லிபர் ஆஃபிஸ் 4. தொடர்-11

லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையில் உள்ள Tools => Extension Manager => English spelling dictionaries => Options. => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் திரையில் options-dictionaries என்ற உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில் லிபர் ஆஃபிஸ் ரைட்டிரில் நாம்குறிப்பிடும்சொல்லிற்கான விளக்கத்தையும் அல்லது இணையான சொற்களையும் காணலாம்

லிபர் ஆஃபிஸ் ரைட்டிரில் நாம் படிக்கும் குறிப்பிட்ட சொல்லை அல்லது சொற்களை தெரிவுசெய்துகொள்க பின்னர் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Synonyms என்பதை தெரிவுசெய்திடுக உடன் அந்த சொல்லிற்குஇணையான சொற்கள் துனை பட்டியலாக விரியும்

lo1
io1

லிபர் ஆஃபிஸ் ரைட்டிரில் நாம் படிக்கும் குறிப்பிட்ட சொல்லை அல்லது சொற்களை தெரிவுசெய்துகொள்க.பின்னர் இந்த லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே Tools => Language => Thesaurus => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக அல்லது விசைப்பலகையில் உள்ள Ctrl+F7 ஆகிய செயலி விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Synonyms என்பதை தெரிவுசெய்திடுக பின்னர் விரியும் துனைபட்டியலில் Thesaurus என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Thesaurus USA எனும் உரையாடல் பெட்டியில் current word என்பதன் கீழ் நாம் தெரிவுசெய்தவை தோன்றிடும்.இதிலுள்ள alternatives என்ற பகுதியில் அதற்கு சமமான சொற்கள் பட்டியலாக விரியும் அவற்றுள் ஏதேனுமொரு சொல்லை அல்லது சொற்களை தெரிவுசெய்து கொண்டவுடன் அந்த சொல்லானது replace with என்ற பகுதியில் விரியும் சரிதான் என நாம் எண்ணினால் replace என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் விரும்பியவாறு சொல்லை மாற்றியமைத்திடுவிடும்

lo2
lo2

 

அதன்பின்னர் விசைப்பலகையில் உள்ள F11 என்ற செயலி விசையை அழுத்துக உடன் தோன்றிடும்Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியில் Paragraph Styles எனும் தாவியின் பக்கத்தில் Default என்பதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Modify எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. பிறகு விரியும் Paragraph Style எனும் உரையாடல் பெட்டியில் Text Flow எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதற்கான பக்கத்தினை விரியச்செய்க அதிலுள்ள Hyphenation என்பதன்கீழுள்ள, Automatically என்ற வாய்ப்பினை தேவையெனில் தெரிவுசெய்துகொள்க தேவையில்லை யெனில் இதனை தெரிவுசெய்யாதுவிட்டிடுக பின் னர் நாம் செய்த மாறுதல்களை சேமித்திடOK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதே Hyphenation எனும் செயலை வேறுவகையில் செயற்படுத்திட லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Options => Language Settings => Writing Aids. => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் விரியும் உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியில் Options என்பதன்கீழ் உள்ள நகர்வி பெட்டியை நகர்த்தி சென்று தேவையான வாயப்புகளை தெரிவுசெய்துகொள்க.

லிபர் ஆஃபிஸ் ரைட்டிரில் தட்டச்சுசெய்திடும்போது தவறுதலாக ஏற்படும் எழுத்துபிழைகளை தானாகவே சரிசெய்துகொள்வதற்காக இந்த லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளை பட்டையிலுள்ள Format => AutoCorrect => While Typing=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இது செயலில் இருக்குமாறு பார்த்துகொள்க

புதிய சொற்களை இவ்வாறு தானாகவே திருத்தம் செய்துகொள்ளுமாறு சேர்த்து கொள்வதற்காக Select Tools => AutoCorrect Options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் விரியும் AutoCorrect எனும் உரையாடல் பெட்டியின்replace எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதற்கான பக்கத்தினை விரியச்செய்க அதில் நாம் புதிய தாக ஏற்படும் பிழைகளையும் அதனை சரிசெய்வதற்கான வழியையும் அமைத்துகொண்டு இந்த அமைவை சேமித்திட OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் ஏதேனுமொரு சொல்லை தட்டச்சு செய்ய தொடங்கிடும்போதே மிகுதி எழுத்தினை தானாகவே பூர்த்தி செய்துகொள்வதற்காக இந்த லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளை பட்டையிலுள்ள Tools => AutoCorrect Options => Word Completion => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் விரியும் AutoCorrect எனும் உரையாடல் பெட்டியின் Enable word completion எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு. இந்த அமைவை சேமித்திட OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

திரும்ப திரும்ப தட்டச்சு செய்திடும் ஒரு சில சொற்களை அல்லது சொற்றொடர்களை லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் தானாகவே வருமாறு செய்திடுவதற்காக முதலில் குறிப்பிட்ட சொல் அல்லது சொற்றொடரை தெரிவுசெய்துகொள்க பின் னர் இந்த லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளை பட்டையிலுள்ள Edit => AutoText => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது விசைப்பலகையில் உள்ள Ctrl+F3 ஆகிய செயலி விசைகளை சேர்த்து அழுத்துக உடன் விரியும் AutoText எனும் உரையாடல் பெட்டியின் Name box என்ற பகுதியில் பெயரை உள்ளீடு செய்து கொள்க shortcut என்பதில் இதற்கான ஓரெழுத்து பெயரை பரிந்துரைசெய்வதை ஏற்று கொள்க அல்லதுவேறொரு எழுத்தினை உள்ளீடு செய்துகொள்க . இவைகளுக்கு கீழேஉள்ள பெரிய பெட்டியிலுள்ள வகைகளில் MyAutoText. என்பதை தெரிவுசெய்துகொண்டு வலதுபுறமுள்ள பொத்தான்களில் AutoText எனும் பொத்தானை தெரிவுசய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் கீழிறங்கு பட்டியல் New அல்லது New (text only) ஆகியவற்றில் ஒன்றினை தெரிவு செய்து கொண்டு Close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

lo3
lo3

இவ்வாறு உருவாக்கிய AutoText உள்ளீடுகளை அச்சிட்டு பெறுவதற்காக இந்த லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளை பட்டையிலுள்ள Tools => Macros => Organize Macros => LibreOffice Basic=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் விரியும் LibreOffice Basic Macros எனும் உரையாடல் பெட்டியின் மேக்ரோக்களின் பட்டியலில் LibreOffice Macros => Gimmicks => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து விரிவுபடுத்தி கொள்க அதில் AutoText என்பதை தெரிவுசெய்துகொண்டு Run என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த கட்டளையை செயற்படுத்துக உடன் இதற்கென தனியானதொரு ஆவணம் உருவாகிவிடும் அதன்பின் வழக்கமான கட்டளைகளின் மூலம் அதனை அச்சிட்டுகொள்க.

நிற்க. இந்த லிபர்ஆஃபிஸின் சமீபத்திய முன்னேற்ற செயலாக தமிழ் மட்டுமே தெரியும் ஆங்கிலம் தெரியாது என்பவர்களும் இந்த லிபர்ஆஃபிஸ் பயன்பாட்டினை தங்களின் தேவைக்கேற்ப பயன்டுத்தி கொள்வதற்காக தமிழிலேயே இந்த பயன்பாட்டு மென்பொருள் செயற்படுமாறு   உருவாக்கபட்டு வெளியிடபட்டுள்ளது இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக http://ta.libreoffice.org/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்றிடுமாறு கேட்டுகொள்ளபடுகின்றார்கள் மேலும் அதன் முகப்பு பக்கத்தில் இந்த லிபர்ஆஃபிஸ் பற்றிய விவரத்தை தொடக்கநிலையாளர்களும் அறிந்துகொள்ளும்பொருட்டுபின்வருமாறு விளக்கவுரை அமைந்துள்ளது.

லிப்ரெஓபிஸ் என்றாலென்ன?
lo4
Lo4

லிப்ரெஓபிஸ் ஒரு ஆற்றல்மிகுந்த அலுவலகத் தொகுப்பு ஆகும்; அதன் சுத்தமான முகப்பும் அதன் சக்திவாய்ந்த கருவிகளும் உங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும். லிப்ரெஓபிஸ் பல செயலிகளைத் தன்னுள் அடக்கி இன்று சந்தையில் கிடைக்கும் மிகச் சிறந்த கட்டற்றத் திறவுற்று அலுவலகத் தொகுப்பாக விளங்குகிறது. அதன் ‘ரைட்டர்’ ஒரு சொற்செயலி; ‘கால்க்’ ஒரு விரிதாள்; ‘இம்பிரெஸ்’ ஒரு வழங்கல் பொறி; ‘டிரோ’ சித்திரங்களையும் பாய்வு விளக்கப்படங்களையும் தயாரிக்கப் பயன்படுகிறது; ‘பேஸ்’ ஒரு தரவுத்தளம்; இறுதியாக, அதன் ‘மேத்’ கணிதத்தைத் தொகுக்க உதவுகிறது.

கவரும் ஆவணங்கள். உங்கள் ஆவணங்கள் பார்ப்பதற்குத் தொழில்திறன் மிகுந்தும் சுத்தமாகவும் தெரியும். அது ஒரு கடிதமாகவோ, கட்டுரையாகவோ, கணக்கறிக்கையாகவோ, துண்டு வெளியீடாகவோ, நுட்பியல் சித்திரமாகவோ, விளக்கப்பப்படமாகவோ இருக்கலாம்; அனைத்தையும் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக அமைக்க லிப்ரேஓபிஸ் கைகொடுக்கும்.

எல்லா வகையான ஆவணங்களையும் பயன்படுத்துங்கள். மைக்ரோசாஃப்ட் வேர்டு, எக்செல், பவர்பொய்ண்ட், பப்லிஷர் போன்ற பல ஆவண வடிவூட்டங்களுடன் லிப்ரெஓபிஸ் ஒத்துப்போகிறது. தவிர்த்து, ஒரு நவீன, திறந்தச் செந்தரமான ஓபன்டொகுமெண்ட் ஃபோர்மெட் (ODF) ஐப் பயன்படுத்தவும் அது உங்களுக்கு உதவும்.

நீட்சிகளைக் கொண்டு கூடுதல் சிறப்பியல்புகளைப் பெறுங்கள். லிப்ரெஓபிஸில் பல சிறப்பியல்புகள் இடம்பெற்றிருந்தாலும், சில பயனர்களுக்குக் கூடுதல் தேவைகள் இருக்கலாம். அவர்கள் மிக எளிதாக லிப்ரெஓபிஸின் நீட்சி இயக்க அமைப்பைப் பயன்படுத்தி, இன்னும் கூடுதலான சிறப்பியல்புகளையும் ஆவண வார்ப்புருக்களையும் இந்த http://extensions.libreoffice.org/ தளங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

லிப்ரெ என்றால் விடுதல், இன்றும் எப்போதும். லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்றத் திறவூற்று மென்பொருளாகும். அதன் மேம்பாடு புதிய திறனாளிகளுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் திறந்திருக்கிறது. இந்த மென்பொருள் ஒரு பெரிய பயனர் சமூகத்தால் நாள் தோரும் பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்படுகின்றது. நீங்களும் இந்த குழுவோடு இணைந்து அதன் எதிர்கால மேம்பாட்டில் ஈடுபட்டு, உங்கள் அடிச்சுவட்டை அதில் பதிக்கலாம்.·நம் மொழியில் அமைந்துள்ள லிப்ரெஓபிஸைப் பதிவிறக்கி (http://ta.libreoffice.org/download/ )  எவ்வாறு அது உங்கள் படைப்பாற்றலை நாளுக்கு நாள் தூண்டுகிறது என்று கண்டறியுங்கள்! · லிப்ரெஓபிஸ் எவ்வாறு மைக்ரோசொஃப்ட் ஓபீஸ் உடன் ஒப்பிடுகிறது என்று பாருங்கள். இந்த வெளியீட்டு குறிப்புகளை http://ta.libreoffice.org/download/release-notes/ இங்கு பெறலாம்.

மேலும் செம்மையான கோப்பு வடிவூட்டங்கள் மைக்ரோசாஃப்டின் OOXML, குறிப்பாக DOCX, பழைய RTF ஆகியவற்றுடன் ஒத்தியங்கும் திறன் இப்போது செம்மைபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ‘அபிவேர்டு’ ஆவணங்களைப் பதிவிறக்குவதற்கான வடிகட்டியொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

கல்குக்கு ஒரு புதிய பொறி ஒரே நேரத்தில் ஏராளமான கணக்குகளைத் தனது சூத்திரக் கலங்களுக்குள் செய்யும் திறனைக் கல்க் இன்று பெற்றுள்ளது.

விண்டோஸ் 7 , விண்டோஸ் 8 ஆகியவற்றுடனான மேம்பட்ட ஒருமைப்பாடு திறந்துள்ள ஆவணங்களின் சிறுபடங்கள் இப்போது நிரலுக்கேற்றவாறு குழுவாக்கப்படுவதோடு இடையில் திறந்த ஆவணங்களின் பட்டியலும் காட்டப்படுகின்றது. இவையிரண்டும் பணிப்பட்டையில் தென்படுகின்றன.

lo5
Lo5

இந்த விபர் ஆஃபிஸின் புதிய தொடக்கத் திரையைப் பாருங்கள் லிப்ரெஓபிஸ் 4.2 புதியதொரு தொடக்கத் திரையைத் தருகின்றது. அதன் சுத்தமான தளக்கோலம் வெற்றிடங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி இறுதி ஆவணங்களின் முன்னோட்டங்களையும் காட்டுகிறது.

தொழில் நிறுவன விண்டோஸ் பயனர்களே! மகிழுங்கள்! லிப்ரெஓபிஸை உங்கள் நிறுவனத்தில் பரவலாகப் பயன்படுத்துவதற்கான வழியை இன்று இதனுடைய மேம்பட்ட குழுக் கொள்கை கட்டுப்பாடுகள் ஏற்படுத்தித் தருகின்றன. உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு நீங்கள் இப்பணியைச் செய்ய இவற்களது எளிய இடைமுகப்பு உதவும். தற்போது மைக்ரோசாஃப்ட் விண்டோஸைப் பயன்படுத்தும் பெரிய நிறுவனச் சூழலில் லிப்ரெஓபிஸைப் பரப்புவதற்கு ஒரு புதிய வல்லுநர் வடிவாக்க உதவியாளரும் இருக்கிறது.

ரைட்டர்
lo6
lo6

எல்லா விதமான ஆவணங்களையும் தொகுங்கள் ஒரு நவீன, சக்திவாய்ந்த சொற்செயலி (word processor) மற்றும் பணிமேடை பதிப்பாளரில் (desktop publisher) நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து சிறப்பியல்புகளையும் ரைட்டர் கொண்டிருக்கிறது. ஒரு சிறு குறிப்பாகட்டும், அல்லது உள்ளடக்கங்கள், வரைபடங்கள், அகவரிசைகள் போன்றவை அடங்கிய ஒரு பெரிய நூலாகட்டும், எதற்கும் ரைட்டர் தயார். உங்கள் முழுக்கவனத்தையும் நீங்கள் சொல்லவரும் செய்தியில் செலவிடலாம்; அதனை அழகாகக் காட்டும் பணியை ரைட்டர் செய்யும்.

சில சொடுக்குகளில் குறையற்ற ஆவணங்கள் லிப்ரெஓபிஸில் தயாரிக்கப்படும் உங்கள் ஆவணங்களை அதே தரத்துடன், அழகுடன் வேறெங்கும் தயாரிப்பது அரிது. உங்கள் கணினியில் உள்ள எந்த எழுத்துருவையும் பயன்படுத்தி, ஆவணத்தின் ஏறத்தாழ எப்பகுதியிலும் நீங்கள் விரும்பிய பாணியை அமைத்துக்கொள்ளலாம். நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினால், தானாகத் திருத்தும் அகராதியின் உதவியுடன் எழுத்துப்பிழைகளை நீங்கள் தவிர்க்கலாம் அல்லது திருத்திவிடலாம். தமிழைப் பயன்படுத்துவதற்கும் இதர மொழிகளுக்கும் ரைட்டர் உங்களின் உற்ற துணைவனாக நிற்கும்.

லிப்ரெஓபிஸ் ஆவணத் தயாரிப்பில் உங்களுடன் இறுதிவரை நின்று உதவும் கடிதங்கள், தொலைநகல்கள், நிகழ்ச்சி நிரல்கள், கூட்டக் குறிப்புகள் போன்ற சாதரண ஆவணங்களைத் தயாரிப்பதில் உள்ள சிக்கல்களை லிப்ரெஓபிஸின் வழிகாட்டிகள் குறைக்கும். அஞ்சல் ஒன்றாக்கல் (mail merge) போன்ற சிக்கலுள்ள வேலைகளையும் அவை எளிமையாக்கும். இப்பணிக்குத் தேவையான ஆவண வார்ப்புருக்கள் இயல்பாகவே லிப்ரெஓபிஸில் இடம்பெற்றுள்ளன; சிக்கலான இந்த ஆவணங்களை நீங்கள் தயாரிக்க வேண்டிய தேவையில்லை — அவற்றை இக்குழுக்கள் ஏற்கனவே தயாரித்து விட்டன! இந்த தளத்தின் மூலம் இந்த பயன்பாட்டினை மேலும் மேம்படுத்துவதற்கு நம்மாலான உதவிகளை செய்வதற்கான வரவேற்பு அறிவிப்பு பின்வருமாறு

வணக்கம்.
உலகின் எட்டு கோடி மக்களின் தாய்மொழி தமிழ். 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு, எழுதப்பட்டு வருகின்றது. இத்துணை தொண்மை வாய்ந்த தமிழையும், அதனைத் தாய்மொழியாகக் கொண்டோரையும், இந்த நவீன, தகவல் நுட்பியல் யுகத்திலும் பீடு நடை போட வைப்பது நம் முன் நிற்கும் சவாலாகும். லிப்ரெஓபிஸ் தமிழாக்கப் பணியானது இச்சவாலைச் சந்திக்கும் முயற்சிகளில் ஒன்று. இம்முயற்சியும் ஓரிருவரது முயற்சியல்ல. தமிழ் மக்களுக்காக எடுக்கப்படும் முயற்சி. ஊர் கூடி தேரிழுக்கும் முயற்சி. அதில் உங்கள் பங்கும் இருந்தால் நலம். ஆகவே, வாருங்கள் … இந்த தேரை இழுக்க …இந்த பணியில் ஏற்படும் சவாலைச் சந்திக்க! http://ta.libreoffice.org/ எனும் இணைய தளபக்கத்திற்கு
இக்கண்,
தமிழா! குழுவினர்

என்ற இந்த குழுவின் வேண்டுகோளை ஏற்று தமிழிற்கு தமிழன்னைக்கு நம்மாலான சிறு உதவிகளை வாருங்கள் செய்திடுவோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: