விண்டோ-7-தொடர்-6

மல்ட்டிமீடியா

விண்டோ மீடியா ப்ளேயர்

நம்முடைய கணினியில் பாடல்களை கேட்பதற்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கும் உதவுவதுதான் இந்த விண்டோ மீடியா ப்ளேயராகும். இதனை எவ்வாறு செயல்படுத்துவது.

Stsrt=>Allprogramm=> window media player=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் முதன்முதலில் இதனை செயல்படுத்துவதாயின் welcome to window media palyer என்ற உரையாடல் பெட்டி (படம்-2.10.1)திரையில் தோன்றும்அதில் recommended settings என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் இந்த விண்டோவைclose-என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி மூடிவிடுக.

7-1

படம்-2.10.1

சாளரம் மீடியா ப்ளேயரை இயக்குவதற்கு

அதன் பின்னர் Stsrt=>Allprogramm=> window media player=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. அல்லது செயல்பட்டையில் உள்ள விண்டோ மீடியா ப்ளேயருக்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விண்டோ மீடியா ப்ளேயர் விண்டோவானது ஆடியோ விடியோ கோப்புகளின் தொகுப்பான Library என்ற தலைப்பில் தோன்றும் இதன் இடதுபுற பலகத்தில் nusicஎன்ற துனைத்தலைப்பை தெரிவுசெய்தால் வலதுபுற பலகத்தில் இந்த தலைப் பின் கீழ்(படம்-2.10.2) சேமிக்கப்பட்டுள்ள கோப்புகளை பட்டியலாக திரையில் காண்பிக்கும்.

7-2

படம்-2.10.2

அவைகளிலிருந்து தேவையானதை தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது தேவையானதை தெரிவுசெய்து இந்த சாளரம்வின் கீழே மையத்திலுள்ள playஎன்ற பொத்தானையும் கீழே இடதுபுற ஓரமாக உள்ளswitch to now playingஎன்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம்தெரிவுசெய்த பாடல் கணினியில் இசைக்கதொடங்கும் பின்னர் வேறு என்னென்ன பாடல்கள் இதில் உள்ளன என தெரிந்து கொள்வதற்கு இந்த விண்டோவின் கீழே இடதுபுற ஓரமாக உள்ள switch to Library என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Library என்ற விண்டோ விற்கு திரைத்தோற்றம் மாறும்

லைப்ரரி சாளரம்வை கட்டுபடுத்திட. .

இசைக்கும் பாடலின் ஒலிஅளவை கட்டுபடுத்த இந்த லைப்ரரி விண்டோவின் கீழே இடதுபுறமாக உள்ள  volume ஸ்லைடரை தேவையானவாறு பிடித்து நகர்த்தி சரி செய்யலாம். அவ்வாறே ஒலியை கேட்காமல் செய்ய muteஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

now playingஎன்ற சாளரத்தில் செயல்படுத்திட.

இதே செயல்களை now playingஎன்ற சாளரத்தில் செயல்படுத்திட இந்த விண்டோவின் கீழே இடதுபுறமாக உள்ள  volume ஸ்லைடரை தேவையானவாறு பிடித்து நகர்த்தி சரி செய்யலாம்.அவ்வாறே ஒலியை கேட்காமல் செய்ய muteஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. .மிகுதி செயல்களை செயற்படுத்திட இந்த விண்டோவின் கீழ்பகுதியிலுள்ளபொத்தான்களை படன்படுத்தி கொள்க

2-10.1.4.லைப்ரரி சாளரம்வி புதிய .play listஐ உருவாக்கிட

இதில் புதிய .play listஐ உருவாக்கிட இந்த லைப்ரரி விண்டோவின் மேல்பகுதியிலுள்ள .play list என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் தோன்றும் திரையின் இடதுபுற பேனின் .play list என்பதன்கீழ் புதிய ப்ளேலிஸ்டின் பெயரை நாம் விரும்பியவாறு தட்டச்சு செய்து கொண்டு உள்ளீட்டு விசையை தட்டுக. அதன்பின்னர் வலதுபுற பலகத்தில் இருக்கும் பாடல்களின் பட்டியலிலிருந்து தேவையானவைகனை தெரிவுசெய்து அப்படியே பிடித்து இழுத்துவந்து இந்த புதிய ப்ளே லிஸ்டின் கீழ்விடுக.

இப்போது புதியபட்டியலில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து  சுட்டியின் பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது தேவையானதை மட்டும் தெரிவுசெய்து இந்த விண்டோவின் கீழே மையத்திலுள்ள play என்ற பொத்தானையும் கீழே இடதுபுற ஓரமாக உள்ள switch to now playingஎன்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம்தெரிவுசெய்த பாடல் கணினியில் இசைக்க தொடங்கும்

பாடல்களை சிடியிலிருந்த  லைப்ரரிக்கு நகலெடுத்து செய்ய

சிடி அல்லது டிவிடியிலிருந்து அவ்வப்போது அதற்கான ட்ரைவில் பொருத்தி ஆடியோ வை  கேட்பதற்குபதிலாக அவைகளையும் இந்த லைப்ரரியில் சேர்த்து கொண்டால் நல்லது என எண்ணிடுவோம் அந்நிலையில் now playingஎன்ற விண்டோவை செயல்படுத்துக பின்னர் பாடல்கள் உள்ளசிடி அல்லது டிவிடியை அதற்கானசிடி அல்லது டிவிடி ட்ரைவில் பொருத்துக பிறகு. இந்த now playingஎன்ற சாளரத்தில் rip CD என்ற பொத்தானை ரிவுசெய்து சொடுக்குக உடன் சிடியில் உள்ள அனைத்து  பாடல்களும் லைப்ரரியில் சேர்ந்துவிடும். சிடியில் உள்ள ஒருசில பாடல்கள்மட்டும் சேர்த்திட வேண்டுமெனில் switch to Library என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இப்போது சிடியிலுள்ள பாடல்களின் பட்டியல் திரையில் தோன்றிடும் அவைகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து rip CD என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் சிடியில் நாம் தெரிவுசெய்த  பாடல்மட்டும் கணினியின் லைப்ரரியில் சேர்ந்துவிடும்.

2-10.1.6.பாடல்களை லைப்ரரியிலிருந்து சிடிக்கு நகலெடுத்து செய்ய

நம்முடைய கணினியிலிருக்கும் பாடல்களை சிடிக்கு நகலெடுத்துசெய்ய காலியான சிடியை சிடியில் எழுதும் திறன்கொண்ட ட்ரைவில் பொருத்துக. பின்னர் லைப்ரரி சாளரம்வின் மேல்பகுதியிலுள்ள burn என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் பர்ன்லிஸ்ட்டுகுள் லைப்ரரியிலிருந்து தேவையான பாடல்களை தெரிவுசெய்து பிடித்து இழுத்துவந்து விடுக.பின்னர் start burn என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விண்டோ மீடியா ப்ளேயர்  ஆனது இந்த பாடல்களை சிடி ட்ராக் ஆக உருமாற்றம் செய்து சிடிக்குள் நகலெடுத்து செய்யும்.இந்த பணிமுடிவடைந்த்தும் சிடியை தானாகவேeject செய்து விடும்.

7-3

படம்-2.10.3

பாடல்களை MP3போன்ற கையடக்க கருவிகளுக்கு நகலெடுத்துசெய்தல்

இந்த பாடல்களை MP3போன்ற கையடக்க கருவிகளுக்கு நகலெடுத்துசெய்தும் கேட்கலாம் அதற்காக கையடக்க கருவியை பொருத்திகொணடு இந்த விண்டோ மீடியா ப்ளேயர் சாளரம்வை திறந்து கொள்க அதில் மேலே இடதுபுற ஓரம் உள்ள sync என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் அதே இடதுபுறமுள்ள options என்ற கட்டளையை செயற்படுத்துக.விரியும்பட்டியலில் setbup  sync என்ற (படம்-2.10.3) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் setbup  syncஎன்ற உரையாடல் பெட்டியில்  sync this device automaticallyஎன்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது  sync this device manuall என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இதன்பின்னர் MP3போன்ற கையடக்க கருவியை பொருத்திகொணடு இந்த விண்டோ மீடியா ப்ளேயர் விண்டோவை திறந்தவுடன் MP3போன்ற கையடக்க கருவியின் கொள்ளளவு 4 ஜிபி அல்லது விண்டோ மீடியாலைப்ரரியின் பாடல்களின் தொகுப்பு முழுவதும் கொள்ளக்கூடிய வகையில் இருந்தால்  automatically என்ற வாய்ப்பில் நம்முடைய சாதணத்தை தானாகவே இது தெரிவுசெய்துகொள்ளும் finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

MP3போன்ற கையடக்க கருவியின் கொள்ளளவு 4 ஜிபி க்கு குறைவாகஅல்லது விண்டோ மீடியாலைப்ரரியின் பாடல்களின் தொகுப்பில் ஒரு பகுதியை மட்டும் கொள்ளக்கூடிய வகையில் இருந்தால் manuall என்ற வாய்ப்பில் நம்முடைய சாதணத்தை தானாகவே  இது தெரிவுசெய்துகொள்ளும்  finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் லைப்ரரியிலிருந்து பாடல்களை MP3போன்ற கையடக்க கருவிக்கு நகலெடுத்துயாகும்(படம்-2.10.4)

இந்த automatically என்ற வாய்ப்பு விண்டோமீடியா லைப்ரரியில் புதியதை சேர்த்தல் ஏற்கனவே இருப்பதை நீக்குதல் செய்து நீக்குதல் செய்து பட்டியலை மாற்றியமைக்கும் போதெல்லாம் MP3போன்ற கையடக்க கருவியை கணினியில் பொருத்தியவுடன் தானாகவே அப்டேட் செய்துகொள்ளும் .

7-4

படம்-2.10.4

இவ்வாறான அப்டேட் செயலை manuall என்ற வாய்ப்பில் நாமாக செய்யவேண்டும்.

இவ்வாறு கணினியின் மீடியாப்ளேயர் பட்டியிலிருந்து நகலெடுத்துசெய்தபாடல்களை நம்முடைய MP3ப்ளேயரில் கேட்டு மகிழலாம்.

விண்டோமீடியா சென்டர்

Start => All program=> window media center=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன்

முதன்முதலில் இதனை செயற்படுத்துவதாயின் இந்த பயன்பாட்டினை காண்ஃபிகர் செய்யும் விண்டோ திரையில் தோன்றும் இதில் quickest setup Express setup ஆகிய இரண்டு வழிமுறைகள் உள்ளன Express setup  என்ற வாய்ப்பை செரிவுசெய்து கொள்க பின்னர்தோன்றிடும் திரையின் tasksஎன்ற பட்டியலில் settingsஎன்பதையும்  பின்னர் generalஎன்பதையும்  அதன்பின்னர் window media center setupஎன்பதையும் தெரிவுசெய்து இறுதியாகrun setup again என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக.

கணினியை டிவியாக பயன்படுத்திட  டிஸ்பிளே காலிப்ரேஷன் செய்யவேண்டும் அதற்காக இந்த செட்டப் விஸார்டில் உள்ள Display Calibration என்ற (படம்-2.10.5) வாய்ப்பு பயன்படுகின்றது

 

7-5

படம்-2.10.5

அல்லது quickest setup என்ற வாய்ப்பினை தெரிவுசெய்வதாயின் பின்னர் தோன்றிடும் திரையில் continue என்ற பொத்தானையும் அதன்பின்னர் custom என்றபொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக. இறுதியாக get the most from window media centerஎன்ற திரைதோன்றிடும்போது  yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் அனைத்து பயனுள்ளதகவல்கள் ஆல்பம்,ஆன்லைன் மீடியா சர்விஸ் என்பன போன்றவை டவுன்லோடாகி பயன்படுத்துவதற்கு தயாராகிவிடும்.அதன்பின்னர் window media center என்ற சாளரம் திரையில் தோன்றிடும்.closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த விண்டோவைமூடிவிடுக.

7-6

படம்-2.10.6

இதன்மூலம் உங்களுடைய கணினியை நல்ல ஹோம் தியேட்டராகவோ நல்ல டிவியாகவோ செயற்படுத்தலாம்.

Movies என்ற வாய்ப்பினை பயன்படுத்தி திரைப்படங்களை கண்டுகளிக்கலாம் TV.என்ற வாய்யப்பினை பயன்படுத்தி டிவிநிகழ்சிகளை காணவாம் கணினியின் window media center என்ற சாளர திரையில் live Tvஎன்ற (படம்-2.10.6)வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் தோன்றிடும் திரையில் Recordஎன்ற (படம்-2.10.7)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் கணியில் இயங்கிடும் டிவி நிகழ்ச்சியானது பதிவாகி ஒரு கோப்பாக உருவாகதொடங்கும் நிகழ்ச்சி முடிவுபெறும்போது stopஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த பதிவுசெயலை நிறுத்தம் செய்க அதன்பின்னர் பதிவுசெய்த டிவி நிகழ்ச்சி கோப்பினை தெரிவுசெய்து  playஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்மால் பதிவுசெய்யப்பட்ட  டிவி நிகழ்ச்சி கணினியின் திரையில் இயங்குவதை பார்த்து மகிழலாம்.

7-7

படம்-2.10.7

இதே window media center என்ற சாளர திரையில் உள்ள  pictures + Vedios என்ற    (படம்-2.10.6) வாய்ப்பினை தெரிவுசெய்க பின்னர்தோன்றிடும் திரையில்slide show என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் பிக்சர்லைப்ரரியிருந்து படங்கள் ஸ்லைடு ஷோவாக திரையில் காண்பிக்கும்

அதிலுள்ள nextஎன்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் அடுத்தபடமும்  previous என்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் முந்தைய படமும் திரையில் காண்பிக்கும் pause என்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் தற்காலிகமாக இந்த ஸ்லைடுஷோ நிறுத்தம் செய்யப்படும் play என்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்ட இந்த ஸ்லைடுஷோ மீண்டும் இயங்கிடும்stop என்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் ஸ்லைடுஷோ வின் இயக்கம் நிறுத்தம் செய்யப்படும்.

 

இவ்வாறு இந்த window media center என்ற சாளரம்வை உபயோகபடுத்தி உங்களுடைய கணினியை மல்ட்டிமீடியா வசதியை பெற்று மகிழுங்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: