லிபர் ஆஃபிஸ்-4 தொடர்-8

அடுத்த செயல்முறையாக இந்த லிபர் ஆஃபிஸின் ரைட்டரில் உரைகளை எவ்வாறு கையாளுவது என இந்த தொடரில் காணலாம்

மற்ற பயன்பாடுகளை போன்றே இதிலும் முதலில் தேவையான உரைகளை தெரிவு செய்து கொள்ள முடியும் அவ்வாறு தெரிவுசெய்திடும்போது தொடர்ச்சியற்ற உரைகளையும் செங்குத்தாக நெடுவரிசையாக உள்ளவை மட்டும் தேவையெனில் அதனைமட்டும் தனியாக தெரிவுசெய்துகொள்ளமுடியும். அதற்காக தொடக்கஉரையை முதலில் தெரிவுசெய்துகொண்டு விசைப்பலகையிலுள்ள Ctrl எனும் விசையை அழுத்தி பிடித்துகொண்டு சுட்டியை தேவையான உரைப்பகுதிகளுக்கு சுட்டியை எடுத்துசென்று அடுத்தடுத்து தேவையான உரைப்பகுதிகளை மட்டும்(படம்-1) தெரிவுசெய்துகொள்க

1

படம்-1

அட்டவணை போன்றுள்ள உரைப்பகுதியில் வழக்கமாக தெரிவுசெய்வதை போன்று தெரிவுசெய்தோம் எனில் படம்-2 இன் அட்டவணையின் மேல்பகுதியில் உள்ளவாறு தெரிவுசெய்யப்டடிருக்கும் அதற்குபதிலாக அந்த அட்டவணையின் முதல் நெடுவரிசை மட்டும் தெரிவுசெய்யவிரும்பினால் மேலே கட்டளைபட்டையில் Edit => Selection Mode=> Block Area=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக அல்லது Alt + Shift + F8 ஆகியவாறு இந்த மூன்றுவிசைகளையும் சேர்த்து அழுத்துக இதன்பின்னர் அட்டவணையின் தேவையான நெடுவரிசையை(படம்-2) தெரிவுசெய்து கொள்க

2

படம்-2

மேலேகூறியவாறு உரைபகுதிகளை தெரிவுசெய்தபின்னர் அதனை மற்ற பயன்பாடுகளில் நகலெடுத்தல்(Ctrl+C) வெட்டுதல் (Ctrl+X) ஆகிய செயல்களின் மூலம் ஓரிடத்திலிருந்து நகலெடுத்து சென்று தேவையான பகுதியில் ஒட்டுதல்(Ctrl+V) செயலின்மூலம் ஒட்டிவிடலாம் இதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit=>Copy அல்லது Cut => என்றவாறு கட்டளைகளின் மூலம் உரையை நகலெடுத்தபின் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit=>paste => என்றவாறு கட்டளைகளின் வாயிலாக அவ்வுரையை ஒட்டிவிடலாம் இதற்கு பதிலாக விசைப்பலகையில் நகலெடுத்தல் செயலிற்காக Ctrl+C என்றவாறும் ,வெட்டுதல் செயலிற்காக Ctrl+X என்றவாறும் பின்னர் தேவையான இடத்தில் ஒட்டுதல் செய்வற்காக Ctrl+V என்றவாறும் செயலி விசைகளுடன் மற்ற விசைகளை சேர்த்து அழுத்துக அதற்குபதிலாக மேலே கருவிகளின் பட்டையில் அந்தந்த Cut ,Copy ,paste ஆகிய பணிக்களுக்கான கருவிகளின் உருவபொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்தி கொள்க.இவ்வாறு ஒட்டும் செயலின்போது ஒட்டுகின்ற உரைகளில் கூடுதலாக வடிவமைப்பு ஏதேனும் செய்யவிழைந்தால் மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit=>Paste Special => என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தியபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு வடிவமைப்பு செய்துகொள்க. மேலும் நாம் செய்த செயல் தவறுதலானதாக இருந்தால் உடன் விசைப்பலகையில் உள்ளCtrl+Z. ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது மேலே கருவிகளின் பட்டையில்உள்ள Undo எனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்தி முன் செய்த தவறான செயலை நீ்க்கம் செய்துகொள்க.

நாம் பணிபுரியும் உரைப்பகுதியானது ஏராளமான பக்கங்களுடன் மிகப்பெரிய கோப்பாக இருந்தால் அதில்குறிப்பிட்ட உரை அல்லது சொல் எந்தஇடத்தில் வருகின்றது என கண்டுபிடித்திட மேலே கருவிகளின் பட்டையில் Find என்ற உரைபெட்டியில் (படம்-3) அல்லதுFind Text என்பதை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் Find என்ற உரைபெட்டியில் தேவையான சொல்லை தட்டச்சு செய்து மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக

3

படம்-3

அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit=>Find & Replace => என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துக அல்லது விசைப்பலகையில் Ctrl+F. ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக பின்னர் தோன்றிடும்Find & Replaceஎன்ற உரையாடல் பெட்டியின் Search for எனும் உரைபெட்டியில் தேவையான சொல்லை தட்டச்சு செய்து கொண்டு   Find அல்லது முழுஆவணமும் எனில் Find all என்றவாறு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி தேவையான சொல் இருக்குமிடத்தை கண்டுபிடித்திடுக.இதே உரையாடல் பெட்டியின் More Optionsஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர் படம்-4 இல் உள்ளவாறு விரியும் இதே உரையாடல்பெட்டியில் மேலும் பல்வேறு வாய்ப்புகள் உரையை வடிவமைப்பு செய்வதற்காக கிடைக்கின்றன அதன்வாயிலாக வடிவமைப்பு செய்தபின் இந்த உரையாடல்பெட்டியில் புதியதாக வாய்ப்புகள் எதுவும் தேவையில்லை யெனில் Fewer Optionsஎன்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்கி பழையநிலைக்கு உரையாடல் பெட்டியை மாற்றியமைத்துகொள்க.

4

படம்-4

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: