எம் எஸ் ஆஃபிஸ் -2010- தொடர்-7-

பிற்காப்பு நகால் தானாகவே எடுத்துகொள்ளும்படி செய்வதற்கு

ஏதேனுமெரு ஆவணத்தை திறந்துகொள்க. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் tools=> options  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் தோன்றிடும் options என்ற உரையாடல் பெட்டியில் save என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் save என்ற தாவியின் திரையில் alwys create backup copy என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  இதன் பின்னர் நாம் பணிபுரியும் ஆவணம் அவ்வப்போது பிற்காப்பு செய்யப் பட்டு விடும்

7.1

7.1

வேர்டின் ஆவணத்தினை மூடுதல் File=> close  => cஎன்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி நடப்பிலிருக்கும் திரையை மட்டும் மூடச்செய்யலாம்  File=> Exist  => c என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி அனைத்தையும் மூடச்செய்து இந்த பயன்பாட்டிலிருந்து வெளியேறலாம்

7.2

7.2

மைக்ரோசாப்ட் எக்செல்-2010

மைக்ரோசாப்ட் எக்செல் ஓர் அறிமுகம்.

Start = > all programs=> Microsoft Office=> Microsoft Office Excell 2010=>  என்றவாறு கட்டளை களை செயற்படுத்துக அல்லது டெஸ்க்டாப் திரையில் உள்ள இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் எக்செல்2010 இன் விண்டோ  திரையில் தோன்றும்

7.3

7.3

இது வேர்டைவிட சிறிது வித்தியாசமாக கட்டம்கட்டமாக தோன்றும் இந்த கட்டம்தான் செல் என அழைக்கப்படும். ஏதேனும் செல்லில் (c3)இடம்சுட்டியை வைத்து சொடுக்குக.உடன் அந்த செல்மட்டும் மேம்படுத்தி கருப்புகட்டமாக காண்பிக்கும் இதனை செயல்படும் செல்(Active cell) என அழைப்பர். இதில் தேவையான டேட்டாவை தட்டச்சுசெய்க உடன் இந்த டேட்டாவானது  ஃபார்முலா பாரிலும் செயல்படும் செல்லிலும் பிரிதிபலிக்கும்.

பின்னர் ஃபார்முலா பாரில் உள்ள Enter பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது  கீபோர்டில்  உள்ள உள்ளீட்டு விசையை அழுத்துக. உடன் அந்த செல்லின் டேட்டா உள்ளீட்டு பணிமுடிவடைந்து அடுத்த செல்லிற்கு இடம்சுட்டி சென்றிருக்கும்

விரைவான டேட்டாக்களை உள்ளீடு செய்திடும் வசதி.

டேட்டாக்களை இவ்வாறு ஒரே காலத்திற்குள் தட்டச்சுசெய்து கொண்டு வரும்போது உதாரணமாக செல் எண் B10-ல்   a என ஓரிருஎழுத்துகளை தட்டச்சுசெய்ய ஆரம்பித்த உடன் மிகுதி எழுத்துகள் CTUAL MONTHLY  INCOME என ஏற்கனவே இதேசொல் தட்டச்சு செய்யபட்டிருந்தால்  தானாகவே பிரதிபலிக்கும் அதனை ஏற்பதாயின்  உள்ளீட்டு விசையை அழுத்துக. இந்த வசதி டேட்டாக்களை விரைவாக உள்ளீடு செய்வதற்காக ஏற்படுத்தபட்டுள்ளது

7.4

7.4

 

திரையின் கீழ்பகுதியில் sheet1, sheet2, sheet3 என்றிருப்பவை இதே -ஃபைலிலுள்ள தனித்தனி தாவிபொத்தான்களால் அமைந்த தாட்களாகும் .இதில் நாம் விரும்பும் sheet-ன் தாவியின் பொத்தானை சொடுக்குதல்செய்தால் அதற்கான தாள் திறந்துகொள்ளும்.

செல்களை தெரிவுசெய்தல்

தெரிவு செய்யவிரும்பும்  தொடக்கசெல்லில்(c4) இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து கொள்க. பின்னர் சுட்டியைபிடித்து கொண்டு அப்படியே   தெரிவு செய்ய விரும்பும்  முடிவு செல்லிற்கு (E9) இடம்சுட்டியை கொண்டு சென்று பிடித்திருந்த சுட்டியின் பொத்தானை விட்டிடுக. உடன்  நாம்விரும்பியவாறான செல்கள் தெரிவுசெய்யப் பட்டிருக்கும்.

7.5

7.5

அதற்கு பதிலாக shift   விசையையும் -> அம்புக்குறி விசையையும் சேர்த்து அழுத்துவதன் வாயிலாக தொடர்ச்சியான செல்களை தெரிவு செய்யலாம்  தொடர்ச்சியற்றதெனில் Ctrl விசையை பிடித்து கொண்டு தெரிவு செய்யவிரும்பும் செல்களை ஒவ்வொன்றாக சுட்டியின் மூலம் இடம்சுட்டியை நகர்த்தி சென்று தெரிவு செய்க. விரிதாளின் முழுவதையும் தெரிவுசெய்ய வேண்டுமெனில் தாளின் தொடக்கத்தில் இருக்கும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது  Ctrl  , A ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக.

நெடுவரிசை அல்லது ரோவை தெரிவுசெய்தல்

தெரிவுசெய்யவிரும்பும் நெடுவரிசை அல்லது ரோவின் தலைப்பில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக உடன் நெடுவரிசை அல்லது ரோ முழுவதும் தெரிவு செய்யப்பட்டு விடும் ஒன்றுக்குமேற்பட்டதை தெரிவுசெய்யவேண்டுமெனில் அப்படியே பிடித்துகொண்டு -> அம்புக்குறியை நகர்த்துவதன்வாயிலாக தொடர்ச்சியான . நெடுவரிசை அல்லது ரோவை தெரிவுசெய்து கொள்ளலாம். தொடர்ச்சியற்றதெனில் Ctrl விசையை பிடித்து கொண்டு தெரிவுசெய்யவிரும்பும் நெடுவரிசை அல்லது ரோவை ஒவ்வொன்றாக சுட்டியின் மூலம் இடம்சுட்டியை நகர்த்திசென்று தெரிவுசெய்க

செல்லிற்குள் உள்ள டேட்டாவை தெரிவுசெய்தல்

தெரிவுசெய்ய விரும்பும் செல்லின்மீது  இடம்சுட்டியை வைத்து சொடுக்குக பின்னர்  F2 என்ற ஃபங்ஷன் விசையை அழுத்துக.பின்னர் அம்புக்குறியை நகர்த்து வதன் வாயிலாக தேவையான எழுத்திற்குமுன்பு இடம்சுட்டியை கொண்டு செல்க.

தானாகவே டேட்டாவை பூர்த்திசெய்திடும் வசதி

 

7.6

7.6

வாரநாட்களின் பெயர் மாதங்களின் பெயர் போன்றவைகளை தொடர்ந்து தட்டச்சு செய்வதற்கு பதிலாக முதல் பெயரை மட்டும் ஒரு செல்லில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியபின்னர் அந்த செல்லின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் செல்லின் கீழ்புறமாக இடம்சுட்டியை கொண்டு செல்க உடன் இதன் தோற்றம் மெல்லிய கூட்டல் குறிபோன்று மாறி யிருக்கும் அப்படியே பிடித்து இழுத்து கொண்டே சென்றால் தொடர்ச்சியாக பெயர்கள் நாம் பிடித்திருந்ததை விடும் வரை தானாகவே பூர்த்தியாகிக் கொண்டே வரும்.

இதேபோன்று தொடர்எண்களையும் தானாக பூர்த்திசெய்யுமாறு அமைக்கலாம் அதற்காக இந்த தொடர் எண்களின் முதலிருஎண்களை அடுத்தடுத்த செல்களில் தட்டச்சுசெய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக. பின்னர் இரண்டாவது செல்லின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக செல்லின் கீழ்புறமாக இடம்சுட்டியை கொண்டு செல்க உடன் இதன் தோற்றம் மெல்லிய கூட்டல் குறிபோன்று மாறி யிருக்கும் அப்படியே பிடித்து இழுத்து கொண்டே சென்றால் தொடர்ச்சியாக தொடர்எண்கள் நாம் பிடித்திருந்த்தை விடும்வரை தானாகவே பூர்த்தியாகிக் கொண்டே வரும்.

வாடிக்கையாளர் விரும்பியவாறு தானாகவே டேட்டாவை பூர்த்தி செய்திடும் பட்டியல்   

நாம்விரும்பிய புதிய பட்டியலையும் இவ்வாறு உருவாக்கிட முடியும் அதற்காக நாம்விரும்பும் பட்டியலை எக்செல்தாளில் உருவாக்கிகொண்டு தெரிவுசெய்து கொள்க. விண்டோவின் மேலிருக்கும் File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற தாவியின் பட்டின் திரையில் options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் options என்ற டயலாக பாக்ஸில் Advancedஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றும் திரையில்  Edit custom lists என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  .  உடன் விரியும் customs list  என்ற டயலாக பாக்ஸில் நாம் எக்செல்தாளில் உருவாக்கி தெரிவுசெய்துள்ள லிஸ்டானது மேம்படுத்தி காண்பித்து திறந்துவைத்திருக்கும் . importஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் எக்செல்லானது இந்த பட்டியலையும் தன்னுடைய லிஸ்டுடன் தானாக பூர்த்தி செய்வதற்கான  பட்டியலுடன் சேர்த்து கொள்ளும் பின்னர்  ok என்ற பொத்தானையும் optionsஎன்ற டயலாக்  பாக்ஸில் ok என்ற பொத்தானையும் சொடுக்குக.

7.7

7.7

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: