Ghostஎனும் திறமூல மின்னிதழ்வெளியிடும் கருவியை பயன்படுத்தி கொள்க

6

 தற்போதைய நவீண உலகில் அச்சிட்ட இதழ்களுக்கு பதிலாக இணையத்தின்வாயிலாக மின்னிதழ்கள் வெளியீடு செய்வது மிகப்பிரபலமாக விளங்குகின்றது அதிலும் கட்டணமேஇல்லாத மின்னிதழ்களை திறமூல மென்பொருட்களின் மூலம் வெளியீடு செய்வது அனைவராலும்விரும்பதக்க செயலாக விளங்குகின்றது அந்தவகையில் Ghostஎன்பது திறமூல அடிப்படையில் மின்னிதழ்களை வெளியீடு செய்திடவும் வலைபூக்களை உருவாக்கி வெளியிடவும் மிகச்சிறந்த தளமாக விளங்குகின்றது இதனை www.ghost.org/   என்ற முகவரியில் அனுகமுடியும் விண்டோ ,லினக்ஸ் ,மேக் ஆகிய இயக்க முறைமை பயனாளிகள் தம்முடைய கணினிகளில் முதலில் node.js என்பதை நிறுவுகை செய்திடவேண்டும் அதனால் node.jsஎனும் இதனுடைய சமீபத்திய மென்பொருளை www.nodejs.org/download என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்க. இவ்வாறு நிறுவுகை செய்திடும் போது ஏதேனும் பிரச்சினை எழுந்தால் https://githup.com/joyent/node/wiki/Installing-Node.js-via-pakage-manager என்ற இணைய முகவரிக்கு சென்று அப்பிரச்சினைகளுக்கான தீர்வை செய்து கொள்க இவ்வாறு node.js என்பதை நிறுவுகை செய்தபின்னர் கோஸ்ட் என்பதை அதனுடைய சமீபத்திய பதிப்பை சரிபார்த்து https://ghost.org/download/ என்ற இதனுடைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் தனியானதொரு ghost எனும் கோப்பகத்தில் நிறுவுகை செய்துகொள்க. இதனை நிறுவுகை செய்வதற்கான முழுவிரங்களைஅறிந்து கொள்ள https://ghost.org/installation/ என்ற தளத்திற்கு செல்க இவ்வாறு கோஸ்ட்டை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்தபின்னர் நிருவாகியாக http://127.0.0.1.2368/ghost/ என்ற முகவரியுடன் பதிவுசெய்து உள்நுழைவுசெய்துகொள்க இது ஒரேயொரு பயனாளிமட்டுமே வலைபூவை உருவாக்குவதற்கு அனுமதிக்கின்றது ஆயினும் நடப்பில் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் வகையில் தேவையெனில் ஜூலை 2014 இற்கு பிறகுமட்டும் http://lifewithmacks.com/multi-user-support/ என்ற தளத்திலிருந்து கூடுதலான நீட்சிகளை இணைத்து பயன்படுத்திகொள்ளமுடியும் இந்த கோஸ்ட்டை நிறுவுகை செய்துமுடித்தவுடன் இதில் தயார்நிலையிலுள்ள மாதிரி வலைபூவின்மூலம் தனியாக வலைபூவை நாம் எவ்வாறு உருவாக்குவது என்றசெய்முறையை மிகஎளிதான செயலாக்குகின்றது அதுமட்டுமல்லாது வாடிக்கையாளர் விரும்பியவாறு வலைபூவின் திரைதோற்றத்தையும் மின்னிதழ்களையும் மாற்றியமைத்து கொள்ள https://githup.com/adriannorman/froyo-ghost-theme/ என்ற தளம் உதவுகின்றது மற்றவர்களுடன் வலைபூக்களையோ மின்னிதழ்களையோ பகிர்ந்து கொள்வதற்கு https://www.openshift.com/developers/rhc-client-tools-install/ என்ற தளம் உதவுகின்றது

 மேலும் விவரம் அறிந்து கொள்ள www.docs.ghost.org/ என்ற இணையதளத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: