மைக்ரோசாப்ட் ஆஃபிஸ் எக்செல்-2010- தொடர்ச்சி-12

எக்செல்-2003

திரையில் உள்ள இதற்கான குறுக்குவழி உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது Start=> All programs=> Micro soft Office=> Micro Soft excell-2003=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கி செயற்படுத்துக. உடன் எக்செல்-2003 –இன் முகப்பு பக்கம் திரையில் தோன்றும். இயல்புநிலையில் Book1 என்ற பெயரில் நாம் பணிபுரிவதற்காக ஒருபுதிய பணித்தாள் திறந்திருக்கும். மேலுமொரு பணித்தாள்தேவை யெனில் கருவிபட்டியிலிருக்கும் new என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுfile=>new=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்தவுடன் வலதுபுறம் தோன்றிடும் new workbook என்ற செயல் பலகத்தில் உள்ள blank workbook என்ற வாய்ப்பை தெரிவுசெய்தால் நாம் பணிபுரிவதற்காக மேலுமொரு பணித்தாள்திரையில் திறந்து கொள்ளும். பொதுவாக எக்செல்லை திறக்கும்போது இயல்புநிலையில் sheet1, sheet2, sheet3ஆகிய மூன்று பணித்தாள் நாம் பணிபுரிவதற்காக திரையில் தயாராக திறந்திருக்கும்.
இந்த பணித்தாள்ஆனது 65536 கிடைவரிசையும் 256நெடுவரிசையும் சேர்ந்ததாகும் இந்த கிடைவரிசையும் நெடுவரிசையும் சேரும் பகுதியை செல் என்பர் ஒரு பணித்தாளில் ஏறத்தாழ (65536 X 256)16777216 செல்கள் உள்ளன. இந்த கிடை வரிசையானது1.2.3 … 65536 என்ற எண்களின் வரிசையிலும் நெடுவரிசையானது A,B,C,…AA, Az,BA..BZ,ZA…ZZ Ivஎன்றவாறு எழுத்துகளின் வரிசையிலும் இருக்கும். ஒரு செல்லின் முகவரியாக இந்த எண்களையும் எழுத்தையும் சேர்த்து குறிப்பிடுவார்கள் உதாரணமாக A1 என்பது முதல் கிடைவரிசையும் முதல் நெடுவரிசையும் சேர்ந்த முதல் செல்லின்முகவரியாகும்.
இயல்புநிலையில் sheet1 ஆனது செயல்நிலையில் இருக்கும் அவ்வாறு செயல்நிலைக்கு கொண்டுவருவதற்கு sheet1 என குறிப்பிடும் பணித்தாளினுடைய தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அவ்வாறே இடம்சுட்டி பிரதிபலிக்கும் ஒரு செல்லே செயலில் இருக்கும் செல்லாகும் ஒரு செல்லை செயலில் இருக்கும் செல்லாக மாற்றுவதற்கு அதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குக .உடன் அதனை சுற்றியொரு தடிமனான சுற்றெல்லை கோடு ஒன்று தோன்றிடும்.இதனையே Selector எனக்குறிப்பிடுவோம்.
B2 செல்லின்மீது இடம்சுட்டிவைத்து தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் அதில் Janஎன தட்டச்சு செய்க. நாம் தட்டச்சு செய்யும் தரவானது வாய்ப்பாட்டு பட்டியில் தோன்றும் இதன் இடதுபுறம் தற்போது இடம்சுட்டி இருக்கும் செல்முகவரியானது தோன்றும் இந்த பட்டியின் பதிப்பிக்கும் பெட்டியின் தோற்றமும் cancel, Enter ஆகிய கருவிகளுடன் சேர்ந்திருக்கும்.பின்னர் உள்ளீட்டு விசையை அழுத்துக. உடன் இடம்சுட்டியானது B3 செல்லிற்கு சென்றிருக்கும் இவ்விடத்தில் தாவியின் விசையை அழுத்தினால் இடம்சுட்டியானது அடுத்த நெடுவரிசையான C2இற்கு சென்றிருக்கும். அதில் Feb என்ற தரவை தட்டச்சுசெய்து முன்புபோலவே உள்ளீட்டு விசை அல்லது தாவியின் விசையை அழுத்தி அடுத்த கிடைவரிசை அல்லது நெடுவரிசைக்கு செல்க இவ்வாறு தரவுகளை உள்ளீடுசெய்யும் பணி முடிவடைந்த்தும் இடம்சுட்டி A1 செல்லிற்கு கொண்டுவந்து நிறுத்தி கொள்க.
தரவை மாறுதல் செய்ய விரும்பும் செல்லின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானைஇருமுறை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது F2என்ற விசையை அழுத்துக உடன் இடம்சுட்டியானது அந்த செல்லின் தரவிற்குள் சென்று பிரதிபலிக்கும் delete என்ற விசையை அல்லது backspace என்ற விசையை அழுத்துவதன்மூலம் ஏற்கனவே இருக்கும தரவுகளை நீக்கம் செய்து புதிய தரவுகளை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அல்லது தாவியின் விசையை அழுத்துக. உடன் நாம் மாறுதல் செய்த புதிய தரவுகளானது அந்த செல்லில் பிரதிபலிக்கும்.
எக்செல் பணித்தாளை சேமித்தல் இவ்வாறு உருவாக்கிய பணித்தாளை File=> save as=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி யவுடன் தோன்றிடும் save as என்ற உரையாடல் பெட்டியில் இதற்கு ஒருபெயரை file name என்ற பகுதியில் தட்டச்சு செய்து save as typeஎன்ற கீழிறங்கு பட்டியலை திறக்கசெய்து எந்தவகையான கோப்பு என தெரிவுசெய்து save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்து கொள்க.
எக்செல் பணித்தாளை திறத்தல் முதலில் எக்செல்லின் திரையை தோன்ற செய்தவுடன் விரியும் வலதுபுற getting started என்ற பலகத்தில் இருக்கும் open என்பதன் கீழ்உள்ள சமீபத்தில் திறந்து பணிபுரிந்தவைகளில் தேவையான கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விண்டோவின் மேலிருக்கும் open என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும்open என்ற பட்டியில் உள்ள சமீபத்தில் திறந்து பணிபுரிந்தவைகளில் தேவையான கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
அதற்கு பதிலாக விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் File => open=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது Ctrl + O ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக .உடன் open என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் நாம் திறக்க விரும்பும் கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
எக்செல் பணித்தாளை மூடுதல் File=> close=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி நடப்பிலிருக்கும் திரையை மட்டும் மூடச்செய்யலாம் File=> Exist =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி அனைத்து சாளரத்தையும் மூடச்செய்து இந்த பயன்பாட்டிலிருந்து வெளியேறலாம்

12.1

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: