ஓப்பன் ஆஃபிஸிற்கும் லிபர் ஆஃபிஸிற்கும் உள்ள வேறுபாடுகள்

 தற்போது அப்பாச்சி ஓப்பன் ஆஃபிஸ் என்றும் லிபர் ஆஃபிஸ் என்றும் இரண்டு திறமூல மென்பொருட்கள் அலுவலகபயன்பாட்டிற்காகவே உள்ளன இவ்விரண்டுமே விண்டோ , லினக்ஸ், மேக் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன் வாய்ந்ததாகவும் இரண்டிலும் வேர்டு ,கால்க், ட்ரா,மேத், போன்ற அதே பெயர்களுடன் அலுவலக பயன்பாட்டினை கொண்டுள்ளன மேலும் அவ்வப்போது இரண்டிலும் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுகொண்டேஇருக்கும்போது இரண்டிற்கு என்னதான் வேறுபாடு உள்ளன இவ்விரண்டில் எது சிறந்த அலுவலக பயன்பாடு என்ற ஐயம் பொதுவாக புதியவர்களுக்கு கண்டிப்பாக எழும். நிற்க.
1999 இல் சன்மைக்ரோசிஸ்டம் எனும் நிறுவனமானது ஸ்டார் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாட்டு மென்பொருளை தன்னுடைய நிறுவனத்தின் பெயருக்குமாற்றியபின் 2000ஆம் ஆண்டிலிருந்து இதனை திறமூல அலுவலக பயன்பாடாக மாற்றியமைத்து வெளியிட்டதை தொடர்ந்து சன்நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமல்லாது சேவைமனப்பாண்மையுடன் கூடிய ஏராளமான தொழில்நுட்பவியலர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து அவ்வப்போது புதிய பதிப்புகளை வெளியிட்டு வந்தனர் அதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டணமற்ற இந்த திறமூல அலுவலக பயன்பாட்டு மென்பொருளை விரும்பி வரவேற்று பயன்படுத்தியது மட்டுமல்லாது லினக்ஸ் இயக்கமுறைமை கட்டுடன் இந்த ஓப்பன்ஆஃபிஸ் அலுவலக பயன்பாட்டு மென்பொருளும்சேர்ந்தே கிடைக்குமாறு செய்யப்பட்டது. 2011 இல் ஆரக்கிள்நிறுவனம் சன்மைக்ரோ சிஸ்டம் எனும் நிறுவனத்தை விலைக்கு வாங்கியவுடன் இந்த ஓப்பன் ஆஃபிஸ் மென்பொருளை ஆரக்கிள் ஓப்பன் ஆஃபிஸ் என பெயரை மாற்றியது மட்டுமல்லாது இதனுடைய புதிய பதிப்புகள் வெளியிடுவதையும் நிறுத்தியது மேலும் இந்த பெயரானது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதனை தொடர்ந்து இந்த ஓப்பன் ஆஃபிஸ் மென்பொருள் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமான சேவைமனப்பாண்மையுடன் கூடி இதுவரையில் உழைத்த தொழில்நுட்பவியலார்கள் அனைவரும் பிரிந்து சென்று லிபர் ஆஃபிஸ் என்ற புதிய பெயரில் அதே திறமூல அலுவலக பயன்பாட்டுமென்பொருளை உருவாக்கி அவ்வப்போது இதனுடைய புதிய பதிப்புகளையும் வெளியிட்டுவருகின்றனர். அதனை தொடர்ந்து பெரும்பாலான லினக்ஸ் வெளியீட்டாளர்களும் உபுண்டு வெளியீட்டாளர்களும் இந்த லிபர் ஆஃபிஸ் எனும் திறமூல அலுவலக பயன்பாட்டு மென்பொருளை தங்களுடைய இயக்கமுறைமை கட்டுகளுடன் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த ஓப்பன் ஆஃபிஸ் என்பது தற்போது அப்பாச்சி ஓப்பன் ஆஃபிஸ் என்றபெயருடன் அப்பாச்சி அனுமதியுடன் வெளியிடப்பட்டு வருகின்றது தற்போது மார்ச் 2014 அப்பாச்சி ஓப்பன்ஆஃபிஸ்4.1 எனும் சமீபத்திய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் இயல்புநிலையில் பக்கபட்டை திரையில்தோன்றி நாம் பயன்படுத்திடும் காலி பணியிடத்தை குறைத்துவிடுகின்றது. ஆனால் லிபர் ஆஃபிஸில் அவ்வாறான பக்கபட்டை எதுவும் இல்லை ஆயினும் இந்த லிபர் ஆஃபிஸில் நாம் விரும்பினால் மட்டுமே திரையில் பிரதிபலிக்குமாறு செய்திடமுடியும்
லிபர் ஆஃபிஸ் நிலைபட்டையில் நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஆவணத்தின் எத்தனை சொற்கள் உள்ளன என தானாகவே கணக்கிட்டு அவ்வப்போது நிகழ்நிலைபடுத்தி தற்போதைய நிலவரப்படி ஆவணத்திலுள்ள மொத்த சொற்களை கணக்கிட்டு பிரதிபலிக்கசெய்திடும்
ஓப்பன் ஆஃபிஸில் அவ்வாறான வசதி இல்லை தேவையானால் மட்டும் அதற்கான கட்டளைகளை செயற்படுத்தி கொண்டு வரமுடியும் மேலும் அவ்வப்போது நிகழ்நிலைபடுத்தி தற்போதைய நிலவரப்படி தானாகவே ஆவணத்தின் மொத்த சொற்களை கணக்கிடாது
ஓப்பன் ஆஃபிஸின் குறிமுறையை லிபர்ஆஃபிஸில் தன்மயமாக்கி கொள்ளமுடியும் ஆனால் லிபர் ஆஃபிஸின் குறிமுறையை ஓப்பன் ஆஃபிஸ் தன்மயமாக ஆக்கி கொள்ளமுடியாது அதனால் நீண்ட கால நோக்கில் ஓப்பன் ஆஃபிஸின் வசதிகள் லிபர் ஆஃபிஸிலும் கொண்டுவரமுடியும் ஆனால் லிபர் ஆஃபிஸின் வசதிகள் ஓப்பன் ஆஃபிஸில் கொண்டுவரமுடியாது ஓப்பன் ஆஃபிஸ் அப்பாச்சி எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபடுகின்றது லிபர் ஆஃபிஸானது LGPLv3 அல்லது MPL எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபடுகின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: