விண்டோ-7 இயக்கமுறைமை -தொடர்-11

கணினியின் திறனை உயர்த்துதல்

 கணினியின் தொடக்க இயக்கத்திற்காக  ஆகும் நேரத்தை குறைத்தல்

கணினியை இயக்கத்தொடங்கும்போது அதிகஅளவிற்கு நேரத்தை எடுத்துகொள்வது நமக்கு மிகஎரிச்சலூட்டும் செயலாக அமைகின்றது இதனை பின்வரும் மூன்று வழிகளில் தவிர்க்கலாம்

1.கணினியின் தொடக்க இயக்கத்தின்போது தேவையற்ற கட்டளைத்தொடர்களும்சேர்ந்து இயங்க துவங்குவதை தவிர்த்தல்.

2அவசியமற்ற கட்டளைத்தொடர்களை காலம்தாழ்த்தி தொடங்குமாறுசெய்தல்

3.ஸ்பைவேரை நீக்கம் செய்தல்

  எதிர்நச்சுநிரல் கட்டளைத்தொடர் போன்றவை கணினியின் தொடக்க இயக்கத்தின் போதே  இயங்க தொடங்கவேண்டும்   செய்தியாளர் கட்டளைத்தொடர் போன்றவை சிறிது காலம் தாழ்த்தி இயங்கலாம் அதனால் இவைகளை மாற்றியமைப்பற்காகstartup delaye என்ற பயன்பாடு பெரிதும் உபயோகமாக உள்ளது. இதன்மூலம் எந்தெந்த கட்டளைத்தொடர் எவ்வளவு கால இடைவெளியில் இயங்கதுவங்கவேண்டும்என அமைத்துவிட்டால் அந்தந்த காலஇடைவெளியில் நாம்குறிப்பிட்ட கட்டளைத்தொடர்கள் அவ்வாறே இயங்க ஆரம்பிக்கும் அதனால் கணினியின் தொடக்கமும் செயல்வேகமும் அதிகரிக்கின்றது.

கணினியின் திறனை மதிப்பிடுதல்

விண்டோ7இல் இருக்கும் திறன் அறிவிக்கும் கருவியானது கணினியின் திறனை மதிப்பிடஉதவுகின்றது அதற்காக

  Start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் startஎன்றபட்டியலின் தேடிடும் பெட்டியில் perf   என தட்டச்சு செய்திடுக.உடன் விரியும் startஎன்றபட்டியலின் திரையில் performance information and tools என்ற கட்டளையை தெரிவுசெய்து  சொடுக்குக.

  பின்னர் தோன்றிடும் திரையில் rate this computer என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. தொடர்ந்து இதனை செயல்படுத்துவதற்கு சுமார் 25 நிமிட நேரம் எடுத்துகொள்ளும் இந்த ஆய்வு முடிந்தவுடன் எவ்வாறு கணினியின் திறனை உயர்த்தமுடியும் என்ற ஆலோசனையை விண்டோ7 ஆனது உங்களுக்கு வழங்கும்.

SATA Disk இன் திறனை உயர்த்துதல்

Start=>Control panel=>device manager=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி device mangerஐ (படம்-15.1)திரையில் தோன்றசெய்க.

15.1

படம்-15.1

 அதிலுள்ள Disk drive என்பதன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின்வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் உங்களுடைய கணினியின் வன்தட்டின்பெயர் விரிவடையும்  அதன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின்வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் சிறுபட்டியலில் properties என்பதை தெரிவு செய்து  சொடுக்குக. உடன் device properties என்ற  (படம்-15.1)உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் policies என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக பின்னர்விரியும் policies என்ற தாவியின்திரையில்  write  cashing policy என்பதன்விசைழுள்ள Enable write cashing on the deviceஎன்ற தேர்வு செய்பெட்டியை தெரிவுசெய்க.

 இந்நிலையில் வெளிப்புற வன்தட்டை இணைத்து பயன்படுத்துவதாக இருந்தால்turnoff windows write-cache buffer flushing on the device  என்ற தேர்வு செய்பெட்டியையும் தெரிவுசெய்து கொண்டு. okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக.

Ready boost ஐ பயன்படுத்தி கட்டளைத்தொடர் இயக்கத்தை வேகபடுத்துக.

Ready boost என்றால் என்ன  யூஎஸ்பி வாயிலாக கூடுதலான தற்காலிநினைவ கத்தை கணினியுடன் இணைத்து செயல்வேகத்தை அதிகபடுத்துதலையே Ready boost ஆகும்.

 வன்தட்டிற்கும் செயலிக்குமிடையே இடைநிலை நிணைவகமாகவும் ரேமைவிட சிறந்த வகையிலும் அடுத்தமுறை பயன்படுத்தும்போதும் ஒரு கட்டளைத்தொடர் செயல் படுவதற்கு தேவையான தரவுகளை இதிலிருந்து எடுத்து பயன்படுத்தி கொள்ளவும் இந்த Ready boost  உதவுகின்றது.

குறைந்தபட்சம் 256எம்பி காலிஇடமுள்ள யூஎஸ்பி இயக்க்கம் போதுமானது இதனை  கணினின் யூஎஸ்பி வாயிலில் பொருத்திகொள்க

15.2

படம்-15.2

பின்னர் தோன்றிடும் Auto play என்ற (படம்-15.2) பட்டியலில் உள்ள speed up my systemஎன்ற கட்டளையை தெரிவுசெய்து  சொடுக்குக

பிறகு தோன்றிடும் திரையில்வேகபடுத்த நினைக்கும் சாதணங்களின் இயக்கிகளை  தெரிவு செய்துகொண்டு ready boost  என்ற  (படம்-15.3)தாவியின் திரையில் உள்ள Use the device  என்பதை தெரிவுசெய்துகொள்க. பின்பு space to reserve for system  speed என்பதிலுள்ள  நகர்வியை பொருத்தமான அளவிற்கு நகர்த்தி அமைத்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

15.3

படம்-15.3

விண்டோவின் இயக்கத்தை நிறுத்தும் செயலை விரைவாக்குதல்

விண்டோவின் இயக்கத்தை நிறுத்தவிழையும்போது விண்டோ7ஆனது தற்போது கணினியில் இயங்கிகொண்டிருக்கும் அனைத்து பயன்பாடுகளும் தற்போதைய நிலையில் சேமித்து அவைகளின் இயக்கத்தை நிறுத்தியபின்னரே தன்னுடைய இயக்கத்தை நிறுத்தும் இதற்குசிறிது கூடுதலான நேரம் எடுத்துகொள்ளும் இதனை விரைவுபடுத்துவதற்காக.

1.விண்டோவினுடைய ஆவணப்பதிப்பாளரை (படம்-15.4) திறந்து கொள்க

15.4

படம்-15.4

2.பின்னர தோன்றும் திரையின் வலதுபுற பலகத்தின் wait to kill service என்பதை  (படம்-15.5) கண்டுபிடித்து அதன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

15.5

படம்-15.5

  1. உடன்தோன்றிடும் சுருக்குவழிபட்டியலில் modify என்ற (படம்-15.5) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

15.6

படம்-15.6

4.பின்னர்தோன்றிடும்   edit string என்ற பெட்டியில்value dataஎன்பதன்விசைழ்  4000 என்றவாறு மதிப்பினை (படம்-15.6) தட்டச்சு செய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இதன்பின்னர் விண்டோ7 ஐ நிறுத்தம்செய்யும்போது நிறுத்தும் செயல் மிகவிரைவாக நடைபெறவதை காணலாம்.

குறிப்பு இங்கு இவ்வாறான மாற்றம் செய்கின்ற மதிப்பானது 4 நொடியைவிட குறைவாக செய்யவேண்டாம்

ரேம்நினைவகத்தின் பிரச்சினையை ஆய்வுசெய்தல்

ரேம் நினைவகம் பழுதடைந்துவிட்டநிலையில் எவ்வாறு இந்த பிரச்சினை யிலிருந்து மீள்வது என தவித்து கொண்டிருப்போம் இந்நிலையில் Start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Start என்றபட்டியலில் mem   என தட்டச்சுசெய்தவுடன் விரியும் திரையில் windows mem ory diagnostic  என்ற கட்டளையை தெரிவுசெய்து  சொடுக்குக.

 உடன் தோன்றும்windows memory diagnosticஎன்ற  (படம்-15.7)திரையில்  restart now and check for proplems (recommended) என்ற கட்டளையை தெரிவுசெய்து  சொடுக்குக.

15.7

படம்-15.7

 உடன் கணினியின் இயக்கம் நிறுத்தம்  (படம்-15.8)செய்யப்பட்டு மீண்டும்  இயங்கதுவங்கும்

15.8

படம்-15.8

ஆயினும் memory diagnostic என்ற செயல்நடைபெற்றுகொண்டேயிருக்கும் (படம்-15.9) இதற்காக ஒருசில மணிநேர காலஅவகாசம் எடுத்துகொள்ளும்

15.9

படம்-15.9

ஒருவழியாக பரிசோதிக்கும் பணி நிறைவுபெறும் இறுதியாக  பிழைசுட்டும் அறிக்கையை நமக்களித்தவிட்டு கணினியானது மீண்டும் (படம்-15.10)  இயங்கதுவங்கும்

     15.10

படம்-15.10

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: