விண்டோ-7-தொடர்-7

ஒன்றுக்குமேற்பட்டவர்கள் கணினியை பயன்படுத்துதல்

நம்முடைய கணினியில் நம்மைத்தவிர வேறுநபர்களும் பயன்படுத்திகொள்ள அனுமதிக் கலாமே என விரும்புவோம் அவ்வாறான நிலையில் பின்வரும் இரண்டுவகைகளில் மட்டும் பயனாளர்கள் ஒரு கணினியில் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

1.அட்மினிஸ்டேட்டர்-இவர் சாளரம்7ஐ நிறுவிடும்போதே உருவாக்கப்படுபவர் ஆவார் .இவர்தான் ஒரு கணினியில் அனைத்து கட்டளைத்தொடர்களையும் நிறுவுதல் பராமரித்தல் நீக்குதல் என்பன போன்ற பணிகளை செய்பவர்ஆவார்..மேலும் இவர்மற்றஅனைத்து பயனாளர்களின் ஆவணங்களையும் பார்வையிட உரிமை பெற்றவரும் ஆவார்

2.ஸ்டேன்டர்டு யூஸர்-இவர் குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டு செயல்படுபவர் இவரால் கட்டளைத்தொடர்களை நிறுவமுடியாது ஆயினும் நிறுவியுள்ள பயன்பாட்டை பயன்படுத்தி கொள்ளமுடியும்..

பயனாளர் கணக்கு(யூஸர்அக்கவுண்ட்)ஒன்றினை உருவாக்குதல்

1..Start=>Control panel=>user Account என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் user Account என்ற சாளரம்வானது  Make changes user Account என்ற (படம்-2.11.1)தலைப்பின்கீழ் நம்மால் இந்த கணினியில் சாளரம்7 ஐ நிறுவிடும்போதே உருவாக்கப்பட்ட அட்மினிஸ்டேட்டர் பெயருடன் திரையில்தோன்றும்

2.11.1

படம்-2.11.1

அதில்Manage user Account என்ற கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்துக.உடன் user Accounts என்ற சாளரம்வானது Choose the account you would like to change என்ற தலைப்பின்கீழ் ஏற்கனவே நம்மால் இந்த கணினியில் சாளரம்7 ஐ நிறுவிடும்போதே உருவாக்கப்பட்ட அட்மினிஸ்டேட்டர் பெயருடனும்  வேறுபயனாளர் கணக்கு ஏதேனும் ஆரம்பித்திருந்தால் அப்பெயர்களின் பட்டியலுடனும்(படம்-2.11.2) திரையில்தோன்றும்

2.11.2

படம்-2.11.2

அதில் Create a new Account என்ற(படம்-2.11.2) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

2.11.3

படம்-2.11.3

உடன் Create a new Account என்ற சாளரம்வானதுதிரையில் தோன்றும்அதில்  Name the Account and choose an account typeஎன்பதன்கீழுள்ள New account name என்ற(படம்-2.11.3) பெட்டியில் உருவாக்கப்போகும் பயனாளரின் பெயரைsk என்றவாறு தட்டச்சு செய்திடுக.பின்னர் இதன்கீழுள்ள Standard user,Administrator  ஆகிய இரண்டு ரேடியோ பொத்தானில் standard user என்பதை மட்டும் தெரிவு செய்துcreate account என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.11.4

படம்-2.11.4

உடன் Sk standard userஎன்ற பயனாளரின் கணக்கு உருவாக்கப்பட்டு Change an  account என்ற சாளரம்வானது Make changes for sk’s account என்ற (படம்-2.11.4)தலைப்பின்கீழ் தோன்றும்.

பயனாளரின் கணக்கின் பெயரை மாற்றுதல்

இந்நிலையில் பயனாளரின் கணக்கின் பெயரை மாற்ற விரும்பினால் Change the account name என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

2.11.5

படம்-2.11.5

உடன் Rename Accountஎன்ற சாளரம்வானதுதிரையில் தோன்றும் அதில் Type a new account name for sk’s accountஎன்ற(படம்-2.11.5) தலைப்பின்கீழுள்ள காலியான பெட்டியில் kuppan என்றவாறு தட்டச்சு செய்து கொண்டு change nameஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் மாற்றம் செய்யப்பட்ட பெயருடன் பயனாளரின் கணக்கு தோன்றும்.

பயனாளரின் கணக்கிற்கு பாஸ்வேர்டு கொடுத்துபாதுகாத்தல்

இவ்வாறு உருவாக்கிய பயனாளரின் கணக்கிற்கு பாஸ்வேர்டு கொடுப்பதுதான் நல்லது.

அதற்காக Change an  account என்ற சாளரத்தில் Make changes for sk’s account என்ற(படம்-2.11.4) தலைப்பின்கீழ் உள்ள Create a password என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

2.11.6

படம்-2.11.6

உடன் Create Passwordஎன்ற சாளரம்வானது  Create a Password for sk’s accountஎன்ற (படம்-2.11.6)தலைப்புடன் தோன்றும்.அதில் உள்ள இரண்டு உரைபெட்டிகளிலும் பாஸ்வேர்டை தட்டச்சு செய்து  இந்த பாஸ்வேர்டு பிற்காலத்தில் மறந்துபோனால் ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்கான உத்தியை type  a password hintஎன்ற உரைபெட்டிக்குள் தட்டச்சு செய்து கொண்டு  Create Password என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பயனாளர் கணக்கிற்கான படத்தினை மாற்றியமைத்தல்

இந்த பயனாளர்கணக்கிற்கான படம் நன்றாக இல்லையே வேறுமாற்றினால்நன்றாக இருக்குமே என எண்ணிடுவோம்.அதற்காக Change an  account என்ற சாளரத்தில் Make changes for sk’s account என்ற தலைப்பின்கீழ் உள்ள Change the Pictureஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

2.11.7

படம்-2.11.7

உடன் choose pictureஎன்ற சாளரம்வானது  choose a new picture for sk’s account என்ற(படம்-2.11.7) தலைப்பின் கீழ்  ஏராளமான படங்களுடன் திரையில் தோன்றும்  அவற்றுள் தேவை யானதை மட்டும் தெரிவுசெய்து change pictureஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் நாம் தெரிவுசெய்த படத்துடன் பயனாளரின் கணக்கின் தோற்றம் அமையும்.

பயனாளர் கணக்கினை நீக்குதல்

ஒருசில பயனாளர் கணக்குகளை நீக்கிட விரும்புவோம் அதற்காக Manage  Accounts என்ற சாளரத்தில் Choose the account you would like to change என்ற தலைப்பின்கீழ்உள்ள பல்வேறு பயனாளர்களின் கணக்குகள் தோன்றும் அவற்றுள் நீக்கம் செய்ய விரும்பும் கணக்கினை  மட்டும் தெரிவு செய்து தெரிவுசெய்து சொடுக்குகஉடன் Change an  account என்ற சாளரத்தில் Make changes for sk’s account என்ற தலைப்பின்கீழ் Sk standard user கணக்கு தோன்றும் அதில் உள்ள Delete the account என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

2.11.8

படம்-2.11.8

உடன் Delete account என்ற (படம்-2.11.8)சாளரம்வானது  Do you want to keep sk’s files?என்ற கேள்வி யுடன் தோன்றும். அதில் Delete file , keep file ஆகிய இரண்டு வாய்ப்புகளின் பட்டன்கள் இருக்கும்.பயனாளரால் உருவாக்கப்பட்ட கோப்புகள் அப்படியே நீக்கம் செய்யப் படாமல் பயனாளரின் கணக்குமட்டும் நீக்கம் செய்யப்படவேண்டுமெனில் keep file என்ற பொத்தானையும்  தேவையில்லையெனில் Delete file என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக.

2.11.9

படம்-2.11.9

பின்னர் Confirm Deletion என்ற சாளரம்வானது(படம்-2.11.9)  Are you sure you want to delete sk’s account?என்ற கேள்வியுடன் தோன்றும். நீக்கம் செய்வது உறுதி படுத்தினால்Delete Account என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த பயனாளரினுடைய கணக்கு நீக்கம் செய்யப் பட்டுவிடும்.

ஹோம்குரூப்பை உருவாக்குதல்

2.11.10

படம்-2.11.10

Start=> Control Panel =>Home Group=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து ரிவுசெய்து சொடுக்குக.உடன் Home Group என்ற சாளரம்வானது share with other home computer running window7? என்ற(படம்-2.11.10) கேள்வியுடன் தோன்றும். அதிலுள்ளCreate HomeGroup என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.11.11

படம்-2.11.11

பின்னர்Create Home Group  என்ற சாளரம் திரையில்தோன்றும் அதில் Select what you want to share என்பதன் (படம்-2.11.11)கீழ்உள்ள ஐட்டங்களில் பகிர்ந்து கொள்ளக் கூடியவைகளை தெரிவு செய்து கொண்டு Next  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

2.11.12

படம்-2.11.12

உடன் ஹோம்குரூப் உருவாக்கப்பட்டு அவ்வப்போது தொடர்புகொள்வதற்கு தேவையான பாஸ்வேர்டை தானாகவே write down this password என்பதன்கீழ் (படம்-2.11.12)உருவாக்கி பிரிதிபலிக்கும் இதனை எழுதிவைத்துகொள்வதுநல்லது.அல்லதுprint password and instruction என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்கி அச்சிட்டுகொள்க,பின்னர் finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிஇந்த Create Home Group விஸார்டை மூடிவிடுக.

உருவாக்கப்பட்ட ஹோம்குரூப்புடன் நம்முடைய கணினியை இணைத்தல்

Start=>Documents=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் Document Library என்ற சாளரம்வானது திரையில்தோன்றும் அதில்Home Groupஎன்பதைதெரிவுசெய்து Join now என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகுதோன்றும் join home group என்ற விஸார்டில் Select what you want to share என்பதன் கீழ்உள்ள ஐட்டங்களில் பகிர்ந்து கொள்ளக் கூடியவைகளை மட்டும் தெரிவு செய்து கொண்டு Next  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றும் விஸார்டில்Type the password to join home group  என்பதன் கீழுள்ள உரைபெட்டியில் இந்த ஹோம்குரூப்பிற்கான பாஸ்வேர்டை தட்டச்சு செய்து கொண்டு  Next  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின்னர் you have joined the home groupஎன்ற செய்தியுடன் தோன்றும் திரையில் finish  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிஇந்த join Home Group விஸார்டை மூடிவிடுக.

ஆவணங்களை பகிர்ந்துகொள்ளுதல்

2.11.13

படம்-2.11.13

பகிர்ந்துகொள்ள எண்ணிடும் ஆவணங்களுள்ள மடிப்பகத்தை விண்டோ எக்ஸ்ப்ளோரர்  மூலம் திறந்துகொள்க.இதன்மேல்பகுதியின் பட்டியல்பாரிலுள்ள sharewith என்ற(படம்-2.11.13) கட்டளை யினருகி லிருக்கும் அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் sharewith என்ற சிறுபட்டியலில் இருக்கும் Homegroup(Read) என்பதை தெரிவுசெய்தால் படிக்கமட்டும் அனுமதிக்கும் Homegroup(Read/write)என்பதை தெரிவுசெய்தால் படிக்கவும் எழுதவும் அனுமதிக்கும் Specific people என்பதைதெரிவுசெய்து சொடுக்குக

2.11.14

படம்-2.11.14

உடன் Choose people to share with என்ற(படம்-2.11.14) சாளரத்தில்  type a name and click Add or the arrow to find someone என்பதன்கீழ் பகிர்ந்துகொள்பவரின் பெயரை தட்டச்சு செய்திடுக அல்லது ஏற்கனவே இருக்கும் நபர்எனில் அம்புக்குறியை அழுத்திவிரியும் பெயர்களின் பட்டியலில் தேவையான நபரை தெரிவுசெய்துகொண்டு Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. மேலும் தேவையெனில் பகிர்ந்துகொள்பவரின் பெயரை தட்டச்சு செய்து கொண்டு Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.Permission level அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்கி அனுமதிக்கும்அளவை தெரிவுசெய்து கொண்டுshare. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் இறுதியாகதோன்றும் திரையில்  done என்ற(படம்-2.11.15) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
2.11.15

(படம்-2.11.15

Start=>Documents=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் Document Library என்ற சாளரம்வானது திரையில்தோன்றும் அதில்network என்பதைதெரிவுசெய்க பின்னர் இதன்கீழ்விரியும் இணைப்பிலுள்ள கணினிகளில் தேவையானதை மட்டும்

தெரிவுசெய்து அதிலுள்ள பகிர்ந்துகொள்ளவிழையும் வகையைதெரிவுசெய்துசுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: