விண்டோ-7 இயக்கமுறைமை -தொடர்-10

வாடிக்கையாளர் விரும்பியவாறு செய்தல்

விண்டோ7 இன் முக்கிய உறுப்புகளான start எனும் பட்டியல் ,செயல்பட்டை, கணினியின் திரை, கணினியின் தட்டு (system tray)  ஆகியவற்றின் தோற்றத்தை நாம்விரும்பியவாறு மாற்றியமைக்கலாம் இதன்மூலம் விண்டோ7 இனுடைய செயல்திறன்கூட உயருகின்றது அதற்காக முதலில்  start எனும் பட்டியலை எவ்வாறு மாற்றியமைப்பது என காண்போம்.

start எனும் பட்டியலை மாற்றியமைப்பது

கணினியின்திரையின் கீழே இடதுபுறமூலையிலுள்ள start எனும் பட்டியலை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் சுருக்குவழி பட்டியலில் properties என்ற (படம்-14.1)கட்டளையை  தெரிவுசெய்து சொடுக்குக.

14.1

படம்-14.1

உடன்திரையில் தோன்றும்Taskbar and start menu propertiesஎன்ற(படம்-14.2) உரையாடல் பெட்டியில்   start menu என்ற தாவியின் திரையை விரியசெய்க. பின்னர் இதிலுள்ளcustomize என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக.உடன் customize  start menu என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில்  தோன்றும் அதில் தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொண்டு ok என்ற பொத்தானையும் அதன்பின்னர் Taskbar and start menu propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக.

 14.2

படம்-14.2

கட்டளைத்தொடர் பட்டியலை விரும்பியவாறு மாற்றியமைத்தல்

கணினியின்திரையின் கீழே இடதுபுறமூலையிலுள்ள start பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் start எனும் பட்டியலில்All programs என்பதின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் சுருக்குவழி பட்டியலில் open all users என்ற (படம்-14.3)கட்டளையை  தெரிவுசெய்து சொடுக்குக.

14.3

படம்-14.3

பிறகு தோன்றிடும் சாளரத்தின் விரிவான(படம்-14.4) திரையில் மடிப்பகங்களின் பெயரையும் இணைப்பையும் நாம்விரும்பியவாறு மாற்றி யமைக்கலாம் அதுமட்டு மல்லாது படிக்க மட்டும் என்ற கோப்புகளுக்கும் உதவி கோப்புகளுக்குமான சுருக்குவழிகளை நீக்கம்செய்யலாம் ஏன் இவைகளுக்கான இணைப்பையும் நிறுவுகையையும் நீக்கிவிடலாம் .இதனால் தேவையற்ற கட்டளைத்தொடர்களுக்கான  சுருக்குவழிகள் மட்டுமே நீக்கம் செய்யப்படும் இதன்பயனாக விண்டோ7 இன் தொடக்கம் விரைவாக நடைபெறும்

14.4

படம்-14.4

கணினியின் திரையின் கீழே இடதுபுறமூலையிலுள்ள start எனும் பொத்தானை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் சுருக்குவழி பட்டியலில்properties என்ற கட்டளையை தெரிவுசெய்து  சொடுக்குக.

உடன்திரையில் தோன்றும் Taskbar and start menu propertiesஎன்ற உரையாடல் பெட்டியில்start menu என்றதாவியின் திரையை விரியசெய்க. பின்னர் இதிலுள்ள power button action என்பதற்கு (படம்-14.5)அருகிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான வாய்ப்பை தெரிவு செய்து கொண்டு முதலில் apply என்ற பொத்தானையும் பின்னர் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து  சொடுக்குக.

14.5

படம்-14.5

கணினியின் திரையிலுள்ள உருவ பொத்தான்களின் உருவத்தை மாற்றியமைக்கலாம்

கணினியின் திரையில் காலியான இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் சுருக்குவழி பட்டியலில் personalization என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

14.6

படம்-14.6

பிறகு விரியும்control panel personalization என்ற(படம்-14.6) திரையின் இடதுபுற பலகத்தில் இருக்கும் Change desktop icons என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் தோன்றும்   Desktop icons settings என்ற உரையாடல் பெட்டியில்  Desktop icons  என்பதன் கீழுள்ள பொருட்களில் மாறுதல் செய்யவிரும்புவைகளை மட்டும் ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டு change icons என்ற பொத்தானை  தெரிவுசெய்து  சொடுக்குக.உடன் திரையில் விரியும் change icons என்ற உரையாடல் பெட்டியில்  தேவையான உருவபடத்தை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானையும் பின்னர் Desktop icons settings என்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து  சொடுக்குக. உடன் கணினியின் திரையில் இருக்கும் உருவ பொத்தான்களின் உருவம் மாறியிருப்பதை காணலாம்.

இவ்வாறே  கணினியின் திரையில் காட்சியளிக்கும் உருவபொத்தான்களின் உருவ அளவையும் வரிசையும் மாற்றியமைக்கலாம் அதற்காக

14.7

படம்-14.7

கணினியின் திரையில் காலியான இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் சுருக்குவழி பட்டியலில் view என்ற கட்டளையை தெரிவு செய்து  சொடுக்குக. பின்னர் விரியும் சிறுபட்டியலிலுள்ள Auto arrange icons என்ற(படம்-14.7) கட்டளையை தெரிவுசெய்தால் தானாகவே அகரவரிசைபடி உருவ பொத்தான்களை கணினியின்  திரையில் அடுக்கிவைத்திடும். show desktop icons என்பதை தெரிவுசெய்யாது விட்டால் கணினியின்  திரையில் உருவ பொத்தான்கள் எதுவும் தோன்றாது show desktop icons என்பதை தெரிவுசெய்திருந்தால் கணினியின்  திரையில் உருவ பொத்தான்கள்  தோன்றும் large icons, small icons, medium icons ஆகியவற்றில் நாம் தெரிவுசெய்வதற்கேற்ப உருவபொத்தான்களின் உருவஅளவு அமையும்

இடம்சுட்டியை மாற்றியமைத்தல்.

14.8

படம்-14.8

Start => control panel => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்தவுடன் தோன்றும்  control panel -All control panel items என்ற சாளரத்தில்   adjust your computer settings என்பதன் கீழுள்ள பட்டியலிலிருந்து   mouseஎன்பதை தெரிவுசெய்து  சொடுக்குக.  உடன் திரையில் விரியும் mouse propertiesஎன்ற (படம்-14.8)உரையாடல் பெட்டியில்  button என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக. பிறகு button என்ற தாவியின் திரையில்  double click speed  என்பதன் கீழுள்ள நகர்வியை(slider)  நாம் விரும்பும் வேகத்தில் சுட்டி செயல்படுமாறு நகர்த்தி அமைத்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.

அவ்வாறே இதே mouse propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் pointer options என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக. பின்னர் pointer options என்ற தாவியின் திரையில் இடம்சுட்டியை நகர்த்திடும் போது அதன்தோற்றம் எவ்வாறு அமைய வேண்டு மெனவும்  இடம்சுட்டி எவ்வாற செயல்படவேண்டும் எனவும் அமைத்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.

14.9

படம்-14.9

அவ்வாறே இதே mouse propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் wheel என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக. பின்னர் தோன்றிடும்Wheel  என்ற (படம்-14.9)தாவியின் திரையில் இடம்சுட்டியை  நகர்த்திடும்போது அதன் vertical scrolling  ,horizontal scrolling  ஆகிய நகர்விற்கு ஒருசமயத்தில் எத்தனை வரிகள் நகரவேண்டும் என அமைத்து கொண்டு ok என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக.

செயல் பட்டையை நாம் விரும்பியவாறு மாற்றியமைக்கலாம்

செயல் பட்டையின் காலியான இடத்தில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் சுருக்குவழி பட்டியலில் lock the task bar என்ற கட்டளையை தெரிவுசெய்யாது(uncheck) விட்டிடுக. இப்போது செயல் பட்டையின் ஒரத்தில் இடம்சுட்டியை வைத்திடுக. உடன் சுட்டியானது இருபுற அம்புக்குறியாக மாறிதோன்றும் அப்படியே செயல் பட்டையின் விளிம்பை பிடித்து இழுத்துசென்று தேவையான அகலத்திற்கு அமைத்திடுக.பின்னர் சுருக்குவழி பட்டியலில் properties என்ற கட்டளையை தெரிவுசெய்க

14.10

படம்-14.10

உடன் தோன்றிடும்ம் Taskbar and start menu properties என்ற (படம்-14.10)உரையாடல் பெட்டியில் taskbarஎன்ற தாவியின் திரை தெரிவுசெய்பட்டிருக்கும். அதில் Task bar appearance  என்பதன்கீழுள்ள Auto hide the taskbar என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்தால் செயல்பட்டையானது அவ்வப்போது மறைந்து விடும்

.தொடர்ந்து  taskbar location on screenஎன்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியிலில்  bottom ,left, right, top ஆகிய வாய்ப்புகள் உள்ளன  நாம் தெரிவு செய்வதற்கேற்ப அவை செயல்பட்டை திரையில் அமர்ந்திருக்கும்.

அவ்வாறே taskbar buttons என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியிலில்  always combine  என்ற வாய்ப்பை தெரிவுசெய்தால் ஒரே பயன்பாட்டில் ஒன்றுக்குமேற்பட்ட கோப்புகளை திறந்து பணிபுரியும்போது ஒரே உருவபொத்தானிற்குள் அனைத்தும் பட்டியலாக அமையும் combine when taskbar full  என்ற வாய்ப்பை தெரிவுசெய்தால்  அதிக எண்ணிக்கையில் பயன்பாடுகளையும் கோப்புகளையும் திறந்து பணிபுரியும்போது  செயல்பட்டை முழுமையாக நிறைவடைந்த பின்னரே இவ்வாறு ஒரே உருவபொத்தானிற்குள் பட்டியலாக அமையும்   இவ்வாறான வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.

 குறிப்பு பகுதியில்( notification area) உருவபொத்தான்களை அமைத்தல்  பின்னர் notification என்பதற்கருகிலுள்ள customize என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக.

14.11

படம்-14.11

உடன் notification area icons என்ற சாளரம்(படம்-14.11) திரையில் தோன்றும் இதில் இடப்புறம் உருவபொத்தான்களும்  வலப்புறம் இவை செயல்பட்டையில் எவ்வாறு தோன்ற வேண்டுமென குறிப்பிடு வதற்கான கீழிறங்கு பட்டியலும் இருக்கின்றன நாம் தெரிவுசெய்கின்ற உருவபொத்தானானது எவ்வாறு செயல்பட்டையில் தோன்றவேண்டுமென இதில். தெரிவுசெய்துகொள்க

விரைவு அமைத்தல் (Quick launch) பட்டையை செயல்பட்டையில் அமைத்தல்
செயல் பட்டையின் காலியான இடத்தில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் சுருக்குவழி பட்டியலில் Toolbar என்பதையும் பின்னர்விரியும் சிறுபட்டியலில் new toolbarஎன்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக.இதன்பின்னர் தோன்றும் திரையில் Folder என்பதில் %AppData%/Microsoft/Internet Explorer/ Quick launch என்பதை தவறில்லாமல் (படம்-14.12) தட்டச்சுசெய்து கொண்டுSelect folder என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Quick launch என்ற பட்டையானது செயல்பட்டையில் உருவாகி அமர்ந்திருக்கும்.

14.12

படம்-14.12

இந்த Quick launchகருவி பட்டையில் இடம்சுட்டியை வைத்து  சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் சுருக்குவழி பட்டியலில்  viewஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சிறுபட்டியலில் large icons என்ற(படம்-14.13) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த Quick launch கருவி பட்டையில்இருக்கும் உருவபொத்தான்களின் உருவம் பெரியதாக அமையும்

14.13

படம்-14.13

செயல் பட்டையின் கடிகாரத்தை மாற்றியமைத்தல்

செயல் பட்டையின் வலதுபுற ஓரமாக இருக்கும் கடிகாரத்தை  தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றும் காடிகாரபெட்டியின் கீழ்பகுதியிலிருக்கும் change date and time settings என்ற கட்டளையை  தெரிவுசெய்து சொடுக்குக

14.14

படம்-14.14

பின்னர்தோன்றிடும் Date and timeஎன்ற(படம்-14.14) உரையாடல் பெட்டியில்  Additional clocksஎன்ற தாவியின் திரையை தோன்ற செய்க அதிலுள்ள  Show this clockஎன்பதன் தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து கொண்டு Select time zoneஎன்பதற்கு இதில்விரியும் கீழிறங்கு பட்டியிலிருந்து கோலாலம்பூர் என்றவாறு clock 1 இற்கும் அவ்வாறேShow this clockஎன்பதன் தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து  Select time zoneஎன்பதற்கு இதில்விரியும் கீழிறங்கு பட்டியிலிருந்து பீகிங் என்றவாறு clock 2 இற்கும் தெரிவுசெய்து Apply என்ற பொத்தானையும் பின்னர்  okஎன்ற பொத்தானையும் தெரிவுசெய்து  சொடுக்குக.

14.15

படம்-14.15

செயல் பட்டையின் வலதுபுற ஓரமாக இருக்கும் கடிகாரத்தை  தெரிவுசெய்து சொடுக்குக  இப்போது நாம் தெரிவுசெய்த வெவ்வேறு கூடுதலான கடிகாரத்துடன் (படம்14.15) திரைகாட்சியமையும்

கணினியினுடைய திரையின்  பின்புல தோற்றத்தை மாற்றியமைத்தல்

14.16

படம்-14.16

கணினியின் திரையில் காலியான இடத்தில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சுருக்குவழி பட்டியலில் Personalizeஎன்ற கட்டளையை தெரிவுசெய்து  சொடுக்குக. பின்னர்  control panel இன் Personalize என்ற சாளரம் திரையில் தோன்றும் அதில் Change the visual and sounds on your computer என்ற (படம்-14.16)தலைப்பின்கீழ் my theme’s என்றும்  Aero  theme’s என்றும் தயார்நிலையிலுள்ள பல்வேறு படங்கள் விரியும் இந்த சாளரத்தின் கீழ்பகுதியிலுள்ள desktop backgroundஎன்ற கட்டளையை தெரிவுசெய்க  பின்னர்  control panel இன் desktop background என்ற சாளரம் திரையில் தோன்றும் அதில் choose desktop background என்பதன்(படம்-14.17)கீழுள்ள படங்களில் நாம்விரும்புவதை தெரிவுசெய்துகொண்டு save changes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

14.17

படம்-14.17

அவ்வாறே window color என்ற கட்டளையை தெரிவுசெய்க  பின்னர்  control panel இன் window color என்ற சாளரம் திரையில் தோன்றும் அதில் choose window color என்பதன்கீழுள்ள வண்ணங்களில் நாம்விரும்புவதை தெரிவுசெய்து கொண்டுsave changes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

screen saver  என்ற கட்டளையை தெரிவுசெய்க பிறகு screen saver’s settings என்ற உரையாடல் பெட்டிதிரையில் தோன்றும்  அதில் screen saverஎன்பதிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து தேவையானதை தெரிவுசெய்துகொண்டு எவ்வளவு காலஇடைவெளி காத்திருந்து இதனை செயல்படுத்திட வேண்டும் என்பனபோன்ற விவரங்களை தெரிவுசெய்துகொண்டு apply  என்ற பொத்தானையும் okஎன்ற பொத்தானையும் தெரிவுசெய்து  சொடுக்குக.

கணினியின் திரையில் நாம்விரும்பிய  பொருட்களின் உருவை கொண்டுவரலாம்

பொருட்களின் உருவை  பக்கபட்டையில்தான் இருக்கவேண்டும் எனும் விண்டோ விஸ்டாவின்  கட்டுபாடு போன்று எதுவுமின்றி கணினியின் திரையின் எங்குவேண்டுமானாலும் இவைகளை இருக்குமாறு செய்யலாம் அதற்காக  காலியான கணினியின் திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் சுருக்குவழிபட்டியல் (shortcut)என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் திரையில் கைவசமுள்ள பொருட்களின் உருவங்களை பட்டியலிடும்(படம்-14.18) அவைகளிள் தேவையானவற்றின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை பிடித்து கொண்டு அப்படியே  இழுத்துசென்று கணினியின்திரையில் நாம்விரும்பிய இடத்தில் விடுக.

14.18

படம்-14.18

இவ்வாறு கணினியின்  திரைக்கு கொண்டுவந்த பொருட்களின் வலதுபுறமாக இடம்சுட்டியை கொண்டுசென்றால் இதற்கான கட்டுபாட்டு பெட்டி  தோன்றும் இதில் மேலே இருப்பது இந்த பொருட்கள் தேவையில்லையெனில் மூடிவிட உபயோகப்படும் close என்ற பொத்தானும் அதற்கடுத்ததாக இருப்பது இதனை பெரிய உருவாக மாற்றுவதற்கான  larger size என்ற பொத்தானும்  மூன்றாவதாக இருப்பது இதனைபற்றிய விவரம் அறிந்துகொள்வதற்கான optionsஎன்ற பொத்தானும் நான்காவது கடைசியாக இருப்பதை பிடித்து இதனை நாம்விரும்பிய இடத்திற்கு இழுத்து சென்று விடுவதற்கான drag gadget என்ற (படம்-14.19)பொத்தானும் உள்ளன. முதல்பொத்தானும் நான்காவது பொத்தானும் அனைத்து பொருட்களிலும் கண்டிப்பாக இருக்கும் இரண்டாவதும் மூன்றாவதும் ஒருசில பொருட்களில்மட்டும் இருக்கும்.

14.19

படம்-14.19

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: