வாருங்கள் Wireshark எனும் திறமூல கருவிபெட்டியை பயன்படுத்தி கொள்வோம்

5

 Wireshark என்பது வலைபின்னல்தொழில்நுட்பவியலர்களின் அத்தியாவசியமான கருவிபெட்டியாகும்   பொதுவாக வலைபின்னல் தொடர்பான பிரச்சினைகளை மிகச்சிறப்பாகவும் திறமையுடனும் தீர்வுசெய்திட விழைபவர்கள் முதலில் TCPஅல்லது IP பற்றிய விவரங்களை முழுமையாக அறிந்து தெரிந்திருக்கவேண்டும் மேலும்   TCPஅல்லது IP இல் உருவாகும் தரவுகளின் போக்குவரத்தை பற்றியும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும் இந்த வலைபின்னலின் தரவுகளின் போக்குவரத்தை பற்றி மேலும் ஆய்வுசெய்திடவும் பிரச்சினைகளை தீர்வுசெய்வதற்குமான கருவிகள் திறமூல மென்பொருட்களிலும் வியாபார மெனபொருட்களிலும் ஏராளமான அளவில் தற்போது கிடைக்கின்றன. அவையனைத்தும் கம்பியுடைய அல்லது கம்பியற்ற வலைபின்னலின் தரவுகளின் போக்குவரத்தை பற்றியும் அடுக்குகளின் வாரியாக தரவுகளின் போக்குவரத்து பற்றியும் செந்தரவகைகளில் தரவுகளை பொட்டலங்களாக பிரித்து சேமித்திடும் திறன்பற்றியும் அத்தரவுகளின் பொட்டலங்களை மேலும் ஆய்வுசெய்திடுவது ஆகிய பொதுவான தன்மைகள் அவைகளில் உள்ளன. இந்த அனைத்து செயல்களும் Wireshark இல் உள்ளிணைந்தே உள்ளன என்பதை கவணத்தில் கொள்க. மேலும் இந்த கருவி ஜிஎன்யூஜிப்பிஎல் அனுமதியின்படி கிடைக்கின்றது அதனால் ஒரு வலைபின்னல் தொழில் நுட்பவியலருக்கும் இந்த Wireshark எனும் கருவியானது அத்தியாவசியமானதாக விளங்குகின்றது. இந்த Wireshark கருவியானது விண்டோ, லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இதனுடைய திரைத்தோற்றம் மேலடுக்கு பலகமாக Packet List Pane என்பதும் ,நடுவில் Packet details என்ற பலகமும் ,கீழ் பகுதியில் Packets Bytes என்ற பலகத்துடனும் சேர்ந்து மூன்று அடுக்கு பலகமாக தோன்றுகின்றது பாதுகாப்பான தரவுகளின் போக்குவரத்தை கட்டுபடுத்திட Hubbing out ,Wiretap, SwitchedPort Analyser ,ARPspoofing ஆகிய நான்குவழிமுறைகள் இதில் பின்பற்றபடுகின்றன இதனை பற்றிய மேலும் விவரம் அறிந்து கொள்ள www.wireshark.org/ என்ற இணையதளத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: