை critical,important,normal என்றவாறு குழுவின் பெயரில் ஒன்றையும் வழங்கி nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அதற்கடுத்ததாக தோன்றிடும் திரையில்   இயல்புநிலையில் My documents என்ற அடைவாக இருக்கும் அதற்கு பதிலாக வேறு அடைவில் எனில் custom folder lists என்பதை தெரிவுசெய்து சொடுக்கிநாம் விரும்பும் அடைவின் பெயரை வழங்கியபின் nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பிறகு தோன்றிடும் சாளரத்தில் இந்த பிற்காப்பிற்கான கடவுச்சொற்களை மறையாக்கம்(encryption) செய்தவதற்கான வழிமுறையை AES-256 encryptionஎன்றவாறு தெரிவுசெய்துகொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இந்நிலையில் மறையாக்கம் செய்வதற்காக பயன்படும் துனைக்கருவியானGNU Privacy Guard ,external என்ற வாய்ப்பினை விண்டோ இயக்கமுறைமையெனில் http://gpg4win.org/download.html/ என்ற தளத்திலிருந்தும் மற்ற இயக்கமுறைமையெனில் http://www.gnupg.org/download/ என்ற தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க

       கோப்பின் அடிப்படையிலா(file based) , மேககணியின் அடிப்படையிலா(cloud based) ஆகிய இரண்டில் எந்த வழிமுறையில் நாம்பிற்காப்பு செய்யவிருக்கின்றோம் என தெரிவுசெய்வதற்கேற்ப இதற்கடுத்த இரு படிமுறைகளும் மாறுபடும்

அதனால் அதற்கடுத்ததாக தோன்றிடும் சாளரத்திரையில் கோப்பின் அடிப்படையில் (file based) என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேககணியின் அடிப்படையில் (cloud based) என்ற வாய்ப்பினை அதாவது Google Docs என்றாவாறு தெரிவுசெய்துகொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் சாளரத்தில் கோப்பின் அடிப்படையில்(file based) என்ற வாய்ப்பு எனில் பிற்காப்பு செய்யவிருக்கும் இடமான கணினிக்குள் அல்லது பிணையத்திற்குள் அல்லது தேவைபட்டால் கழற்றி பெருத்தும் கையடக்க சாதனமான யூஎஸ்பி க்குள் என்றாவாறு செல்லும் பாதையினை குறிப்பிட்டுகொண்டு மேககணியின் அடிப்படையில் (cloud based) எனில் Google Docs Collection எனும் பெயரை வழங்கி Google Drive என்ற அடைவை குறிப்பிட்டுகொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதற்கடுத்ததாக தோன்றிடும் சாளரத்திரையில் இந்த பிற்காப்பு செயல் எவ்வளவு கால இடைவெளியில் என்பதை குறிப்பிட்டபின்னர் மிகுதி இயல்புநிலையில் உள்ள வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு தோன்றிடும் திரையில் full,incremental ஆகிய இரண்டில் ஒன்றை பொதுவாக incremental என்பதை தெரிவுசெய்து கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதற்கடுத்தாக தோன்றிடும் திரையில் பிற்காப்பினை தற்போது செயல்படுத்து(run backup now) என்ற வாய்ப்பினை தெரிவுசெய்வது ,பிற்காப்பு நிலைஎன்னவென (status / progress) சரிபார்ப்பது, இந்த கருவிக்கான உருவபொத்தானை திரையில் வைத்திடுவது ஆகிய செயல்களை செய்தபின் nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   இறுதியாக இந்த அமைவு செயலை முடிவிற்கு கொண்டுவந்தபின்   start=> all program=> duplicati=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக இந்த கருவியை செயல்படுத்துக

அடுத்து தோன்றிடும் திரையின் பிற்காப்பு வாய்ப்பில் Restoreஎன்பதை தெரிவுசெய்து கொண்டு குறிப்பிட்ட கோப்பு மட்டுமெனில்restore only the items selected below என்ற வாய்ப்பினையும் பிறகு விரியும் கோப்புகளின் பட்டியலிலிருந்து தேவையான கோப்பினை மட்டும் தெரிவுசெய்துகொண்டு அல்லது அடைவு முழுவதையும் தெரிவுசெய்துகொண்டு மீட்டெடுக்கும் இடத்தையும் அதற்கான பாதையையும் குறிப்பிட்டு கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அடுத்து தோன்றிடும் திரையில் இந்த கோப்பு மீட்டெடுக்கும் பணி முடிவுபெற்றது எனில் finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்த கருவி குறித்து மேலும் விவரம் வேண்டுமெனில் http://duplicate.com/howtos/   என்ற தளத்திற்கு செல்க

2.2.DirSyncPro எனும் இந்த கருவியை http://dirsyncpro.org/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு DirSyncPro.exe எனும் இதனுடைய செயலி கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக பிறகு தோன்றிடும் திரையில் இந்த பிற்காப்பு செயல் தொடங்கபட்டுவிட்டது என்பதை பிரதிபலிக்கும் Sampleஎன்ற திரையில் அதனை மாறுதல் செய்வதெனி்ல் edit என்ற பொத்தானையும் அல்லது புதியதாக எனில் removeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நீக்கம் செய்தபின் new என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக புதியதாக எனில்edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு பிற்காப்பு செய்யவிருக்கும் இடமான கணினிக்குள்Dir A, Dir B என்றவாறு அல்லது வளாக பிணையத்திற்குள் அல்லது தேவைபட்டால் கழற்றி பெருத்தும் கையடக்க சாதனமான யூஎஸ்பி க்குள் என்றாவாறு செல்லும் பாதையினை sync mode -ல் குறிப்பிட்டுகொண்டு முதன்முறை பிற்காப்பு செய்யவிருப்பதால் Backup A => B(full) என்றவாறு குறிப்பிடுக மேலும் Include sub folders எனும் தேர்வுசெய்பெட்டி தெரிவுசெய்யபட்டுள்ளதாவென உறுதி படுத்திகொள்க

குறிப்பு இங்கு Full bckup என குறிப்பிட்டிருந்தாலும்Mirror backup ஆகத்தான் செயல்படுத்தபடும் மேலும் இந்நிலையில் நாம் பிற்காப்பு செய்யும் இடம் காலியாக உள்ளதாவென உறுதி படுத்தி கொள்க ஆயினும் ஏற்கனவே கோப்பு ஏதேனும் இருந்தால் அதனை அழித்து பிற்காப்பு செய்துவிடும்

அடுத்து தோன்றிடும் திரையில் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துகொண்டு play என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துபிற்காப்பு செயலை செயல்படுத்திடுக.

இறுதியாக இந்த பிற்காப்பு செயல் முடிவிற்கு வந்தபின் save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த பணியை சேமித்துகொள்க

இதன் பின்னர் பிற்காப்பு செய்வதற்கு Backup A => B(incremental) என்றவாறு குறிப்பிடுக   அடுத்து தோன்றிடும் திரையில் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துகொண்டு play என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துபிற்காப்பு செயலை செயல்படுத்திடுக. இறுதியாக இந்த பிற்காப்பு செயல் முடிவிற்கு வந்தபின் save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த பணியை சேமித்துகொள்க

குறிப்பிட்ட கால இடைவெளியில் பிற்காப்பு செயல் நடைபெற வேண்டுமெனில் edit jobs என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் edit jobs என்ற திரையில் shedule எனும் தாவியினுடைய பொத்தானையும் பிறகு new எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக பிறகு தோன்றிடும் shedule options என்ற திரையில் தேவையான காலஅளவு தெரிவுசெய்தவுடன் தொடர்புடைய வாய்ப்ப செயலிற்கு வந்தவிடும் பின்னர் shedule options என்ற திரையில்   okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக edit jobs என்ற திரையிலும் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இவ்வாறு பிற்காப்பு செய்த சேமித்த கோப்புகளை மீட்டெடுப்பதற்கு DirSyncPro.exe எனும் இந்த கட்டமைவு கோப்பினை செயல்படுத்துக உடன் தோன்றிடும் திரையில் Restore B=> A(full) என்றவாறு குறிப்பிட்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம்பிற்காப்பு செய்த கோப்புகள் அனைத்தும் மீட்டெடுக்கபட்டுவிடும்

2.3 FreeFileSync எனும் இந்த கருவியை   http://fosshb.com/FreeFileSync.html/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க இதுவும் DirSyncPro எனும் கருவியை போன்றதே அதனால் start=> all program=> FreeFileSync=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக இந்த கருவியை செயல்படுத்துக அடுத்து தோன்றிடும் திரையின் முகப்பு பக்கத்தில் பச்சைவண்ண பற்சக்கர பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் திரையில் mirror என்பதை தெரிவுசெய்து கொண்டு மிகுதி இயல்புநிலை வாய்ப்பை ஏற்றுகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் இடதுபுற Drag & Drop எனும் சாளரத்தில் browse என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் பிற்காப்பு செய்யவிருக்கும் கோப்பகம் அல்லது அடைவு அல்லது கோப்பினை தெரிவுசெய்து கொள்க   அவ்வாறே வலதுபுற Drag & Drop எனும் சாளரத்தில் browse என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் பிற்காப்பு செய்யவிருக்கும் இடமாக கோப்பகம் அல்லது அடைவை தெரிவுசெய்து கொள்க

அதுபிற்காப்பு செய்யவிருக்கும் இடமான கணினிக்குள் அல்லது பிணையத்திற்குள் அல்லது தேவைபட்டால் கழற்றி பெருத்தும் கையடக்க சாதனமான யூஎஸ்பி க்குள் இருக்கும் . நாம் விரும்புவதை தெரிவுசெய்து கொள்க

பிறகு சாளரத்தின் மேல்பகுதியிலுள்ளsynchronize mirror =>> என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு விரியும் திரையில் start என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்க உடன் இந்த பிற்காப்பு செய்திடும் பணி ஆரம்பித்து முடிவிற்கு வரும்

   program=> save =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த பிற்காப்பை சேமித்து கொள்க

இதன் பிறகு இவ்வாறு பிற்காப்பு செய்வதற்காக program=> open =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க

பிறகு நாம் ஏற்கனவே பிற்காப்பு செய்து சேமித்த SyncSettings.ffs_guiஎன்ற கோப்பினை தெரிவுசெய்துகொண்டு பச்சைவண்ண பற்சக்கர பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் திரையில் update=> ன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க

பிறகு சாளரத்தின் மேல்பகுதியிலுள்ளsynchronize mirror =>> என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு விரியும் திரையில் start என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்க

உடன் இந்த பிற்காப்பு செய்திடும் பணி ஆரம்பித்து முடிவிற்கு வரும் program=> save =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த பிற்காப்பை சேமித்து கொள்க இறுதியாக okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இவ்வாறு பிற்காப்பு செய்திட்ட கோப்புகளை மீட்டெடுப்பதற்காக வலதுபுற Drag & Drop எனும் சாளரத்தில் Swapஎன்ற பகுதியில் synchronize என்ற அமைவை synchronize mirror =>>   என மாற்றயமைத்துகொண்டு synchronize mirror =>>   என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துமீட்டெடுத்து கொள்க மேலும் இந்த எனும் கருவியை பற்றி விவரம் அறிந்துகொள்வதற்காக http://freefilesync.sourceforge.net/என்ற தளத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: