விண்டோ -7 தொடர் -5 – சாளரம் 7-ல் கோப்புகளை நிருவகித்தல்

  வேர்டினுடைய கோப்பினை உருவாக்குதல்

1. Start=> Computer=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்தவுடன் தோன்றிடும் விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையில்   D:\ அல்லது E\: வாயிலை தெரிவுசெய்து திறந்து அதற்குள் நாம் திறக்கவிரும்பும் குறிப்பிட்ட மடிப்பகத்தை தெரிவுசெய்து திறந்துகொள்க.

  1. பின்னர் காலி இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக.
  2. உடன்விரியும் சுருக்குவழி பட்டியலில் New என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் உபயோகப்படுத்தி கொண்டிருக்கும் பயன்பாடுகளின் கோப்புகளின் பெயர்கள் சிறு பட்டியல்களாக (படம்-2.9.1)திரையில் விரியும்.இதலிருந்து நாம் உருவாக்கப்போகும் வேர்டு கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.

2.9.1

படம்-2.9.1

  1. உடன் New Microsoft word document.doc என்ற பெயரில் புதிய வேர்டு கோப்பு ஒன்று உருவாகி இடம்சுட்டி இந்த பெயரில் பிரிதிபலித்துகொணடிருக்கும். தேவையானால் இதன் பெயரை மாற்றியமைத்துகொள்க.
  2. 2.2.கோப்பினை நகலெடுத்து ஒட்டுதல்செய்வதற்கு

இவ்வாறு ஒரு இடத்தில் உருவாக்கிய கோப்பினை வேறொரு இடத்திற்கு நகலெடுப்பதற்கு

விண்டோ எக்ஸ்ப்ளோரரில் நகலெடுப்பதற்கான கோப்பு இருக்கும் இடத்தின் (மடிப்பகத்தை) திறந்துகொண்டு நகலெடுத்திடவிரும்பும் கோப்பின்மீது இடம்சுட்டியை வைத்து தெரிவு செய்துகொள்க.

2.9.2

படம்-2.9.2

பின்னர் Alt விசையை அழுத்துக உடன் இந்த திரையின் மேல்பகுதியில் விரியும் பட்டியல் பட்டியிலிருந்து Edit என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர்விரியும் Edit என்ற(படம்-2-9.2) பட்டியலிலிருந்து அந்த மடிப்பகத்திலுள்ள அனைத்து கோப்புகளையும் தெரிவுசெய்துகொள்வதற்கு Select All என்ற கட்டளையை தெரிவுசெய்க அல்லது Ctrl+A ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக

இந்த பட்டியலிலுள்ள Invert Selection என்ற கட்டளையை தெரிவுசெய்தால் தவறுதலாக தெரிவு செய்யப் பட்டதை விடுவித்துவிடலாம்.இந்த Edit என்ற பட்டியலிலிருந்து Copy என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

இதிலுள்ள Copy to folder என்ற கட்டளையானது குறிப்பிட்ட மடிப்பகத்திற்கு நேரடியாக நகலெடுத்திடவும் Move to folderஎன்ற கட்டளையானது குறிப்பிட்ட மடிப்பகத்திற்கு நேரடியாக கோப்பினை நகர்த்திடவும் பயன்படுகின்றது

அதன்பிறகு ஒட்டுதல் செய்ய விரும்பும் இடத்தின் மடிப்பகத்திற்கு விண்டோ எக்ஸ்ப்ளோரரின் வழியே சென்று அங்கு Alt விசையை அழுத்துவதால் இந்த திரையின் மேல்பகுதியில் விரியும் பட்டியலின் பட்டியிலிருந்து Edit என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர்விரியும் Edit என்ற பட்டியலிலிருந்து Paste என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் நாம் நகலெடுத்த கோப்பானது புதிய இடத்தில் வீற்றிருக்கும். இவ்வாறு நகலெடுத்து ஒட்டுதல் செய்யும்போது கோப்பானது நகலெடுத்த உண்மையான இடத்திலும் இருக்கும் புதிய இடத்திலும் இருக்கும்

கோப்பினை வெட்டி ஒட்டுதல்செய்வதற்கு

அதற்கு பதிலாக ஒரிஜினல் இடத்தில் இல்லாமல் புதிய இடத்தில் மட்டும் இருக்குமாறு செய்வதற்கு

விண்டோ எக்ஸ்ப்ளோரரில் வெட்டுதல்செய்வதற்கான கோப்பு இருக்கும் இடத்தின் மடிப்பகத்தை திறந்துகொண்டு வெட்டுதல் செய்யவிரும்பும் கோப்பின்மீது இடம்சுட்டியை வைத்து தெரிவுசெய்து கொள்க.

பின்னர் Alt விசையை அழுத்துக உடன் இந்த திரையின் மேல்பகுதியில் விரியும் பட்டியலின் பட்டியிலிருந்து Edit என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன்பின்னர்விரியும் Edit என்ற பட்டியலிலிருந்து Cut என்றகட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

பிறகு ஒட்டுதல் செய்ய விரும்பும் இடத்தின் மடிப்பகத்திற்கு விண்டோ எக்ஸ்ப்ளோரரின் வழியே சென்று அங்கு Alt விசையை அழுத்துவதால் இந்த திரையின் மேல்பகுதியில் விரியும் பட்டியலின் பட்டியிலிருந்து Edit என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர்விரியும் Edit என்ற பட்டியலிலிருந்து Paste என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் வெட்டுதல்செய்த கோப்பானது புதிய இடத்தில் வீற்றிருக்கும். இவ்வாறு வெட்டி ஒட்டுதல் செய்யும்போது கோப்பானது உண்மையான இடத்தில் இருக்காது ஆனால் புதிய இடத்தில் மட்டும் இருக்கும்.

கோப்பினை நகலெடுத்துஅல்லது வெட்டி ஒட்டுதல்செய்வதற்கான வேறுவழி

இதே செயலைவேறுவகையில் செயற்படுத்திட Alt விசையை அழுத்தி திரையின் மேல்பகுதியில் விரியும் பட்டியலின் பட்டியிலிருந்து Edit என்பதை தெரிவுசெய்வதற்கு பதிலாக   அவ்வாறான கோப்பின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் சுருக்குவழி பட்டியலிலுள்ள Cut அல்லது Copy என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.அவ்வாறே புதிய இடத்தின் மடிப்பகத்திற்கு சென்று அங்கு காலிஇடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் சுருக்குவழி பட்டியலிலுள்ள Paste என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

கோப்பினை நீக்கம்செய்திட

ஏதேனும் கோப்பினை நீக்கம்செய்திடுவதற்கு விண்டோ எக்ஸ்ப்ளோரரின் வழியாக அந்த கோப்பினை தெரிவிசெய்துகொள்க பின்னர் Alt விசையை அழுத்துக உடன் இந்த திரையின் மேல்பகுதியில் விரியும் பட்டியலின் பட்டியிலிருந்து Edit என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர்விரியும் Edit என்ற பட்டியலிலிருந்து Delete என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் நாம் தெரிவுசெய்த கோப்பு நீக்கப்பட்டுவிடும்.

இதே செயலை வேறுவகையில் செயற்படுத்திட Alt விசையை அழுத்தி திரையின் மேல்பகுதியில் விரியும் பட்டியலின் பட்டியிலிருந்து Edit என்பதை தெரிவுசெய்வதற்கு பதிலாக   அவ்வாறான கோப்பின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் சுருக்குவழி பட்டியலிலுள்ள Delete என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் தெரிவுசெய்த கோப்பு நீக்கப்பட்டுவிடும்

மடிப்பகத்திற்கு மறு பெயரிடுதல்

ஏதனுமொரு மடிப்பகத்திற்கு வேறொரு பெயரிட்டால் நன்றாக இருக்கும் என எண்ணிடுவோம் அந்நிலையில் விண்டோ எக்ஸ்ப்ளோரரின் வழியாக அந்த கோப்பினை தெரிவுசெய்துகொள்க பின்னர் Alt விசையை அழுத்துக உடன் இந்த திரையின் மேல்பகுதியில் விரியும் பட்டியலின் பட்டியிலிருந்து File என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர்விரியும் File என்ற பட்டியலிலிருந்து Rename என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் நாம் தெரிவுசெய்த கோப்பின் பெயரின்மீது இடம்சுட்டி இருக்கும் நாம் விரும்பிய வாறான பெயரை தட்டச்சு செய்து கொண்டு உள்ளீட்டுவிசையை தட்டுக உடன் அந்த கோப்பின் பெயர் மாற்றப்பட்டிருக்கும்..

இதே செயலை வேறுவகையில் செயற்படுத்திட Alt விசையை அழுத்தி திரையின் மேல் பகுதியில் விரியும் பட்டியலின் பட்டியிலிருந்து File என்ற பட்டியலிலிருந்து தெரிவு செய்வதற்கு பதிலாக அவ்வாறான கோப்பின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் சுருக்குவழி பட்டியலிலுள்ள Rename என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த கோப்பின் பெயரின்மீது இடம்சுட்டி இருக்கும் நாம் விரும்பியவாறான பெயரை தட்டச்சு செய்து கொண்டு உள்ளீட்டுவிசையை தட்டுக உடன் அந்த கோப்பின் பெயர் மாற்றப்பட்டிருக்கும்.

கோப்புகளின் பெயரகள் பட்டியலாக திரையில் காட்சியளித்திட

Start=> Computer=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்தவுடன் தோன்றிடும் விண்டோ எக்ஸ்ப்ளோர்ர் திரையின் வழியாக   D:\ அல்லது E\:கோப்பகத்தை தெரிவுசெய்து   திறந்து அதற்குள் நாம் திறக்கவிரும்பும் குறிப்பிட்ட மடிப்பகத்தை தெரிவுசெய்து திறந்துகொள்க.

2.9.3

படம்-2.9.3

பின்னர் Alt விசையை அழுத்துக உடன் இந்த திரையின் மேல்பகுதியில் விரியும் பட்டியலின் பட்டியிலிருந்து View என்றகட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர்விரியும்List, Details ,Large Icon, Small Icon, Medium Icon என்பன போன்ற கட்டளைகளுள்ள View என்ற(படம்-2-9.3) பட்டியலிலிருந்து தேவையானதை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக.

அல்லது இந்த திரையின் மேல்பகுதியில் பட்டியலினுடைய பட்டியின் இடதுபுறத்திலிருக்கும் View என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும்List, Details ,Large Icon, Small Icon, Medium Icon என்பன போன்ற கட்டளைகளுள்ள View என்ற பட்டியலிலிருந்து தேவையானதை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் நாம் பார்க்கவிரும்பும் கோப்பகத்தில் இருக்கும் கோப்புகள் நம்மால் தெரிவு செய்யப்பட்டவாறு பட்டியலிடப்பட்டு திரையில் தோன்றிடும்

கோப்புகளை திரையில் பட்டியலிடும்போது விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையின் மேல்பகுதியில் விரியும் Name ,Date modified, Type Sizeஆகிய கட்டளைகளுடன்கூடிய பட்டியலின் பட்டையில் நாம் விரும்பியதை தெரிவுசெய்தால் கோப்புகள் அதற்கேற்றவாற பட்டியலிடப்படும்.

கோப்பினை திறக்காமலேயே அதன் உள்ளடக்கத்தை காண்பதற்கு

இவ்வாறான பட்டியலிலிருக்கும் கோப்பினை தேடிபிடிக்கும்போது அந்த கோப்பினை திறக்காமலேயே அதன் உள்ளடக்கம்என்னவாக இருக்கும் என அறிந்துகொள்வதற்காக இந்த திரையின் மேல்பகுதியில் பட்டியலினுடைய பட்டியின் வலதுபுறத்திலிருக்கும் show the preview pane என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் திரையின் வலதுபுறத்தில் preview pane உருவாகிவிடும். பின்னர் வலதுபுறத்தின் பட்டியலிலிருக்கும் கோப்புகள் ஒவ்வொன்றாக தேடிபிடித்து தெரிவுசெய்யும்போது அந்த கோப்பினை திறக்காமலேயே அதன் உள்ளடக்கம் வலதுபுறத்திலிருக்கும்   preview pane இல்(படம்-2.9.4) முன்காட்சியாக தோன்றும்

இந்த கோப்பின் முன்காட்சி தேவையில்லை எனில்   இந்த திரையின் மேல் பகுதியில் பட்டியலினுடைய பட்டியின் வலதுபுறத்திலிருக்கும் show the preview pane என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரையின் வலதுபுறத்தில் இருந்த preview pane மறைந்துவிடும்.

2.9.4

படம்-2.9.4

  நெகிழ்வட்டுஅல்லது குறுவட்டிற்குள் கோப்பினை நகலெடுத்தல்

கணினியிலிருக்கும் ஏதேனும் கோப்பினை நகலெடுத்தல் ஒட்டுதல் ஆகிய கட்டளைகளின் வாயிலாக வெளிப்புற நினைவகமான பென்ட்ரைவிற்கும் நகலெடுத்திடலாம் ஆனால் . நெகிழ்வட்டு அல்லது குறுவட்டிற்குள் இவ்வாறான கட்டளைகளின் வாயிலாக கோப்பினை நகலெடுத்திடமுடியாது.அதற்காக

முதலில் எழுதவிரும்பும் காலியான . நெகிழ்வட்டு குறுவட்டினை அதற்கான . நெகிழ்வட்டுஅல்லது குறுவட்டு கோப்பகத்திற்குள் பொருத்துக. உடன் திரையில் விரியும் Auto playஎன்ற பட்டியலில் burn the files to discஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

2.9.5

படம்-2.9.5

பின்னர் தோன்றிடும் burn a disc என்ற(படம்-2.9.5) உரையாடல் பெட்டியில் Like a USB Flash Drive என்ற கட்டளையை தெரிவுசெய்துகொண்டு Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் காலியான . நெகிழ்வட்டு அல்லது குறுவட்டு ஆனது வடிவமைப்புஆகி Auto playஎன்ற பட்டியல் திரையில் தோன்றும் இதனை Closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிமூடிவிடுக.

அதன்பின்னர் விண்டோ எக்ஸ்ப்ளோர்ர் திரையில் பட்டியலாகஇருக்கம் கோப்புகளில் நகலெடுத்திடவிரும்புவைகளை மட்டும் தெரிவுசெய்துகொள்க.இந்நிலையில் பட்டியலின் கோப்புகளில் தொடர்ச்சியாக இருப்பதுஎனில்   Shift விசையை அழுத்திபிடித்துகொண்டு Arrow விசையைஅழுத்தி தெரிவு செய்யலாம் தொடர்ச்சியற்றதெனில் Ctrl விசையை அழுத்தி பிடித்து கொண்டு சுட்டியின்மூலம் ஒவ்வொன்றாக தேவையான கோப்புகளின்மீது இடம்சுட்டியை வைத்து தெரிவுசெய்துகொள்க

பின்னர் விண்டோ எக்ஸ்ப்ளோர்ர் திரையின் மேல்பகுதியில் இருக்கும் பட்டியலின் பட்டையில் உள்ள burn என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் நாம் தெரிவுசெய்த கோப்புகள் நெகிழ்வட்டுஅல்லது குறுவட்டில் எழுதப்பட்டுவிடும். பின்னர் இந்த மடிப்பகத்தை திறக்கவும். அப்போது விண்ட எக்ஸ்ப்ளோரர் திரையின் மேல்பகுதியில் இருக்கும் பட்டியலின் பட்டையில் உள்ள Close session என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் இந்த விட்டில் எழுதிடும் பணி முடிவுக்கு வந்ததாக சிறு செய்திபெட்டியொன்று தோன்றி மறையும் அதன்பின் விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையின் மேல்பகுதியில் இருக்கும் பட்டியலின் பட்டையில் உள்ள Eject என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் நெகிழ்வட்டுஅல்லது குறுவட்டு கோப்பகமானது எழுதப்பட்ட நெகிழ்வட்டுஅல்லது குறுவட்டினை வெளியேற்றும்.

நீக்குதல்செய்த கோப்பினை மீளபெறுதல்.

கணினிதிரையிலுள்ள Recycle pin என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .உடன்விரியும் விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையின் மேல்பகுதியில் இருக்கும் பட்டியலின் பட்டையில் உள்ள Restore this Itemsஎன்ற (படம்-2.9.6)கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நம்மால் நீக்குதல் செய்யப்பட்ட கோப்புகளானது பழையஇடத்தில் சென்றமர்ந்திருக்கும்.

2.9.6

படம்-2.9.6

கோப்புகளைபற்றிய சுருக்கமான விவரம் அளித்தல் குறிப்பிட்ட கோப்பின் விவரம் என்ன எதற்காக உருவாக்கப்பட்டது என்பன போன்றவிவரங்களை அறிந்துகொள்வதற்காக குறிச்சொல் வழியே உள்ளீடுசெய்யலாம்

அதற்காக தேவையான கோப்பினை தெரிவுசெய்துகொள்க. பின்னர் விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையின் மேல்பகுதியில் இருக்கும் பட்டியலின் பட்டையில் உள்ள Organize என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் Organize என்ற(படம்-2.9.7) பட்டியலில் properties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

2.9.7

படம்-2.9.7

பின்னர் திரையில் விரியும் properties என்ற உரையாடல் பெட்டியில் detailsஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும்   detailsஎன்ற தாவியின் திரையில் tag என்பதற்கருகில் தேவையான விவரங்களை இயல்புநிலையில் தோன்றிடும் நிறுத்த குறிகளுக்கிடைய உள்ளீடுசெய்து ok என்ற(படம்-2.9.8) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.9.8

படம்-2.9.8

 

    கோப்புகளை தேடிபிடித்தல்விண்டோ எக்ஸ்ப்ளோர்ர் திரையின் மேல்பகுதியில் இருக்கும்Search என்ற பகுதியில் தேடிபிடிக்கவேண்டிய கோப்பின் பெயரை தட்டச்சு செய்து கொண்டு உள்ளீட்டுவிசையை தட்டுக உடன் குறிப்பிட்ட கோப்பு இருக்கமிடத்தை பட்டியலாக காண்பிக்கும்.மேலும் அதுதொடர்பான கோப்புகளையும் பட்டியலாக காண்பிக்கும்.

  சுருக்கப்பட்ட கோப்புகளிலிருந்துகோப்புகளை வெளியிலெடுத்தல் தேவையான சுருக்கப்பட்ட கோப்பினை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சுருக்குவழி பட்டியலிலிருந்து(படம்-2.9.9) Extract file ,Extract here என்றவாறான கட்டளைகளை நாம்தெரிவுசெய்வதற்கேற்ற கோப்பினை மட்டும் அல்லது தனிகோப்பகத்தில் கோப்பினை சேர்த்து சுருக்கப்பட்ட கோப்பிலிருந்து வெளியிலெடுத்து கொண்டுவந்து சேர்த்துவிடும்.

2.9.9

படம்-2.9.9

கோப்புகளை சுருக்கி சுருக்கப்பட்ட கோப்பாக மாற்றுதல்

விண்டோ எக்ஸ்ப்ளோரர் வழியாக குறிப்பிட்ட மடிப்பகத்தை திறந்துகொண்டு அதில் சுருக்கம் செய்ய விரும்பும் கோப்புகளை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக

2.9.10

படம்-2.9.10

உடன்விரியும் சுருக்குவழி பட்டியலிலிருந்து Add to archice(படம்-2.9.10) அல்லதுAdd to சாளரம்7. என்றவாறான கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குக உடன் creating archive என்ற (படம்-2.9.11)செய்திபெட்டி திரையில் தோன்றி நாம் தெரிவுசெய்த கோப்புகள் சுருக்கப்பட்ட கோப்பாகும் பணிநடை பெற்றுமுடிவடையும்.

2.9.11

படம்-2.9.11

அதன் பின்னர் மேலும் கோப்புகளை இந்த சுருக்கப்பட்ட கோப்பிற்குள் சேர்த்திடுவதற்கு அவ்வாறான கோப்பினை தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை அழுத்திபிடித்து இழுத்துவந்து சுருக்கப்பட்ட கோப்பின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை விடுவித்திடுக. உடன் நாம் தெரிவுசெய்திருந்த கோப்பானது சுருக்கப்பட்ட கோப்பிற்குள் சேர்ந்திடும்.

சாளரத்தில் பட்டியல் ,உரையாடல் பெட்டி ,

சாளரத்தில் பல்வேறு கட்டளைகளை தொகுத்து பட்டியலாக காண்பிப்பதை பட்டியல் (படம்-2.9.12)எனக்கூறுவர்

2.9.12

படம்-2.9.12

சாளரம் பல பக்கங்களையும் கணினியின் திரையைவிட அகலம் அதிகமாகவும் இருந்திடும் நிலையில் அதன் உள்ளடக்கங்களை காண்பதற்காக இடம்சுட்டியை நகர்த்திடுவதற்கு உதவுவதுதான் நகரும்ப்பட்டை (படம்-2.9.13)ஆகும்.

2.9.13

படம்-2.9.13

பல்வேறு கட்டளை செயற்படுத்துவதற்கான பொத்தான்கள் கட்டுப்பாடுகளைகொண்டதுதான் உரையாடல் பெட்டி (படம்-2.9.14)ஆகும்.

2.9.14

படம்-2.9.14-மூன்று பொத்தான்கள் உள்ள சிறு உரையாடல் பெட்டி

ஒரே பொத்தானில் இடதுபுறம் சொடுக்குதல் செய்தால் அக்கட்டளை செய்படுத்தபடும் வலதுபுறத்திலுள்ள அம்புக்குறியை சொடுக்குதல்செய்தால் அதிலுள்ள பட்டியலின்களின் விசைகீழிறங்கு பட்டியலாக விரியும் இதனை பிரிப்பு பொத்தான் (படம்-2.9.15)எனக்கூறவர்

2.9.15

படம்-2.9.15

பல்வேறு வாய்ப்புகளடங்கிய வட்டவடிவமான பொத்தானை வாய்ப்புகளின் பொத்தான் (படம்-2.9.16) என அழைப்பர்.

2.9.16

படம்-2.9.16

அதேபோன்று பல்வேறு வாய்ப்புகளடங்கிய சதுரவடிவமான பொத்தானை தோர்வுசெய்பெட்டி (படம்-2.9.17) என அழைப்பர்.

2.9.17

படம்-2.9.17

ஒரு சில பொத்தான்களில் இதிலுள்ள அம்புக்குறியை நகர்த்தி தேவையான அளவு தெரிவுசெய்வார்கள் இதனை நகர்வி என(படம்-2.9.18) அழைப்பார்கள்

2.9.18

படம்-2.9.18

உரையை சொற்களை உள்ளீடு செய்ய பயன்படுவது தேர்வுசெய்பெட்டி (படம்-2.9.19)ஆகும்.

2.9.19

படம்-2.9.19

ஒருசில பொத்தான்களின் அம்புக்குறியை சொடுக்குதல் செய்தால் அதனுடைய தனைவாய்ப்புகள் பட்டியலாக விசைழே விரியும் இதனை விசைழிறங்கு லிஸ்ட் என(படம்-2.9.20) அழைப்பார்கள்.

2.19.20

படம்-2.9.20

அதேபோன்று வேறுசில பொத்தான்களிலுள்ள அம்புக்குறியை சொடுக்குதல் செய்தால் இதிலிள்ள வாய்ப்புகள் பட்டியலாக விரியும் இதனை பட்டியலின் பெட்டி (படம்-2.9.21)என அழைப்பார்கள் படத்திலுள்ள Font என்பதையும் அதன் உள்ளடக்கபட்டியலையும் சேர்த்து ஒருங்கீணைந்த பெட்டி (படம்-2.9.21)என அழைப்பார்கள்.

2.9.21

படம்-2.9.21

உரையாடல் பெட்டியில் பல்வேறு கட்டளைகளை தொகுத்து வகைபடுத்து வகைவாரியாக ஒவ்வொரு பொத்தான்களின்விசையின் கீழ் அமைத்திருப்பார்கள் இந்தபொத்தான்களை தாவியின் பொத்தான்கள்என(படம்-2.9.22) அழைப்பார்கள்

2.9.22

படம்-2.9.22

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: