எம் எஸ் ஆஃபிஸ் -2010- தொடர்-8-

  செல்லிற்குள் டேட்டாவை மடக்கி பிரதிபலிக்கசெய்தல்

 

3.3.8

 

  நாம் ஒருசெல்லின் அகலத்தின் அளவைவிட மிகநீளமான டேட்டாவை தட்டச்சுசெய்தால் அருகிலிருக்கும் செல்களில் டேட்டா எதுவுமில்லாதவரை நீட்டி தெரியும்  டேட்டா ஏதேனு மிருந்தால் செல்லின் அகலத்திற்கு மட்டும் டேட்டாவை  பிரிதி பலிக்கும் மிகுதியை மறைத்து கொள்ளும்  அந்த செல்லில் உள்ள முழு டேட்டாவும் தெரிய வேண்டு மெனில்    விண்டோவின் மேல் பகுதியி லிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவிலுள்ள wrap text  என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் செல்லின் அகல அளவிற்குள்ள எழுத்துகளை தவிர மிகுதியை மடக்கி புதிய  வரியாக செல்லின் உயரத்தைமட்டும் அதிகமாக்கி திரையில் பிரிதிபலிக்கசெய்யும்.

3.3.8.1

   அட்டவணையின் தலைப்பு போன்றவைகள் ஒன்றுக்கு மேற்பட்ட செல்களில் நீண்டு பரவியிருக்கும்.மேலும் தலைப்பு மேலேபகுதியில் அமைந்திருக்கும் அவ்வாறு அமைத்திடுவதற்கு முதலில் தலைப்பின் பெயர் நீண்டிருக்கும் செல்களை  தெரிவு செய்து கொள்க. பின்னர் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் விண்டோவின் மேல் பகுதியி லிருக்கும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவிலுள்ளmerge and center   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இந்த பட்டனிற்கருகிலுள்ள கீழிறங்கு லிஸ்ட் பொத்தானை  சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ள merge and center   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த செல்களனைத்தும் இணைந்து ஒன்றாகவும் தலைப்பானது மையமாகவும் அமைந்துவிடும்

.

தரவுவின்  படுக்கைவச நிலையை சரிசெய்தல்

 ஒருசெல்லில் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட செல்களில் இருக்கும் டேட்டாக்களின் அமர்ந்திருக்கும் நிலையை மாற்றியமைக்கலாம் .அதற்காக அந்த செல்களை தெரிவுசெய்து கொள்க.பின்னர் விண்டோவின்மேல்பகுதியிலிருக்கும்.home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவிலுள்ள Align left   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் டேட்டாக்கள் இடதுபுறமாக தள்ளி அமர்ந்துவிடும். இதே தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவின் கீழுள்ள Align Center    என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் டேட்டாக்கள் மையத்திற்கு தள்ளி அமர்ந்துவிடும். இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவிலுள்ள Align Right   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் டேட்டாக்கள் வலது புறமாக தள்ளி அமர்ந்து விடும் இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவின் கீழுள்ள Align justify   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் டேட்டாக்கள் சரியான நிலைக்கு தள்ளி அமர்ந்துவிடும்..

நெடுக்கை வசமாக நிலையை சரிசெய்தல்

3.3.10

  இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவின் கீழுள்ள Top Align   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் டேட்டாக்கள் மேல்புறமாக தள்ளி அமர்ந்துவிடும். இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவின் கீழுள்ள Middle Align    என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் டேட்டாக்கள் மைய நிலைக்கு தள்ளி அமர்ந்துவிடும். இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவின் கீழுள்ள Bottom Align   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் டேட்டாக்கள் கீழ்புறமாக தள்ளி அமர்ந்துவிடும்.

தரவு நிலையின் கோணத்தை மாற்றியமைத்தல்

3.3.11

   மாற்றியமைக்க விரும்பும் செல்களை தெரிவுசெய்க பின்னர் விண்டோவின் மேல்பகுதியில் உள்ள home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவிலுள்ளorient என்ற பொத்தானிற்கு அருகிலுள்ள கீழிறங்கு லிஸ்ட் பொத்தானை  சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ள orient   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த செல்களில் உள்ள டேட்டாக்கள் நாம் தெரிவுசெய்த கோணத்தில் அமர்ந்துவிடும்

எண்களின் வடிவமைப்பு

3.3.12

எக்செல்லில் இருக்கும் டேட்டாக்கள் எவ்வாறான கணக்கீட்டிற்கு தேவையோ அதற்கேற்றவாறு எண்கள் இருக்குமாறு அமைக்கலாம் அப்போதுதான் அந்த எண்கள் ரூபாயாஅல்லது வேறு ஏதேனுமாவென எளிதில் அறிந்து கொள்ள முடியும் இதற்காக தேவையான செல்களை தெரிவுசெய்து கொள்க. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் number  என்ற குழுவிலுள்ள number format என்ற பட்டனிற்கருகிலுள்ள கீழிறங்கு லிஸ்ட் பொத்தானை  சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ளnumber format   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த செல்களில் உள்ள டேட்டாக்கள் நாம் தெரிவுசெய்தவாறு  அமர்ந்துவிடும்

  தசமபுள்ளியை நிர்ணயம் செய்தல்

3.3.13

  எக்செல்லில் இருக்கும் டேட்டாக்கள் புள்ளிக்கு பிறகு இரண்டு, மூன்று என்றவாறு எண்கள் இருக்குமாறு அமைக்கலாம் அப்போதுதான் ரூபாயின் மதிப்பையும் எடையின் அளவு போன்றவைகளை எளிதில் அறிந்து கொள்ள முடியும் இதற்காக தேவையான செல்களை தெரிவுசெய்து கொள்க. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் number  என்ற குழுவிலுள்ள increase Decimal என்ற  பொத்தானை  சொடுக்குக உடன் இந்த செல்களில் உள்ள டேட்டாக்கள் நாம் தெரிவுசெய்தவாறு புள்ளிக்கு பிறகு கூடுதலாகி அமர்ந்துவிடும் இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் number  என்ற குழுவிலுள்ள Decrease Decimal என்ற  பொத்தானை  சொடுக்குக உடன் இந்த செல்களில் உள்ள டேட்டாக்கள் நாம் தெரிவுசெய்தவாறு புள்ளிக்கு பிறகு  குறைவாகி அமர்ந்துவிடும்

  செல்லிற்கு சுற்றெல்லை அமைத்தல்

3.3.14

எக்செல்லில் இருக்கும் செல்களை சுற்றி கோடுவரைந்து டேட்டாக்களின் தோற்றத்தை உயர்த்தி காண்பிக்கலாம் இதற்காக தேவையான ஒற்றையான செல்லை அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட செல்களை தெரிவுசெய்து கொள்க. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் fonts  என்ற குழுவிலுள்ளborder என்ற பொத்தானிற்கு அருகிலுள்ள கீழிறங்கு லிஸ்ட் பொத்தானை  சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ளborder   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவு செய்து சொடுக்குக. உடன் இந்த செல்களை சுற்றி தடிமனான கோடு ஒன்று உருவாகிவிடும்

3.3.14.1

இந்த கீழிறங்கு பட்டியலில் இருப்பது நமக்கு விருப்பமானதாக எதுவுமில்லை எனும்நிலையில் இதே கீழிறங்கு லிஸ்டின் கடைசியலுள்ள more border என்ற கட்டளை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது இந்த fonts  என்ற குழுவின் கீழே வலதுபுற மூலையில் சிறியதாக உள்ளபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  format cellஎன்ற உரையாடல் பெட்டியின் திரையில் தோன்றும் அதில்  border என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் இந்த டயலாக்பாக்ஸின் border என்ற தாவியின் திரையில் தேவையான வாய்ப்பை தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அவ்வாறே இதே உரையாடல் பெட்டியில் number ,fonts, align போன்றவைகளின் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தபிறகு தோன்றிடும் சம்பந்தப்பட்ட திரையில் நாம்விரும்பும் வகையை தெரிவுசெய்து  . okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்தி கொள்க.

அட்டவணையை வடிவமைத்தல்

3.3.15

 எக்செல்லில் நாம்உருவாக்கும்  அட்டவணையின் தோற்றஅமைவை ,பாணியை(style) மாற்றியமைக்கலாம் அதற்காக நாம் உருவாக்கிய அட்டவணையை தெரிவுசெய்து கொள்க. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் styles  என்ற குழுவில் உள்ள format as  table என்ற பொத்தானிற்கு அருகிலுள்ள கீழிறங்கு லிஸ்ட் பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ளformat as table   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் format as table என்ற உரையாடல் பெட்டியின் நாம்தெரிவுசெய்த செல்களின் பெயருடன் தோன்றும் சரியாக காண்பிக்கின்றதெனில்  okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

3.3.15.1

இது போதுமானதாக இல்லையெனில் format as table   இனுடைய கடைசியிலிருக்கும் new table styleஅல்லது  new pivot table style ஆகியவற்றி லொன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  new table quick  style என்ற உரையாடல் பெட்டியின் தோன்றும்  அதில் table element என்பதன் கீழுள்ள ஒவ்வொன்றையும் தெரிவு செய்து Format என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் format cellஎன்ற உரையாடல் பெட்டியில் தேவையான வாறு வடிவமைப்பு செய்து  அதனை preview வில் பார்த்து சரியாக இருந்தால்  okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்புலதோற்றத்தை மாற்றியமைத்தல்

3.3.16

  எக்செல் தாளின் பின்புலதோற்றத்தை மாற்றி யமைக்கலாம் அதற்காக  விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் page layout  என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  page layoutஎன்ற தாவியின் திரையில்   page setupஎன்ற குழுவிலுள்ள  backgroundஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும்   background என்ற உரையாடல் பெட்டியில் தேவையான தோற்றத்தை  தெரிவுசெய்து  okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

  எச்சரிக்கை நாம் தெரிவுசெய்த பின்புல தோற்றத்தை நம்முடைய எக்செல் தாளில் இருக்கும் டேட்டாக்களை நம்மால் படிக்கமுடியும் வகையில் அமைத்து கொள்க.

செல்லில் நிபந்தனை வடிவமைப்பு செய்தல்

3.3.17

   எக்செல்தாளின் செல்களின் தோற்றத்தை டேட்டாவின் மதிப்பிற்கேற்ப மாறும்படி நிபந்தனையுடன் வடிவமைக்கலாம்.  அவ்வாறு நிபந்தனையுடன் வடிவமைக்க விரும்பும் செல்களை தெரிவுசெய்துகொள்க. பின்னர் விண்டோவின் மேல் பகுதியிலிருக்கும்  home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் styles  என்ற குழுவின் கீழுள்ளconditional formatting என்ற பொத்தானை  சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ளconditional formatting   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக.

   உதாரணமாக icon sets என்ற வாய்ப்பை சொடுக்குக  உடன் விரியும்  Icon sets இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து முன்னோட்டமாக பார்த்து சரியாக இருந்தால் சொடுக்குக. Higlight cells rules  அல்லது top bootom rules என்பதை தெரிவு செய்வதால் விரியும் துனை வாய்ப்புகளின் நிபந்தனைகளிலொன்றை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் rulesஎன்ற உரையாடல் பெட்டியில் இது சரியாக இருந்தால் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இவ்வாறே Color scheme, data bars போன்ற வாய்ப்பு களையும் தெரிவுசெய்து இவைகளில் விரியும் துனைவாய்ப்புகளில் ஒன்றை தெரிவு செய்து செயல்படுத்திகொள்க.   இவைகள் நம்முடைய விருப்பத்திற்கேற்ப போதுமான தாக இல்லையெனில் new rules அல்லது more என்ற வாய்ப்பை சொடுக்குக பின்னர் தோன்றிடும்new rules என்ற  உரையாடல் பெட்டியில் நம்விருப்பத்திற்கேற்ற புதியவாய்ப்பை தெரிவுசெய்துகொள்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: