எம் எஸ் ஆஃபிஸ் -2010- தொடர்-6-

ஆவணத்தில் சொல்லொன்றை தேடிபிடித்தல்

மிகப்பெரிய ஆவணத்தில் ஒரு சொல்லை தேடிபிடிப்பதற்கு விண்டோவின் மேல் பகுதியிலுள்ள home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் home என்ற தாவியின் பட்டியில் editing என்ற குழுவிலுள்ள find என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஆவணத்தின் வலதுபுறத்தில் விரியும் வழிகாட்டி பலகத்தில் தேடவிரும்பும் சொல்லை தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் இந்த சொல்லை இடது புறத்தில் மேம்படுத்தி காண்பிப்பதோடு வலதுபுற பலக்கதிலும் பட்டியலாக காண்பிக்கும் வலதுபுற பலகத்தின் பட்டியலில் உள்ள சொல்லை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  இடதுபுற பலகத்தில் இந்த சொல் ஆவணத்தில் வருமிடத்தை காண்பிக்கும். X close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த வழிகாட்டி பலகத்தினை மூடிவிடுக.

 

3.1

3.1

தவறான சொல்லை தேடிபிடித்து சரியானதை மாற்றுதல்

மிகப்பெரிய ஆவணத்தில் தவறான ஒரு சொல்லை தேடிபிடித்து மாற்றம் செய்வதற்கு விண்டோவின் மேல் பகுதியிலுள்ள  home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் home என்ற தாவியின் பட்டியில் editing என்ற குழுவிலுள்ள Replace என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது Ctrl + F என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக  உடன் Find and Replace என்ற உரையாடல் பெட்டி யொன்று  திரையில் தோன்றும் அதில்  find whatஎன்ற பகுதியில் தேடவேண்டிய தவறான சொல்லை தட்டச்சுசெய்க. replace with என்ற பகுதியில் தவறினை திருத்தப்பட்ட சொல்லை தட்டச்சுசெய்க.பின்னர் find next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் தவறான சொல்லிற்கு அருகில் இந்த உரையாடல் பெட்டியை  கொண்டு சென்று நிறுத்தும் replace என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் மாற்றியமைத்துவிடும். replace allஎன்றபொத்தானை சொடுக்குதல்செய்தால் ஆவணமுழுவதும் உள்ள இந்த தவறான சொற்களை மாற்றியமைத்துவிடும்  cancel என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

3.2

3.2

விரும்பிய பகுதிக்கு செல்ல உதவும் வழிகாட்டி பலகம்

மிக நீண்ட ஆவணத்தில் குறிப்பிட்ட பகுதியை சென்றடைவதற்கு அதிக நேரமாகும் அதற்குபதிலாக ஆவணத்தின் இடதுபுறத்தில் வழிகாட்டி பலகம்ஒன்றை உருவாக்கி கொண்டால் நன்றாக இருக்கும் அதற்காக விண்டோவின் மேல் பகுதியிலுள்ள view என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் view என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில்  show  என்ற குழுவிலுள்ள Navigation pane என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஆவணத்தின் இடதுபுறத்தில் வழிகாட்டி பலகம் ஒன்று தோன்றும் அதில் ஆவணத்தின் தலைப்புகள் பட்டியலாக தோன்றும் தேவையான தலைப்பை தெரிவு செய்தால் தொடர்புடைய ஆவணத்தின் பக்கம் வலதுபுறபகுதியில் உடன் விரியும். .இந்த  வழிகாட்டியின் பலகத்தின் தலைப்பிலுள்ள browse  the page in your document   என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஆவணத்தின் அனைத்து பக்கமும் சிறுவிரற்கடை  பட்டியலாக காண்பிக்கும் தேவையான பக்கத்தின் சிறுவிரற்கடையை தெரிவுசெய்தால் தொடர்புடைய பக்கம் வலதுபுற பகுதியில் காண்பிக்கும்.

3.3

3.3

எழுத்து பிழையையும் இலக்கணபிழையும் சரிசெய்தல்

3.4

3.4

ஆவணத்தில் இருக்கும் எழுத்து பிழையையும் இலக்கண பிழையையும் சரிசெய்திடுவதற்கான சொல்லை தெரிவுசெய்துகொண்டு

முதலில் குறிப்பிட்ட பகுதியில்மட்டும்  சரிபார்க்க வேண்டு மெனில் அப் பகுதியை மட்டும் தெரிவுசெய்து கொண்டு விண்டோவின் மேல் பகுதியிலுள்ள Review  என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  review என்ற தாவியின் பட்டியில்  proofing  என்ற குழுவிலுள்ள spelling & Grammarஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் spelling & Grammar என்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றும் அதில் suggestion என்பது சரியெனில்  change என்ற பொத்தானை அழுத்துக. அனைத்தையுமெனில் change all என்ற பொத்தானை அழுத்தி அனைத்து பிழைகளையும் சரிசெய்து கொள்க..ignore once என்ற பொத்தானை அழுத்தி பிழையை விட்டிடுக. Ignore all or ignore rule என்ற பொத்தானை அழுத்தி  ஆவணத்தின் அனைத்திலும் விட்டிட செய்க.   add to dictionary என்ற பொத்தானை அழுத்தி இந்த சொல்லை களஞ்சியத்தில் சேர்த்துகொள்ளும்படி செய்க. சரிபார்த்து முடிந்துவிட்டால் the spelling check is  complete என்ற சிறு உரையாடல் பெட்டியொன்று தோன்றும் அதில் ok என்ற பொத்தானை அழுத்தி இந்த சரிபார்க்கும் செயலை முடிவிற்கு கொண்டு வருக

பிழையை தானாகவே திருத்துமாறு செய்தல்

விண்டோவின் மேல் பகுதியிலுள்ள file என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  file என்ற தாவியின் பட்டியில் options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் options என்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதில் இடதுபுற பலகத்தில் proofing என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர்விரியும் வலதுபுற பலகத்தில்  Auto correct  options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  Auto correct  options  என்ற உரையாடல் பெட்டியில் பொதுவான எழுத்து பிழை ஏற்படும் சொல்லை  Replace என்ற புலத்திலும் சரியான சொல்லை  with என்ற புலத்திலும் தட்டச்சுசெய்துகொண்டு.   add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த சொல் பட்டியலில் சேர்ந்துவிடும்  பின்னர் ok என்ற பொத்தானையும் options என்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக. இதன்பின்னர் ஆவணத்தில் பிழையாக தட்டச்சுசெய்தால அப்பிழையானது தானாகவே சரிசெய்து கொள்ளும்

3.5

3.5

 

 

இணையான சொல்லை மாற்றிடுதல்

3.6

 

  1. 6

உரையில் ஒருஇடத்தில் பொருத்தமான இணையான சொல்லை  மாற்றியமைத்திட விரும்புவோம் அதற்காக .முதலில் தேவையான சொல்லை தெரிவுசெய்துகொண்டு  விண்டோவின் மேல் பகுதியிலுள்ள review என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  review என்ற தாவியின் பட்டியில்  proofing  என்ற குழுவிலுள்ள thesaurus என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் நாம் தெரிவுசெய்த சொல்லிற்கு இணையான சொற்களின் பட்டியலை  காண்பிக்கும் அவற்றுள்  அவ்விடத்திற்கு பொருத்தமான ஒன்றை  தெரிவுசெய்து  கொண்டுinsert  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. X close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து  மூடிவிடுக

.  மாற்றப்பட்ட உரையை ஏற்றல் அல்லது  மறுத்தல்

3.7

3.7

விண்டோவின் மேல் பகுதியிலுள்ள review என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  review என்ற தாவியின் பட்டியில்   track   என்ற குழுவிலுள்ள track changes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .  உடன் விரியும் பட்டியலில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாறுதலான  சொற்களை மட்டும் மேம்படுத்தி காண்பிக்கும்

இதனை ஏற்றுக் கொள்வதாயின் changes என்ற குழுவிலுள்ள accept என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. ஆவண முழுவது முள்ள மாறுதலான சொற்களை  ஏற்றுக் கொள்வ தாயின்   accept என்ற பொத்தானின் கீழிறங்கு பட்டியலை தோன்றசெய்து accept all என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  மாறுதலான மேம்படுத்தி காண்பிக்கும் சொற்களை மறுப்ப தாயின் இதே குழுவிலுள்ள reject  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. ஆவண முழுவது முள்ள மாறுதலான சொற்களை  மறுப்பதாயின் rejectt என்ற பொத்தானின் கீழிறங்கு பட்டியலை தோன்றசெய்து reject   all என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக    இந்த பணி முடிவடைந்து விட்டால்  track changes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பழைய நிலைக்கு செல்க.

3.8

ஒப்பீடுசெய்தல் 

விண்டோவின் மேல் பகுதியிலுள்ள review என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  review என்ற தாவியின் பட்டியில்   changes  என்ற குழுவிலுள்ள  compare என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் விரியும் compare documentஎன்ற உரையாடல் பெட்டியில்  original document என்பதற்கருகிலிருக்கும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் open என்ற உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பினை தெரிவுசெய்து கொண்டு open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அவ்வாறே  மாறுதல் செய்த ஆவணத்தை compare documentஎன்ற உரையாடல் பெட்டியில்  revised document என்பதற்கருகிலிருக்கும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் open என்ற உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பினை தெரிவுசெய்து கொண்டு open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  பின்னர் compare documentஎன்ற உரையாடல் பெட்டியில் ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

3.9

3.9

உடன் உண்மை ஆவணம் மாறுதல் செய்யப்பட்ட ஆவணம் மதிப்பீட்டு பலகம் என மூன்று பலகமாக திரையில் தோன்றும் இதில்  accept என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. ஆவண முழுவதுமுள்ள மாறுதலான சொற்களை  ஏற்றுக்கொளவதாயின்   accept என்ற பொத்தானின் கீழிறங்கு பட்டியலை தோன்றசெய்து accept all என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  மாறுதலான மேம்படுத்தி காண்பிக்கும் சொற்களை மறுப்பதாயின் reject  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. ஆவணமுழுவதுமுள்ள மாறுதலான சொற்களை  மறுப்தாயின் reject  t என்ற பொத்தானின் கீழிறங்கு பட்டியலை தோன்றசெய்து reject   all என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3.10

3.10

கருத்துகளை பதிவுசெய்தல் காண்பித்தல்

தேவையான உரையை தெரிவுசெய்துகொள்க.  விண்டோவின் மேல் பகுதியிலுள்ள review என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  review என்ற தாவியின் பட்டியில்   comments  என்ற குழுவிலுள்ள  new comments என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் பலூன் போன்று விரியும் பகுதியில் உங்களுடைய கருத்துகளை தட்டச்சுசெய்க.

3.11

3.11

 

அதன்பின்னர்  ஆவணத்தின் மேல் பகுதியிலுள்ள இதே review என்ற தாவியின் பட்டியில்   comments  என்ற குழுவின் கீழ்  reviewing pane  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன்reviewing pane திரையின் இடதுபுறம் தோன்றும் .அதில்இந்த ஆவணத்தில் உள்ள கருத்துகளின் பட்டியல் தோன்றும் அவற்றுள் தேவையானதை தெரிவு செய்து பார்வையிட்டு கொள்க. இந்த கருத்துக்களில் இடம்சுட்டி இருந்திடும்போது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் குறுக்குவழிபட்டியலில்  Delete என்ற கட்டளையை சொடுக்குக. உடன் இந்த கருத்து நீக்கப்பட்டுவிடும் பின்னர் இந்த பலகத்தின் மேல்பகுதியில் இருக்கும் X close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த பலகத்தினை மூடிவிடுக..

வேர்டு-2003

கணினித்திரையில் உள்ள இதற்கான குறுக்குவழி உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது Start=> All programs=> Microsoftsoft Office=> MicroSoft word-2003=>   என்றவாறு கட்டளைகளை சொடுக்குதல் செய்து செயற்படுத்துக. உடன் வேர்டு-2003 –இன் முகப்பு பக்கம் திரையில் தோன்றும்.   இயல்பு நிலையில் document1 ஆனது செயல்நிலையில் இருக்கும் இதில விசைப்பலகையை பயன்படுத்தி தேவையான உரையை தட்டச்சுசெய்க.

உரையை உள்ளீடுசெய்தல்

இவ்வாறான வேர்டில் காலியான ஆவணத்தில் நாம் விரும்பும் உரையை தட்டச்சு செய்க. இவ்வாறு நம்மால் தட்டச்சுசெய்யப்படும் உரையில் இடம்சுட்டி பிரிதிபலிக்கும் இடமே உள்ளீடுசெய்திடும் புள்ளியாகும்.  தொடர்ந்து உரையை தட்டச்சுசெய்து கொண்டிருந்தால்  வரிமுடியும்போது தானாகவே இடம்சுட்டியானது அடுத்தவரிக்கு மடங்கிசெல்லும். அடுத்த பத்தி ஆரம்பிக்க விரும்பும்போது மட்டும் உள்ளீட்டு விசையை அழுத்துக.உடன் புதிய பத்திவில் உரை உள்ளீடாகும்.

உள்ளீட்டு விசையை இருமுறை அழுத்தினால் பத்திவிற்கிடையே கூடுதலான காலிஇடம் ஏற்படும் தாவிபொத்தான் விசையை அழுத்தினால் பத்திவின் ஆரம்ப எழுத்து சிறிது தள்ளி ஆரம்பிக்கும்.

இவ்வாறு உரையை வேர்டின் ஆவணமொன்றில் தட்டச்சு செய்து கொண்டி ருக்கும்போது தவறாக இருந்தால் Backspace  என்ற விசையைஅழுத்தி நீக்கம் செய்து விடலாம். அல்லது நீக்கம் செய்ய விரும்பும் எழுத்தின்மீது இடம்சுட்டியை வைத்து Delete  என்ற விசையை அழுத்தி நீக்கம் செய்யலாம்.

குறிப்பு. Delete  என்ற விசையை அழுத்துவது இடம்சுட்டிக்கு வலதுபுறத்தில் உள்ள எழுத்தையும் Backspace  என்ற விசையை அழுத்துவது இடம்சுட்டிக்கு இடதுபுறத்தில் உள்ள எழுத்தையும் நீக்கம் செய்யும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உரையைதெரிவு செய்தல்

   தெரிவுசெய்யப்படவேண்டிய பகுதியில் இடம்சுட்டியை வைத்து Ctrl + shift + அம்புக்குறியை(Ctrl + shift + ® , Ctrl + shift + ¬, Ctrl + shift +­, Ctrl + shift +¯)சேர்த்து அழுத்துவதன்வாயிலாக தெரிவுசெய்து கொள்ளலாம் . தெரிவுசெய்த பகுதியை விட்டு வேறொருஇடத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்வதன்மூலம் இவ்வாறு தெரிவுசெய்ததை விட்டிடலாம்.

வெட்டுதல் நகலெடுத்தல் ஒட்டுதல் செய்தல்

  இவ்வாறு தெரிவுசெய்ததை அப்படியே சுட்டியின் பொத்தானை பிடித்து இழுத்துசென்று தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்து பிடித்திருந்த சுட்டியின் பொத்தானை விட்டிடுக. உடன் பதிய இடத்தில் தெரிவுசெய்யபட்டவை இருக்கும்

இதற்கு பதிலாக விண்டோவின் மேல்பகுதி யிலிருக்கும் Edit என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Edit என்ற பட்டியலில்  உள்ள cut (Ctrl + X )அல்லது  copy (Ctrl + C) ஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்து இதே Edit என்ற பட்டியலில் உள்ள paste (Ctrl + V)என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த பகுதி புதியஇடத்தில் இருக்கும்.

உரையை Insert விசையுடன் தட்டச்சுசெய்தல்

Insert விசையை அழுத்திவிட்டு உரையை தட்டச்சுசெய்தால் ஏற்கனவே இருக்கும் உரையின்மீது புதிய எழுத்துகள் மேலெழுதிவிடும் மீண்டும். Insert விசையை அழுத்திவிட்டு உரையை தட்டச்சுசெய்தால் ஏற்கனவே இருக்கும் உரையை நகர்த்திவிட்டு  புதிய எழுத்துகள் உள்ளிணைந்துவிடும்.

வேர்டின் ஆவணத்தினை சேமித்தல் இவ்வாறு உருவாக்கிய ஒரு ஆவணத்தினை File=> save as என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி யவுடன் தோன்றிடும் save as என்ற உரையாடல் பெட்டியில் இதற்கு ஒருபெயரை file name என்ற பகுதியில் தட்டச்சுசெய்து save as typeஎன்ற கீழிறங்கு பட்டியலை திறக்கசெய்து எந்தவகையான கோப்பு என தெரிவுசெய்து கொண்டுsave என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்து கொள்க.

வேர்டின் ஆவணத்தினை திறத்தல் முதலில் வேர்டின் திரையை தோன்ற செய்தவுடன். விரியும் வலதுபுற getting started என்ற பலகத்தில் இருக்கும் open என்பதன்கீழ்உள்ள சமீபத்தில் திறந்து பணிபுரிந்தவைகளில் தேவையான கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விண்டோவின் மேலிருக்கும் open என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் open  என்ற பட்டியலில் உள்ள   சமீபத்தில் திறந்து பணிபுரிந்தவைகளில்  தேவையான கோப்பினை தெரிவு செய்து சொடுக்குக

அதற்கு பதிலாக விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் File => open=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது Ctrl + O  ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக .உடன் open என்ற உரையாடல் பெட்டி தோன்றும் அதில் நாம் திறக்க விரும்பும் கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு    open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: