இணயத்தின் மூலம் காலி பணியிடத்தில் பணிபுரிதல் – தொடர்-9

புதியவர்கள்கூட ஒரு இணைய பக்கத்தை HTML இன் குறிமுறை துனை இல்லாமலேயே உருவாக்கலாம்.
Power Website Builder என்ற புதிய கருவியின் துனைகொண்டு HTML இன் குறிமுறையை எப்படி எழுதுவது என்று தெரியாத அறிந்துகொள்ளாத புதியவர்கள் கூட மிக எளிதாக தம்முடைய சொந்த இணைய பக்கத்தை உருவாக்கலாம். இதனை ஒரு வழக்கமான சாதாரண செயலைபோன்று நம்முடைய விருப்பமான வடிவமைப்பிலும் வண்ணத்திலும் எழுத்துரு விலும் நம்முடைய சொந்த இணைய பக்கத்தை உருவாக்கி அதில் web album, web calendar, web diary என்பனபோன்றவைகளை உள்ளினைத்து in-built publisher என்பதை பயன்படுத்தி இணையத்தில் வெளியிடலாம்
இதற்காக முதலில் http://www.mediafir e.com/?9nioggykl zm என்ற இணைய தளத்திற்கு சென்று இந்த கருவியை பதிவிறக்கம் செய்துகொள்க. பின்னர் சுருக்கி கட்டப்பட்ட நிலையிலுள்ள இவற்றின் கோப்புகளை winrar என்பதன் துனைகொண்டு விரித்து வெளியில் பிரித்தெடுத்துகொள்க.அதன்பின்னர் PWB.exeஎன்ற இதனுடைய இயக்க கோப்பினை செயல்படுத்தி இந்த கருவியை உங்களுடைய கணினியில் நிறுவுசெய்து செய்து கொள்க. பிறகு இதனை எவ்வாறு செயற்படுத்துவதுஎன்று வழிகாட்டி உதவிகுறிப்பான READMEஎன்பதை படித்து நன்கு விவரம் அறிந்துகொண்டு இந்த கருவியின் துனையுடன் உங்களுடைய சொந்த இணைய பக்கத்தை உருவாக்கி மகிழுங்கள்

s.

பார்வையாளர்களை கவரும் வண்ணம் விட்டு விட்டு ஒளிரும் தன்மையுடன் நாமே ஒரு இணையபக்கத்தை உருவாக்கிடமுடியும்
நம்மில் பெரும்பாலானவர்கள் சொந்தமாக இணையபக்கம் ஒன்றை உருவாக்கி பராமரித்து வருவோம் அவை பார்வையாளர்களை மேலும் கவரும் வண்ணம் விட்டு விட்டு ஒளிரும் தன்மையுடனும் அமைப்புடனும் இருந்தால் நல்லது என எண்ணிடு வோம்.அதற்காக flash objects மறறும் tools ஆகியவற்றை http://www.wix.com என்ற இணைய தளம் வழங்குகின்றது. இவற்றை பயன்படுத்திடுமுன் இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் Login/signup என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் படம் -1 இல் உள்ளவாறு தோன்றிடும் திரையில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பின்வருங் காலங்களில் இந்த இணையதளத்தில் உள்நுழைவு செய்வதற்காக பயன்படக்கூடிய பயனாளரின் பெயர் கடவுச்சொல் போன்ற விவரங்களை தட்டச்சு செய்துSignup என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

1

படம் -1
பின்னர் படம் -2 இல் உள்ளவாறு தோன்றிடும் திரையில் My Account என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.அதன்பின்னர் விரியும் திரையில் Settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தபின்னர் மின்னஞ்சல் முகவரி பயனாளரின் பெயர் கடவுச்சொல் போன்ற விவரங்களை தேவையானால் மாறுதல் செய்துகொண்டு Createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2

படம் -2
அதன்பின்னர் படம் -3 இல் உள்ளவாறு தோன்றிடும் create என்ற திரையில் ஏராளமான இணையபக்கஙகளின் மாதிரி படிமஙகள்(templates) உள்ளன .அவற்றுள் நமக்கு பொருத்தமானதை தெரிவுசெய்து கொள்க.இவை எதுவும் பொருத்தமாக அமையவில்லை யெனில் காலியான படிமத்தை (Blank template) தெரிவுசெய்து கொள்க

3

படம் -3
தற்போது இந்த காலியான மாதிரிபடிமத்தில் நாம் விரும்பியவாறு தோற்றத்தை மாற்றியமைப்பதற்காக திரையின் இடதுபுறபலகத்தில் உள்ள Page parts என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளைகளினுடைய பொத்தான்களின் பட்டியலில் Background என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் படம் -4 இல் உள்ளவாறு தோன்றிடும் திரையில் Animated என்ற தாவியின் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல்செய்த பின்னர் விரியும் திரையின் இடதுபுற பலகத்தில் தேவையான பின்புலத்தை தெரிவுசெய்து கொள்க.

4

படம் -4
பின்னர் இந்த இணையபக்கத்திற்கு ஒரு தலைப்பு பெயரிடவேண்டும் அதற்காக Text என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளைகளினுடைய பொத்தான்களின் பட்டியலில்(படம் -5) Title என்ற பொத்தானையும் தொடர்ந்துஇந்த இணைய பக்கத்திற்குள் உரைத்தொகுப்பினை உள்ளீடுசெய்வதற்காக paragraph என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக.அதன்பின்னர் விரியும் அடுத்த திரையில் Simple என்ற தாவியின் பொத்தானைதெரிவுசெய்த பிறகு விரியும் திரையில் பொருத்தமான தொரு மாதிரி படிமத்தை தெரிவுசெய்து இடம்சுட்டியைவைத்து சுட்டியால் பிடித்து இழுத்து வந்து காலியான இடத்தில் விட்டிடுக. பின்னர் இந்த பத்தி பெட்டியை சரியான அளவிற்கு சரிசெய்து அமைத்திடுக.

5

படம் -5
அதன்பின்னர் இந்த இணையபக்கத்திற்குள் ஒலிஒளி படங்களை இணைப்பதற்காக Media/Video என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளைகளினுடைய பொத்தான்களின் பட்டியலில்(படம் -6) Video என்ற பொத்தானை தெரிவு செய்தவுடன் தொடர்ந்து விரியும் You Tube போன்ற இணையதளத்திற்குள் உள்ள படங்களின் தொகுப்பில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து Embedded Url என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் இந்த இணைய இணைப்பு முகவரியை நாம் உருவாக்கிய உரைபெட்டிக்குள் ஒட்டி Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

6

படம் -6
அதன்பின்னர் இந்த இணையபக்கத்திற்குள் படங்களை இணைப்பதற்காக Media/Video என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளைகளினுடைய பொத்தான்களின் பட்டியலில் (படம் -7 ) Pics என்ற பொத்தானை தெரிவு செய்தவுடன் தொடர்ந்து விரியும் Flickr போன்ற இணையதளத்திற்குள் உள்ள படங்களின் தொகுப்பில் தேவையானதை தெரிவுசெய்து From Url என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது நாம் கணினியில் சேமித்து வைத்துள்ளவை எனில் அவை இருக்கும் கோப்பகத்தை தெரிவுசெய்து Upload என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7

படம் -7
இவைகள் போதுமான அளவில் இல்லையெனில் பரவாயில்லை இந்த wix.com என்ற இணையதளத்தில் சேமித்துவைத்துள்ள படங்களை பயன்படுத்திகொள்ளலாம். அதற்காகClib art என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளை களினுடைய பொத்தான்களின் பட்டியலில் (படம் -8) Shapes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் தொடர்ந்து விரியும்மூன்று தாவிகளில் உள்ள வெவ்வேறு வகையான வடிவங்களின் (Shapes) தொகுப்பில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து இடம்சுட்டியை வைத்து சுட்டியால் பிடித்து இழுத்து வந்து காலியான இடத்தில் விட்டிடுக. பின்னர் இந்த வடிவத்தை சரியான அளவிற்கு சரிசெய்து அமைத்திடுக

8

படம் -8
இவ்வாறு நம்முடைய இணையபக்கத்தில் இணைக்கப்பட்ட படங்கள் அங்கிங்குமென நகர்ந்துகொண்டேயிருக்குமாறுசெய்தால் நன்றாக இருக்குமென எண்ணிடுவோம் .அதற்காக Clibart என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளை களினுடைய பொத்தான்களின் பட்டியலில் (படம் -9) Animations என்ற பொத்தானை தெரிவு செய்தவுடன் தொடர்ந்து விரியும் உள்ள வெவ்வேறு வகையான இயக்கங்களின் தொகுப்பில் தேவையானதை தெரிவுசெய்து இடம்சுட்டியை வைத்து சுட்டியால் பிடித்து இழுத்து வந்து விட்டிடுக. பின்னர் இதனை சரியான அளவிற்கு சரிசெய்து அமைத்திடுக

9

படம் -9
அதன்பின்னர் இந்த இணையபக்கத்தின் சுற்றுபுற அளவை சரிசெய்து அமைப்பதற்காக Arrange => Ruler என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி சரி செய்து கொள்க. அவ்வாறே நம்மால் உருவாக்கப்பட்ட இணையபக்கத்திற்கு ஒரு பொருத்தமான பெயரிட்டு File => Save as என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி நம்முடைய கணினியில் சேமித்துகொள்க.
இறுதியாக இதனை இணையத்தில் வெளியிடுவதற்காக மேலே வலதுபுற மூலையில் உள்ள Publish என்ற பட்டானை தெரிவுசெய்து சொடுக்குக .பின்னர் படம் – 10 இல் உள்ளவாறு விரியும் திரையில் Settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் திரையில் Apply என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் அடுத்த திரையில் wix.com என்ற பொத்தானையும் தொடர்ந்து Next என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இறுதியாகவிரியும் திரையில் Publish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

10

படம் – 10

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: