ஆய்வு மாணவர்களுக்கு உதவிடும்மைக்ரோ சாப்ட் எக்செல் பயன்பாட்டின் Data Analysis எனும் கருவி

தற்போது ஏராளமான மாணவர்கள் இளங்கலை முதுகலைகளுக்கு அப்பால் இளம்முனைவர்(Mphil), முதுமுனைவர்(Phd) என ஆய்வு படிப்பில் ஈடுபட்டுள்ளனர் அவ்வாறான ஆய்வு படிப்புகளின்போது ஏராளமான அளவுகளில் தேவையான தரவுகளை சேகரித்து வைக்கோற்போர் போன்று குவித்து வைத்துவிடுவர் இதிலிருந்து புள்ளியியல் கணக்கீடுகளின் அடிப்படையில் எஃப் டெஸ்ட்,ட்டி டெஸ்ட் ,அனோவா டேபிள் என எண்ணற்ற கணக்கீடுகள் செய்து அவற்றின் முடிவுகளை அட்டவணைபடுத்தி தம்முடைய ஆய்வு முடிவுகளை வெளியிடவேண்டிய சூழலில் இந்த கணக்கீடுகளை நாமே செய்தால் அதிக காலவிரையம் ஏறபடுவதுடன் ஆய்வையும் குறிப்பிட்ட காலவரம்பிற்குள் முடித்திடமுடியவில்லையே இதனை எவ்வாறு விரைவாக செய்துமுடிப்பது என தவித்திடுவார்கள் அவ்வாறானவர்கள் கலங்கி தவித்திடவேண்டாம் உங்களுக்காகவே எம்எஸ் எக்செல்லில் டேட்டா அனாலிஸ் எனும் கருவி கைகொடுக்க தயாராக இருக்கின்றது நம்முடைய கணினியில் எக்செல் 2010 எக்செல் 2007அல்லதுஅதற்கு முந்தைய பதிப்பாக இருந்தாலும் பின்வரும் படிமுறைகளை பின்பற்றி செயல்படுத்திடுக முதலில் எக்சல் பயன்பாட்டின் Data எனும் தாவித்திரையில் Data Analysis எனும் கருவி இருக்கின்றதாவென சரிபார்த்திடுக இல்லையெனில் பரவயில்லை அதனை நிறுவிகொள்ளலாம்

10.1

அதற்காக எம்எஸ் எக்செல்லின் மேலே இடதுபுறமூலையில் உள்ள எம்எஸ் ஆஃபிஸ் பொத்தானை முந்தைய பதிப்பாக இருந்தால் File எனும் பட்டியை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியலில் Excel options அல்லது Options என்ற கட்டளைக்கான வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

10.2

உடன் விரியும் Excel options எனும் உரையாடல் பெட்டியின் இடதுபுறபலகத்தில் Add Ins எனும் கட்டளை வாயப்பினை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர் வலதுபுற பலகத்தில் விரியும் பல்வேறு வாய்ப்புகளில் Analysis Tool pak எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு goஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

10.3

உடன்   Add-Ins எனும் சிறு உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Analysis Toolpak வாய்ப்பிற்கான தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பிறகு ஆய்வு செய்யவிருமபும் தரவுகளின் அட்டவணையை எம்எஸ் எக்செல்லில் உள்ளீடு செய்துகொண்டு Data எனும் தாவியின் திரைக்கு செல்க

10.4

அங்கு மேலே வலதுபுறம் Analysis என்ற குழுவிற்குள் Data Analysis என்ற கருவியை நம்முடைய ஆய்விற்காக தெரிவுசெய்து சொடுக்குக உடன் Data Analysis என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில்தோன்றிடும்அதில் Anova:Two-Factor without Replication என்ற வாய்ப்பினை தெரிவுசெய்தகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் Anova:Two-Factor without Replicationஎன்ற சிறு உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில்   Input Range என்பதில் நாம் எம்எஸ் எக்செல்லில் தயார்செய்த அட்டவணையை தெரிவுசெய்து கொள்க Labels என்ற வாய்ப்பினை வெளியிடும் அட்டவணைக்கான பெயரிற்காக தெரிவுசெய்து கொள்க இந்த ஆய்வு வெளியீடு இதே பணித்தாளில் தேவையெனில் output என்பதில் வெளியிடு செய்யவேண்டிய செல்முகவரியை தட்டச்சு செய்திடுக அல்லது இயல்புநிலையில் தணியான பணித்தாளில் வரவேண்டுமெனில் இயல்பாக இருப்பதை ஏற்று கொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 

உடன் ஒருசில நொடிகளில் நாம் குறிப்பிட்ட அட்டவணையில் உள்ள தரவுகளைகொண்டு இந்த ஆய்வைசெய்து அதன் விளைவை S.S, df, MS FP value , F Value ஆகிய விவரங்களுடன் ANOVA எனும் அட்டவணையாக திரையில் எம்எஸ்எக்செல்லானது பிரதிபலிக்க செய்துவிடும். இதன்பின் நம்முடைய ஆய்வு முடிவை இந்த ANOVA எனும் அட்டவணையிலிருந்து எழுதிடமுடியும்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: