விண்டோ-7 தொடர்ச்சி-13-கணினியை பராமரித்தல்

வீடுகளில் உபயோகபடுத்திடும் கருவிகளில் அவ்வப்போதுஏற்படும் பழுது களை சரிசெய்து பராமரிப்பதைபோன்றே விண்டோ7 இயக்கமுறைமையையும் பின்வருமாறு பராமரித்து வந்தால்தான் இந்த விண்டோ7 இயக்கமுறைமையானது மிகநன்றாக திறனுடன் செயல்படும்
இயக்கங்களின்போது காலிநினைவகம் எவ்வளவு உள்ளதென காணுதல்
இதன் முதற்படிமுறையாக முதலில் காலிநினைவகம் ஒவ்வொரு இயக்ககதிலும் உள்ளதாவென காணவேண்டும் அதற்காக start=> computer=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தோன்றும்திரையின் மேல்பகுதியில் வலதுபுறமுள்ள view என்ற (படம்-.1)உருவபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக பின்னர்விரியும் பட்டியலில் contents என்பதை தெரிவு செய்க. உடன் computer என்ற சாளரமானது மொத்தநினைவகம் அதில்இதுவரை பயன்படுத்தபட்டது மிகுதி காலியாக உள்ளதென விவரமாக ஒவ்வொரு இயக்ககத்திற்கும்காண்பிக்கும்.
7.1

படம்-1
இயக்ககவட்டினை சுத்தம் செய்தல்
கணினியின் நினைவகத்தை அவ்வப்போது சுத்தபடுத்திகொள்வது நல்லது அதற்காக start=>All programs=> Accessories=> system tools=> Disk cleanup=>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக. உடன் Disk Clean up : Drive Selectionஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் Drives என்பதன் கீழுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து தேவையான இயக்ககத்தை தெரிவுசெய்து கொண்டு ok என்ற(படம்-2) பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக
7.2
படம்-2
பிறகு Disk Clean up என்ற செய்திபெட்டியொன்று (படம்-3) திரையில் தோன்றி இந்தபணி நடைபெற்று கொண்டிருப்பதாக அறிவிக்கும்.

7.3
படம்-3

அதன்பின்னர் Disk clean up for(C): என்ற உரையாடல் பெட்டியில் Disk clean upஎன்ற தாவியின் திரை தோன்றும் அதில் Files to deleteஎன்ற தலைப்பின் கீழ் நீக்கம் செய்யவேண்டிய கோப்புகளின் வகையை பட்டியலிடும் அவைகளை தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த கோப்புகளை நீக்கம் செய்வதை உறுதிசெய்திடும் செய்திபெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதிலுள்ள Delete files என்ற(படம்-4) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் தெரிவுசெய்த இயக்ககம் ஆனது நீக்கம்செய்யப்பட்டு காலிநினைவகம் நமக்கு கிடைக்கும்.
7.4
படம்-4
சாளரஇயக்ககத்தை சுத்தபடுத்துவதற்கான கோப்பினை உருவாக்குதல்
பொதுவாக சாளரத்தின் டிஸ்க் கிளீனப் எனும் வழிகாட்டியானது குறிப்பிட்ட கால இடைவெளி வரை காத்திருந்து தற்காலிக கோப்புகளை அழித்து சுத்தபடுத்துகின்றது அதற்குபதிலாக உடனுக்குடன் அவ்வப்போது கோப்புகளை அழித்து சுத்தபடுத்துவதுதான் நல்லது.அதற்காக இந்த செயலுக்கான கட்டளையை ஒரு கோப்பாக உருவாக்கி சேமித்துகொண்டு செயற்படுத்தலாம். அதற்காக முதலில் .நோட்பேடை (படம்5)திறந்துகொள்க பின்னர் அதில் பின்வரும் இரண்டுகட்டளைவரிகளை தவறில்லாமல் தட்டச்சு செய்திடுக.
Cd C:\users\%username%\AppData\Local
rmdir /S /Q Temp
பின்னர் இதனை கணினியின் திரையில் cleantemp.batஎன்ற பெயருடன் சேமித்துகொள்க.

7.5
படம்-5

அதன்பின்னர் இந்த கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தற்காலிகமாக உருவான கோப்புகளனைத்தும் அழிக்கப்பட்டு காலிஇடம் கிடைக்கும்
இயக்ககத்தை சுத்தபடுத்திடும் கோப்பினை தானாக உருவாக்கி செயற்படுமாறு செய்தல்
. இதேசெயலை தானாக கணினிதொடங்கும்போதே செயல்படுத்துவதற்காக.இந்த கோப்பின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன்விரியும் சுருக்குவழி பட்டியலில் create shortcut என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் இந்த சுருக்குவழிகட்டளைபட்டியலை ஸ்டார்ட்டப் எனும் கோப்பகத்தில் வைத்திடுக.இதன்பின்னர் கணினியின் தொடக்க இயக்கத்தின் போதெல்லாம் தானாகவே தற்காலிகமாக உருவான கோப்புகளனைத்தும் அழிக்கப்பட்டு காலிஇடம் கிடைக்கும்.
சாளரத்தை சுத்தப்படுத்துதல் தொடர்ச்சி
சாளரம்7இல் சுத்தபடுத்துவதற்கான கருவிகளாக CCleaner , Advanced System Care Free(ASC) ஆகிய இரண்டும் இருந்தாலும் ASC யானது ஒருசிறந்த கருவியாகும்..இரண்டுமே இலவசமாக கிடைக்கின்றன குறைந்தபட்சம் ஏதேனுமொன்றை பயன்படுத்திகொள்வது நல்லது.
தேவையில்லாத பயன்பாடுகளை நீக்கம்செய்தல்
கட்டுப்பாட்டுபலகத்தின் Add/Remove என்ற பட்டியலிலுள்ள பயன்பாடுகளில் நமக்கு தேவையில்லாதவற்றை தெரிவுசெய்து கொண்டு Delete/Change என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அழித்துவிடுக.
நினைவகக்குவியல் கோப்புகளை முடக்கம் செய்து வன்தட்டில் காலிஇடம்பெறுதல்
Start=> Control panel=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன்விரியும் Control panel சாளரத்தின் தேடிடும் பெட்டியில் Advanced என தட்டச்சு செய்து கொண்டு உள்ளீட்டு விசையை தட்டுக. பின்னர் விரியும் திரையில் system என்பதன்கீழுள்ள view advanced system settingsஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

7.6
படம்6
உடன் system propertiesஎன்ற உரையாடல் பெட்டி (படம்-6)திரையில் தோன்றிடும் அதில் startup and recovery என்பதன்கீழுள்ள settingsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் startup and recoveryஎன்ற(படம்-7) உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் write debugging information என்பதன் கீழிறங்கு பட்டியிலிருந்து none என்பதை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானையும் system propertiesஎன்ற உரையாடல் பெட்டி திரையில் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக. இதன்பின்னர் தேவையற்ற தகவல்கள் நீக்கம்செய்யப்பட்டு காலிநினைவகம் கிடைக்கும்.

7.7
படம்-7
பாகப்பிரிவினை செய்த இயக்ககங்களின் நினைவகத்தை விரிவு செய்தல் அல்லது சுருக்குதல்
நம்முடையை கணினியில் இரண்டுக்குமேற்பட்ட இயக்ககங்களை ஆரம்பத்தில் பாகப்பிரிவினை செய்து உருவாக்கியிருப்போம் காலப்போக்கில் ஒருசில இயக்ககங்களில் இடம்போதாமலும் வேறுசிலவற்றில் பயன்படுத்தாத ஏராளமான காலி இடமும் இருக்கும் இந்நிலையில் இடம்போதாமல் இருக்கும் பகுதிக்கு ஏராளமான காலிஇடமுள்ள பகுதியிலிருந்து கூடுதலான காலிநினைவகத்தை ஒதுக்கீடு செய்து கொள்வது நல்லது அதற்காக
Start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Start என்றபட்டியலில் computer என்பதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் சுருக்குவழி பட்டியலில் manage என்ற(படம்-8) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

7.8
படம்-8
பின்னர் விரியும் திரையின் இடதுபுற பலகத்தில் Storageஎன்பதையும் அதன்பின்னர் விரியும் Disk managementஎன்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இயக்ககத்தின் பாகப்பிரிவினை அளவுடன் பட்டியல் ஒன்று திரையில் பிரிதிபலிக்கும் அதில் partition என்பதை(படம்-9) தெரிவு செய்துகொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7.9
படம்-9

பின்னர்விரியும் குறுக்குவழி பட்டியலில் shrink volumeஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Querying shrink spaceஎன்ற செய்திபெட்டி(படம்-10) திரையில்தோன்றி இந்த செயலின் தற்போதைய நிலைஎன்னவென்று கூறும். shrink D: shrink E: shrink F: என்றவாறு நாம் தெரிவுசெய்ததற்கேற்ற இயக்ககத்தின் பெயருடன் உரையாடல் பெட்டி தோன்றும்

7.10
படம்-10
அதில் மொத்தம் எவ்வளவு காலிஇடம் சுருக்குவதனால் கிடைக்கும் என அறிவிக்கும். பின்னர் shrink என்ற(படம்-11) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .

7.11
படம்-11
இவ்வாறு கிடைத்தகாலிநினைவகஇடத்தை தேவையான இயக்ககத்தைமட்டும் தெரிவு செய்து கொண்டு Extend volume என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் Extend volume என்ற வழிகாட்டியின் திரையில் next என்ற(படம்-12) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

7.12
படம்-12
அதன்பின்னர் Extend volume என்ற வழிகாட்டியின் திரையில் இந்த செயலின் தற்போதைய நிலைஎன்னவென்று கூறும். அதில் Select Disks Selected Disk D: Disks E: Disks F: என்றவாறு காலி நினைவகத்திற்கேற்ப இயக்ககத்தின் பெயரை தெரிவுசெய்து கொண்டு next என்ற(படம்-13) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

7.13
படம்-13

இறுதியாக தோன்றும் Extend volume என்ற வழிகாட்டியின் திரையில் finish என்ற(படம்-14) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த காலிநினைவகத்தின் விரிவுபடுத்திடும் பணியை முடிவுக்குகொண்டு வருக.

7.14
படம்-14
நினைவகத்தை வரிசைபடுத்திஅடுக்குதல் செய்தல்
கணினியின் நினைவகத்தில் நம்மால் உருவாக்கி எழுதப்படும் கோப்புகள் தாறுமாறாக ஒழுங்கற்று இரைந்து கிடக்கின்றன அவைகளை ஒழுங்குபடுத்தி அருகருகே ஒன்றாக சேர்த்து அடுக்கி வைத்திட்டால் பணிபுரிவதற்கான ஏராளமான காலி நினைவகம் கிடைத்திடும். இந்த செயலிற்காக DiskDefragment என்ற கருவி பயன்படுகின்றது இதனை செயற்படுத்திடுவதற்கு Start=> All programs=>Accessories=> system tools=> DiskDefragment=> என்றவாறு கட்டளை களை செயற்படுத்துக.

7.15
படம்-15
உடன் Disk Defragment என்ற(படம்-15) உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் தேவையான இயக்ககத்தை தெரிவுசெய்து கொண்டுமுதலில் Analysis diskஎன்ற பொத்தானையும் பிறகு defragment diskஎன்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் ஒரிரு மணி காலஅவகாசத்திற்குபிறகு இந்த பணிமுடிவடைந்துவிட்டது இதற்கான அறிக்கை தேவையாவென கேட்டு செய்தி பெட்டியொன்ற திரையில் தோன்றிடும்
மற்ற இயக்ககங்களையும் இவ்வாறே ஒவ்வொன்றாக தெரிவுசெய்துகொண்டு முதலில் Analysis diskஎன்ற பொத்தானையும் பிறகு defragment diskஎன்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு மற்ற இயக்ககத்திலும் செயற்படுத்தி செயல்முடிவுபெற்றபின்னர் closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியினை மூடிவிடுக.
இவ்வாறான பணி அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே செயல்பட்டால் நல்லது என எண்ணிடுவோம் அதற்காக இதே உரையாடல் பெட்டியில் configure scheduleஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Disk Defragment modify scheduleஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் எவ்வளவு கால இடைவெளியில் இந்த செயல் செயற்படவேண்டுமென அமைத்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இதன்பின்னர் நாம் குறிப்பிட்டவாறு காலஇடைவெளியில் நினைவகத்திலுள்ள கோப்புகளை ஒழுங்குபடுத்தி அருகருகே ஒன்றாக சேர்த்து அடுக்கி வைத்திடும்.

கணினியின் இயக்ககம் பழுதடைந்திருக்கின்றதாவென பரிசோதித்து பார்த்திட
நம்முடைய கணினியிலுள்ள ஏதேனும் இயக்ககம் பழுதடைந்திருக்கின்றதாவென பரிசோதித்து பார்ப்பதற்கு

7.16
படம்-16
Start=> Computer=> என்றவாறு கட்டளையை செற்படுத்துக. உடன் Computerஎன்ற சாளரம் திரையில் தோன்றிடும் அதில் பரிசோதித்து பார்க்கவிழையும் இயக்ககத்தை தெரிவு செய்து கொண்டு மேலேயுள்ள செயற்பட்டையின் பட்டியலிலுள்ள propertiesஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் தெரிவுசெய்த இயக்ககத்தின் பெயருடன் songs(D:) properties என்றவாறான(படம்-16) உரையாடல் பெட்டி தோன்றிடும்
அதில் Toolsஎன்ற தாவியின் செயலில் உள்ளதாவென சரிபார்த்து கொள்க இதில் Check nowஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Checking disk songs(D:) என்ற செய்திபெட்டியொன்ற திரையில் தோன்றிடும்
அதில் check disk options என்பதன்கீழுள்ள இரு வாய்ப்புகளில் முதல்வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் பரிசோதிக்கும் பணி நடைபெற்று your device or disk was successfully scanned என்ற செய்தி பெட்டியுடன் பிரச்சினை எதுவுமில்லையென தெரிவிக்கும் அதிலுள்ள close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
மீட்டாக்க புள்ளியை உருவாக்குதல்
Start=> control panel=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் விரியும் control panelஇன் system என்ற சாளரத்தின் இடதுபுற பலகத்திலுள்ள system protection என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
பின்னர் System propertiesஎன்ற (படம்-17)உரையாடல் பெட்டி தோன்றிடும் அத்திரையில் மீட்டாக்கம் செய்ய வேண்டிய இயக்ககத்தை அல்லது இயக்கியை தெரிவுசெய்துகொண்டு Create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் system protection என்ற பெட்டி திரையில் தோன்றிடும் create a restore pointஎன்பதன்கீழுள்ள காலியான உரைபெட்டியில் இந்த மீட்புபுள்ளிக்கு ஒருபெயரை தட்டச்சு செய்து கொண்டு create என்ற (படம்-17)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7.17
படம்-17
உடன் system protection என்ற சிறுபெட்டியானது The restore point was created successfully என்ற செய்தியுடன் தோன்றும் அதிலுள்ள close என்ற(படம்-18) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7.18
படம்-18
இவ்வாறு உருவாக்கிய மீட்பு புள்ளியிலிருந்து மீளப்பெறுவதற்கு Start=> control panel=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் விரியும் control panelஇன் system என்ற சாளரத்தின் இடதுபுற பலகத்திலுள்ள system protection என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் System restore என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரையில் System restore என்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதில் உள்ள next என்ற (படம்-19) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

7.19
படம்-19
பின்னர் தோன்றும் திரையிலும் ஒன்றும் மாறுதல் செய்ய தேவையில்லை யெனில் Next (படம்-20)என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

7.20
படம்-20
அதன்பின்னர் Confirm your restore point என்ற செய்தியுடன் தோன்றிடும் திரையில் finish என்ற (படம்-21)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி முடிவுக்கு கொண்டு வருக.

7.21
படம்-21
இதன்பின்னர் once started system restore can not be interrupted do you want to continue என்ற எச்சரிக்கை செய்தியுடன் தோன்றிடும் பெட்டியில் நம்முடைய செயல்சரிதான் எனில் yesஎன்ற பொத்தானையும் சரிபார்க்கவேண்டுமெனில்no என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக. உடன் கணினியானது நாம் தெரிவுசெய்தற்கேற்ப கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மீட்பு புள்ளியிலிருந்து வெற்றிகரமாக தரவுகளை மீட்கபட்டதாக அதற்கான செய்தியை திரையில் பிரதிபலிக்கசெய்வதுடன் மீண்டும் செயல்படத்துவங்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: