லிபர் ஆஃபிஸ் 4. லிபர் ஆஃபிஸ் ரைட்டர்-தொடர்-12

இந்த லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் உள்ள உரையை வரிசை எண்களுடன் பிரதிபலிக்கச்செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணிடுவோம் அப்போது லிபர் ஆஃபிஸ் ரைட்டரினுடைய திரையின் மேல் பகுதியலுள்ள பட்டியில்Tools => Line Numbering=> என்றவாறு கட்டளைகளை செயபற்படுத்திடுக உடன் திரையில் விரியும் Line Numbering எனும் உரையாடல் பெட்டியின் மேலே இடதுபுற ஓரப்பகுதியிலுள்ள Show numbering என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு இதே உரையாடல் பெட்டியின்மேலே வலதுபுற மூலையிலுள்ள OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் உள்ள உரையானது வரிசை எண்களுடன் திரையில் பிரதிபலிக்கும்

12.1

12.1

லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் உள்ள உரையில் அவ்வப்போது புதிய செய்திகளை அதற்கான ஆவணங்களின் வாயிலாக சேர்த்து கொண்டே வருவோம் அந்நிலையில் பழைய ஆவணத்தை ஒரு இடத்திலும் புதிய ஆவணத்தினை பிரிதொரு இடத்திலும் வைத்திருப்போம் இவ்விரண்டிலும் உள்ளது எது சரியானது என சிலநேரத்தில் நமக்கு குழப்பாக ஆகிவிடும் அதன தவிர்த்திட இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றினை முதலில் விபர் ஆஃபிஸ் ரைட்ரின் மூலம் திறந்துகொணன்டபின் லிபர் ஆஃபிஸ் ரைட்டரினுடைய திரையின் மேல் பகுதியலுள்ள பட்டியில் Edit => Compare Document=> என்றவாறு கட்டளைகளை செயபற்படுத்திடுக உடன் திரையில் தோன்றிடும் Insert எனும் வழிகாட்டிப் பெட்டியில் filename என்றவாய்ப்பில் நாம் விரும்பும் தேவையான கோப்பு ஒன்ரினை தெரிவுசெய்துகொண்டு open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்மால் குறிப்பிடப்பட்ட கோப்பானது திறந்துகொண்டு முந்தைய கோப்பு தற்போது திறந்திருக்கும் கோப்பு ஆகிய இரண்டிற்கும் வித்தியாச மானவைகளை மட்டும் அடிக்கோடிட்டுகொண்டு Accept or Reject Changes எனும் உரையாடல் தோன்றிடும் திருத்தங்களை ஏற்றுகொள்வதாயின் Accept Allஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளபட்டு நிகழ்நிலை படுத்தபட்ட கோப்பாக மாறியமையும்பின்னர் இதனை சேமித்துகொள்க

12.2

12.2

மேலும் இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட லிபர் ஆஃபிஸ் ரைட்டர் ஆவணத்தினை வேறு நபரிடம் கொடுத்து அதனை ஆய்வு செய்திடுமாறும் அல்லது அதிலுள்ள தவறுகளை திருத்தம் செய்திடுமாறும் கோரி அனுப்பிட விரும்புவோம் அதற்காக அதற்குமுன்பாக லிபர் ஆஃபிஸ் ரைட்டரினுடைய திரையின் மேல் பகுதியலுள்ள பட்டியில் Edit =>Changes=> Record=> என்றவாறு கட்டளைகளை செயபற்படுத்திடுக. உடன் விரியும் லிபர் ஆஃபிஸ் ரைட்டரினுடைய திரையின் மேல் பகுதியலுள்ள பட்டியில் Edit => Changes => Protect Records=>. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக அல்லது லிபர் ஆஃபிஸ் ரைட்டரினுடைய திரையின் மேல் பகுதியலுள்ள பட்டியில் File => Properties => Security => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் திரையில் விரியும் Properties எனும் உரையாடல் பெட்டியில் Record changes எனும் வாய்ப்பினையும் பின்னர் Protect எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரையில் தோன்றிடும் Enter Password எனும் உரையாடல் பெட்டியில் நாம் உள்நுழைவு செய்கான வதறகடவுச்சொற்களை இருமுறை உள்ளீடு செய்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பிறகு Properties எனும் உரையாடல் பெட்டியிலும் OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

12.3

12.3

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: