எம் எஸ்ஆஃபிஸ்-2010- தொடர்ச்சி- மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட்- 2010

மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் 2010 ஓர்அறிமுகம்.

வியாபார நிறுவனங்கள் தம்முடைய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக கையாளுகின்ற விளம்பர உத்திகளில் ஒன்றாகவும் , பயிற்சி நிறுவனங்களும் கல்வியாளரகளும் சொற்பொழி வாளர்களும் தம்முடைய கருத்துகளை காட்சிகளாக திரையில் காண்பித்து விளக்கி கூறுவதற்கும் இந்த பவர்வாயிண்ட் படவில்லை காட்சியானது பேருதவியாய் இருக்கின்றது
இதற்கான சமீபத்திய பயன்பாடாக மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் 2010 என்பது இருக்கின்றது. இது . மைக்ரோசாப்ட் ஆஃபிஸ் 2010 –ல் ஒர் உறுப்பாகும். இந்த பவர்பாயிண்ட் படவில்லைகளில் விளக்கப்படங்கள், காட்சிபடங்கள் செய்முறை காட்சிகள், ஒலி,ஒளி,இயக்கம் போன்றவைகளை சேர்த்து வழங்க முடியும் மேலும் இதன் எழுத்துகள், அதன் அளவு ,வண்ணம் ஆகியவற்றை தட்டச்சு செய்யும்போது அல்லது படவில்லையை வடிவமைத்த பின்னர் சரிபார்த்து அமைத்து கொள்ள முடியும். மேலும் இதில் விளக்க படங்களின் உதவியுடன் படவில்லையின் தோற்றத்தை காண்போரை கவரும் வண்ணம் மாற்றியமைக்க முடியும்.
மடிக்கணினி மூலம் புரஜக்டர் என்ற கருவியை பயன்படுத்தி பவர்பாயிண்ட் படவில்லை காட்சியின் வாயிலாக வியாபார நிறுவனங்கள் தம்முடைய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர படக்காட்சி களையும் பயிற்சி நிறுவனங்கள் தம்முடைய பயிற்சி வகுப்புகளை படக் காட்சிகளையும் இதில் உருவாக்கி காண்பிக்க முடியும் மேலும் இணையத்தின் வாயிலாகவும் இதனை செயற்படுத்திடமுடியும்.
இதில் பவர்பாயிண்ட்-2003 –ல் .pptஎன்ற பின்னொட்டுடனும் பவர்பாயிண்ட்-2007 –ல் .pptx என்ற பின்னொட்டுடனும் பவர்பாயிண்ட்-2010 –ல் .pptxஎன்ற பின்னொட்டுடனும் இதனுடைய கோப்பானது சேமிக்கபடுகின்றது. பவர் பாயிண்ட்டின் கோப்பு ஒன்றை முந்தைய பதிப்பாக சேமிக்க விரும்பினால் கோப்பு என்ற தாவிபட்டியின் திரையில் save as என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் save as என்ற உரையாடல் பெட்டியில் கீழிறங்கு பட்டியலில் தேவையான பதிப்பின் வகையை தெரிவுசெய்து save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்து கொள்ளலாம்.
பவர் பாயிண்ட் படவில்லையை திறத்தல்
Start => All programs=>Microsoft Office=.>Microsoft Power Point 2010=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. அல்லது திரையில் உள்ள இதன் உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.உடன் மைக்ரோசாப்ட்-பவர்பாயிண்ட் இன் சாளரம் திரையில் தோன்றிடும்.

pp1
Pp1

பவர் பாயிண்ட் படவில்லை ஒன்றை உருவாக்குதல்
இந்த பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Fileஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் file என்றதாவிபட்டியின் திரையில் இடது புற பலகத்திலிருக்கும் new என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த new என்பது தொடர்பான பல்வேறு வாய்ப்புகள் வலதுபுறத்தின் மையத்திலுள்ள பலகத்தில் விரியும் அவற்றுள் இப்போதுதான் முதன்முதலில் உருவாக்க போகின்றோ மெனில் blank presentation என்ற வாய்ப்பை தெரிவு செய்து கொண்டு வலதுபுற பலகத்தில் உள்ள create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.. உடன் புதிய படவில்லை ஒன்று உருவாகி திரையில் பிரதிபலிக்கும்.
pp2
Pp2
நடப்பில் கைவசம் இருப்பதன் அடிப்படையில் புதியதை உருவாக்கிட விரும்பினால் new from existing என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் new from existing presentation என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் தேவையான பவர் பாயிண்ட் படவில்லை காட்சியின் கோப்பு ஒன்றை தெரிவுசெய்து கொண்டு create new என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.. உடன் புதிய படவில்லைகாட்சி ஒன்று உருவாகி திரையில் பிரதிபலிக்கும்.
pp3
Pp3
ஒன்றும் தெரியாது ஆனால் கைவசம் ஏதேனும் மாதிரி படவில்லைகாட்சி இந்த பயன்பாட்டிற்குள் இருந்தால் நல்லது என எண்ணிடும் நிலையில் sample templates என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மைய பலகத்தில் விரியும் sample templates களின் பல்வேறு வாய்ப்புகளில் நாம் விரும்பிடும் ஒன்றை தெரிவு செய்து கொண்டு create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..உடன் புதிய படவில்லை ஒன்று உருவாகி திரையில் பிரதிபலிக்கும்.
படவில்லை காட்சியை சேமித்தல்
பின்னர் இவ்வாறு உருவாக்கிய படவில்லை காட்சியை சேமித்திட இதே பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Fileஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன் பின்னர் விரியும் file என்றதாவிபட்டியின் திரையில் இடது புற பலகத்திலிருக்கும் பல்வேறு வாய்ப்புகளில் இப்போதுதான் முதன் முதல் சேமிப்பதாயின் save as என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் save as என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும். அதில் name என்ற பகுதியில் இதற்கொரு பெயரினை தட்டச்சுசெய்து save as type என்ற கீழிறங்கு பட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி விரியச் செய்க. அதில் power point presentation *.pptx என்பதை தெரிவுசெய்து கொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த படவில்லை சேமிக்கப்பட்டுவிடும்.
ஏற்கனவே சேமித்திருந்தால் பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் விரைவு அனுகுதல் பட்டியில் உள்ள சேமிப்பதற்கான உருவ பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக அல்லது File என்ற தாவிபட்டியின் இடதுபுறபலகத்தில் இருக்கும் save என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது ctrl+s ஆகிய விசைகளை சேர்த்துஅழுத்துக
pp4
pp4

படவில்லை காட்சியில் உரைபெட்டியை உருவாக்குதல்
பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள insert என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் insert என்ற தாவிபட்டியின் திரையில் text என்ற குழுவின் கீழ் உள்ள insert text box என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் படவில்லையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிபிடித்துகொண்டு செவ்வக வடிவிற்கு இழுத்து சென்றால் உரைபெட்டி ஒன்று உருவாகி விடும் பின்னர் அதில் தேவையான உரையை தட்டச்சுசெய்துகொள்க.
pp5
Pp5

ஒரு படவில்லையில் உரையை தட்டச்சுசெய்தல்
ஒரு படவில்லையில் உரையை உள்ளீடு செய்ய விரும்பும் ஒரு உரைபெட்டியை தெரிவு செய்துகொண்டு அதில் நேரடியாக விரும்பும் உரையை தட்டச்சுசெய்க.
பின்னர் மாற்றம் செய்ய விரும்பும் உரைபெட்டியை தெரிவுசெய்து விசைப்பலகையில் உள்ள அம்புக்குறியின் உதவியுடன் உரைபெட்டியில் இடம்சுட்டியை தேவையான இடத்திற்கு நகர்த்திசென்று உரையை மாறுதல் செய்துகொள்க.
pp6
Pp6

இடதுபுற பலகத்தில் இருக்கும் outline என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் பலகத்தில் தேவையான படவில்லையை தெரிவு செய்து கொண்டு நேரடியாக உரையை அதில் தட்டச்சுசெய்க.
உரையின் வரிகளுக்கிடையே உள்ள இடத்தை மாற்றியமைத்தல்
தேவையான உரையை தெரிவுசெய்துகொண்டு பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடனிவிரியும் home என்ற தாவிபட்டியின் திரையில் paragraph என்ற குழுவிலுள்ள line spacing என்பதற்கருகிலுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் line spacing என்பதன் பல்வேறு வாய்ப்புகளின் பட்டியலிலிருந்து தேவையான அளவை தெரிவு செய்து சொடுக்குக இது போதுமானதாக இல்லையெனில் இதே கீழிறங்கு பட்டியலில் கீழ்பகுதியிலிருக்கும் line spacing options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும்paragraph என்ற உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
pp7
Pp7

தேவையான உரையை தெரிவுசெய்துகொண்டு சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் home என்ற தாவிபட்டியின் திரையில் paragraph என்ற குழுவிலுள்ள alignment left (ctrl+ l) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் உரையானது இடதுபுறம் நகர்ந்து அமையும் alignment right (ctrl + r) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் உரையானது வலதுபுறம் நகர்ந்து அமையும் alignment centre (ctrl + e) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் உரையானது மையத்தில் நகர்ந்து அமையும் alignment justify என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் உரையானது சரியான இடத்தில் நகர்ந்து அமையும்
ஒரு உரைபெட்டியிலுள்ள உரையின் வண்ணத்தையும் தோற்றத்தையும் மாற்றியமைக்க
ஒரு உரைபெட்டியிலுள்ள உரையின் வண்ணத்தையும் தோற்றத்தையும் மாற்றியமைக்கலாம். அதற்காக மாற்றியமைக்க விரும்பும் உரையை தெரிவுசெய்து கொள்க. பின்னர் பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவிபட்டியின் திரையில் fonts என்ற குழுவில் A என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியினுடைய பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் வண்ணங்களின் பலகத்தில் தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து சொடுக்குக உடன் உரையின் வண்ணம் நாம் தெரிவுசெய்தவாறு மாறிவிடும்
pp8
pp8

இது போதுமானதாக இல்லையெனில் இதே வண்ணங்களின் பலகத்தில் கீழ்பகுதியிலிருக்கும் more colors என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Colors என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் standard என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் standard என்ற திரையில் தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையான வண்ணம் உரைப்பகுதியில் மாறியமையும்.
நிழற்படத்தொகுப்பை படவில்லை காட்சியாக மாற்றுதல்
நாம் கைவசம் டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிழற்படங்களை வைத்திருப்போம் அவைகளையும் பவர் பாயிண்ட் படவில்லை காட்சியாக உருமாற்றம் செய்யலாம் அதற்காக பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள insert என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் insert என்ற தாவிபட்டியின் திரையில் imagesஎன்ற குழுவிலுள்ள photo album என்ற அம்புக்குறி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் photo album என்ற கிழிறங்கு பட்டியலில் உள்ள new photo album என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் photo album என்ற உரையாடல் பெட்டியில் file /disk என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
pp9
pp9

உடன்.insert new pictures என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் தேவையான டிஜிட்டல் படங்கள் இருக்கும் இடத்தை தேடிபிடித்து ctrl என்ற விசையை அழுத்தி பிடித்து கொண்டு ஒவ்வொன்றாக தெரிவுசெய்துகொண்டு insertஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
pp10.
pp10

பின்னர் photo album என்ற உரையாடல் பெட்டியில் நாம் தெரிவு செய்திருந்த இந்த படங்களின் வரிசையை தேவையெனில் மாற்றியமைத்துகொள்க அவ்வாறே தவறுதலாக ஏதேனும் படத்தை தெரிவுசெய்திருந்தால் அதனை தெரிவுசெய்து Removeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நீக்கம் செய்திடுக.சரியாக இருக்கின்றது எனில் Createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் பவர்பாயிண்ட் படவில்லை ஒன்று இந்த டிஜிட்டல் படங்களைகொண்டு உருவாகிவிடும்..
இதே photo album என்ற உரையாடல் பெட்டியில் உள்ள pictures layout என்பதன் கீழிறங்கு படியலை திறந்து ஒரு படவில்லையில் எத்தனை படங்கள் தேவை என்பதை தெரிவுசெய்து ஒரே படவில்லையில் ஒன்றுக்கு மேற்பட்ட டிஜிட்டல் படங்களை இணைத்துகொள்ளமுடியும்.
புறவடிவைப்பு(outline) பலகத்தினை பிரதிபலிக்செய்தல்
பவர் பாயிண்ட் படவில்லை திரையின் இடதுபுற பலகத்தில் out line என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் out line என்ற தாவிபட்டியின் திரையில் out line என்ற வடிவமைப்பில் படவில்லை விரியும் பின்னர் இதில் உள்ள உரை வடிவமைப்புகளையோ இதர வடிமைப்புகளையோ இதிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மாற்றியமைத்து கொள்க
pp1`1
pp11

. படவில்லைகளின் பலகத்தினை பிரிதிபலிக்கசெய்தல்
இதே இடதுபுற பலகத்தில் இருக்கும் slide என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நடப்பிலிருக்கும் படவில்லையை சிறிய படவில்லை காட்சியாக இடதுபுற பலகத்தில் பிரிதிபலிக்கசெய்யும் வேறு படவில்லையை இவ்வாறு பிரிதிபலிக்கசெய்வதற்கு தேவையான படவில்லையை தெரிவுசெய்தால் போதும் இந்த பலகத்தின் மேல்பகுதியிலிருக்கும் X என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த இடதுபுற பலகத்தினை மூடிவிடுக.
pp1`2
pp12

சாதாரண காட்சியையும் படவில்லைகளின் காட்சியையும் தோன்ற செய்தல்
பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Viewஎன்ற தாவிபட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் view என்ற தாவிபட்டியின் திரையில் presentation view என்ற குழுவின் கீழ் உள்ள normal view என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் சாதாரண காட்சியாக திரைத்தோற்றம் அமையும் .இதே குழுவிலுள்ள slide sorter view என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் அனைத்து படவில்லைகளும் ஒரே திரையில் சிறுசிறுவில்லைகளாக தோன்றிடும்.
pp13
pp13

புதிய படவில்லைகாட்சி ஒன்றை உருவாக்குதல்
பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Home ன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் home என்ற தாவிபட்டியின் திரையில் slides என்ற குழுவின் கீழ் உள்ள new slideஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் new slide என்ற பலகத்தில் இருக்கும் பல்வேறு வடிவமைப்புகளில் நாம் விரும்பும் வடிவமைப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் காலியான புதிய படவில்லை காட்சி ஒன்று உருவாகிவிடும்.
pp14
Pp14

பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Home ன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் home என்ற தாவிபட்டியின் திரையில் slides என்ற குழுவின் கீழ் உள்ள layout என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் layout என்ற பலகத்தில் இருக்கும் பல்வேறு வடி வமைப்புகளில் நாம் விரும்பும் வடிவமைப்பை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் புதிய படவில்லைகாட்சி ஒன்றை ஒதுக்கீடு செய்து கொண்டு உருவாகிவிடும்.
pp15
pp15

படவில்லையின் முதன்மை காட்சியை தோன்றசெய்தல்
பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள View என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் view என்ற தாவிபட்டியின் திரையில் master view என்ற குழுவின் கீழ் உள்ள slide master என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் slide master காட்சியும் இடது புறம் slide master என்ற பலகமும் slide master என்ற தாவிபட்டியின் திரையில் தோன்றும்.
pp16
pp16

இந்த slide master என்ற தாவிபட்டியின் திரையில் edit master என்ற குழுவின் கீழ் உள்ள insert layout என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் விரும்பிய வாறான புதிய படவில்லையின் புறவடிவமைப்பு ஒன்று திரையில் விரியும்
அவ்வாறே master layout என்ற குழுவின் உள்ள insert place holder என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் இதனுடைய பல்வேறு வாய்ப்புகளில் pictures என்றவாறு நமக்கு தேவையானதை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் இந்த பொருளை தெரிவுசெய்து பிடித்து இழுத்து செல்வதன் வாயிலாக சரியான இடத்தில் இதனை அமைத்து கொள்க. இவ்வாறே மேலும் தேவையான பொருட்களையும் உள்ளிணைத்து கொள்க .
தேவையில்லாததை தெரிவு செய்து edit என்ற குழுவிலுள்ள Delete என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நீக்கம் செய்திடுக அல்லது Delete என்ற விசையை அழுத்தி நீக்கம் செய்திடுக. இதே பட்டியின் திரையில் Close என்ற குழுவின் கீழுள்ள X Close master view என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த படவில்லையின் முதன்மையாளர்(slide master) என்ற திரையை மூடிவிடுக.
படவில்லைகாட்சிகளின் உருவதோற்றத்தை மாற்றியமைத்தல்
பவர்பாயிண்ட் சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள Design என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் design என்ற தாவிபட்டியின் திரையில் themes என்ற குழுவின் உள்ள theme என்பதில் உள்ளவைகளில் தேவையானதை தெரிவுசெய்து கொண்டு apply to all slides என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்கினால் அனைத்து படவில்லைகளிலும் இது செயற்படுத்த படும். இல்லையெனில் நடப்பிலிருக்கும் படவில்லையில் மட்டும் செயற்படுத்தபடும்.
pp17
Pp17

இதுபோதுமானதாக இல்லையெனில் இதே பலகத்தில் வலதுபுறமிருக்கும் more theme என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் All themes என்ற மேலும் உள்ள பல்வேறு வாய்ப்புகளில் தேவையானதை மட்டும் தெரிவு செய்து செயற்படுத்தி கொள்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: