மைக்ரோசாப்ட் ஆஃபிஸ் எக்செல்-2010- தொடர்ச்சி-11

 கவணித்தல் சாளரத்தை தோன்றச்செய்தல்

  விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் formula என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  formula என்ற தாவியின் பட்டியில்   formula auditing   என்ற குழுவி லுள்ள watch  window  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் watch  window  என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில்  Add watch என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் Add  watch  window  என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில்  select the cell that you would like to watch  the value of என்பதில் இந்த செயலின் விளைவை பார்த்திட  விரும்பும் செல்லின் சுட்டு எண்ணை தட்டச்சு செய்க. அல்லது இதன் அருகிலிருக்கும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்கி தேவையானதை தெரிவுசெய்து கொண்டு add என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக. இறுதியாக   X என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக. உடன் கவணித்தல் சாளரத்தில் இந்த செல்லின் விவரம் தோன்றிடும் இந்த கவணித்தல் சாளரத்திலுள்ள Delete watchஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனை மூடிவிடலாம்

1

 வரைபடத்தை உருவாக்குதல்

 முதலில் வரைபடம் உருவாக்குவதற்கு தேவையான தரவுகளை தெரிவு செய்து கொண்டு சாளரத்தின் மேல்  insert என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்  insert என்ற தாவியின் பட்டி திரையில் தோன்றும் அதில் chartஎன்ற குழுவிலுள்ள வரைபடத்தின் வகைகளில் நாம் விரும்பிய ஒன்றை  தெரிவுசெய்து சொடுக்குக. உடன்  எக்செல்ஆனது நாம் விரும்பிய வாறான வரைபடம் ஒன்றினை உருவாக்கி விடும். இதனோடு மேலே design என்ற தாவியின் பட்டி  திரையில் தோன்றும். தேவை யானால் இந்த வரைபடத்தை திருத்தி வடிவமைப்பு செய்துகொள்ளலாம். அதுபோன்றே Layout  , format ஆகிய தாவியின் பட்டி  திரைக்கு சென்று . தேவையானால் இந்த வரைபடத்தை திருத்தி வடிவமைப்பு செய்துகொள்ளலாம்.

2

 வரைபடத்தின் அருகில் காலியாகஇருக்கும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த வரைபடத்தை சுற்றி ஒரு சுற்றெல்லை யொன்று செவ்வக பெட்டி போன்று தோன்றிடும். பின்னர் அந்த சுற்றெல்லை கோட்டின்மீது இடம்சுட்டியை கொண்டு செல்க. உடன் இடம்சுட்டியின் உருவம் இருதலை உள்ள அம்புக்குறி போன்று உருமாறி விடும் அதனை அப்படியே பிடித்து இழுத்து செல்வதன் மூலம் இந்த வரைபடத்தின் அளவை மாற்றியமைக்கலாம்.

  வரைபடத்தை வேறு இடத்திற்கு நகர்த்துதல்

 இவ்வாறே வரைடத்தின் அருகில் காலியாகஇருக்கும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த வரைடத்தை சுற்றி ஒருசுற்றெல்லை யொன்று செவ்வக பெட்டி போன்று தோன்றிடும். பின்னர் சுட்டியின் பொத்தானை பிடித்து  இந்த வரைபடத்தை பிடித்து இழுத்துசென்று தேவையான புதிய இடத்தில் விட்டிடுக.

    இந்த வரைடத்தை உருவாக்கும்போது தோன்றிய design என்ற தாவிபட்டியின் திரையில் Location என்ற குழுவின் கீழ் move chart என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  move chart என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும். அதில் new worksheet என்பதை தெரிவு செய்து கொண்டு ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் புதிய பணித்தாளிற்குள் இந்த வரைடம் மாறியமையும்.

3

 வரைடத்தினை நீக்கம் செய்தல்

 தரவுகளிருக்கும்  பணித்தாளிலேயே வரைபடம் இருந்தால் வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து Deleteஎன்ற விசையை அழுத்துக. உடன் இந்த வரைபடம் ஆனது எக்செல் தாளிலிருந்து நீக்கப்பட்டு விடும். புதிய பணித்தாளில் வரைபடம் இருந்தால்  பணித்தாளின் தாவியின் பொத்தானில்  இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் குறுக்கு வழி பட்டியில் Deleteஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த வரைபடம் ஆனது எக்செல் தாளிலிருந்து நீக்கப்பட்டுவிடும்

வரைடத்தின் வகையை மாற்றம் செய்தல்

 .    மாற்றம் செய்திட விரும்பும் வரைபடத்தின் அருகில் காலியாகஇருக்கும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலுள்ள design என்ற தாவியின் பட்டியின் திரையில் type என்ற குழுவிலுள்ள Change  chart type  என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன்  change  chart  type என்றஉரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும். அதன் இடதுபுறபலகத்தில் விரியும் வரைபடத்தின் வகைகளில் ஒன்றை  தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் வலதுபுற பலகத்தின் நாம் தெரிவுசெய்த வகையின் பல்வேறு வகையிலொன்றை தெரிவுசெய்து கொண்டு ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

4

வரைபடத்தின் பாவணையை மாற்றம் செய்தல்

 மாற்றம் செய்திட விரும்பும் வரைபடத்தின் அருகிலுள்ள காலி இடத்தில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலுள்ள design என்ற தாவியின் பட்டித் திரையில் chart style என்ற குழுவில் உள்ளவை களில் தேவையான ஒன்றை  தெரிவுசெய்து சொடுக்குக. மேலும் தேவையெனில் more  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பலகத்திலிருந்து விரும்பியதை தெரிவுசெய்து கொள்க.

5

 காட்சிப்பொருட்களை மாற்றுதல்

  தேவையான வரைபடத்தை தெரிவுசெய்துகொள்க. பின்னர் சாளரத்தின் மேல்பகுதியிலிருக்கும்  format என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  format என்ற தாவியின் பட்டியில்   current  selection   என்ற குழுவிலுள்ள format selection  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் format legend  என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் இடதுபுற பலகத்தில் உள்ள வாய்ப்புகளில் legend option என்ற வாய்ப்பைமட்டும் தெரிவு செய்து சொடுக்குக. பின்னர் வலதுபுற பலகத்தில்  விரியும் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவு செய்து கொள்க.அதன் பின்னர் close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உ்ரையாடல் பெட்டியை மூடிவிடுக.

6

   மாற்றம் செய்திட விரும்பும் வரைபடத்தின் அருகில் காலியாகஇருக்கும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலுள்ள layout என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் layout  என்ற தாவியின் பட்டியின் திரையில் type என்ற குழுவின் கீழ் Grid line  என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன்   விரியும் கீழிறங்கு பட்டியிலிருந்து primary horizontal ,grid lines primary vertical  grid lines ஆகிய வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தேவையானவாறு வரிகள் படத்தில் உள்ளிணைந்து விடும்.

7

  மாற்றம் செய்திட விரும்பும் வரைபடத்தினை தெரிவுசெய்து கொண்டு விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் Design என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் Design என்ற தாவியின் பட்டியினுடைய திரையில் data என்ற குழுவின் கீழ் select data என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் select data source என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் கூடவே இந்த வரைபடம் உருவாவதற்கு காரணமான தரவுகள் தெரிவுசெய்யப்பட்டு மேம்படுத்தி காண்பிக்கப்படும்.  இந்த உரையாடல் பெட்டி chart data rangeஎன்ற பகுதியில் தேவையானவாறு மேலும் கூடுதலாகவோ  அல்லது குறைத்தோ  தரவின் சுற்றெல்லையை தெரிவு செய்து கொள்க. அவ்வாறே இதே உரையாடல்பெட்டியை பயன்படுத்தி series ,axis  போன்றவைகளையும் மாறுதல் செய்து கொண்டு  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

8சிறுபொறி (spark lines) எனும் சிறு வரைபடம்

எம்எஸ் ஆஃபிஸ் எக்செல்-2010-இன் தாளில் அட்டவணையாக இருக்கும் தரவுகளை வரைபடங்களாக உருவாக்கினால் நாம் கூறவரும் செய்தி பார்வையாளர்களை எளிதில் சென்றடையும்.ஆனால் இந்த  தரவுகளை கொண்டு சிறந்த வரை படங்களை உருவாக்குவது தான் மிகசிக்கலானதும் அதிக சிரமமானதுமான  செயலாகும் . ஆனால் ஆஃபிஸ் -2010 இல் இந்த தரவுகளை கொண்டு சிறு(miniature) வரை படங்களை உருவாக்கு வதற்கான spark lines என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான வரைபடத்தை உருவாக்கிட விரும்பும் கிடைவரிசை தரவுகளை முதலில் தெரிவுசெய்துகொள்க. பின்னர் insertஎன்ற தாவியின் பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும்  insertஎன்ற தாவியினுடைய பட்டியின் திரையில் spark lines என்ற குழுவிலுள்ள வகைகளில் column என்றவாறு வகையை தெரிவுசெய்து தெரிவுசெய்து சொடுக்குக.

9

  உடன் create spark lines என்ற சிறு உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் data range என்பதில் ஏற்கனவே தெரிவுசெய்யபட்டுள்ள தரவுகளின் சுற்றெல்லை பிரிதிபலிக்கும் மேலும் வேண்டுமெனில் வேறு புதியதாக தெரிவுசெய்துகொள்க.  location rangeஎன்பதில்  இந்த வரைபடம் எங்கு அமையவேண்டுமென குறிப்பிட்டு  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் சிறுபொறி (spark lines) எனும் வரைபடம் நாம்தெரிவுசெய்த பகுதியில் தோன்றிடும்

10

 இதனுடைய  வரைபடத்தை மேலும் வடிவமைப்பு செய்வதற்கு உதவிடும் பல்வேறு கருவிகளடங்கிய  Spark line Tools Design என்ற தாவியினுடைய பட்டி திரையில் தோன்றிடும் இதில் type என்ற குழுவிலுள்ள  கருவிகள்  இந்த வரைபடத்தின் வகையை(Type) மாற்றி யமைத்து கெள்ளவும் style  என்ற கருவி வரைபடத்தின் பாணியை(Style)  மாற்றியமைத்திட உதவும் கருவியையும் கொண்டுள்ளன. இதிலுள்ள Edit data  என்ற கீழிறங்கு பட்டியினுடைய  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன்  Edit spark lines  என்ற சிறு உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் data range என்பதில் தேவையெனில் தரவு களிருக்கும் வேறு ஒரு இடத்தை  மாற்றி தெரிவுசெய்து கொள்க. அவ்வாறே வரைபடம் அமைந்திருக்கும் இடத்தையும் மாற்றியமைத்திட location  range என்பதில் தெரிவு செய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

11

 உடன் நாம் தெரிவுசெய்த வேறு இடத்திலுள்ள தரவுகளுக்கான புதிய வரைபடம் ஆனது  புதிய இடத்தில் உருவாகி வீற்றிருக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: