இணையத்தின் காலி பணியிடத்தினை உருவாக்கி பணிபுரிதல்

  இணையத்தில் காலி பணியிடம் ஒன்றினை உருவாக்குதல்
இணைய உலாவியின் முகவரிபட்டையில் home.live.com என்றவாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. பின்னர் தோன்றிடும் திரையில் sign up என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக. அதன் பின்னர் விரியும் திரையில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து இந்த இணைய தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கினை தொடங்குக.

1

பின்னர் இணைய உலாவியின் முகவரிபட்டையில் http://www.workspace.office.live.com/ என்றவாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. உடன் தோன்றிடும் திரையில் sign inஎன்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் விரியும் திரையில் பயனாளரின் பெயரையும் கடவுச்சொல்லையும் உள்ளீடுசெய்துஉள்ளீட்டு விசையை அழுத்துக.

பிறகு தோன்றிடும் Office Live Workspace என்ற திரையின் இடதுபுற பலகத்தில் My workspace என்பதன் கீழுள்ள New என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் create workspace என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும். அதில்தேவையான வகையை தெரிவுசெய்து சொடுக்குக
அதன்பின்னர் தோன்றிடும் திரையில் இதற்கான பெயர் ஒன்றினையும் இதற்கான விவரத்தையும் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக.
இணையத்தில் பணியிடம் திறந்து கோப்பினை பதிவேற்றம் செய்தல்
பின்னர் Office Live Workspace என்ற திரையின் இடதுபுற பலகத்தில் My workspace என்பதன் கீழுள்ள நம்முடைய இணையகாலிபணியிடத்தை தெரிவுசெய்துகொள்க. அதன்பின்னர் Add documents என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்open என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் நாம் பதிவேற்றம் செய்யவிரும்பும் கோப்பினை தெரிவுசெய்து கொள்க ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் எனில் ctrl என்ற விசைய அழுத்தி பிடித்துகொண்டு தேவையானவைகளை தெரிவுசெய்துகொண்டு open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் தெரிவுசெய்த கோப்புகள் நம்முடைய இணையத்தின் காலிபணியிடத்தில் சேர்ந்துவிடும்.
.இணையத்தின் காலி பணியிடத்தினை திறந்து பணிபுரிதல்
நம்முடைய இணையகாலிபணியிடத்தினை திறந்து கொள்க அதில் வலதுபுற பலகத்தில் உள்ள new என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் பட்டியில் இருந்து எந்தவகை என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் புதிய கோப்பு ஒன்று உங்களுக்காக உருவாகி விடும் அதில் தேவையான தரவுகளை உள்ளீடு செய்து closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்இந்த கோப்பினை சேமிக்கவாஎன கோரும் செய்தி பெட்டி யொன்று தோன்றிடும் ஆம்எனில் அதிலுள்ள save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த கோப்பானது நம்முடைய சொந்த இணையத்தின் காலிபணியிடத்தில் சேமிக்கப்பட்டுவிடும்.
பின்னர் இந்த கோப்பின் இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வதன் வாயிலாக இததனை திறந்து கொண்டு Edit என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எச்சரிக்கை செய்திபெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் இந்த கோப்பில் தேவையான மாற்றங்களை செய்துகொண்டு விண்டோவின் மேல்பகுதியிலுள்ள விரைவு அனுகல் கருவிபெட்டியிலுள்ள (quick access toolbar
) save என்ற பொத்தானையும் closeஎன்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த கோப்பு நம்முடைய இணையத்தின் காலிபணியிடத்தில் சேமிக்கப்பட்டுவிடும்.நாம் இவ்வாறு திருத்தம் செய்து சேமிப்பது 12 மணிநேரத்திற்கு பிறகுஎனில் அதேகோப்பின் பெயரில் புதிய பதிப்பெண்ணுடன் சேமிக்கப்படும் இதனால் திருத்தம் செய்யப்படும் எந்த நிலையிலுள்ள கோப்பினையும் நாம் திறந்து பார்வையிடமுடியும்.
.இணையத்தின் காலிபணியிடத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்
நம்முடைய இந்த இணையத்தின்காலி பணியிடத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும் அதற்காக இந்த திரையில் உள்ள share என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்Office Live Workspace ஆனது ஒரு மின்னஞ்சல் அழைப்பை உருவாக்கிவிடும் அதில் நம்முடைய ஆவணத்தில் திருத்தம் செய்ய அனுமதிப்பவர்களின் முகவரியை Editors என்பதிலும் ஆவணத்தினை பார்வையிட அனுமதிப்பவர்களின் முகவரியை viewers என்பதிலும் உள்ளீடு செய்து message என்ற பகுதியில் இந்த அழைப்பிற்கான செய்தியை தட்டச்சு செய்து send என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
இதன்பின்னர் நம்முடைய இந்த இணையத்தின் காலிபணியிடத்தினை திறந்து பார்வையிட்டால் அதில் யார்யாரெல்லாம் இதனை பகிர்ந்து கொள்கின்றார்கள் என்ற விவரத்துடன் பகிர்ந்து கொள்ளும் உருவபொத்தான் தோன்றும் மேலும் புதிய நபர்களை அனுமதிப்பதற்கு share with more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அனுமதியை நீக்கம்செய்ய stop sharing என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
Office Live Workspace என்ற திரையின் இடதுபுற பலகத்தில் share with me என்பதன் கீழுள்ள பகிர்ந்துகொள்ளும் நம்முடைய இணையத்தின் காலி பணியிடத்தனை திறந்து கொண்டு அதிலுள்ள கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் பகிர்ந்து கொள்ளும் கோப்பானது திறந்துகொள்ளும் அதில் ஏதேனும் கருத்துகளை சேர்ப்பதற்கு Comment என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Add Comments என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் அல்லது உருவாகும் பலூனிற்குள் தேவையான கருத்துகளை தட்டச்சு செய்து close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் பார்வையாளருக்கு இந்த கோப்பினை பற்றிய கருத்து காட்சியாக அளிக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: