தகவல்தொழில்நுட்பகட்டமைவை Zentyalகொண்டு மிகவலுவானதாக உருவாக்கிகொள்க

 

HTTP proxy ஐ கட்டமைவு செய்தல்

முதலில் Zentyal இன் HTTP பதிலாள் தகவமைவை (HTTP proxy module) அமைப்பது பற்றி தெரிந்துகொள்வோம் அதற்காக https://domain-name/ என்ற முகவரியிலுள்ள Zentyal முகப்பு திரையை அதற்கான பயனாளரின் பெயர் கடவுச்சொற்களை உள்ளீடு செய்வதன்மூலம் தோன்றசெய்திடுக இதில் Gateway என்ற பகுதியில் HTTP proxy என்பதை தெரிவுசெய்திடுக உடன் General settings, Access rules ,Filter profiles, Categories lists, Band with throttling ஆகிய பல்வேறு வாய்ப்புகள் திரையில் தோன்றிடும் அவற்றுள் General settings என்ற வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்துகொள்க இந்த General settings எனும் திரையில் Transparent Proxy என்பதை தெரிவுசெய்துகொள்க இந்த வாய்ப்பு பதிலாள் சேவையாளரை பற்றி தெரியாதவர்களும் பதிலாளை கையாள உதவுகின்றது பிறகு AdBlocking என்ற வாய்ப்பை தேர்வுசெய்து கொள்க இது HTTP இன் அனைத்து போக்குவரத்திலும் வரும் விளம்பரத்தை தவிர்க்கின்றது அவ்வாறே HTTP இன் அனைத்து போக்குவரத்திற்கு தேவையான Cache size அளவை குறிப்பிடுக அதன் பின்னர் Change என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

இணையத்தில் தேவையற்ற தளங்களை கொண்டுவந்த காண்பிப்பதை தவிர்த்திடுவதற்காக Filter profiles ஐ பயன்படுத்தி அவற்றை முடக்கம் செய்திடுக அதற்காக   HTTP proxy இன் கீழுள்ள Filter profiles என்பதை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் திரையில்    Add new எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக பின்னர் profile பெயராக Spam என்பதை குறிப்பிட்டு Add என்ற பொத்தானையும் பிறகு Save என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Configurationஎன்பதன் கீழுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துகொண்டு   thresholdவாய்ப்பை பயன்படுத்தி அதன் கீழ்உள்ள very strictஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு change என்ற பொத்தானையும் பிறகு Save என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

உள்வரும் அனைத்து கோப்புகளையும் தடுப்பதற்காக Use Antivirus என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு change என்ற பொத்தானையும் பிறகு Save என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

அவ்வாறே தேவையற்ற தளங்கள் பிரதிபலிப்பதை தவிர்ப்பதற்காக Domain and URLs   rules என்பதன் கீழுள்ள Domain and URLs என்ற வாய்ப்பினை தெரிவுசெய்த சொடுக்குக பிறகு தோன்றிடும் திரையில் Add new எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக பிறகு விரியும் திரையில் நாம் தடுக்கவிருக்கும் இணைய பக்கத்தின் களப்பெயரை Domain உள்ளீடு செய்க உடன் proxy ஆனது எந்தெந்த தளத்தினை முடக்குவது அல்லது அனுமதிப்பது என Decision என்ற வாய்ப்பின் வாயிலாக முடிவுசெய்திடும்.பின்னர் Add என்ற பொத்தானையும் பிறகு Save என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக Spam profileஎன்பதை செயலில் கொண்டுவருவதற்காக HTTP proxy என்பதன்கீழுள்ள Access rules என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில் Add new எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் எத்தனை நாட்கள் என குறிப்பிடுக வேறு தேவையெனில்இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தெரிவுசெய்துகொண்டு Decision என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து Apply filter profile என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Spam profileஎன்பது திரையில் தோன்றிடும் அதன்பின்னர் Add என்ற பொத்தானையும் பிறகு Save என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறான படிமுறைகளைகொண்டு தேவையான தளங்களை திரையில் தோன்றசெய்யவும் தேவையற்றதை திரையில் தோன்றிடாமல் முடக்கம் செய்திடவும் முடியும்

Band with throttling கட்டமைவுசெய்தல்

பேரளவு கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கு இந்த Band with throttling கட்டமைவு செய்திட வேண்டும் அதற்காக Network என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு விரியும் திரையில் Network என்பதன்கீழ்உள்ள Objectsஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு தோன்றிடும் திரையில் Add new எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக அதற்கு ஒரு பெயராக LAN என்றவாறு உள்ளீடு செய்துகொண்டு Add என்ற பொத்தானையும் பிறகு Save என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Members எனும் உருவபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்திடுக பிறகு விரியும் திரையில் Add new எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக Membersக்கான பெயரை உள்ளீடு செய்துகொள்க இங்கு LAN பயனாளர்களை பங்கெடுப்பவராக சேர்த்துகொள்வோம் IP Addressஇன் கீழ்  IP முகவரியின் வீச்செல்லையை உள்ளீடு செய்து கொள்க மிகமுக்கியமாக DHCP முகவரியின் வீச்செல்லையை உள்ளீடு செய்துகொண்டு Add என்ற பொத்தானையும் பிறகு Save என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் HTTP Proxy என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பிறகு Bandwith Throttling என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Enable per client limit என்பதை தெரிவுசெய்து சொடுக்குக ஒவ்வொரு வாடிக்கையாளுருக்குமான பதிவிறக்க அளவையும் பதிவேற்ற அளவையும் Maximum unlimited size எவ்வளவு என குறிப்பிட்டபின்னர் Add என்ற பொத்தானையும் பிறகு Save என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

 Traffic Shaping   கட்டமைவுசெய்தல்

இதற்காக Traffic Shaping   modules ஐ பயன்படுத்தி கொள்க   Gateway என்பதன் கீழுள்ள Traffic Shaping என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க  பிறகு Rulesஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் rules for internal interfaces, rules for external interfaces ஆகிய இருவாய்ப்புகள் தோன்றிடும் தேவையான வாயப்பினை eth1 என்பதன்கீழ் தெரிவுசெய்துகொள்க. எதுமுதலில் அதற்குபின்னர்எது என வரிசைகிரமத்தை protocols அமைத்துகொண்டு மேலேற்றுதல் வேகத்தை eth0 என்பதன்கீழ் . protocols எதுமுதலில் அதற்குபின்னர்எது என வரிசைகிரமத்தைprotocols அமைத்து கொள்க. அனைத்து rules களையும் சேர்த்தபின்னர் save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து இதனை சேமித்து கொள்க . மிகமுக்கியமாக server இன் upload and download rates அமைத்திடவேண்டும் அதற்காக Traffic shaping என்பதன்கீழ்உள்ள Interfaces rate action என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தேவையான அளவை அமைத்துகொண்டு change என்ற பொத்தானையும் பிறகு Save என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

 குழுவான பயனாளர்களையும் கணினியையும் கட்டமைவுசெய்தல்

முதலில் Group என்பதை கட்டமைவு செய்திடு Office எனும் பகுதியிலுள்ள Users and Computers என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பிறகு Mange என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பிறகு LDAP மரம் போன்ற அமைவில் Groupஎன்பதையும் அதிலுள்ள + குறியை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் பகுதியல் Group என்பதை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து சேர்த்து கொள்க

பிறகு Users என்பதை கட்டமைவு செய்திடு Office எனும் பகுதியிலுள்ள Users and Computers என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பிறகு Mange என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பிறகு LDAP மரம் போன்ற அமைவில் Users என்பதையும் அதிலுள்ள + குறியை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் பகுதியல் Users என்பதை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து சேர்த்து கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: