எம்எஸ் ஆஃபிஸ்-2010-பவர்பாயின்ட் பிரசன்டேஷன் தொடர்ச்சி-15

படவில்லைக்கு அசைவூட்டம்(animation) அமைத்தல்
ஒரு படவில்லையிலிருக்கும் பொருட்களை அசைவது போன்று அமைத்தால் பார்ப்பவர்களை எளிதில் கவரும். அதற்காக படவில்லையின் பொருளை தெரிவு செய்து கொண்டு பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள animation என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் animation என்ற தாவித்திரையினுடைய பட்டியின் திரையில் animation என்ற குழுவில் இருப்பவைகள் போதுமானவைகளாக இல்லாதிருந்தால் more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Advance animation என்ற குழுவிலுள்ள add animation என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
15.1
15.1
உடன் ஏராளமான அசைவூட்டு வாய்ப்புகள் திரையில் விரியும் அவைகளில் ஒன்றை தெரிவுசெய்தால் எவ்வாறு அமையும் என்ற முன்காட்சியாக திரையில் பார்வையிடுக பின்னர் preview என்ற குழுவின் கீழ் உள்ள preview என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி முன்காட்சியாக திரையில் பார்வையிடுக திருப்தியாக இருந்தால் மட்டும் இதனை தெரிவுசெய்து சொடுக்கி அமைத்து கொள்க.
அசைவூட்டுதலில் மாறுதல் செய்யவிரும்பும் படவில்லையை தெரிவு செய்து கொண்டு animation என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் animation என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் animation என்ற குழுவிலுள்ள Effect options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் தேவையான ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக.
அதன்பின்னர்animation என்ற குழுவில் more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Advance animation என்ற குழுவில் add animation என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியில் more entrance effects , more emphasis effects, more exist effects அல்லது more motion paths ஆகியவற்றில் ஒன்றை தெரிவு செய்து சொடுக்குக. உடன் கூடுதல் அசைவூட்டதலோடு(animation) உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றும் அதில் தேவையானதைமட்டும் தெரிவுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
15.2
15.2
பின்னர் advance animation குழுவிலுள்ள animation pane என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வலதுபுறம் விரியும் திரையின் பலகத்தில் ஒரு படவில்லையில் நாம் இதுவரை சேர்த்த பல்வேறு அசைவூட்டங்களின் effect களில் தேவையானதை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக அதன்பின்னர் play என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி திரையில் முன் னோட்டத்தை பார்வையிட்டு சரியாய் இருந்தால் இதனை ஏற்று சேர்த்துகொள்க. இந்த effect களை reorderஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குவதன் மூலம் முன்பின் வரிசையைமாற்றி யமைத்து கொள்க.
15.3
15.3
அசைவூட்டத்தை நீக்கம் செய்யவிரும்பும் உறுப்பை படவில்லையில் தெரிவுசெய்து கொண்டு animation என்ற தாவியின் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் animation என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் animation குழுவில் no animationஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நீக்கம் செய்துவிடுக. அல்லது Animation pane என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் வலதுபுறம் விரியும் திரையின் பலகத்தில் நீக்கம் செய்யவிரும்பும் effect ஐ தெரிவுசெய்துகொண்டு remove என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நீக்கம் செய்துவிடுக.
பிரசன்டேஸனின் விளக்கஒலியைபடவில்லையில் இணைத்தல்
தேவையான படவில்லையை தெரிவுசெய்துகொண்டு Slide showஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் slide showஎன்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் setup என்ற குழுவிலுள்ள record slide show என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் start recording from beginning என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் தோன்றும் record slide show என்ற உரையாடல் பெட்டியில் narrations and laser pointerஎன்ற தேர்வுசெய்பெட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்து கொண்டு start recordingஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் படவில்லையின் காட்சி திரையில் காண்பிக்க தொடங்கும்
15.4
15.4
உடன் நாம் அந்த படவில்லைக்கான விவரத்தை பேசியின் முன் பேசவேண்டும் அதனுடன் ஒரு மிதக்கும் பட்டியல்ஒன்று திரையில் தோன்றும் அதில் ->என்ற பொத்தானை அழுத்தி அடுத்த படவில்லையை காண்பிக்க செய்து முன்புபோலவே இந்த படவில்லையை பற்றிய விவரத்தையும் பேசியின் முன் பேசுக தேவையெனில் pause என்ற பொத்தானை அழுத்தி தற்காலிகமாக விவரம் பதிவுசெய்வதை நிறுத்தி கொள்க . மீண்டும் start என்ற பொத்தானை அழுத்தி தொடர்ந்து விவரத்தை பதிவு செய்து கொண்டு வருக.பதிவு முடிந்ததும் Xஎன்ற பொத்தானை அழுத்தி பதிவு செய்வதை முடிவுக்கு கொண்டுவருக.
படவில்லையின் காட்சியில் வகையும் இதர அமைப்புகளையும் அமைத்தல்
தேவையான படவில்லையை தெரிவுசெய்துகொண்டு Slide showஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் slide showஎன்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் setup என்ற குழுவிலுள்ள setup slide show என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் தோன்றும் setup slide show என்ற உரையாடல் பெட்டியில் show typeஎன்பதில் தேவையான வகைகளில் ஒன்றை தெரிவுசெய்துகொள்க .அவ்வாறே show options என்பதன்கீழ் narration போன்ற பல்வேறுஅமைப்புகளை தெரிவுசெய்துகொள்க. show slide settingsஎன்பதினகீழ் விரும்பிய அமைவுகளை தெரிவு செய்து கொண்டு பல்வேறுதிரையில் காண்பிக்கவேண்டுமெனில் multiple monitor என்பதிலுள்ள வாய்ப்புகளையும் தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
15.5
15.5
படவில்லைக்கான குறிப்பை பதிவுசெய்தல்
சாதாரண காட்சித்திரையில் இடதுபுற பலகத்தில்slide தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் பலகத்தில் ஏதேனுமெரு படவில்லையை தெரிவுசெய்து கொள்க. பின்னர் கீழே இருக்கும் இந்த படவில்லைக்கான notes paneஐ தெரிவுசெய்து சொடுக்கி இந்த படவில்லைக்கான பேச்சாளரின் குறிப்பை தட்டச்சு செய்திடுக
15.6
15.6
இதே படிமுறையை பின்பற்றி மற்ற படவில்லைகளுக்குமான பேச்சாளரின் குறிப்பை தட்ச்சுசெய்துகொள்க. பின்னர் பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள view என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் view என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் presentation view என்ற குழுவிலுள்ள notes page view என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் தோன்றிடும் notes page என்ற திரையில் தேவையானால் திருத்தம் செய்து கொள்க. பிறகு பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள இதே View என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் slide show என்ற குழுவிலுள்ள normalஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி வழக்கமான காட்சிக்கு திரும்பிவிடுக.
விளக்க குறிப்பை அச்சிடுதல்
பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Fileஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் file என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் power point options என்ற உரையாடல் பெட்டியில் advancedஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் when printing this document என்பதன் கீழ் . use the following print setting என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்துகொள்க. அதன்பின்னர் print what என்பதில் notes என்பதை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இதன் பிறகு இந்த குறிப்பை அச்சிட விரும்பிடும்போது Fileஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் file என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் print என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அச்சிட்டு கொள்க.
15.7
15.7
படவில்லைகாட்சியின் ஒத்திகை
. தேவையான பிரசன்டேஷனை தெரிவுசெய்துகொண்டு பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Slide showஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் slide show என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் setup என்ற குழுவிலுள்ள rehearse timings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் படவில்லை காட்சியின் நிலைக்கு மாறி முதல் படவில்லையை திரையில் காண்பிக்கும் இதனுடனேயே record slide show கருவிகளின் பட்டையையும் காண்பிக்கும் இதிலுள்ள pause என்ற பொத்தானை அழுத்தி தற்காலிகமாக காட்சியை நிறுத்தம் செய்யலாம் இதே பொத்தானை அழுத்தி தொடர்ந்து இயங்கிடுமாறு செய்திடலாம் முதல் படவில்லையின் காட்சிசெயல் முடிந்ததும் next என்ற பொத்தானை அழுத்தி அடுத்த படவில்லைக்கு செல்க
15.8
15.8
இவ்வாறே அனைத்து படவில்லைகளுக்கும் செய்து கொள்க பின்னர்அனைத்து படவில்லைகளும் திரையில் காட்சியாக முடிந்த வுடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில் மொத்தம் இந்த ஒத்திகையின் போது எவ்வளவுநேரம் படவில்லை காட்சிக்காக எடுத்துகொண்டது என காண்பிக்கும்.yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் இதனை அப்படியே சேமித்து கொள்ளும்.
15.9
15.9
பிறகு பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Fileஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் file என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் share என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
15.10
15.10
அதன்பின்னர்விரியும் மையத்திலுள்ள பலகத்தில் create handoutஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் வலதுபுறத்திலுள்ள பலகத்தில் create handoutஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் send to Microsoft word என்ற உரையாடல் பெட்டியில் page layout in Microsoft word என்பதிலுள்ள வாய்ப்புகளில் notes below slides என்பதை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கொள்க.
பிரசன்டேஷனை படவில்லை காட்சியாக திரையில் காண்பித்தல்
பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Slide show என்ற தாவியின் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.உடன் தோன்றிடும்slide show என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் Start slide showஎன்ற குழுவில்உள்ள from beginning என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படவில்லை காட்சியின் நிலைக்கு மாறி முதல் படவில்லையை திரையில் காண்பிக்கும்
15.11
15.11
முதல் படவில்லையின் காட்சிசெயல் முடிந்தது எனில் next என்ற பொத்தானை அழுத்தி அல்லது Enter அல்லது => விசையை அழுத்தி அடுத்த படவில்லைக்கும் previous என்ற பொத்தானை அழுத்தி அல்லது <= விசையை அழுத்தி முந்தைய படவில்லைக்கும் செல்க இவ்வாறே pause என்ற பொத்தானை அழுத்தி இந்த படவில்லை காட்சியை தற்காலிகமாக நிறுத்தம் செய்யலாம் .இந்த படவில்லை காட்சி முடிந்து விட்டது எனில் end show என்ற பொத்தானை அல்லது Esc விசையை அழுத்துக
பிரசன்டேஷனை குறுவட்டில் நகலெடுத்தல்
பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை இந்த பயன்பாடு இல்லாத கணினியிலும் காண்பிக்குமாறு செய்யலாம்..இதற்காக பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Fileஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் file என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் save & send என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
15.12
15.12
அதன்பின்னர் மையத்திலுள்ள பலகத்தில் package presentation for CD என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வலதுபுறபலகத்தில் package for CD என்பதை தெரிவுசெய்து சொடுக்குக
15.13
15.13
உடன் package for CD என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் இதற்கு ஒரு பெயரினை தட்டச்சுசெய்து copy to CD என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.அதன்பின்னர் தோன்றிடும் சிறு பெட்டியில் Yes என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. உடன்இந்த பிரஷன்டேஷனை நகலெடுக்கும் பணி ஆரம்பித்து நடைபெறும்
15.14
15.14
இதனை வேறு குறுவட்டிற்கும் நகலடுக்கவா என கேட்டு உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றிடும் அதில் noஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக package for CD என்ற உரையாடல் பெட்டியின் X என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி மூடிவிடுக.
. பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Fileஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் file என்ற தாவித்திரையின் பட்டியின் திரையில் save & send என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் மையத்திலுள்ள பலகத்தில் create video என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு வலதுபுறபலகத்தில் create video என்பதைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் Save as என்ற உரையாடல் பெட்டியில் சேமிக்கவேண்டிய இடத்தை தெரிவுசெய்துsaveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்துகொள்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: