எம் எஸ்ஆஃபிஸ்-2010- தொடர்ச்சி- 14-மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட்- 2010

.அட்டவணை ஒன்றை பவர்பாயிண்ட்- 2010-இன் படவில்லையில் உருவாக்குதல்
காலியான படவில்லையில் இருக்கும் அட்டவணைக்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள insert என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. உடன் விரியும் insert என்ற தாவிபட்டியின் திரையில் tableஎன்ற குழுவில் table என்ற பொத்தானிற்கருகிலிருக்கும் முக்கோண வடிவ பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. பின்னர் விரியும் அட்டவணையின் பல்வேறு வாய்ப்புகளில் draw table என்ற வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்துகொண்டு அட்டவணை ஒன்றை வரைந்து கொள்க excel spreadheet என்ற வாய்ப்பை தெரிவுசெய்தால் எக்செல் சாளரம் ஒன்று திரையில் தோன்றிடும் அதில் அட்டவணை ஒன்றை உருவாக்கி கொள்க. insert table என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றிடும் insert table என்ற உரையாடல் பெட்டியில் கிடைவரிசை (row) எத்தனை தேவை நெடுவரிசை (coloumn) எத்தனை தேவையென தட்டச்சுசெய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

o14.1

உடன் நாம் தெரிவுசெய்த அளவிற்கு அட்டவணை ஒன்று உருவாகிவிடும் கூடவே இந்த அட்டவணையை வடிவமைப்பு செய்வதற்கான பல்வேறு கருவிகளும் தோன்றும் அவைகளிலிருந்து கிடைவரிசைகளின் (row) உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் நெடுவரிசைகளின் (coloumn) அகலம் எவ்வளவு இருக்க வேண்டும், ஒன்றிற்கு மேற்பட்ட கலண்களை(cells) ஒன்றாக இணைத்தல், இவ்வாறு ஒன்றாக இருப்பதை ஒன்றிற்கு மேற்பட்ட கலண்களாக(cells) பிரித்தல், இதன் தோற்றத்தை மாற்றியமைத்தல், சுற்றி சுற்றெல்லை(bounder) அமைத்தல் என்பன போன்றவாய்ப்புகளில் தேவையானதை மட்டும்தெரிவுசெய்து இந்த அட்டவணையின் உருவமைப்பை சரிசெய்து வடிவமைத்துகொள்க.

o14.2

இதில் கூடுதலாக கிடைவரிசையை (row) அல்லது நெடுவரிசையை (coloumn)row சேர்ப்பதற்கு விரும்பும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள புறவடிமைப்பு (layout) என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் புறவடிமைப்பு (layout)என்ற தாவிபட்டியின் திரையில் கூடுதலாக கிடைவரிசைகளை(row) சேர்க்க வேண்டுமெனில் row&coloumn என்ற குழுவில் இருக்கும் பொத்தான்களில் Insert above அல்லது Insert below ஆகியவற்றில் ஒன்றையும் கூடுதலாக நெடுவரிசை(coloumn) தேவை யெனில் இதே row&coloumn என்ற குழுவில் இருக்கும் பொத்தான்களில் insert left அல்லது insert right ஆகியவற்றில் ஒன்றையும் தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம்விரும்பியவாறு புதிய கிடைவரிசை (row)அல்லது நெடுவரிசை(coloumn)யானது உள்ளிணைக்கப்படும்.

o14.3

பின்னர் இதில் தேவையான தரவுகளை தட்டச்சுசெய்க. ஒரு கலணிலிருந்து(cell) அடுத்ததற்கு செல்வதற்கு விசைப்பலகையிலகையிலுள்ள தாவி(tab) விசையை பயன்படுத்திகொள்க தரவு முழுவதையும் இந்த அட்டவணையில் நிரப்பியபின்னர் இடம்சுட்டியை இந்த அட்டவணைக்கு வெளியே இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக.
வரைபடம் ஒன்றை படவில்லையில் உள்ளினைத்தல்
காலியான படவில்லையில் இருக்கும் இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள insert என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் insert என்ற தாவி பட்டியின் திரையில் illustration என்ற குழுவில் உள்ள chart என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

o14.4

பின்னர் தோன்றிடும் inert chart என்ற உரையாடல் பெட்டியில் இடதுபுற பலகத்தில் வரைபடத்தின் வகைகளில் ஒன்றை தெரிவுசெய்தால் தெடர்புடைய பல்வேறு வாய்ப்புகள் வலதுபுற பலகத்தில் தோன்றும் அவைகளிலிருந்து தேவையானதை மட்டும் தெரிவு செய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

o14.5

உடன் நாம் தெரிவு செய்தவாறான வரைபடம் ஒன்று இந்த படவில்லையில் உள்ளிணைந்து விடும் இதனுடன் எக்செல்லின் சாளரமொன்று வலதுபுறம் தோன்றிடும் அதில் இந்த வரைபடத்திற்கான மாதிரி தரவுகளின் அட்டவணை ஒன்று பிரதிபலிக்கும் அவைகளை நாம் விரும்புவதை போன்று புதியதாக மாற்றி தட்டச்சுசெய்துகொண்டு X என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த எக்செல் சாளரத்தை மூடிவிடுக. உடன் நாம் தட்டச்சுசெய்த புதிய தரவுகளுக்கேற்ப வரைபடம் மாறியமையும்.

o14.6

படவில்லையில் இருக்கும் இந்த வரைபடத்தை தெரிவுசெய்துகொள்க உடன் chart tool என்ற தாவிபட்டியின் திரை விரியும் இதில் design என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் design என்ற தாவிபட்டியின் திரையில் data என்ற குழுவிலுள்ள edit data என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. அல்லது வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் குறுக்குவழி பட்டியில் edit data என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக முன்புபோலவே எக்செல் சாளரத்திற்கு சென்று தேவையான தரவுகளை மாறுதல் செய்துகொள்க
அதன் பின்னர் chart tool என்ற தாவிபட்டியின் திரையில் design என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக பின்னர் விரியும் design என்ற தாவியின் பட்டியின் திரையில் chart styleஎன்ற குழுவில் உள்ள ஏராளமான வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்துகொண்டு வரைபடத்தின் உருவமைப்பை மாற்றி யமைத்து கொள்க

o14.7

எக்செல்லிலிருக்கும் வரைபடத்தை நேரடியாக நகலெடுத்தல் ஒட்டுதல் (copy ,paste) வாயிலாக பவர்பாயிண்ட் படவில்லையில் உட்பொதிதல்(Embedded) இணைத்தல்(Link) செய்யமுடியும்.
o14.8
படம் ஒன்றை படவில்லையில்உள்ளினைத்தல்
காலியான படவில்லையில் இருக்கும் இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது பவர்பாயிண்ட் சாo14.9ளரத்தின் மேல் பகுதியில் உள்ள insert என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் insert என்ற தாவியின் பட்டியின் திரையில் illustration என்ற குழுவில் smart art என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர் தோன்றிடும் choose a smartArt Graphic என்ற உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் தேவையான வகையை தெரிவுசெய்தால் தொடர்புடைய பல்வேறு வாய்ப்புகள் வலதுபுறமையத்தில் உள்ள பலகத்தில் தோன்றும் அவைகளில் ஒன்றை தெரிவுசெய்தால் அவற்றின் முன்னோட்டம் வலதுபுற பலகத்தில் தோன்றும் சரியாக இருந்து நாம திருப்தியுற்றால் ok ன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் தெரிவு செய்த படம் இந்த படவில்லையில் உள்ளிணைந்துவிடும்
படவில்லையில் இருக்கும் இந்த படத்தை தெரிவுசெய்க உடன் picture tool என்ற தாவிபட்டியின் திரை விரியும் இதில் format என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் format என்ற தாவிபட்டியின் திரையில் adjust என்ற குழுவிலுள்ள color என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கியபின் தேவையான வண்ணத்தை மாற்றியமைத்துகொள்க.

o14.10

இவ்வாறே இதே குழுவிலுள்ள shape என்பதையும் images என்ற குழுவிலுள்ள pictures ,Clip art போன்றவைகளையும் ஒரு படவில்லையில் இணைத்துகொள்க.
ஒலிஒளி படமொன்றை(video) படவில்லையில் இணைத்தல்
காலியான படவில்லையில் இருக்கும் இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள insert என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் insert என்ற தாவி பட்டியின் திரையில் media என்ற குழுவில் video என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலிருந்து video from file என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் inert video என்ற உரையாடல் பெட்டியில் ஒலிஒளிபடம்(video) உள்ள இடத்தை தேடிபிடிக்கவும் பின்னர் அவைகளிலிருந்து தேவையானதை தெரிவு செய்து insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் தெரிவு செய்தவாறான ஒலிஒளிபடம்(video) ஒன்று இந்த படவில்லையில் உள்ளி ணைந்து விடும்

o14.11

படவில்லையில் இருக்கும் ஒலிஒளி(video) படத்தை தெரிவுசெய்க உடன் video tool என்ற தாவியின் பட்டியின் திரை விரியும் இதில் format என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் format என்ற தாவிபட்டியின் திரையில் video styles என்ற குழுவிலுள்ள தேவை யானதை மாற்றியமைத்துகொள்க. Play என்ற பொத்தானை தெரிவு செய்துசொடுக்கி இதனை இயக்கி திரையில் காண்பிக்க செய்து பார்க்கமுடியும்.

o14.12

கேட்பொலியொன்றை(Audio) படவில்லையில் இணைத்தல்
காலியான படவில்லையில் இருக்கும் இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள insert என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் insert என்ற தாவியின் பட்டியின் திரையில் media என்ற குழுவில் கேட்பொலி(audio) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் தோன்றிடும் insert audio என்ற உரையாடல் பெட்டியில் கேட்பொலி(audio) உள்ள இடத்தின் பல்வேறு வாய்ப்புகளையும் தேடி பிடிக்கவும் பின்னர் அவைகளிலிருந்து தேவை யானதை தெரிவு செய்து insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் தெரிவு செய்தவாறான கேட்பொலி(audio) ஒன்றை இந்த படவில்லையில் உள்ளிணைந்துவிடும் Play என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனை இயக்கி இசைக்க செய்து கேட்டு மகிழமுடியும்.
ஒரு படவில்லையில் இருக்கும் படம் ,கேட்பொலி(audio),ஒலிஒளிபடம்(video) போன்ற பொருட்களை (objects) தெரிவுசெய்து சொடுக்கி பிடித்து அப்படியே இழுத்துசென்று தேவையான இடத்திற்கு கொண்டு சென்று விட்டிடுக. உடன் இவை புதியஇடத்தில் சென்றிருக்கும்.

o14.13

ஒரு படவில்லையில் இருக்கும் படம் ,கேட்பொலி(audio),ஒலிஒளிபடம்(video) போன்ற பொருட்களை (objects) தெரிவு செய்து சொடுக்குக உடன் இதன் சுற்றெல்லை செவ்வக வடிவ பெட்டி போன்று தோன்றும் இந்த சுற்றெல்லைக் கோட்டில் இடம்சுட்டியை வைத்து தெரிவு செய்து பிடித்து அப்படியே இழுத்துசென்று தேவையான அளவிற்கு சென்று விட்டிடுக. உடன் இவை புதிய அளவாக மாறியமையும்.
நீக்கம் செய்திட விரும்பும் பொருளை (object) தெரிவுசெய்துகொண்டு விசைப்பலகையிலுள்ள Delete என்ற விசையை அழுத்துக .அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் குறுக்கு வழி பட்டியில் உள்ள Delete என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம்தெரிவு செய்த பொருள் (object)ஆனது நீக்கம் செய்யப்பட்டு விடும்.
படவில்லையின் வரிசையை மாற்றியமைத்தல்
பவர்பாயிண்ட்டின் வழக்கமான சாதாரண காட்சிதிரைக்கு செல்க அப்போது இடதுபுற பலகத்தில் slides என்ற தாவிபொத்தான் செயலில் இருக்குமாறு பார்த்து கொள்க.இடது புற பலகத்தில் படவில்லைகள் வரிசையாக காட்சியளிக்கும் .அவற்றில் வரிசையை மாற்றியமைத்திட விரும்பும் படவில்லையை மட்டும் தெரிவுசெய்து பிடித்து அப்படியே இழுத்துசென்று தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்து விட்டிடுக. உடன் அந்த படவில்லையின் வரிசைஎண் மாறி இருப்பதை காணலாம்.

o14.14

இதே செயலை கோப்பிலிருக்கும் அனைத்து படவில்லைகளையும் ஒரே திரையில் காணும் அடுக்கிய படவில்லைகளின் (Slide sorter) காட்சி திரையில் செயற்படுத்தலாம். பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள slide show என்ற தாவிபட்டியின் திரையில் set up என்ற குழுவில் உள்ள hide slide என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஏதேனும் படவில்லையை தேவையானால் மறைத்து விடுக.

o14.15

தற்போதிருக்கும் படவில்லைகளுடன் பழைய கோப்பிலிருந்து ஏதேனும் படவில்லையை சேர்த்திட அடுக்கிய படவில்லைகள் (slide sorter) காட்சிநிலையில் பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள homeஎன்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் home என்ற தாவிபட்டியின் திரையில் new slide என்ற பொத்தானின் கீழ்பாதி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் new slide வாய்ப்புகளில் கீழ்பகுதியிலிருக்கும் reuse slides என்ற வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக.

o14.16

உடன் reuse slidesஎன்றபலகம் வலதுபுறத்தில் தோன்றிடும் அதில் browseஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் இந்தbrowse பொத்தானின் வாய்ப்புகளில் browse fileஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் திரையில் தோன்றிடும் browseஎன்ற உரையாடல் பெட்டியில் பழைய பவர்பாயின்ட் கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு openஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வலது புறத்தில் reuse slides என்ற பலகத்தில் தேவையான படவில்லையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த படவில்லையானது உள்ளினைந்து விடும் பின்னர்reuse slidesஎன்ற பலகத்திலிருக்கும் Keep source format என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டால் உண்மை படவில்லைகளின் வடிவமைப்பு அப்படியே புதிய படவில்லைகளுடன் சேர்ந்திணையும்போது இருக்கும்
படவில்லைகளை பகுதி பகுதியாக பிரித்தல்
பகுதி பகுதியாக பிரிக்க விரும்பும் தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொண்டு பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள homeஎன்ற தாவி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் home என்ற தாவி பட்டியின் திரையில் slides என்ற குழுவிலுள்ள section என்ற பொத்தானின் கீழ்பாதி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் விரியும் section என்ற பல்வேறு வாய்ப்புகளில் add section என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த படவில்லையின் முன் section marker என்பதை உருவாக்கி கொள்கின்றது
o14.17
பின்னர் இந்த section marker ஐ தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் விரியும் பட்டியலில் renameஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது இதே home என்ற தாவியின் பட்டியின் திரையில் slides என்ற குழுவிலுள்ள section என்ற பொத்தானின் கீழ்பாதி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் section என்ற பல்வேறு வாய்ப்புகளில் renameஎன்பதை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக

o14.18

உடன் Rename section என்ற உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றுகின்றது அதிலுள்ள section name என்பதில் இதற்கு ஒரு புதிய பெயரை தட்டச்சு செய்து Rename என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த section marker ஐ புதிய பெயரில் மாற்றி கொள்கின்றது.
நீக்கம் செய்யவிரும்பும் section marker ஐ தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் விரியும் பட்டியலில் remove section என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது இதே home என்ற தாவியின் பட்டியின் திரையில் slides என்ற குழுவின் கீழ் உள்ள section என்ற பொத்தானின் கீழ்பாதி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் section என்ற பல்வேறு வாய்ப்புகளில் renameஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த section marker ஐ நீக்கம் செய்துவிடும்.
பிரசன்டேஷனின் படவில்லைகள் அசைவூட்ட தோற்றத்தை(animation) அமைத்தல்
ஒரேதிரையில் ஒன்றுக்கும் மேற்பட்ட படவில்லைகளை காணும் அடுக்கிய படவில்லைகளின் காட்சி(Slide sorter view) திரையில் தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொண்டு பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள transitionஎன்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் transitionஎன்ற தாவி பட்டியின் திரையில் transition to the slides என்ற குழுவிலிருக்கும் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக

o14.19

இது போதுமானதாக இல்லையெனில் இதன் வலதுபுற மூலையிருக்கும் மேலும்( more) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் இதிலிருக்கும் அனைத்து வாய்ப்புகளும் திரையில் பட்டியலாக தோன்றும் அவற்றுள் நாம்விரும்பிய ஒன்றை தெரிவு செய்தவுடன் முன்காட்சியாக விரியும் பின்னர் தெரிவுசெய்து சொடுக்கிய பின்னர் effect options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன் transition effect இந்த படவில்லையில் இணைந்தவிடும்.
இதே பட்டியின் திரையில் timing என்ற குழுவில்உள்ள Duration என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த transition எவ்வளவு நேரத்தில் நடைபெற வேண்டும் என்று அமைத்து கொள்க. Apply to all slide என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அனைத்து படவில்லைகளிற்ம் இதனை அமைத்து கொள்க
படவில்லை காட்சியின் போது On mouse click என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்தால் அடுத்தடுத்த படவில்லை திரையில் காண்பிக்க சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்க வேண்டும் afterஎன்ற தேர்வுசெய்பெட்டியில் எவ்வளவு நேரம் என அமைத்து விட்டால் குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் தானாகவே அடுத்த படவில்லை மாறிவிடும். None என்ற வாய்ப்பை தெரிவு செய்தால் மேற்காணும் எதுவும் செயற்படாது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: