இணயத்தின் மூலம் காலி பணியிடத்தில் பணிபுரிதல் – தொடர்-11

இணையஉலாவியை தோன்றும் பிழைச்செய்தியை எவ்வாறு தவிர்ப்பது

1

படம்-1

  மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் இணையஉலாவியை பயன்படுத்தி இணையத் தில் உலாவரும்போதுபடம்-1இல் கண்டுள்ளவாறு அவ்வப்போது பிழைச் செய்தியொன்று திரையில் காண்பிக்கும். இவ்வாறான தொல்லையை எவ்வாறு சரிசெய்வது என இப்போது காண்போம்.

இந்த இணைய உலாவித்திரையின் மேல் பகுதியிலி ருக்கும் கட்டளைபட்டியிலுள்ள Tools -> Internet Options  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் Internet Options என்ற உரையாடல்பெட்டியில்  Browsing history என்பதன்கீழுள்ள  Delete என்ற பொத்தானை  (படம்-2) தெரிவுசெய்து சொடுக்குக.

2

படம்-2

   பின்னர்  Start -> Control Panel -> System என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் System Properties என்ற உரையாடல்பெட்டியில் System Restore என்றதாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்க.உடன் படம்-3 இல் உள்ளவாறு விரியும் System Restore  என்ற தாவியின் திரையில் Turn off System Restore என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு Apply ,okஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக.

3

படம்-3

  அதன் பின்னர்  கணினியானது ஏதேனும் நச்சுநிரல்களால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சரிசெய்வதற்கு AdAware SEஎன்பதை நீக்கம்செய்திட என்ற  http://www.lavasoftusa.com/single/trialpay.php வலைதளத்தி லிருந்தும் SpyBot Search and Destroy என்பதை நீக்கம்செய்திட என்ற http://www.safer-networking.org/en/mirrors/index.html வலைதளத் திலிருந்தும்   CCleaner என்பதை நீக்கம்செய்திட என்ற http://www.ccleaner.com/ வலை தளத்திலிருந்தும் தேவையான எதிர்நச்சுநிரல் மென்பொருள்களை  பதிவிறக்கம் செய்து நிறுவகைசெய்து  இயக்கிகொள்க

  பின்னர்  கணினியின் இயக்கத்தை நிறுத்தி safe mode இல் மீண்டும் இயக்கி  perform a System Scan என்ற கருவியை  பயன்படுத்தி கணினியை சரிபார்க்கவும்.

  அவ்வாறே  System File Checker என்பதை பயன்படுத்தி விண்டோவால் பாதுகாக்கப்பட்ட கோப்புகளில் திருத்தங்கள் அல்லது மாறுதல்கள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதாவென சரிபார்த்துகொள்க. ஏதேனும் கோப்புகள் மேலெழுதப்பட்டும் அல்லது நீக்கம் செய்யப்பட்டும் இருந்தால்   அவைகளை உடனடியாக இந்த SFC என்பது பழையநிலையில் மீட்டெடுத்துவிடும் இதனை செயற்படுத்திடுவதற்காக Start => Run =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் தோன்றும் Run என்ற பகுதியில் CMD என்று தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை தட்டுக. பின்னர்தோன்றும் விண்டோவில்  sfc /scan now என்ற கட்டளைவரியை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை தட்டுக.

பின்னர் இணைய உலாவியின் கோப்புகளை மறுபதிவு செய்திட வேண்டும் அதற்காக Start => Run =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் தோன்றும் Run என்ற பகுதியில் CMD என்று தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை தட்டுக. பின்னர்தோன்றும் கட்டளை விண்டோவில்

regsvr32 softpub.dll
regsvr32 wintrust.dll
regsvr32 initpki.dll
regsvr32 dssenh.dll
regsvr32 rsaenh.dll
regsvr32 gpkcsp.dll
regsvr32 sccbase.dll
regsvr32 slbcsp.dll
regsvr32 cryptdlg.dll

 ஆகிய கட்டளைவரிகளை ஒவ்வொரு வரியாக தட்டச்சு செய்து ஒவ்வொரு முறையும் உள்ளீட்டு விசையை தட்டுக.

  பின்னர் இந்த மைக்ரோசாப்ட் இணைய உலாவியில் வேறு நிறுவனத்தால் வழங்கப்பட்ட கூடுதல்வசதி ஏதேனுமிருந்தால்  அவைகளின் இயக்கத்தை முடக்கம்(Disable)செய்துவிடுக.

   அதற்காக Start=> Control Panel=> Internet Options=> என்றவாறு கட்டளைவரிகளை செயற்படுத்துக.உடன் தோன்றும் Internet Options என்ற திரையில் Advanced என்றதாவியின் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் Advanced என்ற தாவியின் திரையில் Enable third party browser extensions என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு Apply ,okஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக.

 இதன்பின்னர் மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் இணையஉலாவியை பயன்படுத்தி இணையத் தில் உலாவரும்போதுபடம்-1இல் கண்டுள்ளவாறு பிழைச் செய்தியெதுவும் அவ்வப்போது தோன்றி நமக்குதொல்லை கொடுக்காது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: