திறனுடைய வெப்2 மேம்படுத்துநராக வளர்ந்திடுவோம்

இந்த வெப் 2 என்பது என்ன என அறிவியல் பூர்வமான வரையைறை எதுவும் இதுவரை உருவாகவில்லை அதாவது இந்த வெப்2 என்பது ஒரு தளம் அல்லது , இது ஒரு மென்பொருள் அல்லது இது ஒரு சேவை அல்லது இது ஒரு கட்டுகளான பொருளன்று என்றவாறு வெவ்வேறு வரையறைகள் இதுவரை இதற்காக உருவாக்க பட்டிருந்தாலும் டிம் ஓரில்லி என்பவர்தான் முதன்முதல் இந்த வெப்2 என்பது ஒரு வடிவமைப்பும் வடிவமும் சேர்ந்த அடுத்த தலைமுறை மென்பொருளாகும் என முழுமையான வரையறையை வழங்கியுள்ளார் இதனை http://oreilly.com/pub/a/web2/archive/what-is-web-2.0.html?page=1 என்ற இணைய தளத்திற்கு சென்று அறிந்துகொள்க. பொதுவாக இந்த வெப்2 எனும் பயன்பாடானது ஒரு சிறந்த திறன்மிக்க வியாபார செயலிகள் வழங்கிடவும் தேவையான தரவுகளையும் அதன்விளைவுகளையும் தேக்கிவைத்திடும் செயலில் சாதாரண இணைய பக்கத்தைவிட சிறந்ததாக விளங்குகின்றது.
முதலில் இந்த வெப்2.0 என்பதை பற்றி நன்கு அறிந்துகொள்வதற்கு முதல்படியாக சிறந்த குறிமுறைகளை கொண்ட கட்டளைகளை உள்ளீடு செய்திட தெரிந்திருக்கவேண்டும் அதற்காக லினக்ஸ் இயக்கமுறைமை சிறந்ததாகும் அவ்வாறான லினக்ஸின் கட்டளைவரிகளை http://ss64.com/bash/ என்ற இணைய தளத்திற்கு சென்று அறிந்துகொள்க அதற்கடுத்ததாக தரவுதளத்தினை பற்றி நன்கு அறிந்திருக்கவேண்டும் தற்போது MYSQL என்பது மிகப்பிரபலமான தரவுகளை கையாளுவதற்கான இணையத்தீர்வாக விளங்குகின்றது இதற்கு மாற்றாக கட்டணத்துடனான மென்பொருளாக ஆரம்பநிலை பயனாளர்களுக்கு postgressஎன்பதும் மற்றவர்களுக்கு MYSQL இன் மறுஉருவான perconaஎன்பதும் இருக்கின்றது இவைகளை பற்றி மேலும்அறிந்து கொள்ள http://www.postgresql.org/, http://www.percona.com/ ஆகிய தளங்களுக்கு செல்க. அதற்கடுத்து மூன்றாவதாக குறிமுறைவரிகளை எழுவதில் திறனுடையவராக திகழ்வதற்கு PHP,Python,Ruby, PERL ,AJAX ஆகிய மொழிகள் உதவுகின்றன இவைகளை நன்கு ஐயம்திரிபற அறிந்தகொள்ள http://www.php.net/ , http://www.python.org/ , http://ww.perl.org/ , https://www.ruby-lang.org/en/ ஆகிய தளங்களுக்கு செல்க. அதற்கடுத்ததாக இணையஉலாவியின் வாயிலாக இணையத்தில் உலாவரும் செயலை கையாள குறியீட்டு மொழியின் (Mark up language) குறியீடுகளை கையாளுவதற்கும் ஒருவலைபக்கத்தின் உரைஇடம்பெறும் விதம், எழுத்துரு, உருஅளவு, வண்ணம் உள்ளடக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அடுக்கிவைத்த அழகுதாட்கள் (Cascading Style Sheet(CSS)) என்பதை கையாளுவதற்குமான திறன் வேண்டும் அதற்காக HTML XMLDOM ஆகியவை பயன்படுகின்றன. அதற்கடுத்ததாக இணைய வடிவமைப்பில் வரைச்சட்டமும் தோரணியும் தேவையாகும் செயல்வரைவு அடிப்படையில் பயன்படுகளை உருவாக்குவதற்கான பொதுவானதொரு துனைபொறியமைவு வடிவமைவையே வரைச்சட்டம் என வழங்கபடுகின்றது ஒருசிறந்த நிரல் தொடர்எழுதுபவர் என்பவர் என்ன எழுதவேண்டும் என தெரிந்து வைத்துள்ளவர் என்றும் மிகச்சிறந்த நிரல் தொடர்எழுதுபவர் எனில் அவ்வாறு எழுதிய நிரல்தொடரை மீண்டும் மேம்படுத்தி எழுதுபவராவார் என ஆன்றோர்களால் குறிப்பிடபட்டுள்ளது இந்த வரைச்சட்டத்தை பற்றி நன்கு அறிந்து கொள்ள http://www.zend.com/en/products/framework/ என்ற தளத்திற்கு செல்க அதற்கடுத்ததாக HTTPசேவையாளர் பற்றி அறிந்திருக்கவேண்டும் அதற்கடுத்ததாக உள்ளடக்கங்களை பதிவிறக்கம் பதிவேற்றம் செய்வது எவ்வாறு அந்த செயலை அனுமதிப்பது என அறிந்திருக்கவேணடும் இறுதியாக creative commons, copy left, BSD என்பன போன்ற பதிப்புரிமை பற்றி நன்கு அறிந்திருக்கவேண்டும்.இதுவரையில் வெப்2.0 பற்றி கூறாமல் வேறு எதேதோ கூறிவந்தேன்என கவலையுறுகின்றீர்களா நிற்க முதலில் மேலே கூறியவைகளை ஐயந்திரிபற கற்றுவாருங்கள் அதன்பின் வரும் இதழ்களில் இந்த வெப்2.0 பற்றி கூறுகின்றேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: